2:32 பேரறிவாளன், நுண்ணறிவுடையோன்,தூயவன் (யார்?)


பதிலாக, பகரமாக, சந்ததிகளாக, வாரிசுகளாக, வழித் தோன்றல்களாக, பின் தோன்றலாக என்ற பொருள் தரும் ஃகலீFபா என்ற சொல் மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற பொருளைத் தராது என்பதற்கு 6:133. 71;29. 11:57.24:55. ஆகிய ஆயத்களை ஆதாரங்களாக முன்பு பார்த்தோம். 
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/232.html மனிதன் அல்லாஹ்வுக்கு பதிலாக,  பகரமாக, பிரதிநிதியாக -  ஃகலீFபாவாக,    சந்ததிகளாக, வாரிசுகளாக, வழித் தோன்றல்களாக, பின் தோன்றலாக ஆக முடியாது என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக நண்பர் இளையான்குடி அபுதாஹிர் அனுப்பியது.  



[20/03, 8:34 pm] Abuthahir Sayed: கலீபா என்ற சொல் இறைவனைத்தான்  குறிக்கும் என்றால் இரத்தம் சிந்தி குழப்பம் விளைவிப்பவர்கள்என்று வானவர்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்


[20/03, 8:38 pm] Abuthahir Sayed: இந்த இடத்தில அல்லாஹ்வை குறிப்பிடும் வார்த்தையாக இருக்கும்பட்சத்தில் வானவர்களின் ஆட்சேபனை வர வாய்ப்பே இருக்காதே

[20/03, 8:51 pm] Fazlulilahi: இதை இப்படியே பிளாக்கில் போடலாமா

[20/03, 8:57 pm] Abuthahir Sayed: தாராளமாக, அது இறைவனை குறிக்கும் சொல் அல்ல

[20/03, 9:17 pm] Abuthahir Sayed: வ இத் கால = மேலும் சொன்னான்
றப்புக் லில்மலாயிக்கத்தி = இறைவன் மலக்குகளிடத்தில்
இன்னி = நிச்சயமாக
ஜாயிலுந் = படைக்க போகிறேன்
Fபில் அர்தி = பூமியில்
கலீபா = பிரதிநிதி, தலைமுறை, சந்ததி

இறைவன் மேலும் மலக்குகளிடத்தில் சொன்னான்,
நிச்சயமாக பூமியில் பிரதிநிதி (தலைமுறை, சந்ததி)
படைக்க போகிறேன்

[20/03, 9:30 pm] Abuthahir Sayed: “என்பிரதிநிதி என்று இல்லை அதே சமயம் கலீபா என்ற சொல் இந்த இடத்தில இறைவனை குறிப்பிடும் வார்த்தை இல்லை அது மனித தலைவர்களையோ அல்லது 

நிரந்தர மற்ற சக்தி கொண்ட ஒன்றையோ புராதிபலிக்கும் என கருதுகிறேன்

கைர் இனி 2:32ன் வார்த்தைக்கு வார்த்தை


قَالُوا -  ஃகாலுா 


கூறினர் - கூறினார்கள், சொன்னார்கள் 

سُبْحَانَ - ஸுப்ஃஹான 
தூயவன் - மகா தூயவன் - மிகத் துாய்மையானவன் 

كَ - க 
நீ
(இது போன்றவை தனித்து இருந்தால் பொருள் தராது. உதாரணமாக ஸி என்றால் ஏதாவது பொருள் தருமா? தராது. அதே நேரத்தில் அரபிகள் மதராஸி என்று சொல்லும் போது மதராஸைச் சார்ந்தவன் என பொருள் கொள்கிறோம். அது போல் இந்த ஓரெழுத்து சொற்கள். தனித்து பொருள் தராது)



لَا - லா 
இல்லை

عِلْمَ - ஃஇல்ம 
அறிவு - கல்வி

لَنَا - லனா
எங்களுக்கு


إِلَّا -  இல்லா 

தவிர - அன்றி 

 مَا - மா 
எதை



عَلَّمْت ஃஅல்லம்த
கற்பித்தாய்

نَا - நா
எங்களுக்கு

 مَا عَلَّمْتَنَا - மாஃஅல்லம்தனா 
நீ கற்றுக் கொடுத்ததை (கொடுத்தவற்றை -கற்றுக்கொடுத்தவை)


إِنَّكَ - இன்னக 
நீ - நீயே - நீதான் -

أَنتَ - அன்த 
நீ-நீயே - நீதான்  

الْعَلِيمُ - (அல்) ஃஅலீமு


பேரறிவாளன், நன்கறிந்தவன், மிக்க அறிந்தவன்,   அறிவுமிக்கவன்.-  நன்கு  அறிந்தோன்   


الْحَكِيمُ - (அல்) ஃஹகீ(மு)ம்


ஞானமிக்கவன் - மகாஞானவான் - ஞானம் உடையவன் - ஞானம் உள்ளவன்- விவேகமிக்கோன், தீர்க்கமான அறிவுடையவன்” - நுண்ணறிவுடையோன் -ஞானம் நிறைந்தவன். ஞானம் நிறைந்தோன்


قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا  إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ ﴿٣٢


ஃகாலுா ஸுப்ஃஹானக லா ஃஇல்ம லனா இல்லா  மாஃ அல்லம்தனா இன்னக அன்தல் ஃஅலீமுல்  ஃஹகீ(மு)ம்


தமிழ் நடையில் 15 மொழிப்பெயர்ப்புகள் 



1. அவர்கள், "(இறைவா!) நீ தூயவன். நீ கற்றுக் கொடுத்தவற்றைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. திண்ணமாக நீயே பேரறிவாளன்; நுண்ணறிவுடையோன்" எனக் கூறினார்கள். (அதிரை ஜமீல்)

2. "நீ தூயவன்.10 நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.2:32. PJ

3. அவர்கள் “(இரட்சகனே) நீயே துாய்மையானவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர வேறறிவு எங்களுக்கில்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தவனும் ஞானமிக்கவனுமாவாய் எனக் கூறினார்கள். (தாருஸ்ஸலாம்ரியாத்)

4. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேகமிக்கோன் எனக் கூறினார்கள்.(KSR


5,6 (அப்பொழுது) (யா அல்லாஹ்) நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எந்த  அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக நீயே முற்றும் அறிந்தவனும் ஞானமிக்கவனுமாய் இருக்கிறாய் என்று அவர்கள் கூறினார்கள். (5திரீயெம் பிரிண்டர்ஸ், 6 மலிவு பதிப்பு)

7. அதற்கு (வானவர்களாகிய) அவர்கள் நீ துாய்மையானவன் நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததையன்றி (வேறு)  அறிவு எங்களுக்கில்லை. (வேறு எதனையும் நாங்கள் அறிய மாட்டோம்) திண்ணமாக நீயே அறிவுமிக்கவன். ஞானம் நிறைந்தவன் என்று கூறினர்.(பஷாரத்)

8. அதற்கு அவர்கள் நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததை தவிர வேறு எந்த  அறிவும் எங்களுக்கு இல்லை. நீ நன்கு அறிந்தோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவாய் என்றனர் (றஹ்மத்)


9. (இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்ததன்றி (வேறு) எத்தகைய அறிவுமில்லை. மெய்யாக நீயே மிக்க அறிகிறவன் (தீட்சண்ணிய) ஞானமுடையோன் என்று அ(வ்வான)வர்கள் கூறினர். (அன்வாருல் குர்ஆன்) 


10. (அப்பொழுது) நீ மிகத் தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததை தவிர வேறு) எந்த  அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக நீ தான் அறிவு மிக்கவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறாய் என்று அவர்கள் கூறினார்கள் (ஸலாமத் பதிப்பகம்)


11.அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். (முஹம்மது ஜான்)


12. (அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும்ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள். (அப்துல் ஹமீது பாகவி)



13. நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத்   தவிர  வேறு அறிவு எங்களுக்கு அறவே இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன் மகா ஞானவான் எனக் கூறினார்கள். ( அப்துல் ஹமீது பாகவி பேரர் உமர் ஷரீப்)


14. “குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!” என்று அவர்கள் கூறினார்கள். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)


15. அவர்கள் நீ மிகத் தூய்மையானவன்நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லைநிச்சயமாக நீயே நன்கறிந்தவன்தீர்க்கமான அறிவுடையவன்” எனக் கூறினார்கள். (அல்-மதீனா அல்-முனவ்வரா)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு