Posts

Showing posts from July, 2016

சொந்த வீட்டுக்காக போகாத பிள்ளைகள் சொந்தக்காரர்களுக்காக போகுமா?

Image
அன்றைய வியாபாரம் என்பது ஒவ்வொருவரும் தனித் தனியாக செல்வது என்ற நிலையில் உள்ளது அல்ல . ஒரு ஊரில் உள்ள அத்தனை பேருடைய பொருளையும் வியாபாரத்துக்கு கொண்டு போவார்கள் . குடும்பத்துக்கு ஒருவர் என உடன் செல்வார்கள் .  வீட்டுக்கு ஒருவர் அல்ல குடும்பத்துக்கு ஒருவர். 10 குடும்பத்திலிருந்து பத்துப் பேர் .  இருபது குடும்பத்திலிருந்து 20 பேர் என்றுதான் போவார்கள் . அவர்களில் ஒருவர் தலைவராக இருப்பார் . எல்லாருமாக போய் விட்டால் ஊரில் ஒன்றும் செய்ய முடியாது . எல்லாருமாகப் போவது அந்தக் காலத்தில் தேவையற்றதும் கூட . சுமைகளை , வியாபாரப் பொருள்களை வாகனங்கள்தான் சுமக்கும் . எனவே 10 ஒட்டகங்களுக்கு ஒரு ஆள் . 20 ஒட்டகங்களுக்கு ஒரு ஆள் என்றுதான் போவார்கள் . ஒட்டகங்களை கட்டுப்படுத்தி வழி நடத்த தெரிந்த ஆட்கள் . வியாபாரம் செய்வதற்கு வியாபார திறமை உடையவர்கள். இப்படித்தான் போவார்கள் .  அவரவர் பொருள்களுக்கு அவரவர் போக வேண்டும் என்ற நிலை அன்று கிடையாது . பண்டமாற்று வியாபாரம் என்பதால் இதுதான் யதார்த்தம் . 50 வயதை தாண்டிய முந்தைய தலை முறையினருக்கு இது புரியும் . ரேடியோ , டேப், டி . வி , ஸ்மார்ட் போன் ப

ஈகை நபியையா இரக்கம் இல்லாதவர் போர்க் குணமும் பழி வாங்கும் எண்ணமும் உடையவர் என்கிறார்கள் பாவிகள்?

Image
அப்துல்லாஹ் இப்னு   ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி)   அவர்கள் தலைமையில் சென்ற வர்களுக்கு ஆதரவாக அல்லாஹ்வே ஆயத்தை அருளி விட்டதைப் பார்த்தோம். அதன் பிறகுதான்   அவர்கள் செய்த செயலை ரசூல்(ஸல்) ஏற்றுக் கொண்டார்கள்.    இந்த ஆயத்து அருளப்பட்டதும் .   அல்லாஹ் உடைய துாதருக்கு மன ஆறுதல் கிடைத்தது .   தமது தோழர்களின் செயலை அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான் .   அல்லாஹ் நம்மை குற்றம் பிடித்து விடுவானோ என்று அஞ்சினோம் . அல்லாஹ்வின் துாதர் அல்லாஹ்வுக்குத்தான் அஞ்சினார்கள் .   உலகத்துக்கு அல்லாஹ்வின் துாதர் எப்போதுமே பயந்தது இல்லை .   ஒரு சில நேரங்களில் இந்த உலகத்துக்காக ஒரு சில காரி யத்தை செய்தாலும் உடனே அல்லாஹ் அதனை சுட்டிக் காட்டி விடுவான் .   கண்டித்து விடுவான் .    தனது மனைவிக்கு விரும்பம் இல்லை என்பதற்காக இனிமேல் நான் தேன் சாப்பிட மாட்டேன் என ரசூல் ( ஸல் )   அவர்கள் முடிவு செய்தார்கள் .   அப்போது அல்லாஹ் அதை சுட்டிக் காட்டி   ( திரு மறையில்   66-1-4)   கண்டித்தான் . அதே மாதிரி ,   ஜைனப் பின்த் ஜஹ்ஷ் ( ரலி )   அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா   ( ரலி ) அவர்களுக்கும் .   ஏதோ ஒரு காரணத்துக