Posts

Showing posts from September, 2015

இரவு இரண்டு மணிக்குப் பிறகும் கோர்ட்? உயிரைக் காப்பாற்றவா?

Image
இந்திய சட்டத்துக்கு பயந்து ஓடிய மாடும் யானையும்

“மினாவின் உயிர்ச்சேதம்” ,இரு வேறு கருத்துக்கள் . தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்

Image
91 95669 06909  லாபியை புரிந்து கொள்வோம்...!! மத்திய கிழக்கு நாடுகளில் சக்தி வாய்ந்த நாடு சவூதி அரேபியா, மற்றொரு சக்தி வாய்ந்த நாடு ஈரான். சவூதி அரேபியா சன்னி முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட நாடு, ஈரான் ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட நாடு. இந்த இரண்டு நாடுகளும் கொள்கையில் எதிர் எதிர் திசைகளில் இருக்கிறது. மத்திய கிழக்கில் சன்னி முஸ்லிம்களுக்கு எதிராக எந்த பிரச்சினை என்றாலும் ஷியா முஸ்லிம்கள் தான் காரணம் என்றும், ஈரான் தான் காரணம் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடும், சமூக வலைத்தளங்களில் நம்முடைய சகோதரர்களும் ஷியாக்கள் தான் காரணம் என்றும் செய்தி வெளியிடுவார்கள். இதையெல்லாம் நாம் அனைவரும் தொடர்ந்து கவனித்து வருகிறோம். மக்காவில் ஏற்பட்ட நெரிசலின் காரணத்தால் 700 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் உயிரிழந்த சம்பவத்திற்கும் ஷியாக்கள் தான் காரணம் என்றும், பின்னணியில் ஈரான் இருப்பதாக எப்போதும் போல் சர்வதேச ஊடகங்களும், சமூக வலைத்தளங்களில் நம் சகோதரர்களும் செய்தி வெளியிட்டுள்ளனர். சன்னி முஸ்லிம்களுக்கு எதிராக எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு ஷியாக்கள் தான் காரணம் என்பதை நினைப்பத

ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்பது உண்மையா?

"கழிவின் தேக்கம் வியாதி..."  "கழிவின் வெளியேற்றம் குணம்..."  இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய மருத்துவமும் இல்லை... தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை... மக்களே சிந்தியுங்கள்!...  நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும்  புரிந்து கொள்ளுங்கள்... கீழே விரிவான விளக்கம் இருக்கிறது ❌BRAIN DEATH❌ "மூளை இறக்குமா?..." - டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M(CHINA) Zhejiang University, Hangzhou,(China) (Chinese Traditional Medicine). ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்... பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்... ஆனால்?...........இன்றோ!!!? மூச்சு(சுவாசம்) இருக்கின்றது! இரத்த ஓட்டம் இருக்கின்றது! நாடி துடிப்பு இருக்கின்றது! இதயத்துடிப்பும் இருக்கின்றது! இருந்தும்... மூளை இறந்து விட்ட

பெண்களிடம் சில்மிஷம் - “தவ்ஹீத்திய்யா”(TNTJ) வின் பரிணாம வளர்ச்சி

Image
தனிநபர் தாவா என்ற பெயரில் பெண்களிடம் சில்மிஷம் - “தவ்ஹீத்திய்யா”(TNTJ) வின் பரிணாம வளர்ச்சி கோவை மாவட்டத்தில் தனிநபர் தாவா என்ற பெயரில் பெண்களின் கைகளையும், கழுத்துகளையும் தொட்டுக்கொண்டுயிருக்கின்றனர், இந்த தொண்டியானிகள். வீடுகள் தோறும் தனிநபர் தாவா என்ற பெயரில் ஒரு ஆண் இல்லாத வீட்டில் பெண்கள் மட்டும் இருக்கும்போது நுழைந்து கைகளிலும் கழுத்திலும் கயிறுகளை அகற்றுகிறோம் என்று கைகளையும் கழுத்தையும் தொடுகின்றனர். அதிலும் குறிப்பாக “கோவை மாவட்ட துணைத்செயலாளர்” இந்த காரியத்தில் ஈடுபடுவது அவலத்திலும் அவலம்.  அங்கு சிறுவனோ தடைசெய்யப்பட்டவர்களோ யாரும் இல்லை.  1.இது மார்க்க அடிப்படையில் கூடுமா? 2.அந்நிய ஆண் இல்லாத வீட்டிற்கு செல்வது கூடுமா? 3.அதிலும் கயிறை அகற்றுகிறோம் என்று கையைப்பிடிப்பது கூடுமா? 4.அந்நிய பெண்களின் ஆடை சரியாக இல்லாத நிலையில் உள்ளே நுழைவது கூடுமா? 5.போட்டோ எடுப்பவரும் ஆணாக இருப்பது கூடுமா? இப்படி கேள்விகள் அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் உஷாராக இருக்க வேண்டும். அதன் லிங்க் http://www.tntj.net/336751. html இப்படிக்கு எம்.எஸ்.சல்மா

ஜிஹாத் என்றால் என்ன ? சுவாமிஜி ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் விளக்கம்..!

ஜிஹாத் என்றால் என்ன ? சுவாமிஜி விளக்கம்..! அனைத்து சமயங்களும் நல்லதைத்தான்   போதிக்கின்றன , ஆனால் அது கயவர்களின் கைகளில் மாட்டி கொள்ளும் போது தான் , மனிதனின் பலகினத்தை பயன்படுத்தி அவனை மதம் என்ற போர்வையில் மாய்த்து அப்பாவி மக்களை ஏவி விட்டு சுகம் காண்கின்றனர் , இருந்தாலும் சில நல்ல பெரியவர்கள் ,மத குருமார்கள் மக்களை பண்படுத்த செய்கிறார்கள் ,அப்படி ஒரு நல்ல சமூக நல்லிணக்கத்தை எதிர் பார்த்து தன் உரையை எடுத்துரைக்கும் அந்த மரியாதைக்குரிய சுவாமிஜி பெரியவரின் பெயர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள். அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி கருத்துரையை வழங்கினார். அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களு

ஷீஆக்களும் ஹஜ் வண்முறைகளும்

வரலாற்று நெடுகிலும் வழிகெட்ட ஷீஆக்கள் ஹஜ் காலத்தில் ஹரத்தின் புணிதத்தைக் கெடுக்கும் விததிலும் முஸ்லிம்கள் மீதான தங்கள் காழ்புணர்வைக் கக்கும் விதத்திலும் பல்வேறு வண்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காண முடியும். இது தொடர்பில் றமழான் அல் கானிம் அவர்கள் அல் புர்ஹான் இணைய தளத்திற்கு எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கத்தை உங்களுக்காக தமிழ்ல் தருகிறேன். 1.ஹிஜ்ரி 294ம் ஆண்டு போது காறாமிதஃ எனும் சீஆக்கள் ஹஜ்ஜாஜிகள் திரும்பிச் செல்லும் அவர்கள் மீது தாக்கதுல நடாத்தினர். காய்ப் பட்டவர்களுக்கு சீஆப் பெண்கள் தண்ணீர் கொடுப்பது போல் நடித்து உயிருடன் எஞ்சியிருந்தவர்களையும் கொண்றொழித்தனர். இவ்வண்முறையில் சுமார் 20 ஆயிரம் ஹாஜிகள் கொல்லப்பட்டனர். 2.ஹிஜ்ரி 317ம் ஆண்டு கறாமிதஃ எனும் கேடு கெட்ட சீஆக்கள் புணித நாளில் ஹஜ்ஜாஜிகள் மீது தாக்குதல் நடாத்தினர். அபூதாஹிர் எஉம் சீஆக்காரனின் தலமையில் நடந்த இத்தாக்குதலில் பல ஹாஜிகளிடம் கொள்ளையடித்தனர் எக்கச் சக்கமான ஹாஜிகளை கொன்று குவித்தனர். ஹாஜிகள் இக்கொடூரத்தில் இருந்து தப்பிக்க கஃபாவின் திரைச் சீலையில் தொங்கிய போதும் அவர்களையும் இக

ஈத் முபாரக் சொல்லக் கூடாது என்றால் தொப்பி போடலாமா? வாத பிரதி வாதங்கள். வாட்ஸப்பில் வந்தவை

Image
இப்படி வாதிடுபவர்கள், தொப்பி அணிகின்றனர். தொப்பி அணிவது மார்க்க விதி என்று மக்கள் நினைக்கின்றனர். சிலர் அதை வலியுறுத்துகின்றனர். இப்படி இருக்கும் போது தொப்பி போடுவது மார்க்கம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே, தொப்பி போடுவது  சுன்னத் என அவர்கள் கூறவில்லை.  தொப்பி போடுவது சுன்னத் என்று சொல்பவர்கள் மத்தியில்  தொப்பி போடுவது பித்அத் என கூறினாலும் அப்படி கூறுபவர்கள் தொப்பி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் அந்த பித்அத்தை விட மனம் இல்லை. ஈத் முபாரக் சொல்லலாமா (பெருநாள் வாழ்த்து என்று சொல்வது ஆசி வழங்குவது போல் உள்ளது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் இந்த ஆக்கத்தில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஸலாம் உண்டாகட்டும் என்று நாம் கூறும் போது ஆசி வழங்குகிறேன் என்று யாரும் கருதுவது இல்லை. ஸலாம் உண்டாக துஆச் செய்கிறேன் என்று தான் இதைப் புரிந்து கொள்கிறோம். அது போல் பெருநாள் வாழ்த்து என்றால் பெருநாள் தினத்தில் நன்றாக வாழ துஆச் செய்கிறேன் என்று தானே பொருள் கொள்ள வேண்டும் என்று சிலர் நமக்கு சுட்டிக் காட்டினார்கள். தக்க காரணங்களுடன் இவர்களின் விமர்சனம் இருந்ததால் இதை நாமும் ஏற்றுக் க