அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.


1959ல் மொழி பெயர்க்கப்பட்ட தப்ஸீரின் ஒரு பக்கத்தை சேம்பிளுக்காக இதில் இணைத்துள்ளோம்.  நான்  என்பதை அக்காலத்தில் யான் என்று எழுதி உள்ளார்கள் என்பதை இந்த பக்கத்திலிருந்து அறியலாம். அக்னி, நெருப்பு, தீ  நரகம்,  நரக நெருப்பு என்று அவரவர் கால வழக்கப்படி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 141 ஆயத்துகளில் உள்ள அந்த வித்தியாசமான மொழி பெயர்ப்புகளை புளு - நீல கலரில் ஹை லைட் செய்து பிளாக்கரில் இடம் பெறச் செய்துள்ளோம்.

குர்ஆன் இன்டக்ஸ் முன்பு அஃராப், அநியாம், அக்கிரமம், அநியாயம் என்ற தலைப்புகளில் 4 பாகம் வெளியிட்டுள்ளோம். இது 5வது பாகம்
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post.html


1.  ஒருவன் நெருப்பை - தீயை  மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கிபார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது. 2:17. 




2. நிச்சயமாக – திண்ணமாக  உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும்கற்களுமே அதன் எரிபொருட்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது. 2:24. 





3. "(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் நரகவாசிகள்.நரகவாசிகளே!- நரகவாசிகளாவர் அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்'' (என்றும் கூறினோம்.)  2:39. 



4. குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் - நெருப்பு எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர். "அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா? (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக! 2:80. 



5. அவ்வாறில்லை! யாராக இருந்தாலும் தீமை செய்துஅவர்களின் குற்றம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளுமானால் அவர்கள் நரகவாசிகளேஅதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். 2:81. 



6. "இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாகஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும்இறுதி நாளையும்1 நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'  என்று இப்ராஹீம் கூறியபோது, "(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்பின்னர் அவர்களை நரக -  வேதனையில் தள்ளுவேன்(அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் -நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன்.அவனை நரக வேதனையின் பக்கம் இழுத்துச் செல்வேன்-  நரக வேதனையின் பக்கம் செல்லுமாறு அவரை இழுத்துச் செல்வேன்,  சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான். 2:126. 



7. "(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்'' என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித்தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர்.  நெருப்பினின்றும் -  நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள் நெருப்பிலிருந்து (எவ்வகையிலும்) அவர்கள் வெளியேறிவிட முடியாது - நரக நெருப்பிலிருந்து வெளியேறுபவர்களும் அல்லர். 2:167. 



8. அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்நிச்சயமாக  தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை -உட்கொள்ளவில்லை -- வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள்.-  நிரப்பிக் கொள்வதில்லை.- கியாமத் நாளில்  அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. 2:174. 



9. அவர்களே நேர்வழியை விற்று வழிகேட்டையும்மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது! -இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது? -   நெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவோ?  நரக வேதனையைச் சகித்துக் கொள்வதற்கு(த் தயாராய் உள்ள) இவர்களின் துணிவு எத்துணை வியப்புக்குரியது!  (நரக) நெருப்பின்மீது அவர்களை சகிக்கச் செய்தது எதுவோ2:175. 



10.  "எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும்1 நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” பாதுகாப்பாயாக!" என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். 2:201.



11. புனித மாதத்தில்  போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும்மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும்அவனை ஏற்க மறுப்பதும்அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும்1 அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். -இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.” - அவர்கள் நரகவாசிகளாகிஎன்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்.- மேலும் அத்தகையோர் அனைவரும் நரகவாசிகளேயாவர்! அதில் அவர்கள் என்றென்றும் விழுந்துகிடப்பார்கள். - மேலும்அத்தகையோர் நரகவாசிகளாவர்அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்கி இருப்பவர்கள்.2:217. 




12. இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு - நரக நெருப்பின் பக்கம்- நரகத்தை நோக்கியே அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான் 2:221. 




13. நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து  வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு தீய சக்திகளே உதவியாளர்கள். வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு  அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள் - நரகவாசி களேயாவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர். 2:257. 




14.  பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறதுஅவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றனஅதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளனஅவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறதுஅப்போது நெருப்புடன் - தீயுடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாராநீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். 2:266. 




15. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.  "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள்.- நரகவாசிகளே! அதில் நிரந்தரமாக இருப்பார்கள். 2:275. 



16.  (ஏகஇறைவனை) மறுத்தோரின் மக்கட்செல்வமும்பொருட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றவே முடியாது. அவர்களே நரகின் எரிபொருட்கள்அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர். - இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டையாக இருக்கின்றனர்.- அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள்.- இவர்கள்தாம் (உண்மையாகவே நரக) நெருப்பின் எரிபொருட்கள் ஆவர்.  3:10. 



17.  "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள். - நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!" என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்!”- நெருப்பின் வேதனையிலிருந்தும் நீ எங்களை (ஈடேற்றம் பெற)க்காத்தருள்வாயாக” என்றும்(பிரார்த்தித்துக்) கூறுவார்கள். 3:16. 



18.  குறிப்பிட்ட நாட்களே தவிர நரகம் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். தாமாக இட்டுக்கட்டிக் கொண்டது அவர்களது மார்க்க விஷயத்தில் அவர்களை ஏமாற்றி விட்டது.
 எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது - "சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது"  என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்;  -  சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர நரக நெருப்பு எங்களைத் திண்ணமாகத் தீண்டாது” என்று அவர்கள் கூறி வந்ததேயாகும். (நரகத்தின்) நெருப்பு நிச்சயமாக ஒருபோதும் எங்களைத் தீண்டாது”  3:24. 



19. அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98 பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
(நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். - மேலும்நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். - நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள்,  3:103. 



20. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்களின் மக்கட்செல்வமும்பொருட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.  
அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். - அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். - அவர்கள்தாம் நரகவாசிகள்! மேலும் அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். - மேலும்அவர்கள் நரகவாசிகள்தாம்அதில் நிரந்தரமாக அவர்கள் (தங்கி) இருப்பவர்கள். 3:116. 



21. (ஏகஇறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்!  
தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள்அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(நரக) நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது
இன்னும் இறை மறுப்பாளர்களுக்குத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள்.  3:131. 



22.  அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளாமலிருந்தும் அவனுக்கு இணை கற்பித்ததால் (நம்மை) மறுத்தோரின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவோம். அவர்கள் சென்றடையும் இடம் நரகம் .-  தங்குமிடம் நெருப்புதான்இவர்கள் இறுதியாகப் போய்ச் சேருமிடம் நரகமே! - அநீதி இழைத்தோர் சென்றடையும் இடம் மிகவும் கெட்டது. 3:151. 


23. "எங்களிடம் ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து அதை நெருப்பு சாப்பிடும் -  (குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் -  பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும் - நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் - எத்தூதராயினும் நம்மிடம் அவர் ஒரு குர்பானியைக் கொண்டுவந்து அதை நெருப்பு உண்ணும்) வரை  எந்தத் தூதரையும் நாங்கள் நம்பக் கூடாது என அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்'' என்று அவர்கள் கூறினர். எனக்கு முன்னால் பல தூதர்கள் தெளிவான சான்றுகளையும்நீங்கள் கேட்டதையும் கொண்டு வந்தனர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஏன் அவர்களைக் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! 3:183. 


24. ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில்  உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை (நரக) நெருப்பிலிருந்து - நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. 3:185. 



25.  அவர்கள் நின்றும்அமர்ந்தும்படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லைநீ தூயவன்; எனவே நரக – நெருப்பின்  வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்) 3:191. 




26. "எங்கள் இறைவா! நிச்சயமாக நீ நரகத்திற்கு அனுப்புபவனை - நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ -(நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ- நரகத்தில் புகுத்தினாயோ அவரை இழிவுபடுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்றும் கூறுவார்கள்.) 3:192. 




27. அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளில் நெருப்பையே – நெருப்பைத்தான் - நெருப்பையேதான் உண்(டு நிரப்பு)கின்றனர். நரகில்  அவர்கள் கருகுவார்கள். – கொழுந்துவிட்டெரியும் நெருப்பிலேயே புகுவார்கள் –எறியப்படுவார்கள்- நெருப்பினுள் நுழைவார்கள் 4:10. 



28. அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். நரகில் புகுத்துவான்; - நரகத்தில் புகுத்திவிடுவான்.- நரகத்தில் தள்ளுவான்!-  அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. 4:14. 




29 வரம்பு மீறியும்அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம்.-  நெருப்பில் நுழையச் செய்வோம்; - நரகத்தில் சேர்த்து விடுவோம். நெருப்பில் வீசியே தீருவோம்!- நரகத்தில் நுழையச் செய்து விடுவோம்,  இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது. 4:30. 




30. நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நிச்சயமாக நரகில் கருகச் செய்வோம். -நரகத்தில் புகுத்தி விடுவோம்-நரகத்தில் சேர்த்து விடுவோம்.- நரகில் வீசி எறிவோம்!- அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக  வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும்ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். 4:56




31. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் - நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான்-நரகத்திலும் கீழ்ப்பாகத்தில் தான்-  இருப்பார்கள். நரகத்தின் மிக அடித்தட்டிற்கே செல்வார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். 4:145. 



32. உன் பாவத்துடன்என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக - நீ ஆவதையே நரகவாசியாகி விடுவதை நிச்சயமாக நான் விரும்புகிறேன்.- நாடுகிறேன், நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய்.- நரகவாசியாகி விடுவாய்;- நரகவாசிகளில் உள்ளவனாகிவிடுவாய், இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்.) 5:29



 33.   அவர்கள் நரகிலிருந்து வெளியேற விரும்புவார்கள். -  (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; - நரகத்தை விட்டு ஓட நினைப்பார்கள்.-   (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.  5:37. 


34. "அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதுஅவர்களில் பெரும்பாலோருக்கு (இறை) மறுப்பையும் வரம்பு மீறலையும் அதிகப்படுத்தி விட்டது. கியாமத் நாள்1 வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம்.  அவர்கள் போர் (எனும்) தீயை – நெருப்பை - மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான். 5:64


35 " நிச்சயமாக மர்யமின் மகன் மஸீஹ்தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும்உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் நிச்சயமா தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். - ஒதுங்குமிடம் நரகமேயாகும்,-  செல்லும் இடம் நரகம்தான். இருப்பிடம் நரகமாகும்.- தங்குமிடம் நரகம்தான்,அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ்  கூறினார். 5:72. 



36. நரகின் முன்னே – நெருப்பின் - நரகத்தின் விளிம்பில் -நெருப்பின் மீது  அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் "நாங்கள் திரும்ப அனுப்பப்படலாகாதாஎங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்யெனக் கருதாமல்நம்பிக்கை கொண்டோராக ஆவோமே'' என்று கூறுவார்கள். 6:27. 



37. அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்  "ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்'' (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனடைந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்'' என்று கூறுவார்கள். "நரகமே -நரகம் தான் உங்கள் தங்குமிடம். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல்லாஹ் நாடுவதைத் தவிர'' (என்று கூறுவான்.) உமது இறைவன் ஞானமிக்கவன்அறிந்தவன்.  6:128. 


38. "நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதை  விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் – நெருப்பினால்- நெருப்பிலிருந்து படைத்தாய்! அவரைக் களிமண்ணால்  படைத்தாய்!'' என்று கூறினான். 7:12. 



39. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிஅதைப் புறக்கணிப்போரே நரகவாசிகள். – நரகவாசிகளேயாவார்கள்- நரகவாசிகளே!-  அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். 7:36. 



40 "உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களான ஜின்களுடனும்மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் (நரக) நெருப்பில்- நெருப்பினுள் நுழையுங்கள்!'' நரகத்திற்குச் சென்று விடுங்கள்" என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும்போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் ­ நரகத்தில் நுழையும்போதெல்லாம், - (நரகத்திற்குச்) சென்றபொழுது- நுழையும்போது- (நரகத்திற்குள்) நுழையும் பொழுதெல்லாம் - -தம் இனத்தாரைச் கோபித்து சபிப்பார்கள்சபித்தவாறே செல்வார்கள். அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர்  "எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழிகெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு - ­இரட்டிப்பா அளிப்பாயாக!'' என்று அவர்களில் பிந்தியோர்முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். "ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்'' என்று (அவன்) கூறுவான். 7:38. 



41.  அவர்களுக்கு நரகத்திலிருந்து விரிப்பும்அவர்களுக்கு மேலே (நரகத்திலிருந்து) போர்வைகளும் உள்ளன. நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு -நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக்கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. இவ்வாறே அநீதி இழைத்தவர்களைத் தண்டிப்போம். 7:41. 




42. "எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டீர்களா?'' என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் - நரக வாசிகளை அழைத்து, - நரகவாசிகளை நோக்கி கேட்பார்கள். அவர்கள் 'ஆம்என்பர். "அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது'' என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார். 7:44. 




43. அவர்களின் பார்வைகள் நரகவாசிகளை நோக்கித் - நரகவாசிகளின் பக்கம்-  திருப்பப்படும்போது "எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைத்த கூட்டத்துடன் சேர்த்து விடாதே!'' எனக் கூறுவார்கள். 7:47. 


44. நரகவாசிகள் சொர்க்கவாசிகளை அழைத்து "எங்கள் மீது சிறிது தண்ணீரை அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை ஊற்றுங்கள்!'' எனக் கேட்பார்கள். ''(தன்னை) மறுப்போருக்கு அவ்விரண்டையும் நிச்சயமாக அல்லாஹ் தடை செய்து விட்டான்'' என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள். 7:50. 


45.. இதோஇதனை அனுபவியுங்கள்!  நிச்சயமாக (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நரக வேதனை உண்டு. நரக வேதனையும் உண்டு. 8:14. 


46. இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்குதாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில்- நரகத்தில்- நரகத்திலேயே-நரக நெருப்பில்  நிரந்தரமாக இருப்பார்கள். 9:17. 




47.  அவை அந்நாளில் நரக நெருப்பில் -நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டுஅதனால் அவர்களின் நெற்றிகளிலும்விலாப்புறங்களிலும்முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்) 9:35  



48.  அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் எதிராக நடப்போருக்கு நிச்சயமாக நரக நெருப்பு உள்ளது –இருக்கிறது - நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மாபெரும் இழிவாகும் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? 9:63


49.  நயவஞ்சகர்களான ஆண்களுக்கும்பெண்களுக்கும், (தன்னை) மறுப்போருக்கும் நரக நெருப்பை அல்லாஹ் எச்சரித்து விட்டான். -நரக நெருப்பு உண்டென்று   - நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் போதுமானது. அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.6 அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு. 9:68


50. அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகுபோருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும்உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். "கோடையில் புறப்படாதீர்கள்!'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். "நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது' '- "நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது" நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் (இதைவிட) மிகக் கடுமையானதாகும் என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?  9:81



51.  அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும்அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனாஅல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனாநரக நெருப்பில் விழுந்து விடும்நரக நெருப்பில் விழக்கூடியவாறு- நரக நெருப்பில் நேராக வந்து விழுந்து விட்டானே-நரக நெருப்பில் சரிந்து விழுந்துவிட்டது, அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்  9:109



52. அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.நரகமாகும் 10:8


53. தீமைகளைச் செய்தவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள்கள்  சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள்.நரக நெருப்புக்கு உரியவர்கள்.- நரகவாசிகள்தாம்.- நரகத்திற்குரியவர்களாவர்.-  அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். 10:27. 



54. அவர்களுக்கு மறுமையில்  நரகத்தைத் -நரக நெருப்பைத் தவிர வேறில்லை. அவர்கள் தயாரித்தவை அங்கே அழிந்து விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணாகி விடும். 11:16. 



55.  தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) சான்றின் அடிப்படையிலும்அதைத் தொடர்ந்து இறைவன் புறத்திலிருந்து சாட்சியாளர் (முஹம்மது) வந்துள்ள நிலையிலும்இதற்கு முன்னர் (அருளப்பட்ட) மூஸாவின் வேதம் முன்னோடியாகவும்அருளாகவும் உள்ள நிலையிலும் இதை நம்புவோரும் இதை மறுக்கும் கூட்டத்தினருமா சமமாவார்கள்?  நரகமே - நரக நெருப்பேயாகும். -நரகம்தான். நரகமாகும். இவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட இடமாகும். இதில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்! இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும். எனினும் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். 11:17. 


56. கியாமத் நாளில் அவன் தனது சமுதாயத்திற்கு முன்னால் வருவான். அவர்களை நரகிற்கு அழைத்துச் செல்வான்.நரகத்தில் சேர்ப்பான்;- நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான்.(நரக) நெருப்பில் சேர்ப்பான் சென்றடையும் அந்த இடம் மிகவும் கெட்டது. 11:98. 


57.  கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள்.- நரகத்தில் (வீழ்த்தப்படுவார்கள்.- நரகம் செல்வார்கள்!அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும்அலறலும் இருக்கும். 11:106.




58. அநீதி இழைத்தோர் பக்கம் சாய்ந்து விடாதீர்கள்! (அவ்வாறு சாய்ந்தால்) உங்களை நரகம் தீண்டும்.- நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்;- நரக நெருப்பு உங்களைச் சூழ்ந்து கொள்ளும்! -நரக நெருப்பு உங்களைத் தீண்டிவிடும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும் இல்லை. பின்னர் உதவி செய்யப்பட மாட்டீர்கள். 11:113. 



59. நீர் ஆச்சரியப்பட்டால் "நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?' என்று அவர்கள் கூறுவது (இதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின் கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள்.- நரகவாசிகளே யாவார்கள்- அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். 13:5. 



60.  வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் -  அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும்பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தருவது நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். 13:17. 



61.  (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மைஅவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதன் உணவும்நிழலும் நிரந்தரமானதாக இருக்கும். இதுவே (இறைவனை) அஞ்சுவோர்க்கான முடிவாகும். (ஏகஇறைவனை) மறுப்போரின் முடிவு நரகமே. (நரக) நெருப்பேயாகும்.- நரகம்தான்!- நரக நெருப்பே- நரகமாகும் 13:35. 


62.  அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணைகற்பித்தனர். "அனுபவியுங்கள்! நிச்சயமாக நீங்கள் சென்றடையும் இடம் சேருமிடம்- செல்வது நரகமே''- நரகம்தான் - நரகத்திற்குத்தான்! என்று கூறுவீராக! 14:30. 



63. அவர்களின் சட்டைகள் தாரினால் தயாரிக்கப்பட்டவை. அவர்களின் முகங்களை நெருப்பு மூடிக் கொள்ளும்- நெருப்பு பொசுக்கும்.- தீக்கொழுந்துகள் மூடியிருக்கும். 14:50. 



64. கடுமையான வெப்பமுடைய நெருப்பால் - கடிய சூடுள்ள -கொடிய உஷ்ணமுள்ள- நெருப்பிலிருந்து-  தீயின் கடும் வெப்பத்திலிருந்து- இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம். 15:27. 


65. அவர்கள் (தமக்கு) விரும்பாததை (பெண் குழந்தையை) அல்லாஹ்வுக்குக் கற்பனை செய்கின்றனர். (இதனால்) தங்களுக்கு நன்மை உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய் கூறுகின்றன. நிச்சயமாக அவர்களுக்கு நரகமே - (நரக) நெருப்புத் தான்- உள்ளது. அவர்கள் (அதில்) தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 16:62




அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனையன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாகஊமைகளாகசெவிடர்களாக கியாமத் நாளில்1 எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். جَهَـنَّمُ‌ அது தணியும் போதெல்லாம் தீயை سَعِيْرًا‏ அதிகமாக்குவோம். 17:97. 





66.  "இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது'' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நிச்சயமாக- திண்ணமாக நாம் ஒரு நெருப்பை- நரகத்தை -  (நரக) நெருப்பை- நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். 18:29. 


   



67. குற்றவாளிகள் நரகத்தைப் (நரக) நெருப்பை- பார்க்கும்போது 'அதிலே தாங்கள் விழுபவர்கள்என்பதை அறிந்து கொள்வார்கள். அதை விட்டுத் தப்பும் இடத்தையும் அவர்கள் காண மாட்டார்கள். 18:53. 





68. (தனது பணியாளர்களிடம்) "என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!'' என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமானபோது 'ஊதுங்கள்!என்று கூறி அதைத் தீயாக நெருப்பாக- ஆக்கினார். "என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்'' என்றார். 18:96. 




69 அவர் ஒரு நெருப்பைக் கண்டபோது தமது குடும்பத்தினரிடம் "இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதில் உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைக் கொண்டு வருவேன். அல்லது நெருப்புக்கு ஏதேனும் ஒரு வழியைக் கண்டு வருவேன்'' என்றார். 20:10. 


70. நரகத்திலிருந்து -(நரக) நெருப்பைத் தமது முகங்களையும்முதுகுகளையும் தடுக்க முடியாத நேரத்தை (ஏகஇறைவனை) மறுப்போர் அறிய வேண்டாமாஅவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். 21:39. 




71.  "நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும்பாதுகாப்பாகவும் ஆகி விடு'' என்று கூறினோம். 21:69. 




72.. நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். "இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என (முஹம்மதே!) கேட்பீராக! அதுதான் நரகம். -நெருப்பு  மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது. 22:72




73. அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும்.- கரிக்கும்;- தோலை நக்கித் தின்றுவிடும். அதில் அவர்கள் விகாரமான தோற்றத்துடன் இருப்பார்கள். 23:104. 





74.  அல்லாஹ்வானங்களுக்கும்  பூமிக்கும் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படாவிட்டாலும் -தீண்டாவிடினும்,- தொடாவிடினும்- அதன் எண்ணெய்யும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். 24:35. 




75.  (ஏகஇறைவனை) மறுப்போர் பூமியில் வென்று விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக  நீர் நினைக்காதீர்! அவர்களின் புகலிடம் நரகம்.ஒதுங்குமிடம் - (நரக) நெருப்புத்தான்;- செல்லுமிடம் நரகம்தான். இருப்பிடம் நரகம்தான்;அது கெட்ட தங்குமிடம். 24:57. 





76. ""நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து உங்களுக்கு செய்தி கொண்டு வருகிறேன். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஒரு தீப்பந்தத்தை உங்களிடம் கொண்டு வருகிறேன்'' என்று மூஸா தமது குடும்பத்தாரிடம் கூறியதை நினைவூட்டுவீராக! 27:7. 






77. அங்கே அவர் வந்தபோது "நெருப்பில் இருப்பவரும்அதைச் சுற்றியுள்ளோரும் பாக்கியமளிக்கப்பட்டவர்கள்அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் தூயவன்''  என்று அறிவிக்கப்பட்டார். 27:8. 





78. தீமையைக் கொண்டு வந்தோர் முகம் குப்புற நரகில் நரகத்தில் -(நரக) நெருப்பில்- தள்ளப்படுவார்கள். "நீங்கள் செய்ததைத் தவிர வேறு கூலி கொடுக்கப்படுவீர்களா?'' (என்று கூறப்படும்.) 27:90. 






79. மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்துதமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்டபோது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். "இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோஅல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்'' என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார். 28:29. 




80. அவர்களை நரகிற்கு – நெருப்பிற்கு  அழைக்கும் தலைவர்களாக்கினோம். கியாமத் நாளில்1 அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். 28:41. 




81. "இவரைக் கொல்லுங்கள்! அல்லது (தீயிட்டுப் - நெருப்பிலிட்டுப்)  حَرِّقُوْهُ -ஹர்ரகூ  பொசுக்குங்கள்!''-எரித்துவிடுங்கள்- என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான்.- ஈடேற்றினான்;- நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 29:24.  
இதில் உள்ள ஹர்ரகூ என்ற அரபி வார்த்தைக்கு எரித்துவிடுங்கள் என்பதே நேரடி மொழி பெயர்ப்பாகும்






82. இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில்1 உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார். உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார். உங்கள் தங்குமிடம் நரகமாகும்.(நரக) நெருப்புத்தான்;-  உங்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை என்று அவர் கூறினார். 29:25. 





83. குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம்.- (நரக) நெருப்புத்தான்- அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்படும். 32:20. 




84. அவர்களின் முகங்கள் நரகில் - நெருப்பில் புரட்டப்படும் நாளில்6 "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதாஇத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள். 33:66. 



85. எனவே இந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு எந்த நன்மையும்தீங்கும் செய்ய அதிகாரம் பெற மாட்டீர்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிய நரகமெனும் நெருப்பின்- வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அநீதி இழைத்தோருக்குக் கூறுவோம். 34:42. 



86. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே-நரகவாசிகளுடன் இணைந்துவிட வேண்டுமென்பதற்காகத்தான்!- கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான். அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான் 35:6. 



87.  (நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம். 35:36. 



88. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள் நெருப்பை) மூட்டிக் கொள்கின்றீர்கள்.(தீ) பற்றவைத்துக் கொள்கின்றீர்கள்!- 36:80. 



89.   இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை  فِى الْجَحِيْمِ நெருப்பில் (நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில்- நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்கொழுந்து விட்டெரியும் நெருப்பில்-)  போடுங்கள்! - என்று அவர்கள் கூறினர் 37:97. 




90.  வானத்தையும்,  பூமியையும்அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏகஇறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. -(நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.- நரகமே கிடைக்கும்.- நரக நெருப்பின் மூலம் அழிவுதான் இருக்கின்றது. 38:27. 



91. "இது உங்களுடன் சேரும் கூட்டமாகும்'' (என்று நரகத்தில் கிடக்கும் தலைவர்களிடம் கூறப்படும்.) "அவர்களுக்கு எந்த வரவேற்பும் இல்லை. அவர்களும் நரகில் கருகுபவர்கள்  தானே'' நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்பவர்கள்- நரகம் செல்பவர்களே" -நெருப்பில் எரிந்து பொசுங்கக்கூடியவர்கள்தாம்!- நரகத்தில் புகுந்து விட்டவர்களே! (என்று நரகத்தில் கிடக்கும் தலைவர்கள் கூறுவார்கள் 38:59. 



92.  "எங்கள் இறைவா! இதற்கு (நரகத்திற்கு) எங்களைக் கொண்டு வந்தோருக்கு நரகில் பன்மடங்கு வேதனையை- நரகத்தின் வேதனையை இரு மடங்காக- அதிகமாக்குவாயாக!'' என்றும் கூறுவார்கள். 38:61. 


93.  நரகவாசிகளின் இந்த வாய்ச் சண்டை உண்மை! நரகவாசிகள் ஒருவரோடு ஒருவர்- தர்க்கித்துக் கொள்வது நிச்சயமாக உண்மைதான். 38:64. 



94.   "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் – நெருப்பிலிருந்து -நெருப்பினால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால்  படைத்தாய்'' என்று அவன் கூறினான். 38:76. 


95. மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும்போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான். அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணைகற்பிக்கிறான். "உனது (இறை)மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளைச் சேர்ந்தவன்'' நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே.நரகவாசிதான்."- திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.- நரகவாசிகளில் உள்ளவனாவாய் எனக் கூறுவீராக! 39:8. 



96. அவர்களுக்கு மேற்புறம் மேலே- நெருப்பினாலான தட்டுக்கள் இருக்கும். மேலும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். -நெருப்புக்குடைகள் மேலிருந்தும்கீழிருந்தும் மூடியிருக்கும்.- நெருப்புக்குடைகள் மேலிருந்தும்கீழிருந்தும் மூடியிருக்கும். கீழ்ப்புறமும் தட்டுக்கள் இருக்கும்இதன் மூலம் அல்லஹ் தனது அடியார்களை அச்சுறுத்துகிறான். என் அடியார்களே! எனக்கு அஞ்சுங்கள்! 39:16. 



97. யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை (நெருப்பிலிருக்கும் அவனை- நரகத்திலிருக்கும் அவனை-நெருப்பில் வீழ்ந்துவிட்டிருப்பவனை -(நரக) நெருப்பில் (செல்ல) இருக்கும் அவனை) நீர் விடுவிப்பீரா? 39:19. 



98.   (ஏகஇறைவனை) மறுப்போர் அஸ்ஹாபுன்னா(ரி)ர்


 اَصْحٰبُ النَّارِ ؔۘ


நரகவாசிகளே (நரகவாசிகள்தாம் - நரகத்தில் நுழைபவர்களே!- நரகவாசிகள்) என்ற உமது இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. 40:6. 



99.  என் சமுதாயமே! எனக்கென்னநான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை  இலன்னா(ரி)ர்


 اِلَى النَّارِؕ

நரகிற்கு (நரகத்திற்கு- நரகத்தின் பக்கம்- நெருப்பினால்-நெருப்பின் பக்கம் )  அழைக்கிறீர்கள் 40:41. 



100.  என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும்மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும்நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும்வரம்பு மீறுவோர் தான் அஸ்ஹாபுன்னா(ரி)ர்

 اَصْحٰبُ النَّارِ

நரகவாசிகள் (நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.- நரகவாசிகள்தாம்-நரகம் செல்லக்கூடியவர்களாவர்.)  என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. 40:43. 



101. காலையிலும்மாலையிலும் அன்னாரு யுஃறழூன அலைஹா


اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا 

நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.( நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்;நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர்.- நரக நெருப்பு! அதன் முன்பு கொண்டுவரப்படுகிறார்கள்- அந்(நரக)நெருப்பு_அதன் மீது எடுத்துக் காட்டப்படுகிறார்கள்)  யுகமுடிவு நேரம்1 வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) 40:46. 


102.  நரகத்தில் Fபின்னாரி

فِى النَّارِ

(நரக நெருப்பில்) அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது "உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே மினன்னா(ரி)ர்

مِّنَ النَّارِ‏

நரகத்திலிருந்து (இந்நெருப்பிலிருந்து- நரக வேதனையிலிருந்து-நரகத்தி(ன் வேதனையி)லிருந்து) சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?'' என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள். 40:47. 



103. "உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்'' என்று Fபின்னாரி
 فِى النَّارِ


நரகத்தில் கிடப்போர்  (நரக) நெருப்பில் இருப்பவர்கள் – நரகத்திலுள்ளவர்கள் -நரகத்தில் வீழ்ந்துகிடக்கும் அம்மக்கள்) நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள். 40:49. 



104.  அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். Sதும்ம Fபின்னாரி யுஸ்ஜறுான/ன்
 ثُمَّ فِى النَّارِ يُسْجَرُوْنَ‌

பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள். – (  தீயிலும் கரிக்கப்படுவார்கள்நரகத்தில் வீசியெறியப்படுவார்கள்.- நரகத்தில் தீ மூட்டப்படுவார்கள்  40:72.


105 இந்நிலையில் இவர்கள் பொறுமையுடன காத்திருந்தால்  Fபன்னாரு மஸ்வ(ன்)ல் லஹும்

 فَالنَّارُ مَثْوًى لَّهُمْ‌ؕ 


நரகமே (நரக நெருப்புத்தான்) இவர்களின் தங்குமிடமாகும். இவர்கள் (மீண்டும் உலகுக்கு அனுப்பி) வணக்கங்கள் செய்யும் வாய்ப்பை இவர்கள் கோரினால் அந்தச் சிரமம் அவர்களுக்கு அளிக்கப்படாது 41:24


106. இதுவே (அதுவேதான்Zஸாஉ அஃதாஇல்லாஹின்னா(ரு)ர்

جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ‌ 

அல்லாஹ்வின் பகைவர்களுக்கு (விரோதிகளுக்கு-எதிரிகளுக்கு,-) ரிய கூலியாகிய நரகம். அதில் அவர்களுக்கு நிரந்தரமான இல்லம் இருக்கிறது. இது நமது வசனங்களை அவர்கள் மறுத்ததற்கான கூலி. 41:28



107.  நமது வசனங்களை வளைப்போரும்இந்த அறிவுரை தங்களிடம் வந்தபோது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்திட முடியாது. அFபம(ன்)ய் யுல்ஃகா Fபின்னாரி ஃகைருன்

اَفَمَنْ يُّلْقٰى فِى النَّارِ خَيْرٌ


நரகில் வீசப்படுபவன் (எறியப்படுபவன்) சிறந்தவனா? (நல்லவனா?) அல்லது கியாமத் நாளில் அச்சமற்றவனாக வருபவனாநீங்கள் நினைத்ததைச் செய்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன் 41:40



108. "இந்த நாளின்1 சந்திப்பை நீங்கள் மறந்தது போல் இன்று நாமும் உங்களை மறப்போம். வ மஃவாகுமுன்னாரு

 وَمَاْوٰٮكُمُ النَّارُ


உங்கள் தங்குமிடம் நரகமாகும். (நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; உங்கள் இருப்பிடம் இனி நரகம்தான்.- உங்களுக்கு உதவுவோர் இல்லை'' எனக் கூறப்படும். 45:34. 




109 . வ யவ்ம யுஃரழுல் லதீ(ரீ)ன கFபரூ அலன்னாரி 


وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ



(ஏகஇறைவனை) மறுத்தோர்  நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில் (அன்றியும் (பின்னர் நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில்,நரகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது "உங்கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்து விட்டீர்கள். அதிலேயே இன்பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும்நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள்'' (என்று கூறப்படும்.) 46:20. 


110. வ யவ்ம யுஃரழுல் லதீ(ரீ)ன கFபரூ அலன்னாரி

وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ 



(ஏகஇறைவனை) மறுப்போர் நரகத்தின் முன்னே நிறுத்தப்படும் (நெருப்பின் முன்னால் கொண்டுவரப்படும்) நாளில்  "இது உண்மை அல்லவா?'' (எனக் கேட்கப்படும்) "ஆம்! எங்கள் இறைவன் மேல் ஆணையாக!'' என்று கூறுவார்கள். நீங்கள் (என்னை) மறுப்போராக இருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்! என்று (இறைவன்) கூறுவான். 46:34. 



111. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (ஏகஇறைவனை) மறுப்போர் (இவ்வுலகில்) கால்நடைகள் தின்பது போல் தின்று அனுபவிக்கிறார்கள். வன்னாரு மஸ்வ(ன்)ல் லஹும்

 وَالنَّارُ مَثْوًى لَّهُمْ‏


நரகமே அவர்களுக்குத் தங்குமிடம். (நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.ஒதுங்குமிடமாகும்.- செல்லுமிடம் நரகம்தான். -இறுதியில் சென்றடையும் இடம் நரகமாகும்) .-47:12. 




112.  (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மைஅதில் மாற்றமடையாத தண்ணீரைக் கொண்ட ஆறுகளும்சுவை கெட்டுப் போகாத பாலாறுகளும்அருந்துபவருக்கு இன்பம் தரும் மது ஆறுகளும்தூய்மையான தேன் ஆறுகளும் இருக்கும். அங்கே அவர்களுக்கு எல்லா வகையான கனிகளும் தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும் உண்டு. (இவர்கள்)  கமன் ஹுவ ஃகாலிதுன் Fபின்னாரி வ ஸுஃகூ மாாஅன் ஹமீமன் Fபஃகத்தஅ அம்ஆஃஅஹும்

كَمَنْ هُوَ خَالِدٌ فِى النَّارِ وَسُقُوْا مَآءً حَمِيْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ



நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி குடல்களைத் துண்டாக்கி விடும் கொதிக்கும் நீர் புகட்டப்பட்டவனைப் போன்றவர்களா? - நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்துகொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? 47:15. 



113. யவ்ம ஹும் அலன்னாரி யுFப்தனுா(ன)ன்

يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُوْنَ‏


அவர்கள் நரகத்தில் தண்டிக்கப்படும் நாள் தான் அது. (நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது- அந்நாளில் அவர்கள்நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்.- இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும்.  (அந்நாள்) அவர்கள் நெருப்பில் (பொசுக்கப்பட்டு) தண்டிக்கப்படும் நாள்) 51:13. 


114.  யவ்ம யுதஃஊன இலா நாரி ஜஹன்னம தஃ(அன்)ஆ

يَوْمَ يُدَعُّوْنَ اِلٰى نَارِ جَهَنَّمَ دَعًّاؕ‏


அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள். (நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.- நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில்,-  எந்நாளில் அவர்கள் நெட்டித் தள்ளப்பட்டு நரக நெருப்பின் பக்கம் விரட்டப்படுவார்களோ அந்நாளில்; -நரகத்தின்பால் ஒரே தள்ளாகத் தள்ளப்படும் நாளில்.) 52:13. 



115.  ஹாதி(ரி)ஹின்னாருல்லதீ குன்தும் பிஹா துகத்(ர்)தபூன


هٰذِهِ النَّارُ الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏

நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே. ("நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்" -“இதுதான் அந்த நரக நெருப்புஇதனைத்தான் நீங்கள் பொய்யென வாதித்தீர்கள். நீங்கள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோஅந்(நரக) நெருப்பு இதுதான் 52:14

116. யவ்ம யுஸ்ஹஃகூன Fபின்னாரி அலா உஜுஹிஹிம் துா(ரூ)ஃகூ மஸ்ஸ ஸஃக(ர)ர்


يَوْمَ يُسْحَبُوْنَ فِى النَّارِ عَلٰى وُجُوْهِهِمْؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ‏


அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் "நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்''  அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், “நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள் - இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி "(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்"_ இவர்கள் நரக நெருப்பில் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: இப்போது சுவையுங்கள்நரக நெருப்பின் தீண்டுதலை!- இவர்கள் நரகத்திற்கு முகங்களின் மீது இழுத்து செல்லப்படும் நாளில்இவர்களிடம், (நீங்கள்) நரக நெருப்பின் தீண்டுதலைச் சுவைத்துப்பாருங்கள்  (எனக் கூறப்படும்) 54:48. 


117.   வகலஃகல்ஜாாான்ன மி(ன்)ம் மாரிஜி(ன்) மின் நார் 



وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍِ






தீப்பிழம்பிலிருந்து (நெருப்புக் கொழுந்திலிருந்து- நெருப்பின் கொழுந்தினால்-நெருப்பின் ஜுவாலையினால்- அவன்) ஜின்னைப் படைத்தான். 55:15. 


118.  (யுகமுடிவு நாளில்) உங்களுக்கு ஷுவாழு(ன்)ம் மின்னா(ரின்)ர்

 شُوَاظٌ مِنْ نَارٍ 

நெருப்பின் (அக்னி –தீ) ஜுவாலையும்,(பிழம்பும்)  புகையும் அனுப்பப்படும். அப்போது உதவி பெற மாட்டீர்கள். 55:35. 




119 அ(FA)பறஃஅய்துமுன் நாரல்லதீ துாரு(ன)ன்

   اَفَرَءَيْتُمُ النَّارَ الَّتِىْ تُوْرُوْنَؕ‏ 
நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றிச் சிந்தித்தீர்களா? (கவனித்தீர்களா?பார்த்தீர்களா?)

நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா? (பாகவி)

நீங்கள் எரிக்கின்ற இந்தத் தீயைப் பற்றி எப்போதாவது நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா? (IFT)  56:71. 



120. இன்று உங்களிடமிருந்தும் (ஏகஇறைவனை) மறுத்தோரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. மஃவாகுமுன் நா(ரு)ர்

مَاْوٰٮكُمُ النَّارُ‌ؕ 

உங்கள் தங்குமிடம் (செல்லுமிடம்- இருப்பிடம்) நரகமே. அதுவே உங்கள் துணை. அது மிகவும் கெட்ட தங்குமிடம் 57:15. 


121. அவர்களின் பொருட்செல்வமும்மக்கட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது.  உலாயிக அஸ்ஹாபுன்னா(ரி)ர்

اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌

அவர்களே நரகவாசிகள். (நரகத்தின் தோழர்கள் )அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். 58:17. 


122. அன்னஹுமா பின்னாரி

 اَنَّهُمَا فِى النَّارِ 


(நரக நெருப்புத்தான்நரகத்தில் நிரந்தரமாக இருப்பதே இருவரின் முடிவாக ஆகிவிட்டது. அநீதி இழைத்தோருக்கு இதுவே தண்டனை. 59:17. 


அஸ்ஹாபுன்னாரி

 اَصْحٰبُ النَّارِ 

(நரகத்திற்குச் செல்பவர்களும்,) நரகவாசிகளும், சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். சொர்க்கவாசிகளே வெற்றி பெற்றோர். 59:20. 

124. வ கத்(ர்)தபூ பிஆயாதினா 

وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ 

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோர் (நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ - நம்முடைய வசனங்களைப் பொய்யெனத் தூற்றினார்களோ)

 உலாயிக அஸ்ஹாபுன்னாரி

اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ 


அவர்கள் நரகத்தின் தோழர்கள் (நரகவாசிகள் - அவர்கள் நரகவாசிகளே- அவர்கள் நரகவாதிகளே)


(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது கெட்ட தங்குமிடம். 64:10. 


125. நம்பிக்கை கொண்டோரே! ஃகூ அன்FUபுஸகும் வ அஹ்லீகும் நார(ன்)

 قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை நெருப்பை விட்டுக் நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். 66:6. 


126. நூஹுடைய மனைவியையும்லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. வ ஃகீலத்ஃகுலன் நார மஅத் தாஃகிலீ(ன)ன்.

وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ‏ 


"இருவரும் நரகில் (நெருப்பில்நரக நெருப்புக்குள்) நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது. 66:10. 




127. அவர்களது குற்றங்கள் காரணமாக மூழ்கடிக்கப்பட்டு FAபத்ஃகிலுா நாரன்

 فَاُدْخِلُوْا نَارًا



நரகில் நுழைக்கப்பட்டார்கள். (நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர்.- நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள்) அல்லாஹ்வையன்றி தமக்கு உதவியாளர்களை அவர்கள் காணமாட்டார்கள். 71:25. 



128. "அல்லாஹ்விடமிருந்தும்அவனது தூதுச் செய்திகளிலிருந்தும் எடுத்துச் சொல்வதைத் தவிர (வேறு இல்லை)" (என்றும் கூறுவீராக!) அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் மாறுசெய்வோருக்கு FAபஇன்ன லஹு நார ஜஹன்னம

فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ


நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். 
(நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்- 
நரக நெருப்புத்தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்.- 
நரக நெருப்பு இருக்கின்றது. மேலும் இப்படிப்பட்டவர்கள் அதில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
நிச்சயமாக அவருக்கு (க்கூலி) நரக நெருப்புதான். அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்)  72:23. 


129.  வ மா ஜஃஅல்னாா அஸ்ஹாபன்னாரி இல்லா மலாாயிகதன்


وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓٮِٕكَةً‌


நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. (அன்றியும்நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; -நரகத்தின் காவலாளிகளாக மலக்குகளையேயன்றி (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை.- நாம் வானவர்களையே இந்த நரகத்தின் காவலர்களாய் ஆக்கியுள்ளோம்.- மேலும்நரகத்தின் காவலர்களை மலக்குகளாகவே தவிர நாம் ஆக்கவில்லை;)

அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போருக்குச் சோதனையாகவே484 தவிர நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டோர்27 உறுதி கொள்வதற்காகவும்நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும்நம்பிக்கை கொண்டோரும் வேதம் வழங்கப்பட்டோரும்27 சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும்யாருடைய உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்களும் (நம்மை) மறுப்போரும் இதன் மூலம் அல்லாஹ் என்ன முன் மாதிரியை நாடுகிறான்?'' என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு அமைத்தோம்) இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை அவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை. 74:31. 

130. இன்னஹா தர்மீ பிஷரரின் கல் ஃகஸ்(ரி)ர்.

 اِنَّهَا تَرْمِىْ بِشَرَرٍ كَالْقَصْرِ‌ۚ‏

அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும். ஜான்

(எனினும்,) பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக்கொண்டே இருக்கும்.பாகவி

அந்த நெருப்புமாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்.- (IFT)


(எனினும்) நிச்சயமாக அது-(பெரிய) மாளிகையைப் போன்ற நெருப்புப் பொறிகளை அது வீசி எறியும்.(சவூதி)



131. ஃகுதில அஸ்ஹாபுல் உஃக்துா(தி)த்

 قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ‏

(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர். -ஜான்


அக்கினி குண்டங்களையுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். 

அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். -அப்துல் ஹமீது பாகவி

தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!-(IFT)

(நெருப்புக்) குண்டங்களையுடையோர் சபிக்கப்பட்டுவிட்டனர். -(சவூதி)






132.  அந்நாரி தா(ரா)தில் வஃகூ(தி)த்

   النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ‏ .

எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டம் (PJ)

(விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்)- ஜான்

அதுவிறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) -  பாகவி

(அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது. - (IFT)

எரிபொருளுடைய (பெரும்) நெருப்பு(க்குண்டம்) (சவூதி)  85:5



133.  அல்லதீ(ரீ) யஸ்லன் நாரல் குப்ரா  

 الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏

அவனே பெரும் நெருப்பில் கருகுவான்.-(PJ)

அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.ஜான்

(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.-பாகவி

அவன் பெரும் நெருப்பில் நுழைவான்;- (IFT)


அவன் எத்தகையவனென்றால் (நரகத்தின்) பெரும் நெருப்பில் அவன் நுழைவான்- (சவூதி)  .  87:12. 



134. தஸ்லா நாரன் ஃஹாமிய (தன்)
تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ‏ 
சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும்.-பீ.ஜே.

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். -ஜான் 

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவைகள் செல்லும்.- பாகவி

கனன்றெழும் நெருப்பில் கருகிக் கொண்டிருக்கும்;- (IFT)

கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் அவை பிரவேசிக்கும்.- (சவூதி)  88:4. 



135. ஃஅலைஹிம் நாரு(ன்)ம் முஃஸத(துன்)


   عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ

அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும்.- P.J.

அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.- ஜான்

அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.- பாகவி

அவர்கள் மீது நெருப்பு படர்ந்திருக்கும்.- (IFT)


அவர்கள்மீது (எல்லாப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கும்.- (சவூதி)  90:20. 



136.  FAபஅன்த(ர)ர்துகும் நாரன் தலழ்ழா


   فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌ۚ‏ 


கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.- P.J.

ஆதலின்கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.-ஜான்

(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்.-பாகவி

எனவேகொழுந்துவிட்டெரியும் நெருப்பைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கை செய்துவிட்டேன்.-(IFT)


ஆகவே, (மனிதர்களே!) கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்து விட்டேன்.-(சவூதி)  92:14. 



137. (ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்27 இணை கற்பிப்போரும் FEEபீ நாரி ஜஹன்னம

 فِىْ نَارِ جَهَنَّمَ


நரக நெருப்பில் இருப்பார்கள். (வீழ்வார்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். 98:6. 



138.FAபல் மூரியாதி ஃகத்ஹன்


  فَالْمُوْرِيٰتِ قَدْحًا ۙ‏ 

தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும் 

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,- ஜான்

(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.- பாகவி

பின்னர்குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற- (IFT)

பின்னர், (செல்லும் வேகத்தில் அவற்றின் குளம்புகள் கற்களில் மோத) தீப்பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும் சத்தியமாக!- (சவூதி) 100:2


139. நாருன் ஹமிய்யா(துன்) 


   نَارٌ حَامِيَةٌ


 (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். ஜான்

(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.- பாகவி

கொழுந்து விட்டெரியும் நெருப்பு!-  (IFT)


(அதுதான்) கடுமையாக சூடேற்றப்பட்ட (நரக) நெருப்பாகும்.- (சவூதி) 101:11. 

140. நாருழ்லாஹில் மூஃகத(து)


نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۙ‏
மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.- ஜான்

(அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.- பாகவி

அது அல்லாஹ்வின் நெருப்புஅதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது;-  (IFT)


எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் (நரக) நெருப்பு.-  (சவூதி) 104:6. 


141. ஸயஸ்லாநாரன் தா(ரா)தலஹ(பின்)ப்


    سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ‏ 

கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், 

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.- ஜான்

வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அடைவான்.- பாகவி

விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படுவான்.- (IFT)


மறுமையில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவன் பிரவேசிப்பான்.- (சவூதி) 111:3, 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?