பள்ளிவாசல்களை திறந்து வைக்க வேண்டாம். ஜும்ஆ இல்லை ஜ.உ.சாவின் அறிக்கை
மற்றும் தலைமை காஜி, ததஜ போன்றவற்றின் அறிவிப்புகளின் தொகுப்பு
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_48.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_48.html
ஜமாஅத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் தற்போது பரவி வருகிறது
நோய் பரவும் விகிதம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருப்பது மருத்துவர்களை வெகுவாகக் கவலை கொள்ளச் செய்துள்ளது.
நோய் தொற்று ஏற்பட்ட ஒருவர் 14 நாட்களுக்குப் பிறகே வைரஸ் பாதித்திருப்பதை அறிய முடியும் எனும் ஆபத்து இதில் இருப்பதால் மக்கள் கூட்டாகச் சேர்வதைத் தவிர்த்துக் கொள்வதன் மூலமே கொரானா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
மக்கள் பெருமளவு கூட்டாக ஒன்று கூடுவது நோய் பரவலை அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
எனவே இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
• பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.
• உணவு, மருந்து, பால் போன்ற அத்தியாவசிய பொருள்களை தவிர இதர அனைத்து கடைகளையும் மூட உத்தரவு.
• மத ஆலயங்களில் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து பொது வழிபாடு நடத்துவதற்குக் கட்டுப்பாடுகள்.
• பொது இடங்களில் கூட்டமாகக் கூடக்கூடாது.
இதுபோன்ற பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
எனவே கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பதற்காக, எல்லா வகையிலும் மக்கள் கூட்டமாகத் திரள்வதைத் தடுக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.
இதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமான ஒன்றாகும். பொதுமக்களின் ஒத்துழைப்பின் மூலமே நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
எனவே இதுபோன்ற அசாதாரண சூழல்களில் கூட்டமாகப் பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதைத் தவிர்க்கவும்.
பள்ளிக்கு அருகிலுள்ள, குறைந்த எண்ணிக்கையிலான ஒருசில நபர்களை மட்டுமே கொண்டு பள்ளிவாசலில் ஐவேளை ஜமாஅத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகை நடைபெற்றால் போதுமானது.
இதர மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஐவேளைத் தொழுகைகளையும், ஜும்ஆவுக்குப் பதிலாக லுஹர் தொழுகையையும் நிறைவேற்றிக் கொள்ளவும். இயன்றால் வீட்டில் உள்ளவர்கள் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளவும்.
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை எண்ணத்திற்கே கூலி என்ற அடிப்படையில், இதுபோன்ற நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் அல்லாஹ் நமது எண்ணத்திற்குத் தக்க கூலி வழங்கப் போதுமானவன்.
மக்கள் தொழுகைக்காகப் பள்ளிக்கு வர இயலாத சூழலை உணர்த்துவதற்காக, பாங்கு சொல்லும் போது பின்வரும் நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
صَلُّوْا فِى رِحَالِكُمْ
ஸல்லூ ஃபீ ரிஹாலி(க்)கும்
பொருள்: உங்கள் இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள் .
என்ற வாசகத்தை பாங்கின் இறுதியில் கூற வேண்டும்.
(பார்க்க: புகாரி 632, முஸ்லிம் 1241)
அரசு மறு உத்தரவைப் பிறப்பிக்கும் வரை இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
இ. முஹம்மது
பொதுச் செயலாளர்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
Comments