Posts

Showing posts from February, 2016

இஸ்லாத்தில் மிகைத்து இருப்பது எது? தண்டிப்பா? மன்னிப்பா?

Image
நாம் உபதேசங்களை செய்த பிறகும் அவர் திருந்தவில்லையே! நேர் வழி பெறவில்லையே ! நம்மால் முடிந்த உதவிகளை செய்த பின்னரும் அவர் அந்த சிரமத்தில் இருந்து மீளவில்லையே . இப்படி கவலை படக் கூடாது . இப்படி கவலைப் படுவது முஃமினுக்குரிய தகுதி அல்ல . அல்லாஹ்வின் துாதர் ( ஸல் ) அவர்களிடமே அல்லாஹ் அப்படித்தான் கூறுகின்றான் . ( நபியே ) நிச்சயமாக நீங்கள் விரும்பியோரை நேர் வழியில் செலுத்த உம்மால் முடியாது . ( திரு குர்ஆன் 28;56)  யார் விரும்பியோரை நேர் வழியில் செலுத்துவான் ?  தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். நேர் வழியில் செலுத்துவதை அவனுடைய கைவசம் வைத்துள்ளான் . யாரை நேர் வழியில் செலுத்த வேண்டும் . யாரை அப்படியே வழி கேட்டில் விட்டு விட வேண்டும் . இது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது . இறைத் துாதருக்கே இந்த பொறுப்பு இல்லை என்றால் . நாம் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும் . உலகத்தில் வாழக் கூடிய ஒவ்வொரு முஃமினும் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம் . நம்மை பற்றிய விசாரணைக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் . அதற்கு நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும் . பரீட்சையிலே நடத்தப்பட்ட

வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும் விழி இருந்தும் பார்ப்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ

Image
நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்  அல்குர்ஆன் 9;40 தமீமுன் அன்சாரியின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் மனித நேய மக்கள் கட்சியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கப்பட்டார். இதையடுத்து தனக்கு பெரும்பான்மையான ஆதரவாளர்கள் இருப்பதாக கட்சிக்கு உரிமைக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தமீமுன் அன்சாரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமீமுன் அன்சாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், உரிமை கோர முடியாது என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

யாரைப் பற்றி நாம் விசாரிக்கப்படுவோம்?

Image
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். இது இறைமறையில் ( 2:154,3:169 ஆகிய ) இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ள வசனங்கள் . இந்த வசனங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு விதமாக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் வழி கெடுத்துள்ளதைப் பார்க்கிறோம் . இணை வைப்பாளர்களாக ஆக்கியதைக் காண்கிறோம் . தவறிய மனிதர்களை தரைக்குறைவாக விமர்சிக்கமாட்டோம்! தனி நபர் தாக்குதலை அடியோடு தவிர்ப்போம்! தவறுகளை எவர் சுட்டிக்காட்டினாலும் அடக்கத்துடன் ஏற்போம்! தனி மனித வழி பாட்டை தரை மட்டம் ஆக்குவோம். இது போன்ற கவர்ச்சி வசனங்களையும் வார்த்தை ஜாலங்களையும் சொல்கிறார்கள் . சொல்லிக் கொண்டே தனி மனித வழி பாட்டுக் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் . வயது வரம்பு இன்றி மிகவும் அசிங்கமாக, தரக்குறைவாக பேசி, எழுதி இழிவுபடுத்தக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களை நரகத்துக்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் . இதையும் பார்க்கிறோம் அதுபோல் போர் நம்மீது கடமை . ஆகவே ஹைய அலல் ஜிஹாது. மீண்டும் கர்பலா. இப்படி அர்த்தம் தெரியாமல் கவர்ச்சி வார்த்தைகளைச் சொல்கிறார்கள். இப்பட

முஸ்லிம்கள் எப்பொழுதும் வாளும் கேடயமுமாக நிற்க வேண்டுமா?

Image
போர் செய்வதை மட்டும் கடமையாக்கவில்லை. தொழுகை , நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவையும் கடமையாக ஆக்கப்பட்டுள்ளது . இ வற்றை கடமை யாக ஆக்கி வன் யார்? ஒரே கடவுளான அல்லாஹ்.  தமிழுக்கு ஒரு கடவுள் இங்லீஷுக்கு ஒரு கடவுள் என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை . எல்லா மொழியினருக்கும் எல்லா நாட்டவருக்கும் மட்டும் அல்ல. அனைத்திற்கும் கடவுள் அல்லாஹ் மட்டும்தான்.  இதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியே ஆக வேண்டும். அண்ணன் தம்பிகளாக பழகுகிறோம் என்பதால் சொல்லத் தயங்கக் கூடாது சொல்லாமல் தவிர்க்கவும் கூடாது. ஒரே கடவுளான அந்த அல்லாஹ்தான் ஒவ்வொரு கடமைக்கும் ஒழுங்கு முறைகளை , கட்டுப் பாடுகளை , விதிக ளை , விதி விலக்க ல் களை ஆக்கி இருக்கி ன் றான். நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் அதை எப்படி சொல்கிறான் . ” யா அய்யுஅல்லரீன ஆமனுா குதிப அலைக்குமுஸ்ஸியாம்” அதே வார்த்தைதான். அங்கே “கிதால்” இங்கே (கிதால்-போர் என்ற இடத்தில்) “ஸியாம்”(நோன்பு) உள்ளது அவ்வளவுதான்.  ஈமான் (எனும் இறை நம்பிக்கை) கொண்ட மக்களே உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டு விட்டது (2;183) என்று சொல்லி விட்டான் . இந்த வசனம் குர்ஆனில்

உதயமான தினத்தன்று நடத்தியது வெற்றி விழாவா விடுதலை வேண்டலா?

Image
[2/8, 3:36 PM] ‪+91 95003 22485‬: கட்டிங் - எடிட்டிங் பொறுக்கிகள்..... இன்று நடந்த சிறைவாசிகள் மீட்பதற்கான கோரிக்கை ஆர்பாட்டத்தில் , பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசிய வீடியோவில் ஒரு 16செகண்ட் மட்டும் கட் செய்து சில பொறுக்கிகள் பரப்பிவருகிறார்கள். சட்டமன்றத்தில் சிறைவாசிகள் சம்பந்தமாக பேசிய விவரங்களை சொல்லிவிட்டு, "இப்போது ஏன் வீதியில் நின்று போராட்டம் நடத்துகிறோம் என்றால், இந்த அரசு சிறைவாசிகளுக்கு கருனை காட்ட வேண்டும் , அப்படி கருணை காட்டினால் மீண்டும் அதிமுகவை 2016 ல் ஆட்சியில் அமரச்செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த ஆர்பாட்டம்" இது தான் பேராசிரியர் பேசியது, ஆனால் சில மன நோயாளிகள் அதை கட் செய்து  'மீண்டும் அதிமுகவை 2016 ல் ஆட்சியில் அமரச்செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த ஆர்பாட்டம்" என்பதை மட்டும் வீடியோவாக வெளியிடுகிறார்கள்.... இவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளட்டும்... கட்டிங் மன்னர்களின் கை வரிசையைக் காண  https://www.youtube.com/watch?v=BtSIrrqCmdQ  [2/8, 4:45 PM] ‪+974 5533 7896‬: Mushthaq