Posts

Showing posts from March, 2011

முஸ்லிம் அமைச்சரின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை.

Image
முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவு பெற்ற முஸ்லிம் அமைச்சரின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைபிள்ளையார் கோயிலில் தேங்காய் உடைத்து கும்பிடுவதுதானா? இந்த அமைச்சருக்கு தொகுதி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2006இல் முஸ்லிம் லீக் தொகுதியை திரும்ப கொடுத்தது. அதன் பின்னணி என்ன? மு.லீக் சரி இல்லை எனவே சமுதாயத்தை காக்க வருகிறோம் என்று தங்களை சூபிகளாக அடையாளம் காட்டிக் கொண்டு வலம் வந்த அமைப்பு 2011 இல் தொகுதியை வாங்க மறுத்ததன் பின்னணி என்ன என்பதை விளக்கிட பாளைத் தொகுதியில் நாம் போட்டியிட உள்ளோம். இது பற்றிய ஆலோசனை முஸ்லிம் மக்கள் கழக தலைவர் காஜா நிஜாமுத்தீன் இல்லத்தில் இன்று 19.03.2011நடை பெற உள்ளது அனைவரும் வருக.

U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண்ணும், அது முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும் http://uaeindians.org/registration.aspx http://uaeindians.org/TamilFAQ_index.aspx