கொரானா CAA, NRIC, NPR களைக் கண்டும் களங்காதவர்களே உங்களுக்குரிய பலன் என்ன?
"அல்லாஹ் எங்களுக்கு எதை விதித்துள்ளானோ அதைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் எங்களுக்கு ஏற்படாது. எங்களை அணுகவே செய்யாது.. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருந்து பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைக்க வேண்டும்'' என்று கூறுவீராக!
ஒவ்வொரு வருடமும் (ஆண்டும்) ஒரு தடவையோ (முறையோ), இரண்டு தடவைகளோ (முறைகளோ) தாங்கள் சோதிக்கப்படுவதை484 அவர்கள் உணர மாட்டார்களா? (கவனிக்க மாட்டார்களா?) பின்னரும் அவர்கள் திருந்தி மீண்டுக் கொள்ளவில்லை. பாவத்தை விடுவதுமில்லை. பாவ மன்னிப்புக் கோருவதுமில்லை. படிப்பினை பெறுவதுமில்லை. நல்லுபதேசத்தை ஏற்று அதை பின்பற்றி நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/caa-nric-npr.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/caa-nric-npr.html
உலகில் மனிதனுக்கு ஏற்படும் சிரமங்களும்
ஒரு பரீட்சையே.
யாருக்கு
அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரைச் (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான். (புகாரி 5645)
இறைத்தூதர்(ஸல்)
அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. ஆயிஷா(ரலி) புகாரி 5646.
நபி(ஸல்)
அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான்
அவர்களிடம் சென்றேன். 'தாங்கள்
கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும்
என்பதாலா?' என்று
கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'ஆம்; எந்தவொரு
முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை
அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) புகாரி 5647.
ஒரு
முஸ்லிம் சொர்க்கத்துக்குச் செல்ல நல்லறங்கள் காரணமாக அமைவது போல் துன்பங்களைச்
சகித்துக் கொள்வதும் சொர்க்கம் செல்வதற்கான காரணமாக அமைந்துள்ளது என்பதற்கு புகாரியில் 5653வதாக உள்ள இந்த
நபிமொழி சான்றாக அமைந்துள்ளது.
முதல் இரண்டு ஆயத்துகள் .9:51, 9:126.
Comments