: பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அனைத்துக்கட்சி கூட்டம்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் உயர்திரு கே. சண்முகம் அவர்களுக்கு மு.லீக். தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அனுப்பி உள்ள கடிதமும் முக்கிய வாசகமும்.

சட்டங்கள் குறித்து கற்பனையான பல பயங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதுபற்றிய அச்ச உணர்வும், தெளிவின்மையும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மையே ஆகும்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_61.html
பெறுனர்,
உயர்திரு கே. சண்முகம் அவர்கள்
தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு
செயின்ட் ஜார்ஜ்கோட்டை
சென்னை- 600 009



பெருமதிப்பிற்குரியீர்
என் இனிய நல்வாழ்த்துக்கள்.


தங்களின் 13.03.2020 தேதியிட்ட அன்பான கடிதம் கிடைத்தது. மிகவும் நன்றி.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகிய சட்டங்கள் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், மிகுந்த அச்சத்தையும் கற்பனையான பல பயங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதுபற்றிய அச்ச உணர்வும், தெளிவின்மையும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மையே ஆகும்.


இத்தகைய நிலையிலிருந்து தமிழக மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. தங்களின் அன்பான கடிதத்தில் மேலே கூறப்பட்டுள்ள சட்டங்களினால் ஏற்பட்டுள்ள குழப்பமும், அச்சமும், பயமும், தெளிவின்மையும் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமே ஏற்பட்டிருப்பதாக கருதுவது நாட்டில் நிலவும் எதார்த்த நிலைமைக்கு முற்றிலும் மாறான எண்ணமாகும்.



நாளை தங்களின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே அழைத்திருப்பது நாட்டில் நிலவும் பிரச்சினை முஸ்லிம் சமுதாயத்தைப்பற்றியதே என்றே கருதப்படும் சூழ்நிலை உருவாகும். இது தமிழகத்தின் அனைத்து மக்களின் தலையாய பிரச்சினை என்பதால் இதுபற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்பது சரியாக அமையாது என்றே கருதுகிறோம்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் மேலான தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தி தமிழக அரசு மேற்கொள்ள இருக்கும் சுமூகமான அறிவிப்புகளை வெளியிடுவதின் மூலம் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வுகாண ஏதுவாகும் என்பதை அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய தலைவர், 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.