மோடியே வீடு தேடி வந்து சந்தித்த ரஜினியை உலமா சபை சந்தித்தது தப்பா? சிறந்த சந்திப்பா?

உலமாக்கள்  மட்டும் சந்தித்தார்களா?  ஊமையும் சந்தித்தாரா?

ரஜினிகாந்தின் சொல்லுக்கு மதிப்பளிக்க வேண்டுமா?


உலமா சொல்லும் ரஜினியை சந்திக்க துடிக்கும் அமைப்பினர் யாரோ?
இப்படியாக பல ஆதரவு எதிர்ப்பு பதிவுகள் நமக்கு வந்துள்ளன.  இரு தரப்பாரின் கருத்துக்களிலிருந்து  சிலவற்றை  தந்துள்ளோம். வாட்ஸப்பில் முழுமையாக வரப் பெறாதவர்கள் பிளாக்கர் லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும் முன்னதாக,

https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post.html


முஸ்லிம்கள் ஒரே அணியாக இருக்கவே மாட்டார்கள்.  பிளவு பட்டுக் கொண்டே போவார்கள் என்று அல்லாஹ்  சொல்லி உள்ளதையும். அந்த பிளவுகள் அல்லாஹ்வுக்கு விருப்பமானது இல்லை என்பதையும். பிளவு பட்டு பலப் பிரிவுகளாகப் போன விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பு அளிப்பான் அதாவது தண்டிப்பான் என்பதையும் முந்தைய வெளியீட்டில்  5:48. சனத்தை மேற்கோள் காட்டி கூறி இருந்தோம்.


முஸ்லிம்கள் எந்த விஷயத்திலும் ஒரே தலைமையின் கீழ் ஒரே கருத்தில்  வர மாட்டார்கள். முரண்பட்டே இருப்பார்கள். இதற்கு ஆதாரமாக இன்னொரு ஆயத்தையும் முதலில் தந்து விட்டு. ரஜினி சந்திப்பு பற்றிய இரு தரப்பு கருத்துக்களையும் தொகுத்து தருகிறோம்.


.ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது. ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.  பின்னர் இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. அப்போது நீங்கள் பிணங்கி முரண்பட்டு விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்''  என்றும் (நபியே!) கூறுவீராக! 6:164.  


எந்த செயலுக்கும் உள்ளத்தைப் பார்க்கும் அல்லாஹ் எண்ணத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு அளிப்பான். நல் எண்ணத்திற்குரிய நற் கூலியும் தீய எண்ணத்திற்குரிய  தண்டணையையும் வழங்குவான் என்பதை முதலில்  நினைவூட்டிக் கொள்கிறோம்.


[01/03, 1:40 pm] TTMMK ரசூல்மைதீன்#சிறந்த_சந்திப்பு !!

எதிரிகளை வளர்ப்பதை விட ஆதரவாளர்களாக மாற்றுவதே சிறந்த செயல். 

நம்முடைய  உலமா சபையின் தலைவர் மெளலானா பி.ஏ.கே. ஹஜரத் தலைமையிலான உலமாக்களின் பணி பாராட்டுக்குறியது... தொடரட்டும்... இப்பணி... என்று நெல்லை தமுமுக மமக  மாவட்ட தலைவர். கே. எஸ். ரசூல்மைதீன் அவர்கள் முதன் முதலில்  செய்தி அனுப்பி இருந்தார். ஆகவே அதனை முதலில் பதிவு செய்து கொள்கிறேன். 
--------------------------------------------------------------



[02/03, 4:58 pm] : யார் இவர் ஜமாஅத் உல் உலமாவின் செய்தி தொடர்பாளரா?

[02/03, 4:59 pm]: இவர் குறிப்பிட்டது போல் ரஜினியை சந்திக்க துடிக்கும் அமைப்பினர் யாரோ?

[02/03, 5:01 pm]  இந்த ஒரு சந்திப்பு வெற்றி அடைந்தாலே நமது கோரிக்கைகள் நிறைவேறி விடும் என்கிறாரே அது வெறும் நம்பிக்கை தானா,அல்லது பின்னணி எதுவும் இருக்கிறதா தெரியவில்லை.


[02/03, 5:04 pm] கடைசியாக மேடைக்கும் பதவிக்கும் ஆசைப்படாதவர்கள் என்றால் முத்தலாக் தொடர்பாக பாளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில் காஜா ஹச்ரத்தின் இருக்கை மட்டும் தனியாக முன்னால் இழுத்து அமைக்கப்பட்டது அவருக்கு தெரியாமல் நடந்து இருக்கலாம். பணிச்சுமை காரணமாக அவரும் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.

-------------------------------------------------------------------------------

ரஜினிகாந்தின் சொல்லுக்கு மதிப்பளிக்க வேண்டுமா?

 

https://www.youtube.com/watch?v=mQHaRlySlWs

 

மோடியே ரஜனி வீடு தேடி வந்து சந்தித்த உலமா சபை சந்தித்தது தப்பா?


 

உலமாக்கள்  மட்டும் சந்தித்தார்களா?  ஊமையும் தான் சந்தித்தார் 

 

 

ரஜினி இருக்காருடா எங்களுக்கு! சற்றுமுன் ரஜினியை சந்தித்துவிட்டு இஸ்லாமிய மதகுருமார்கள் அதிரடி பேட்டி

https://www.youtube.com/watch?v=7iYs_8d7oPM 

 


சி.ஏ.ஏ தொடர்பாக ஆலோசிக்க ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருமார்க்கள் சந்திப்பு 



அமைதியை நிலைநாட்ட தயார்’ - உலமா சபை நிர்வாகிகள் சந்திப்புக்குப் பின் ரஜினி ட்வீட் 



அமைதியை நிலைநாட்ட முயற்சி; முஸ்லிம்களிடம் ரஜினி உறுதி



இஸ்லாமியர்களுடன் அடுத்தடுத்த ரஜினி சந்திப்பு... பின்னணியில் பலே திட்டம்!



இஸ்லாமிய மக்களின் அச்சத்தை ரஜினி புரிந்து கொண்டார்’ - சந்திப்புக்குப் பின் உலமா சபை தலைவர் பேச்சு



சற்றுமுன் ரஜினி குறித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா மைதீன் உருக்கமான பேச்சு வீடியோ!



ரஜினியை சந்தித்த முஸ்லீம் தலைவர்கள் Rajinikanth Meet Muslim Clerics to Discuss CAA | CineNXT



ஜமாஅத்துல் உலமா ரஜினி அவர்களை சந்தித்து CAA பற்றி விளக்கினார்கள்



சிஏஏ குறித்து ரஜினி தெளிவாக தெரிந்து வைத்துள்ளார் - அபூபக்கர் 



--------------------------------------------------------

[02/03, 5:06 pm] சுப. உதயகுமாரன் : "மக்களின் அச்சத்தைப் போக்கும்" அரசியல்!

"சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்து மக்களின் அச்சத்தைப் போக்க முயற்சிப்போம்" என்று நடிகர் ரஜினிகாந்த் "முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகளிடம்" உறுதியளித்திருக்கிறாராம்!

[1] யார் இந்த ரஜினிகாந்த்? பிரதமரா? முதல்வரா? எம்.எல்.ஏ.வா, அட ஒரு கவுன்சிலரா? ஆளும்கட்சியான பாஜக உறுப்பினரா? அல்லது ஒரு கட்சியின் தலைவரா, தொண்டரா? குடும்பத்தைப் பிரிந்து இரவுபகலாக நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பொதுவாழ்க்கையில் ஈடுபடும் ஒரு களப்பணியாளரா? நாடு முழுவதும் ஏறத்தாழ மூன்று மாதங்களாக கடும் வெப்பத்திலும், புழுதியிலும் கிடந்துப் போராடிக்கொண்டிருக்கும் மக்களை, குறிப்பாக இசுலாமியச் சகோதரிகளை எங்காவது சென்று சந்தித்தாரா? இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர் எப்படி மக்களின் அச்சத்தைப் போக்குவார்? இவர் போன்ற பழமைவாதிகள், பகுத்தறிவற்றவர்கள், பத்தாம்பசலிகள்தானே மக்களின் அச்சத்திற்கேக் காரணம்?

[2] பொதுமக்கள் ஒரு பிரச்சினை பற்றிப் பேசினால், எதிர்த்துப் போராடினால், அந்தப் பிரச்சினை பற்றித்தானே பேச வேண்டும், விவாதிக்க வேண்டும்? அதென்ன "அச்சத்தைப் போக்குவது"? அதாவது "உங்களுக்கெல்லாம் அறிவு இல்லை, எனக்குத்தான் எல்லாம் தெரியும். நீங்கள் வீணாக, அறிவின்றி, முட்டாள்தனமாக அச்சப்படுகிறீர்கள். அந்த அச்சத்தை நான், அற்புதமான அறிவாளி, தீர்த்து வைக்கிறேன்" என்று பாசாங்குக் காட்டுவது இது! கூடங்குளம் அணுஉலை வேண்டாமென்று மீனவர்களும், விவசாயிகளும், பெண்களும் போராடினால், இவர்கள் "அச்சத்தைப் போக்க" வருவார்கள்! ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாமென்று காவிரி டெல்டா மக்கள் போராடினால், இவர்கள் "அச்சத்தைப் போக்க" வருவார்கள்! இப்போது நடிகர் ரஜினிகாந்த் "சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்து மக்களின் அச்சத்தைப் போக்க" வருகிறார். எவனோ எழுதிக்கொடுப்பதை காமிரா முன்னால் நின்று பேசுகிற இவர், எந்தப் பிரச்சினை பற்றியும் எந்தவிதமானப் புரிதலும் இல்லாத இவர், பணம் பண்ணுவதிலும், வரிகட்டுவதைத் தவிர்ப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தும் இவர் எப்படி ஸ்டெர்லைட் பிரச்சினை, சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி குறித்தெல்லாம் மக்களின் அச்சத்தைப் போக்குவார்?

[3] நடிகர் ரஜினிகாந்தை நம்மீது வலிந்துத் திணிக்கும் ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை நான் கண்டிக்கிறேன். "மதகுருமார்கள் போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள்" என்று நடிகர் ரஜினி சொன்னாராம், இவர்கள் பதில் அறிக்கை வெளியிட்டார்களாம், நடிகர் "உங்களை சந்தித்து கருத்து கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னாராம். இவர்கள் போய் சந்தித்தார்களாம். "பிரச்சினைத் துவங்கி மூன்று மாதங்களாகிறதே, எத்தனையோ அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே, நாடே கொந்தளித்துக் கிடக்கிறதே? இதுவரை என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று கேட்கத் தெரியவில்லையா? "நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிரார்களே, ஏன் நீ குடியிருக்கும் சென்னை வண்ணாரப்பேட்டையிலே மக்கள் இரவும் பகலுமாகப் போராடுகிறார்களே, அங்கே போய் உன் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்து!" என்று சொல்லத் தெரியவில்லையா, முடியவில்லையா? இந்த நடிகர் எப்படி மக்கள் அச்சத்தைத் தீர்ப்பார் என்று இவரைப் போய் பார்க்கிறீர்கள்? ஏராளமானோர் நாடு முழுவதும் சுற்றித்திரிந்து தொண்டை வலிக்கக் கத்திக்கொண்டிருக்கிறோமே? பணக்கார, புகழ்பெற்ற ஒரு (காவி) அரசியல் நடிகர் வந்தால், அவரை உச்சிமோந்து, ஆமோதித்து, அங்கீகரித்து, போராடும் மக்கள் மீதும், தமிழர்கள் மீதும் திணிப்பீர்களா? "நீ கட்சி துவங்கிவிட்டு வா, அல்லது போராடும் மக்களிடம் வந்து கருத்துக் கேள், நாங்கள் உன்னை வந்துப் பார்க்கிறோம்!" என்று சொல்லவிடாமல் தடுத்தது எது?

மிக்க வருத்தத்துடன்,
சுப. உதயகுமாரன்
பச்சைத் தமிழகம் கட்சி
மார்ச் 2, 2020

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு