ஷம்சுத்தீன் காஸிமியின் கருத்தும் பதிலும்

 S.ஷம்சுத்தீன் காஸிமி ஹஜரத் அவர்களின் பதிவு* 

 *என்னருமை சமுதாயமே எச்சரிக்கை..... பள்ளிவாசல் களை குறிவைக்கும் கொரானா வைரஸ்*

*பலியாகி விட வேண்டாம்*

அல்லாஹ் வின் கோபமும் சாபமும் ஏற்படும் போது அதை விட்டும்‌ தப்பிக்க பாதுகாப்பான இடம் பள்ளிவாசல்கள்.

ஆனால் பள்ளிவாசல்களை மூடுவதற்கு உத்தரவிடுவதும்‌ ஒத்துழைப்பதும் ஷைத்தானிய சக்திகள்.

அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு தானே ஆகவேண்டும்......என்றால் பிறகு NPR விஷயத்திலும் அரசுக்கு ஒத்துழைக்கலாமே...அங்கே மட்டும் எதிர்த்து போராடுவதேன்?

நம்முடைய வாழ்வாதார விஷயம் என்றால் ஒரு நியாயம்... அல்லாஹ் வின் விஷயம் என்றால் வேறொரு நியாயமா?


நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் ஒரே மாதிரியாக மூடிவிடவேண்டும் என்பதுதானே உத்தரவு..... என்றால்

 கோயில்களும் பள்ளிவாசல்களும் சமமாகி விடுமா?

இந்த நம்பிக்கை கூட மூமின்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை...

கோயில்களும் தேவாலயங்களும் அல்லாஹ்வுடைய அருள் இறங்கும் இடம் அல்ல.ஆனால்

 "பள்ளிவாசல்கள் தான் அல்லாஹ்வுடைய வேதனையையும் முஸீபத்துகளையும் தடுத்து அல்லாஹ் வின் அருள் இறங்கும் இடம்" என்பது பெருமானாரின் வாக்குறுதி.

*அல்லாஹ் ஒரு ஊரில் தன் அதாபுகளை இறக்குவதாக முடிவு செய்து விட்டால் பள்ளிவாசல்களை ஆபாத் ஆக்கும் மக்களை பார்த்து தன் முடிவை மாற்றிக்கொள்கிறான்* என்பது நபிகளின் செய்தி.

 நமக்கு அந்த பெருமகனார் உடைய வாக்குறுதிகள் மீது நம்பிக்கை ஏற்படாததன் விளைவுதான் இத்தகைய நாத்திக சிந்தனைகள்...

  அதனால்தான் கோயில்களையும் தேவாலயங்களையும் மூடும்போது பள்ளிவாசலையும் *ஒரேமாதிரியாக* மூடி விட வேண்டியதுதானே என்ற மனப்பான்மைஏற்படுகிறது....

போராட்டத்துக்காக பொங்கியெழுந்த சமுதாயமே..... இப்போதும் பொங்கியெழுங்கள் மஸ்ஜிதுகளை நோக்கி......

*ஏனெனில் இஸ்லாமிய உம்மத்தை இறையில்லங்களை விட்டு பிரிக்க நடக்கும் சூழ்ச்சியின் வெள்ளோட்டம் இது.*

அருமை மக்களே ஆர்த்தெழுங்கள் மஸ்ஜித் களை நோக்கி...

பள்ளிவாசல் நிர்வாகிகளே.... அல்லாஹ்வின் இறையில்லத்தை ஆபாத் ஆக்கத்தான் நீங்கள் நிர்வாகிகள்.இழுத்து மூட அல்ல.

ஷைத்தானிய சக்திகளின் பேச்சைக்கேட்டு இறையில்லத்தை இழுத்து மூட நினைத்தால்....... எச்சரிக்கை... எச்சரிக்கை...
கொரானா வைரஸால் தாக்கப்படும் முதல் நபர் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்தான்..... மறந்து விடாதீர்கள்.

அல்லாஹ் பொய்யான மூட நம்பிக்கைகளை விட்டு பாதுகாத்து உண்மையான இறைநம்பிக்கைகளை நமது உள்ளங்களிலே பதிய வைப்பானாக...

அல்லாஹ் வின் இல்லத்தில் அவனை துதிப்பதை விட்டும் தடுக்கக் கூடியவர்களை காட்டிலும் மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? அல்‌குர்ஆன் 2:187.
🖋️ இறையூழியன் ஷம்சுதீன் காஸிமி.



மரியாதைக்குரிய மௌலானா ஷம்சுத்தீன் காஸிமி அவர்களுக்கு......


நலம், நலம் அறிய ஆவல். 
உங்கள் மார்க்கப்பணிகள் தழைத்தோங்க, அல்லாஹ் உங்களுக்கு பூரண உடல் நலத்தையும், நீண்ட ஆயுளை யும் தந்தருள்வானாக !... 























சர்வதேச அளவில் வேகமாக பரவிவரும் கோவியட் -19 யை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல்களின்  கூட்டமைப்பும் இணைந்து எடுத்த முடிவே தொழுகைகளை வீட்டில் தொழுவது. 
உங்களுடைய  அதி தீவிர இந்துத்துவ எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கிலேயே மேற்க் கண்ட ஒட்டுமொத்த ஜமாத்துகளின் முடிவிற்கு முரணாக தாங்கள் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளீர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். 
மௌலானா உங்களுக்கு மார்க்கம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். 
அதே வேளையில் ஒரு பன்முகச் சமூகத்தில் அரசின் முடிவை இது போன்ற காலத்தில் நீங்கள் சொல்வது போல் எதிர்த்தால் ஏற்க்கனவே இஸ்லாமியச் சமூகம்  பொதுச் சமூகத்திலிருந்து விலகி யிருப்பதாகவும், வேறு  பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி இருக்கும் நிலையில்   இந்த இக்கட்டான தருணத்தில்  இஸ்லாம் மீண்டும் ஒரு முறை தவறாக  விளங்கப்படாதா ?.. என்பதை நீங்கள் எனக்கு விளக்க கடமைப்பட் டுள்ளீர்கள். 
 எனக்கு ஒரே ஒரு வரலாற்றுத் தகவல் நினைவுக்கு வருகிறது. 
கலீஃபா மன்ஸூர் இமாம் மாலிக் (ரஹ் ) அவர்களைச் சந்தித்து கூறுகிறார் :"இமாம் அவர்களே ! நீங்கள் இயற்றிய நூல்களை நூற்றுக்கணக்கில் பிரதியெடுத்து முஸ்லிம் களுடைய ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரதியை அனுப்பி வைத்து அனைவரும் இந்த நூலையே பின்பற்ற வேண்டும். இதை விட்டு வேறு விஷயங்களை நாடிச் செல்லக்கூடாது என்றும் கட்டளை போடலாம் என நினைக்கிறேன் என்றார். அதைக்கேட்ட இமாம் மாலிக் (ரஹ் )அவர்கள் அமீருல் முஃமினீன்   அவர்களே ! அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால் சான்றோர்களின் பலதரப் பட்ட கூற்றுகள் மக்களிடையே பரவியுள்ளன. பல்வேறு வகையான நபி மொழிகள் மக்களைச் சென்றடைந்து விட்டன.  யார் எதனை முதலில் செவியுற்றார் களோ அந்த ஹதீதையே சரியானதாக நினைத்து அவர் பின்பற்றுகிறார். ஆகையால் மக்களை இப்படியே விட்டு விடுங்கள். " என்று பதிலளிக்கிறார்கள். 
இந்நிகழ்வையே நான் உங்களோடு பொருத்திப் பார்க்கிறேன். உங்களுக்கு என்று தனிப்பட்டக் கருத்து இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்லவே !..
இட ஒதுக்கீடு சம்பந்தமாக இப்படித்தான் 
ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும்  முரணாக நின்றீர்கள். என்ன ஆனது ?..
மௌலானா உங்கள் நலம் விரும்பியாக ஒன்றைச் சொல்கிறேன். உங்கள் கல்வியறிவும், மார்க்கச் சிந்தனையும் இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு தேவை. இந்தச் சமூகத்தை விட்டு நீங்கள் தனிமைப் பட்டு விடக்கூடாது. அது கொரனோ வை விட பெரும்  ஆபத்தானது. 
من صمت نجا - 
"மௌனி வெற்றியடைந்து விட்டார். " என்ற நபியின் திருவாசகத்தை விட வேறு வார்த்தை ஏதும் இப்போதைக்கு சிறப்பானது  இல்லை. 
நீங்கள் இப்போதைக்கு மௌனி யாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.  நீங்கள் சகுனி யும் இல்லை என்பதும்  எங்களுக்கு  நன்கு தெரியும். 
ஒட்டு மொத்த உம்மத்தின் கருத்தை இந்நேரத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள் ! அல்லாஹ் உங்களை தரம் உயர்த்துவான். 
மௌலானா குறை இருந்தால் மன்னிக்கவும். 

உங்கள் மார்க்கப்பணி சிறக்க என்றும் துஆ வுடன்.... 

 *முஹைய்யதீன் 
அப்துல் காதிர் ஹஸனி, 
கடையநல்லூர்.

-----------------------------------------------------------------
தெருக்களைஅடைத்து கயிறு கட்டியவர்கள் நோக்கம் _ நிய்யத் நன்றாக இருக்கலாம்.

மேலப்பாளையம் ஊரில் சுன்னத் _ கத்னா  பணி செய்கின்றவர்கள் அவர்கள் சுன்னத் செய்த பிள்ளைகளுக்கு மருந்து போட போக முடியவில்லை. இதை இயக்கங்கள் கவனத்தில் கொண்டு் சரி செய்ய வேண்டும். 

வழிகளை முடக்குவதால் தான் அதிகமான கூட்டம் நமதூரின் பிரதான சாலையில் கூடுகிறது

தெருக்களை அடைத்தால் குறைந்தபட்சம் நடந்து செல்லும் அளவிற்காவது வழியை ஏற்படுத்துங்கள். 

*தெருவை அடைத்ததோடு நிறுத்தாமல் அந்நியர்கள் உள்ளே வரக்கூடாது. அடுத்த தெருக்காரர்கள் உள்ளேவரகூடாது. இந்த தெருவில் உள்ள உங்கள் சொந்தங்களை
ஒரு மாதத்திற்கு மறந்துவிடுங்கள் என்ற பதாகைகள் வைப்பதனால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகின்றது.

தெருவை அடைத்தனால் பல இடங்களில் கூட்டம் கூடி தெருவை அடைப்போம் என்று ஒரு கூட்டமும் அதை அடைக்க கூடாது என்று மறு கூட்டம் கூடி பஞ்சாயத்துகள் இன்னும் பல சச்சரவுகள், சண்டைகள்.
கூட்டம்  கூடக்கூடாது என்பதற்காக அடைப்பு ஏற்படுத்தி அங்கேயே கூட்டம் போட்டு திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

*குறிப்பாக ஒரு தெரு வழியாக உள்ளே செல்ல முயன்ற தெருக்காரர்களை பக்கத்து தெரு வழியாக போக சொல்லி சாவடிக்கிறார்கள். சொந்த தெரு வழியாக தான் போக முடியவில்லை பக்கத்து தெரு வழியாக போகலாம் என்றால் அங்கேயும் அதே அதிமேதாவிகள் 10 பேர் வரை நின்றுகொண்டு இந்த வழியாக  போக கூடாது என்று கெடுபிடி.
 இடத்தை அடைக்காமல் விட்டால் கூட அமைதியாக வந்தவர்கள் விரைவாக வீட்டை அடைந்திருப்பார்கள் ஆனால் பல இடங்களில் கூட்டம் கூடி நீண்ட பஞ்சாயத்திற்கு பிறகே வீட்டுக்கு செல்கின்றனர்.

சில இடங்களில் சில அடாவடி பேர்வழிகள் தெருவுக்குள் வரும் தெருக்காரர்களை தேவையில்லாத கேள்விகளை கேட்டு அவர்களை கோபபடுத்துகின்றனர். இது போன்ற அடாவடி பேர்வழிகளை தெரு முனையில் நிறுத்தாதீர்கள்.

*ஹாமிம்புறம் மற்றும் இன்னும் சில சுற்றுவட்டார பகுதிகளில் மாற்றுமததவர்களும் வசிக்கின்றனர். அவர்களை அவர்களின் தெருக்களை அடையவிடாமல் சில கூமுட்டைகள் இங்கே வரக்கூடாது என தடுத்துள்ளனர். இது தேவையற்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

 *கோரோணா முன் எச்சரிக்கையே தனிமைப்படுத்துவது தான் ஆனால் இவர்கள் மட்டும் தெரு முனையில் கும்பல் கும்பலாக நின்றுகொண்டு ராணுவ வீரன் போல தன்னை நினைத்துக்கொண்டு கூத்தடிக்கின்றனர். இந்த கூட்டம் கூடுவது தவறில்லையா..

*அதிலும் இந்த தெருவில் உள்ள உங்கள் சொந்தங்களை மறந்துவிடுங்கள் என்ற  வாசகம் எவ்வளவு மோசமான கருத்து. என்ன மயிருக்கு எங்கள் சொந்தங்களை மறக்க வேண்டும்.
இரண்டு தெரு தள்ளியிருக்கும் வயதான பெத்தும்மா பெத்தாப்பாவிற்கு தினமும் சமையல் செய்து கொடுக்கும் நிலை பலருக்கும் உள்ளது. 4 தெரு தள்ளியிருக்கும் மிக வறுமையில் வாடக்கூடிய அக்காவின் 4 பச்சை குழந்தைகளுக்கு மாமா வீட்டு அம்மாக்கள் தின உணவு கொடுத்து வருகிறார்கள்.இப்படி அடைத்தால்
 அவர்களின் உணவுத் தேவையை எப்படி தீர்ப்பது. உணவு அத்தியாவசியம் அதற்கெல்லாம் தடை ஏற்படுத்தாதீர்கள்.

*138 தெருக்களையும் அடைத்து முக்கியமான இரு சாலைகள் மட்டும் திறந்திருக்கும் நிலையில் 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஊரில் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வந்தால் மொத்த கூட்டமும் அந்த ஒரு ரோட்டில் மட்டும் தான் குவியும் அது தான் ஆகபெரும் கேடே. 
கோரோணா பரவ இதுவே மிக சாதகமாக அமைந்துவிடும்.

*இன்னும் சில முட்டாள்கள் கயிறுகளை கட்டி வைத்து மறைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இரவில் இருட்டு நேரத்தில் சிலர் பைக்கில் சென்ற போது அந்த கயிறுகள் கட்டி இருந்தது கண்ணுக்கு புலப்படாமல் நம்மவர்கள் அதில் மோதி கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.
நமக்கு வந்த தகவல் அடிப்படையில் விழுந்தவர்கள் பலர் வயசாலிகள். அதிலும் வருத்தத்திற்கு உரிய விஷயம் பைக்கில் சென்ற ஒரு ஆண் மற்றும் பெண் கயிறு இருந்ததை கவனிக்காமல் கீழே விழுந்துள்ளனர். கயிறு கட்டியவர்கள் அந்த கயிறு கட்டியிருப்பதை வருபவர் களுக்கு தெரியும் வண்ணமாவது செயல்படுத்தவேண்டும்.

*அடைப்பை ஏற்படுத்தியவர்கள் மீது  சாபவார்த்தையை பலரும் உபயோகித்ததை பார்க்க முடிந்தது. அப்படி சாபமிடகூடியர்வர்கள் அவர்கள் நமது அண்டை வீட்டுக்காரர்கள் என்பதால் சாபவார்த்தையை பயன்படுத்தாதீர்கள்.

 மருத்துவமனைக்கு செல்லகூடியவர்கள் கூட மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

*திடீரென இரவு நேரத்தில் அவசரமாக யாருக்காவது நெஞ்சுவலி ஏற்பட்டால் அவரை அவசர மருத்துவத்திற்கு கொண்டு செல்ல முடியுமா. அதற்கு வழி வகை உள்ளதா என்று யோசியுங்கள்.

பைக்கில் ஏதோ சில ஊதாரிகள், தெரு பொருக்குபவர்கள் சுற்றுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாதிர்கள்.

ஊர் சுற்றக்கூடிய பலரும் யார் என்று பார்த்தால் எல்லாம் உங்கள் வீடுகளின் பிள்ளைகள் தான் அவர்களை கண்டித்து வீட்டோடு இருக்க செய்யுங்கள்.

*கோரோணா நோயின் தாக்கம் பற்றி அறியாமல் அவர்களுக்கு பைக்கை கொடுத்து ஊர்மேய விட்டு    பெயருக்கு ஊர் வாசல்களை அடைத்தால் மட்டும் போதுமா இது நியாயமா? சிந்தியுங்கள் மக்களே. போதாக்குறைக்கு சில வாட்ஸாப் பைத்தியங்கள் சதா நேரமும் கோரோணா வதந்திகளை பரப்பிக்கொண்டு வேறு திரிகின்றனர்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.