நோய் உள்ளவர்கள் பள்ளிக்கு தொழ வராதீர்கள். வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள்.


கொரோனா பிரச்னையை ஒட்டி அரபக அவ்காப்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
ஜும்ஆ பிரசங்கம், தொழுகை உட்பட எல்லாமே 10 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கத்தில் சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது.

தாமதப் படுத்தக் கூடாது. மெதுவாகவும் பண்ணக் கூடாது.

தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்கள் 2 வரிகள் தான் இருக்க வேண்டும்.

என்ன துஆ எழுதி  அனுப்பப்படுகிறதோ அந்த துஆவை எழுத்துக்கு எழுத்து சொல்ல வேண்டும்.

தலைப்பு என்னவோ அந்த தலைப்புக்கு வெளியே போகக் கூடாது.

சொன்ன வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது என்றால் அல்லாஹும்ம அஇஸ்ஸல் இஸ்லாம வல் முஸ்லிமீன் என்பதை இரண்டு மூன்று தடவை சொல்வார்கள்.

அது மாதிரியும் அழகுக்காக சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்வார்கள் அந்த மாதிரியும் சொல்லக் கூடாது.

இது எல்லா வக்பு போர்டுகளுக்கும்  தலைமை வக்பு போர்டு அனுப்பி உள்ள சர்குலர்.

இது போக வக்து பள்ளிகள் உட்பட ஜும்ஆ பள்ளிகளுக்கும் இருமல் அதிக தும்மல், காய்ச்சல் மற்றும் நோய் உள்ளவர்கள் பள்ளிக்கு தொழ வராதீர்கள். வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள். சந்திப்பின் போது ஸலாம் சொல்லுங்கள். கைகளை குலுக்காதீர்கள். முஸாபஹா செய்தால் கைகளை சோப்பு போட்டு கழுக வேண்டும் மார்க்கட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாதீர்கள். முக மூடி போட்டுக் கொள்ளுங்கள். என்று பள்ளி இமாம்களை தொடராக அறிவிக்க சொல்லி உள்ளது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு