Posts

Showing posts from 2015

இன்றுள்ள யாருக்கும் அல்லாஹ்வின் நற்சான்று உண்டா?

Image
முஹம்மதுநபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் நற்சான்று உள்ளது. அதுபோல் இன்றுள்ள யாருக்கும் அல்லாஹ்வின் நற்சான்று உண்டா? ஆணவத்துக்காகவும் போர்கள் நடந்துள்ளன . நியாயத்துக்காக நாலு பேரை தனியாக ஒருவன் அடித்து விட்டு வருவான் . முதலில் அடித்தது நியாயத்துக்காகத்தான் இருக்கும் . அவனுக்கு ஈடாக ஆள் இல்லை என்றதும். அவனை தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றதும். ஆணவம் தலைக்கு ஏறி விடும் . சும்மா இருந்த பொருளை காலால் தள்ளி விட்டுப் போவான். உதாரணமாக ரோட்டில் திரியும் ரவுடிகளை எடுத்துக் கொள்ளுங்கள் . ரோட்டில் போய்க் கொண்டே இருப்பான் டூவீலர்களில் சாமானைக் கொண்டு வருபவரை பிடித்து நிறுத்துவான். சாமான்களை ரோட்டில் கொட்டி விட்டுப் போவான் . இது ரவுடிகளிடமுள்ள ஆணவத்தின் வெளிப்பாடு . இந்த மாதிரி ரவுடிகள். அட்ரஸ் இல்லாதவனாக இருந்து . பெரிய மனிதனாக, சமுதாயத்தில் அறியப்பட்டவனாக, பிரபலமானவனாக ஆகி விட்டால் ஆணவத்தின் வெளிக்காட்டல் எப்படி இருக்கும் தெரியுமா ?  அவன் விருப்பத்திற்கு அவன் வசதிக்கு, அவன் தேவைக்கு எதையாவது செய்வான் . செய்யும்படிச் சொல்லுவான்,  அதை இஸ்லாம் என்பான் . ஒன்றாக இருந்த அமைப்புகளை ஜம

ஷேக் இக்பால்மதனியும் அவர்களின் நட்பும் -MS. ரஹ்மத்துல்லாஹ் நாச்சியார்கோவில்

Image
ஷேக் அவர்களின் நட்பு  2000 ஆம் ஆண்டு முதல் எனக்கு கிடைத்தது  நான் பர்துபையில் இப்ராஹிம் கலீல் மஸ்ஜித் அருகில் தங்கியிருந்தேன். அந்த மஸ்ஜிதில் வாரந்தோரும் ஷேக் இக்பால் மதனியையும் ஷேக் அப்துஸ்ஸமத் மதனியையும் வைத்து தமிழ் பயான்கள் அல்லாஹ்வின் நாட்டத்தால்  2010ஆம் ஆண்டுவரையில் நடத்தினேன் இந்த பத்தாண்டுகள் ஷேக் அவர்களின் அனுமதியின் பெயரில் ஒரு தமிழ் லைப்ரரியும் வட்டியில்லா கடனுதவியும் நடத்திவந்தேன் அல்ஹம்துலில்லாஹ் . இந்த லைப்ரரியில் பெரும்பாலும் பிஜே பயான் கேசட்டுகளை வைத்திருந்தேன். பிஜே ஸகாத் விசயத்தில் ஒரு புதியதொரு கொள்கையை கூறியபோது லைப்ரரி நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டது . மஸ்ஜித் நிர்வாகம் நெருக்கடி தந்தது. அப்போது ஷேக் இக்பால் மதனி அவர்களிடம் இதைப்பற்றி கூறினேன். ஷேக் அவர்கள் அந்த ஸக்காத் சிடி ஆடியோக்களை மட்டும் எடுத்துவிடு என்று கூறிவிட்டு DAR AL BER SOSAITY நிர்வாகத்திடம் பேசி  லைப்ரரி நடத்த அனுமதி வாங்கித் தந்தார்கள். அதுமட்டுமல்லாமல் TNTJ விற்கு துபை அவ்க்காஃப் மூலமாக என்னென்ன தேவைகள் இருந்ததோ அத்தனை வேலைகளையும் செய்து தந்தேன் TNTJ வால் தஃவா பனி

மீலாது விழா ” ஹராம்” _கிராண்ட் முஃப்தி ஷேய்க் அப்துல் அஜிஸ் அல்-ஷேய்க்! அவர்களின் எச்சரிக்கை!

Image
தலைவர்களின் நினைவு தினங்களும்  தலைவர்களின் அறிக்கைகளும் ! நபி [ஸல்] பிறந்த நாள் ! இயேசு பிறந்த நாள் ! பெரியார்  நினைவு  நாள்!   எம்ஜிஆர்  நினைவு நாள்! காலையில் இருந்து எல்லாத் தொலக்காட்சிகளிலும் இந்தத் தலைவர்களை பற்றிய செய்திகளும், தலைவர்கள் குறித்த தலைவர்கள் அறிக்கையும் நிரம்பி  வழிகின்றன!   இப்படி ஒவ்வொரு தலைவர் பிறந்ததற்கும் இறந்ததற்கும் இருக்கும் தலைவர்கள் அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்தால் 365 நாளும் இதே வேலைதான்   செய்து கொண்டிருக்க வேண்டும் ! இந்தத் தலைவர்களின் கொளகைகளை மறந்து விட்டு  கொண்டாட்டங்களால் என்ன பயன்?  இந்தத் தலைவர்கள் கொடுக்கும் அறிக்கையை எத்தனை மக்கள் படிக்கிறார்கள் கேட்கிறார்கள்!   தாங்களும் இந்தப் பட்டியலில் வரவேண்டும் எனும்  நப்பாசையால் தான் இவர்கள் அவர்களை நினைவு கூறுகின்றார்கள்! அதனால்தான் தனக்குத்தானே பிறந்த நாளும் கொண்டாடுகின்றனர்!       அனுதினமும் நினைக்க வேண்டிய தலைவர்களை   ஆண்டுக்கொருமுறை நினைவு கூர்ந்து விட்டு   அவர்களின் கொள்கைகளை மறந்து விடுவது   என்பது மறக்கப்பட வேண்டிய ஒன்று ! -செங்கிஸ்கான் சவுதி அரே

உலகில் எதற்கெல்லாம் போர்கள் நடந்துள்ளன?.

Image
மக்காவில் முஸ்லிம்கள் துறந்து விட்டு வந்த பொருளாதாரங்கள் கணக்கில் அடங்காதவை. அவற்றையெல்லாம் சேர்த்துக் கொண்டே மக்காவாசிகள் வியாபாரம் செய்யப் போனார்கள். அதில் வரும் இலாபங்களைக் கொண்டே முஸ்லிம்களை எதிர்த்து போர் செய்வதற்கும் முஸ்லிம்களை அழிப்பதற்கும் மக்காவாசிகள் தயாரானார்கள். அந்த வியாபார கூட்டத்தைத்தான் வழிமறித்து போர் வராமல் தடுக்க, முறியடிக்க முயற்சி செய்தார்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். முறியடிப்பதற்காக செய்த முயற்சிகள் எட்டு. அந்த எட்டு முயற்சிகளும் ஒன்றுமில்லாமல் போய் விடுகின்றன. வெற்றி தோல்வி என்று சொல்ல முடியாது. ஒன்பதாவது நிகழ்வாகத்தான் பத்ரு களம் அமைகிறது. பத்ருப் போர் என்று சொல்லப்படும் சம்பவம் நடை பெறுகிறது. எனவே இந்த எட்டு சம்பவங்களையும் எங்கு நடந்தது. எப்பொழுது நடந்தது? என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்தவர்கள் நினைவுக்கு கொண்டு வர வேண்டும். வரலாற்றை தெளிவாகத் தெரிந்தால்தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தால்தான். உண்மை நிலையை தெளிவாக உணர முடியும். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இறைத் துாதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் க

‪#‎பிறந்ததினத்தை_எதிர்த்த_நபிக்கே_பிறந்த_தினக்_கொண்டாட்டமா_‬?

உலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான். நல்லது எது? தீயது எது? என்பதை அந்த நபிமார்கள் மூலமாக பிரித்துக் காட்டினான். இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நாம் நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட திருமறைக் குர்ஆனைத் தந்ததுடன் அதற்கு விளக்கமாக வாழ்ந்தும் காட்டினார்கள். நபியவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, நம்மை எப்படி வாழும் படி சொன்னார்களோ அந்த அடிப்படையில் தான் நாம் வாழ வேண்டும். நபியவர்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக நாம் வாழ்ந்தால் நாளை மறுமையில் தோழ்விதான் மிஞ்சும் என்று இறைவன் தனது அருள் மறையில் குறிப்பிடுகிறான். இந்தத் தூதர் எதனை (மார்க்கமாக) தந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் – 59:07 நபியவர்கள் இஸ்லாம் என்ற எதனை நமக்குக் காட்டித் தந்தார்களோ அதனைத் தான் நாமும் மார்க்கம் என்று பின்பற்ற வேண்டுமோ தவிர நாமாக மார்க்கத்தை உருவாக்கக் கூ

அபாயா (புர்கா) அபாயம்

Image
அபாயா -  அபாயம்! நவநாகரீகம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில் எதற்குமே ஓர் வரையறை இல்லாமல் போய்விட்டது. இஸ்லாமியப் பெண்களின் தேசிய உடையாகவே இந்த "#அபாயா " பார்க்கப்படுகின்றது. ஆரம்பத்தில் ஒழுங்கான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த #அபாயா வின் கடைசி #அரவு திரிபடைந்து #ம் என்று மாற்றம் பெற்று #அபாயம் எனும் கட்டத்தை வந்தடைந்துள்ளது. இன்று உலக சந்தையில் வண்ண வண்ண நிறங்களில், விதவிதமான அலங்கார வேளைப்பாடுகளுடன், வித்தியாசமான அமைப்புகளில், விலைகூடிய அபாயாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதிலும் இடத்துக்குத் தகுந்தாற்போல் ... வெவ்வேறு நிகழ்வுகளுக்கு வேண்டிய படித்தரத்தில்... திருமணங்களுக்கு.... வேறு விழாக்களுக்கு.... உறவினர் வீடுகளுக்கு... கடைத்தெருவிற்கு... வைத்தியசாலைக்கு... மரண வீடுகளுக்கு... அடுத்தவீட்டுக்கு.... இப்படி எத்தனையோ விதமாக!!! (நல்ல வேளை வீட்டுக்குள் அணியும் அபாயா இன்னும் வடிவமைக்கப்பட வில்லை) இதன் விலைகளை பார்த்தே எத்தனையோ தந்தையர், சகோதரர்கள், கணவர்கள் கதிகலங்கிய நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சிலவகை அபாயாக்கள் உடலோடு ஒட்டி, உடலின் அமைப்புகளை

மறைந்த கடாபியின் இரு பக்கங்கள்

ஒரு பக்கம். 1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம். 2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது. 3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் . 4. அந்த நாட்டில் மணம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது. 5. லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது. 6. எந்த ஒரு லிபியனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான க