Posts

Showing posts from September, 2014

ஹிஜாப் இல்லாமல் விளையாட முடியாது ..கொரியாவில் அரங்கை விட்டு வெளியேறிய கத்தார் மகளிர் அணி

Image
  கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று கத்தார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஹிஜாப் அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார் . அப்போது நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமிடையில் நடந்த நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகும் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி மறுத்ததால் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறியது பெண்கள் அணி . போட்டி நடத்தமாலேயே மொங்கோலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சர்வதேச போட்டியை விடவும் ஹிஜாபுமும், மார்க்கமும் முக்கியம் என கருதி வெளியேறிய கத்தார் வீராங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வுலக வெற்றியை விட இறைவனின் மறுமை வெற்றியே பெரிதானது. இவ்வுலக தோல்வி கால் செருப்பு கூட சமமில்லை. இறைவனிடம் வெற்றிப்பெற்றது கத்தார் பெண்கள் அணியே என்று 200 கோடி முஸ்லிம்களின் சார்பாக அறிவிக்கிறோம் . ஹிஜாபுக்கு தடையா, போட்டிகளில் இருந்து

நெல்லையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம்.

Image
நெல்லையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் மசூதி உள்ள தெரு வழியாக தான் செல்வோம் என்று ரகளை செய்த இந்து முன்னணியினருக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனை அடுத்து போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நெல்லை விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் : 31 பேர் ஜாமீனில் விடுதலை ஞாயிறு 7, செப்டம்பர் 2014 12:38:31 PM (IST) நெல்லையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் கைதான 31 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். நெல்லையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் வெடித்தது. இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் தடியடி நடத்தினர். மேலப்பாளையம் குறிச்சியில் நடந்த மோதல் தொடர்பாக பா.ஜ. மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்பட 17 பேர் மீதும், டவுனில் நடந்த கலவரம் தொடர்பாக இந்துமுன்னணி நிர்வாகிகள் உள்பட 50 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் முன்ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நஷீர்அகமது அவருக