ஜும்ஆ என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் தானா?

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய நாளாக அல்லாஹ் தேர்வு செய்து தந்தது ஏன்?

17-02-2017 அன்று சோனாப்பூர் லேபர் கேம்பில் ஆற்றிய ஜும்ஆ உரையின் முக்கிய பகுதியை தந்தோம். சிலர் ஆரம்ப உரையில் இருந்து தாருங்கள் என்றும் சிலர்  ஜும்ஆ உடைய எல்லா குறிப்புகளையும் தாருங்கள் என்று கேட்டுள்ளார்கள். குறிப்புகளை மட்டும் தந்தால் அது எல்லாருக்கும் பயன் தராது. உரையாற்றும் திறமை உடையவர்களுக்கு மட்டுமே புரியும். உரையாற்றும் திறமை உடையவர்கள் குறிப்புகள் வைத்திருப்பார்கள். ஆகவே ஆரம்ப உரையை தருகிறோம்.  
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_41.html
தொழுகை என்ற வணக்க வழிபாடுகளை தினமும் ஜமாஅத்தாக செய்தாலும் வாரம் ஒரு முறை அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்புத் தொழுகை செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் செய்யக் கூடிய சிறப்பு வணக்கமான இந்த ஜும்ஆ என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் இந்த ஜும்ஆவை சிறப்பு வணக்க வழிபாடுகளை வார வாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதுதான்.


இதை கேட்கும்பொழுது நமது மனம் ஏற்றுக் கொள்ள, ஜீரணிக்க கஷ்டமாகத்தான் இருக்கும். ஜும்ஆ என்றால் சேகரிப்பு, அசோசிசன், சங்கமித்தல், ஒன்று திரட்டல் என்று பொருள் உண்டு. இந்தப் பொருளை தெரிந்து கொண்டாலும் விளங்கிக் கொள்ளலாம். 


இதைவிடத் தெளிவாக நம் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது பற்றி கூறும் 2:183 ஆவது வசனம்    நமக்கு   விடை    அளிக்கிறதுவிளக்கம்  அளித்து தெளிவைத் தருகிறது.


 كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ  


உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது என்று கட்டளை இட்ட அல்லாஹ் அத்துடன் நின்று விடவில்லை


کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ  

உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டு இருந்ததைப் போல் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்லிக் காட்டி உள்ளான். 

இந்த ஆயத்தை படித்ததும் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஜும்ஆ இருந்ததை மனம் எளிதாக ஏற்றுக் கொள்ளும்.


நாம்தான் கடைசி சமுதாயமாக இருக்கிறோம். நமக்கு முன்னாள் 2 சமதாயத்தவர்கள் இருந்தார்கள். யூதர்களுக்கு சனிக்கிழமையை ஜும்ஆ தினமாக சிறப்பு, வணக்க வழிபாட்டு நாளாகக் கொடுத்தான் அல்லாஹ். 


கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையை ஜும்ஆ தினமாக சிறப்பு, வணக்க வழிபாட்டு நாளாக அல்லாஹ்.  கொடுத்தான் 

முஸ்லிம்களாகிய நமக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ தினமாக சிறப்புத் தொழுகை நாளாக  வணக்க வழிபாட்டு நாளாக அல்லாஹ் தந்துள்ளான்.


நாம் கடைசி சமுதாயமாக இருக்கிறோம் ஏனெனில் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் கடைசி நபி. இதை  அடிக்கடி சொல்ல வேண்டும். அழுத்தமாகவும் சொல்ல வேண்டும்.  அடித்துச் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் காதியானிகள் மண்டையில் குட்டியது போல் இருக்கும்.


முஹம்மது (ஸல்) அவர்கள் கடைசி நபியாக இருக்கிறார்கள். அதனால்தான் நாம் கடைசி சமுதாயம்.  நாம் கடைசி சமுதாயமாக இருந்தாலும் சிறப்புத் தொழுகை சிறப்பு வணக்க வழிபாடு செய்வதில் ஜும்ஆ நடத்துவதில் முந்தைய சமுதாயமாக முதன்மை சமுதாயமாக இருக்கிறோம். நபி(ஸல்) கூறினார்கள்


نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ بَيْدَ كُلُّ أُمَّةٍ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَا مِنْ بَعْدِهِمْ فَهَذَا الْيَوْمُ الَّذِي اخْتَلَفُوا فَغَدًا لِلْيَهُودِ وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى.

'இறுதிச் சமுதாயமான நாம்தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்க புகாரி ,முஸ்லிம் ஆகிய நுால்களில் இடம் பெற்றுள்ளது.



வெள்ளிக்குப் பிறகு சனி, அதன் பிறகு ஞாயிறு அதன் பிறகு இடைவெளி பிறகு வெள்ளி சனி, ஞாயிறு. வார நாளின் துவக்கம் ஞாயிறு என்று சொல்லிக் கொண்டாலும். வார சிறப்பு வணக்க வழிபாடு தொடரில் அவர்கள்தான் கடைசியாக உள்ளார்கள். 

சமுதாயத்தவர்களால் அவர்கள் முந்தைய சமுதாயமாக இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் செய்யக் கூடிய இந்த சிறப்பு வணக்க வழிபாட்டில் ஜும்ஆவில் முஸ்லிம்களாகிய நாம்தான் அல்லாஹ்வின் துாதர் சொன்னபடி முந்தைய சமுதாயமாக முதன்மை சமுதாயமாக இருக்கிறோம்.


வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கி சிறப்பு வழிபாடு நடத்துவது என்பது இந்த உம்மத்துக்கு மட்டும் உள்ளது அல்ல. நமக்கு முன்னால் வாழ்ந்த உம்மத்தாருக்கும் ஒரு நாளை தேர்வு செய்து அந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டிருந்தான். 


அந்த அடிப்படையில் நமக்கும் வார வழிபாடு தந்துள்ளான் கிழமையை மாற்றி வெள்ளிக்கிழமையை சிறப்பு வழிபாடு நாளாக தந்துள்ளான். இது ஒரு புதுமுறை இல்லை என்பதை முதலில் பதிவு செய்து கொள்கிறோம். இது ஜும்ஆவைப் பற்றி தெரிய வேண்டிய முக்கியமான விஷயம். முதலாவதாக தெரிந்து கொள்ள வேண்டிய விபரமும் கூட.


மற்றவர்களுக்கு ஜும்ஆ உடைய நாளாக மற்ற கிழமைகளை கொடுத்த அல்லாஹ். நமக்கு ஜும்ஆ உடைய நாளாக வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து தந்துள்ளான். 

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய நாளாக அல்லாஹ் தேர்வு செய்து தந்தது ஏன்? இதுதான் முதலில் விளக்க வேண்டிய கேள்வி.  


அல்லாஹ் தேர்ந்து எடுத்து தந்துள்ள இந்த வெள்ளிக்கிழமைக்கு என்று பல சிறப்புகள் இருக்கின்றது. மற்ற கிழமைகளுக்கு இல்லாத சிறப்பு வெள்ளிக்கிழமைக்கு மட்டும் இருக்கின்றது.  இதை அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள் அறிவித்து இருக்கின்றார்கள்.


அதில் முதலாவதான சிறப்பு, முக்கியமான சிறப்பு மனித சமுதாயம் தோன்றியது வெள்ளிக்கிழமைதான். அதாவது ஆதம்(அலை) அவர்கள் வெள்ளிக்கிழமைதான் படைக்கப்பட்டார்கள்.


ஆதம்(அலை) படைக்கப்பட்டார்கள்  என்றால் என்ன அர்த்தம்? அன்றுதான் மனித இனம் படைக்கப்பட்டது என்று அர்த்தம். மனிதன் என்ற இனத்தை படைப்பதற்கு அல்லாஹ் தேர்வு செய்த நாள் எது? என்றால் அது இந்த வெள்ளிக்கிழமைதான்.


ஆதம்(அலை) அவர்களை சொர்க்கத்தில் குடியேறச் செய்த நாள் எது? அந்த வெள்ளிக்கிழமையில்தான் அதாவது படைத்த அன்றைய தினத்தில்தான். அதே நாளில்தான்


அந்த சொர்க்கத்தில் ஒரு தவறு செய்ததால் ஆதம்(அலை) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அது நடந்த நாள் எது? அதுவும்  வெள்ளிக்கிழமையில்தான் நடந்தது.


சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதம்(அலை) அவரது மனைவியும்

ا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏


என்று பாவ மன்னிப்பு தேடியதை 7:23 இல் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான்.

ரப்பனா ழலம்னா அன்புஸனா படைத்து பரிபாலிப்பவனே எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து விட்டோம். 

வஇன்லம் தஃபிர்லனா வதர்ஹம்னா எங்களை நீ மன்னித்து அருள் புரியவில்லை என்றால் 

லனகூனன்ன மினல் காசிரீன் நாங்கள் நஷ்டவாலிகளாக ஆகி விடுவோம் என்று துஆச் செய்தார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார்கள்..


அந்த துஆவை ஏற்று அல்லாஹ் அவர்களை மன்னிக்க தேர்வு செய்த நாள் எது? வெள்ளிக்கிழமைதான். மனித குலத்தின் முதல் மனிதரான ஆதம்(அலை) அவர்களை மரணிக்கச் செய்தது  வெள்ளிக்கிழமைதான்.


அவரை படைத்து உயிர் கொடுக்க தேர்வு செய்த நாள் எது? வெள்ளிக்கழமைதான். அவரது உயிரை எடுத்து மரணிக்கச் செய்ய தேர்வு செய்த நாள் எது?  வெள்ளிக்கிழமைதான்.


ஆதம்(அலை) வெள்ளிக்கிழமை பிறந்து வெள்ளிக்கிழமை இறந்தார்கள். அது மாதிரி ஒட்டு மொத்த மனித சமதாயமும் வெள்ளிக்கிழமைதான் இறக்க இருக்கிறது.


வெள்ளிக்கிழமை ஆதம்(அலை) படைக்கப்பட்டார் என்றால் என்ன அர்த்தம்? அன்றுதான் மனித சமுதாயம் படைக்கப்பட்டது என்பதுதானே. மனித சமுதாயத்தை படைக்க  வெள்ளிக்கிழமையை தேர்வு செய்துள்ள அல்லாஹ். அந்த மனித சமுதாயத்தை அழிக்க தேர்வு செய்துள்ள நாள் எது?  வெள்ளிக்கிழமைதான். உலகம் அழியும் நாள் எது? அதுவும் வெள்ளிக்கிழமைதான்.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


 عليهوسلم قال خير يوم طلعت في الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا يوم الجمعة

'சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்தநாளில்தான் அவர்கள் சொர்க்கத்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்''.: அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் “திர்மிதி“ யில் இடம் பெற்றுள்ளது.


மறுமையில் விசாரணை நடத்த அல்லாஹ் தேர்வு செய்துள்ள கியாம நாள் எது?  வெள்ளிக்கிழமைதான். இவைதான் வெள்ளிக்கிழமை பற்றிய முக்கிய சிறப்புகள். 

மற்றவர்களுக்கு வழங்கிய சனி, ஞாயிறைப் போல் இல்லாமல். நமக்கு தந்துள்ள வெள்ளிக்கிழமையில் இவ்வளவு சிறப்புகள் இருக்கின்றது. அதனால்தான் அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையை ஜும்ஆ உடைய நாளாக தேர்வு செய்து தந்துள்ளான்.




இத்தனை சிறப்புகள் மிகுந்த இந்த நாளில் முதன் முதலில் முஸ்லிம்களின் ஜும்ஆ எப்பொழுது ஆரம்பித்தது? இதை நேற்று தந்து விட்டோம். 


2 ஆவது ஜும்ஆ ஜவாஸா என்ற கிராமத்தில் நடந்தது. ஜவாஸா கிராமத்து குழுவினர்கள் வந்து நபி(ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். 

அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள் நீங்கள் உங்கள் ஊருக்குப் போய் ஜும்ஆ நடத்துங்கள் என்று. ஜவாஸா என்ற கிராமம்  பஹ்ரைனில் உள்ளது. ஆக பஹ்ரைனில் உள்ள ஜவாஸா என்ற இடத்தில்தான் 2 ஆவது ஜும்ஆ நடத்தப்பட்டது. 3 ஆவது ஜும்ஆ எங்கு நடந்தது?.  (இன்ஷாஅல்லாஹ் நாளை)



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு