ராஜா உசேன் அவர்களின் கை உடைக்கப்பட்டுள்ளது,

அப்டேட்கள்
[15/03, 6:50 am] : இது (வீடியோ) உண்மையா போலீஸ் போட்டுள்ள நாடகமா. கண்ணியத்திற்குரிய  உலமாக்கள் சபை, IUML, SDPI, PFI,TMMK,MMMK, TNTJ, INTJ, INLP மற்றும் கூட்டமைப்புகள் என்ன செய்கிறார்கள்.


[16/03, 7:25 am] : அண்ணன் INLP சார்பாக எதுவும் போராட்டம் செய்தது போல் தகவல் இல்லை.. மதுரையில் மட்டும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு செய்துள்ளார்கள்.மற்ற இடங்களில் போஸ்டர் மட்டும் ஒட்ட சொல்லி  தடா ரஹீம் பாய் பதிவு போட்டுள்ளார்...

ராஜா உசேன் அண்ணன் பொதுச் செயலாளராக இருக்கும் கட்சியினரே போராட்டம் நடத்த முன்வராத போது மற்ற அமைப்பினரும், கட்சியினரும்  முன் வரவில்லை என்று எப்படி ஆதங்கப்பட முடயும் ?


[16/03, 7:30 am] : இவ்ளோ தான் போஸ்டர்..3 மாவட்ட பெயரில் மட்டுமே சமூக வலைதளங்களில் போஸ்டர் வந்துள்ளது..

இவர்கள் ஏன் போராடவில்லை என்று தெரியவில்லை.

[15/03, 12:01 pm] : வ அலைக்கும் ஸலாம்.
[15/03, 12:02 pm] : போராட்டம் எதுவும் நடத்துகிற மாதிரி தெரியவில்லை அண்ணே!
[15/03, 5:00 pm] : போஸ்டர் மட்டும் ஒட்டு உள்ளனர்.
  

*_மெளலவி அப்துல் காதிர் மன்பஈ_*, காயல் மகபூப், தெஹ்ரான் பாக்கவி , ,இப்படி எல்லாரும் வீர தீர அறிக்கையுடன் சரி. நெல்லை கண்ணன், அய்யாவழி போன்றோருக்கு கொடுத்த முக்கியத்துவம் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த மதுரை ராஜா உசேனுக்கு இல்லை. அவரை புகழ்ந்ததுடன் சரி. போராட்டங்களும் இல்லை.  அறிவித்த போராட்டத்தையும் ஒத்தி வைத்து விட்டார்கள்.
------------------------------------------------


இந்திய தேசிய லீக் கட்சி பொதுச் செயலாளர் மதுரை ராஜா உசேன் உட்பட ஐந்து பேர் கைது ..

காவல்துறை ஆய்வாளர் தாக்கப்பட்டதாக  வழக்கு பதிவு செய்து உள்ளது காவல்துறை ..

முழு தகவல் மிகவிரைவில் இன்ஷாஅல்லாஹ் .. 
தடா ஜெ அப்துல் ரஹிம் 
------------------------------------------------------------------------


உதவவில்லை என்றாலும் உபத்தரம் செய்யக்கூடாது  தெஹ்ரான் பாக்கவிக்கு தடா ஜெ அப்துல் ரஹிம்  கண்டனம் 

ஏதோ ஒரு மாநில பொறுப்பில் இருப்பவர் ராஜா உசேன் இல்லை இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் என்பது கூட பாகவிக்கு தெரியாதா ? 

ராஜா உசேன் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதே உண்மை 

ஆனால் பாகவி அறிக்கை பாருங்க 
// இப்படிதான் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படும் இந்து முன்னணி , பாஜக தலைவர்களோடு காவல்துறை நடந்து கொள்கிறதா // 


ராஜா உசேன் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது ஆனால் பாகவி என்ன சொல்கிறார் கிரிமினல் வழக்கு என்கிறார் . வழக்கு போட்டது சரி ஆனால் கை கால் உடைத்தது தவறு என்பது போல உள்ளது இவரின் அறிக்கை ..


தேசிய கட்சியின் துணை தலைவர் இப்படி கண்டிப்பது போல கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரை கிரிமினல் என குற்றவாளி கூண்டில் நிறுத்துவது வன்மையாக கண்டிக்க கூடிய செயலே 

இனி வரும் காலங்களிலும் இது போன்ற இயக்க வெறி கொண்ட அறிக்கை கொடுப்பதை தவிர்த்து கொள்ளுங்க 

அன்புடன் 
தடா ஜெ அப்துல் ரஹிம் 
இந்திய தேசிய லீக் கட்சி 
மாநில தலைவர்
---------------------------------------------------------------
12/03, 11:54 am] zஅப்காதர்மன்ப ஈ: 
இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணன் மதுரை ராஜா ஹுசைன் அவர்கள் மீதும் அவர் மகன் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு கொடும் தாக்குதலை செய்து, பொய் வழக்கும் போட்டு சிறைக்குள் தள்ளிய திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஐ வன்மையாக கண்டிக்கிறேன்..

லத்தியை கையில் வைத்திருக்கும் பல முட்டாள் காவல்துறைக்கு புத்தி கிடையாது என்பது நமக்குத் தெரியும். 

வழக்கு போடுவது என்பது கேள்விப்பட்ட காலங்கள் போய் இப்போது, மிரட்டி பொய் வீடியோ வாங்கி அதைப் பரப்புவது,, 
மற்றும் கை, கால்களை உடைப்பது. போன்ற ரவுடியிஸத்தை காவி உடையணிந்த காக்கிக் கும்பல்கள் செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. 

இது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டனத்தை செய்து வரும் மக்களை திட்டமிட்டு மிரட்டி அடித்து பொய் வழக்கு போடும் வேலையை காவல்துறை கையில் எடுத்துள்ளது.

இக்கேடுகெட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

*_மெளலவி அப்துல் காதிர் மன்பஈ_*

----------------------------------------------


#அராஜகம்
திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டரால் ராஜா உசேன் அவர்களின் கை உடைக்கப்பட்டுள்ளது,

சிறையில் சரியான மருத்து சிகிச்சை கொடுக்கப்படவில்லை,

வெளி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை,

கையை உடைத்ததோடல்லாமல் அவரை உறவினர்கள் சந்திக்கக்கூடாது என்பதற்க்காக புழல் சிறையில் வைக்காமல்
வேலூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.






இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் #மதுரை_ராஜா_உசேன் அவர்கள் கைது செய்ததை கண்டித்து #திங்கட்கிழமை நடைபெறவிருந்த #போராட்டம் #தள்ளிவைப்பு தேதி பின்னர் தலைமை அறிவிக்கும்.........

அனைவரும் #மதுரை_ராஜா_உசேன் அண்ணனின் விடுதலைக்காகவும் அவரின் உடல் நலத்திற்க்காவும் அதிகமாக துவா செய்யவும்........



கைது செய்யப்பட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை கொஞ்சம்கூட மதிக்காமலும், நீதிமன்றங்களை கருத்தில் கொள்ளாமலும் சட்டத்தை கையில் எடுத்து தாங்களாகவே தண்டனை வழங்கக்கூடிய காவல்துறையினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள். சகோதரர் ராஜா உசேன், அவர் புதல்வர் மிருகத்தனமான முறையில் தாக்கப்பட்டது வன்மையான கண்டனத்துக்குரியது. அவர்களை படு காயப்படுத்திய காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயக் கடமை; அதை அனைவரும் வலியுறுத்துவோம். அன்புடன்,                
காயல் மகபூப்
மாநில செயலாளர் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

----------------------------------------------------------------------

மதுரை ராஜாஉசேன் மீது காவல்துறை கொடூர தாக்குதல் நிகழ்த்தியது வன்மையான கண்டனத்திற்குரியது!

ஒருவழக்கு விசாரணைக்காக மதுரை ராஜாஉசேன் அவர்களையும் அவரது மகனையும் அழைத்துச்சென்ற காவல்துறைஅதிகாரிகள் அவர்மீது கொடூரமானமுறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது .

ஒரு வழக்கில் ஒருவர்குற்றம் சாட்டப்பட்டால்அவரை கைது செய்வதற்கும், விசாரிப்பதற்கும் தான் காவல்துறைக்கு அதிகாரம் உண்டே தவிர காட்டுமிராண்டித்தனமாக அவர் மீது தாக்குதல்நடத்துவதற்கு காவல்துறைக்கு எந்தஅதிகாரமும் கிடையாது. அவ்வாறு தாக்குதல் நடத்துவது மனித உரிமைக்கு எதிரானது.

ஒரு அமைப்பில் மாநிலஅளவில் பொறுப்பிலிருக்கும்ஒருவரோடு காவல்துறை நடந்துகொள்கிற முறை இதுதானா?

 இப்படித்தான் கிரிமினல்வழக்குகளில் கைது செய்யப்படும் இந்துமுன்னணி,
 பா ஜ க   தலைவர்களோடு காவல்துறை நடந்துகொள்கிறதா?

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது காவல்துறையின் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தெஹ்ரான் பாக்கவி 
எஸ்டிபிஐ கட்சியின் 
அகில இந்திய துணை தலைவர்
------------------------------------------------------------------------------------------

#மதுரை_ராஜாஉசேன் 

அண்ணன்
வாரத்துக்கு மூன்று முறையாவது போன் செய்வார் 
யூசுப் கோவை சிறையில் இருக்கும் சிறைவாசிகளின் குழந்தைகள் எத்தனை பேர் ஸ்கூல் போகிறார்கள் வருட பீஸ் எவ்வளவு அந்த லிஸ்ட் அனுப்பு என்பார் பணம் அனுப்பீட்டேன் பிரித்து குடுத்துடு என்பார் 
ஒரு சிறைவாசி பெயரை சொல்லி  பரோல் வந்து இருக்கார் செலவுக்கு பணம் இல்லேனு போன் செய்தார் உன் அக்கவ்ன்டுக்கு அனுப்பி இருக்கேன் குடுத்துடு என்பார்

ஒரு சிறைவாசிக்கு கல்யாணம் என்னால் வர முடியாத சூல்நிலை பணம் அனுப்பி இருக்கேன் குடுத்துடு என்பார்   

யூசுப் ஒரு சிறைவாசியின் பெயரை சொல்லி அவர்கள் குடும்பத்தில் ஏதோ பண பிரச்சனை ஒரு அமௌன்ட் அனுப்பி இருக்கேன் அது அவர்களிடம் குடுத்து அந்த பிரச்சனையை சால்வ் பன்னு என்பார்

தடாவில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் 98.தலைமறைவானார் அவர் மகளுக்கு கல்யாணம் என்னால் நேராக போய் குடுக்க முடியவில்லை கல்யானத்துக்கு நான் வருகிரேன் இப்போ அக்கவ்ன்டுக்கு பணம் அனுப்பியிருக்கேன் நீ போய் குடுத்துடு என்பார் 

 ஒரு சிறைவாசியின் பெயரை சொல்லி வழக்கு நடத்த பணம் இல்லையாம் ஒரு அமௌன்ட் அனுப்பியிருக்கேன் அதில் என் பங்கு இவ்வளவு மீதி கடன் சரியா என்பார் 

சிறைவாசிகளின் பெயரை சொல்லி அவர்களின் சிறை செலவுக்கு பணம் இல்லை என்று மனு பார்த்த பொழுது சொன்னார்கள் அவர்களுக்கு போஸ்டலில் பணம் அனுப்பீடுனு சொல்வார்

ஒரு தடவை கோவையை விட்டு போகும்போது கையில் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்துவிட்டு இவர் இவர்களுக்கு இவ்வளவு இவ்வளவு பணம் குடுத்துடு என்று  சொன்னார் அண்ணா பணம் பத்தாதானு சொன்னேன் என்னி பார்த்துட்டு அப்படியா நீ போட்டு குடு நான் உனக்கு அனுப்பரேனு சொன்னார்

ஒரு சிறைவாசியின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிரது வழக்கை பார்பவர் உடனடியாக சீனியர் வக்கீலுக்கு 
2இலட்சம் காலை பத்து மனிக்குல் அனுப்பினால்தான் ஆஜர் ஆவர் என்று இரவு சொல்கிறார் இரவு நேரத்தில் யாரிடம் பணம் கேட்பது என்று யோசிக்கும் போது ராஜாஉசேன் அண்ணனுக்கு போன் செய்தேன் அப்படியா உடனே வேனுமா சரி ஏர்பாடு செய்கிரேன் என்று சொன்னவர் உடன போன் செய்து அந்த வக்கீலுக்கு ஒரு இலட்சம்அனுபிடரேன் உன் அக்கவ்ன்டுக்கு 50.ஆயிரம் அனுப்பரேன் மீதி 50.ஆயிரம் நீ சென்னையில்தானே இருக்கு ஒரு போன் நெம்பர் கொடுத்து அவர் கிட்ட வாங்கிக்கோ என்றார் 

ராஜாஉசேன் அண்ணன் என்னை தொடர்பு கொன்டு பேசிய ஒரு சதவீதத்துக்கும் கம்மியானதைதான் பதிவு செய்து உள்ளேன் எனது வாட்ஸ்அப் என்னுக்கு பணம் அனுப்பிய ரசீதுதான் இருக்கும் அவருடைய வாட்ஸ்அப் என்னில் இருந்து காவல்துறை அவரையும் மகன் சைபுள்ளாவையும் கடுமையாக தாக்கி சிறையில் அடைத்து உள்ளார்கள் மணம் ரொம்பவும் வேதைனையாக உள்ளது துவா செய்யுங்கள் ராஜாஉசேன் அண்ணனுக்காக

 Mohamed Yusuf 

------------------------------------------------------------------

இப்படியாக புகழ்ந்ததோடு சரி போராட்டங்களும் இல்லை.  அறிவித்த போராட்டத்தையும் ஒத்தி வைத்து விட்டார்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.