Posts

Showing posts from May, 2004

உபரியான தொழுகைகளை எண்ணிக்கை வரையறை இன்றி தொழலாமா?

தொழுகை என்று சொன்னாலே பா்ளு (எனும் கட்டாயக் கடமையான) தொழுகை இருக்கின்றது . இது போக உள்ள மற்ற தொழுகைகளை சுன்னத் என்றும் . நபில் என்றும் இன்னும் சில பெயர்களைக் கொண்டும் நாம் விளங்கி வைத்து இருக்கிறோம் . என்ன மாதிரி ?  ஹாஜத்து தொழுகை ,  இஸ்திகாரா தொழுகை,  இரவுத் தொழுகை   இந்த மாதிரி பல பெயர்களில் விளங்கி வைத்து இருக்கிறோம் . இங்கே கேள்வி என்ன ?  இந்த மாதிரி உள்ள உபரி தொழுகைகளை   எண்ணிக்கை வரையறை இன்றி நம்முடைய விருப்பத்திற்கு தொழலாமா ? என்பதே. உதாரணத்திற்கு 200 ரகஅத் தொழலாமா ? 100 ரகஅத் தொழலாமா ? என்பதுதான் கேள்வி உடைய மைய கருத்து . நாம் முதலில் அடிப்படையை விளங்கிக் கொள்ள வேண்டும் . தெரியாத மொழியில் வார்த்தைகளை பயன்படுத்துவது மிகப் பெரிய குறைபாடு .  எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் . அந்த மொழியிலே சொல்லக் கூடிய வார்த்தைகளுடைய அர்த்தம் என்ன ? அது நமக்கு விளங்கியது என்று சொன்னால் . அதன் மூலம் எந்த தவறும் தீமையும் ஏற்படாது . விளங்காமல் இருந்த ஒரு சில வார்த்தைகளினால் ஏற்பட்ட விபரீதங்களையும் நாம் சி