ஜும்ஆ ஏழைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும் மட்டும் தான் பெருநாளா?
ஜும்ஆவுக்கு
கூட போகாமல் அழுக்கு ஆடையுடன் அடுப்படியில் நிற்பதுதான் வெள்ளியன்று நாம் செய்ய வேண்டிய
கடமை என்று வளைகுடாவில் பணி புரிபவர்களில் பலர் எண்ணி விட்டார்களா?
ஜும்ஆ அன்று யார் தொழ
வராமல் வீட்டில் இருக்கிறார்களோ அவர்களை வீட்டோடு வைத்து எரித்து விட வேண்டும்
என்று எண்ணுகிறேன் என்று சொன்னது யார்?
ஜும்ஆ
தொழுகை நேரத்தில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத நபர்கள் மூலம் வியாபாரத்தை செய்யலாமா?.
திண்ணை கடை வைத்திருப்பவர்கள். ஜும்ஆ கடமையாகாத பெண்கள் சிறுவர்களைக்
கொண்டு வியாபாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்களே இது சரியா?
ஜும்ஆ நேரத்தில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத நபர்கள் மூலம் வியாபாரத்தை செய்யலாமா?
ஜும்ஆ வெறும் வார வழிபாட்டு நாளா?
ஜும்ஆ நபி(ஸல்) அவர்கள் இடத்தில் எப்படிப்பட்ட நாள் தெரியுமா?
ஜும்ஆவுக்கு
கூட போகாமல் அழுக்கு ஆடையுடன் அடுப்படியில் நிற்பதுதான் வெள்ளியன்று நாம் செய்ய வேண்டிய
கடமை என்று வளைகுடாவில் பணி புரிபவர்களில் பலர் எண்ணி விட்டார்களா?
ஜும்ஆ அன்று யார் தொழ
வராமல் வீட்டில் இருக்கிறார்களோ அவர்களை வீட்டோடு வைத்து எரித்து விட வேண்டும்
என்று எண்ணுகிறேன் என்று சொன்னது யார்?
ஜும்ஆ
தொழுகை நேரத்தில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத நபர்கள் மூலம் வியாபாரத்தை செய்யலாமா?.
திண்ணை கடை வைத்திருப்பவர்கள். ஜும்ஆ கடமையாகாத பெண்கள் சிறுவர்களைக்
கொண்டு வியாபாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்களே இது சரியா?
ஜும்ஆ வெறும் வார வழிபாட்டு நாளா?
ஜும்ஆ நபி(ஸல்) அவர்கள் இடத்தில் எப்படிப்பட்ட நாள் தெரியுமா?
இஸ்லாமிய வரலாற்றில் 3வது ஜும்ஆ நடத்தியது யார் ?
அல்லாஹ்வால் புகழப்பட்ட பள்ளி எது? என்பவற்றை இதில் காண உள்ளீர்கள்.
httpsமு://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_37.html
முந்தைய இரு வெளியீடுகளில் முதல் ஜும்ஆவை நடத்தும் பாக்கியம் பெற்றவர் அஸ்அத்பின்ஸுராரா(ரலி) என்ற ஸஹாபி என்பதையும் நபி(ஸல்) அவர்களின் 52 ஆவது வயதில் மதீனாவில் ஜும்ஆவை நடத்தினார் என்பதையும் ஜும்ஆ தொழ பள்ளிவாசல் வேண்டுமா? என்ற தலைப்பில் கண்டீர்கள். பஹ்ரைனில் உள்ள ஜவாஸா என்ற இடத்தில்தான் 2 ஆவது ஜும்ஆ நடத்தப்பட்டது என்பதை ஜும்ஆ என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் தானா? என்ற தலைப்பில் கண்டீர்கள்.
..... இதன் பிறகுதான் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்து குபா பள்ளியை கட்டினார்கள்.
நிச்சயமாக ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது (அல் குர்ஆன் 9:108) என்று அல்லாஹ்வால் புகழப்பட்ட பள்ளி குபா.
அந்த குபா பள்ளியில் நபி(ஸல்) ஜும்ஆ நடத்தினார்கள். நபிகளாரின் முதல் ஜும்ஆ நடந்த இடம்தான் குபா பள்ளி. அதாவது இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவதாக ஜும்ஆ நடந்த இடம்.
இதற்குப் பிறகுதான் மஸ்ஜிதுன் நபவியிலே ஜும்ஆ நடந்தது. ஜும்ஆ தொழும் நாம் இந்த வரலாற்றை தெரிந்து கொள்வது நல்லது.
لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِؕ
நிச்சயமாக ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது (அல் குர்ஆன் 9:108) என்று அல்லாஹ்வால் புகழப்பட்ட பள்ளி குபா.
அந்த குபா பள்ளியில் நபி(ஸல்) ஜும்ஆ நடத்தினார்கள். நபிகளாரின் முதல் ஜும்ஆ நடந்த இடம்தான் குபா பள்ளி. அதாவது இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவதாக ஜும்ஆ நடந்த இடம்.
இதற்குப் பிறகுதான் மஸ்ஜிதுன் நபவியிலே ஜும்ஆ நடந்தது. ஜும்ஆ தொழும் நாம் இந்த வரலாற்றை தெரிந்து கொள்வது நல்லது.
இந்த ஜும்ஆ வெறும் வார வழிபாட்டு நாளா? இது நபி(ஸல்) அவர்கள் இடத்தில் எப்படிப்பட்ட நாள் தெரியுமா?
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தை பெருநாள் என்று கூறி உள்ளார்கள். அதனால்தான் தொடராக இல்லாமல் ஜும்ஆ அன்று மட்டும் தனியாக நோன்பு வைக்கக் கூடாது என்று கட்டளை இட்டுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தை பெருநாள் என்று கூறி உள்ளார்கள். அதனால்தான் தொடராக இல்லாமல் ஜும்ஆ அன்று மட்டும் தனியாக நோன்பு வைக்கக் கூடாது என்று கட்டளை இட்டுள்ளார்கள்.
இது ஏழைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும் மட்டும் பெருநாள் அல்ல. உங்களுக்குப் பெருநாள் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். அதாவது எல்லாருக்கும் பெருநாள் என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.
ஈதுல் பித்ர், ஈதுல் அல்ஹா மாதிரி இல்லாவிட்டாலும் ஈதின் ஒரு சிறு பகுதி வெள்ளிக்கிழமை அன்று இருக்கிறது. அதனால் வெள்ளிக்கிழமை அன்று நாம் இருக்கும் ஆடைகளில் நல்ல ஆடைகளை உடுத்தி நன்றாக பொலிவுடன் இருக்க வேண்டும்.

கடமையான குளிப்பை எந்த தினத்திலும் குளித்து விடுவோம். ஜும்ஆ தினத்தில் கடமையான குளிப்பு இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை என்பதால் குளிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள். பருவம் அடைந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது கடமை என்று கூறி உள்ளார்கள்.
الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்க புகாரியில் 858 ஆவது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக குளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக ஆக்கிய ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். தினமும் குளிப்பது சிறந்தது ஒரு நாளைக்கு 5 தடவை குளிப்பதற்கெல்லாம் தடை இல்லை. எவ்வளவு குளிர் பிரதேசமாக இருந்தாலும் வெள்ளியன்று குளிப்பது கட்டாய கடமை். அதோடு நின்றுவிடவில்லை.
: لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ
எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும். நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறி உள்ளார்கள். இதுவெல்லாம் பெருநாளின் அம்சம். வெள்ளியன்று முஸாபர் மாதிரி, எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரி இருக்கக் கூடாது. எவ்வளவு நன்றாக இருக்க முடியுமோ அவ்வளவு நன்றாக இருக்க வேண்டும் என்பதை பல ஹதீஸ்களில் காண்கிறோம்.
வெள்ளியன்று நோன்பு வைக்கக் கூடாது என்பதில் இருந்து வெள்ளியன்று நன்றாக சாப்பிடவும் வேண்டும் என்பதையும் அறிகிறோம்.
இது மட்டும் ஒழுங்காக நடக்கிறது. ஜும்ஆவுக்கு கூட போகாமல் அழுக்கு ஆடையுடன் அடுப்படியில் நிற்பதுதான் வெள்ளியன்று நாம் செய்ய வேண்டிய கடமை என்று வளைகுடாவாசிகள் எண்ணி விட்டார்கள் போலும்.
வளைகுடாவாசிகள் வாழ்வு அப்படித்தான் உள்ளது. குறிப்பாக. வெள்ளி முழுவதும் நமக்கு பெருநாள். எனவே பெருநாளின் அம்சம் அன்று முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும்.

لِقَوْمٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ « لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ رَجُلاً يُصَلِّى بِالنَّاسِ ثُمَّ أُحَرِّقَ عَلَى رِجَالٍ يَتَخَلَّفُونَ عَنِ الْجُمُعَةِ بُيُوتَهُمْ
ஜும்ஆ அன்று யார் தொழ வராமல் வீட்டில் இருக்கிறார்களோ அவர்களை வீட்டோடு வைத்து எரித்து விட வேண்டும் என்று எண்ணுகிறேன் என்றார்கள். ஜும்ஆவை புறக்கணிப்பது அவ்வளவு பெரிய குற்றம்.
ஐவேளை தொழுகையை பற்றி கூறும் குர்ஆன் ஐந்தையும் நேரடி பெயரில் குறிப்பிடவில்லை. ஹதீஸ்களில்தான் நேரடி பெயரைக் காண்கிறோம். ஜும்ஆ தொழுகைப் பற்றி நேரடியாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
ஈமான் கொண்டவர்களே வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விடுங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது என்கிறான் அல்லாஹ்.
இந்த வசனத்தில் (62:9) ஜும்ஆவுக்கு அழைக்கப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. இது அல்லாஹ்வின் கட்டளை இதை யாரும் விளங்கிக் கொண்ட மாதிரி தெரியவில்லை.
பல ஊர்களில் இன்றும் சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்துவதில்லை. பல ஊர்களில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத நபர்கள் மூலம் வியாபாரத்தை செய்கின்றனர்.
பல ஊர்களில் இன்றும் சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்துவதில்லை. பல ஊர்களில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத நபர்கள் மூலம் வியாபாரத்தை செய்கின்றனர்.
தெருவில் சிறு கடை வைத்திருப்பவர்கள், திண்ணை கடை வைத்திருப்பவர்கள். ஜும்ஆ கடமையாகாத பெண்கள் சிறுவர்களைக் கொண்டு வியாபாரத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்றும் அவர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும் குற்றமாகும்.
அவர்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுதான் அல்லாஹ்வின் கட்டளை என்றும் அவர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும் குற்றமாகும்.
தொழுகைக்கு விரைந்து செல்ல வேண்டும்; வியாபாரத்தை விட்டு விட வேண்டும் ஆகிய இரண்டு கட்டளைகளை இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் இட்டுள்ளான்.
தொழுகைக்கு விரைந்து வாருங்கள் என்ற ஒரு கட்டளை மட்டும் இட்டிருந்தால் மற்றவர்கள் மூலம் வியாபாரத்தைச் செய்து கொள்ளலாம்.
2 கட்டளைகள் இருக்க தான் மட்டும் தொழுகைக்குச் வந்து விட்டு வியாபாரத்தை மற்றவர்கள் மூலம் நடத்தினால். ஒரு கட்டளையை மீறயவராகவும் பாவியாகவும் ஆகிறார் என்பதை அவர்கள் உணர்வதில்லை. அல்லாஹ் நம்மை காப்பானாக.
வஆகிர் தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

Comments