குரோனாவும் குர்ஆன் பெயரால் குழப்பங்களும்
சாஜுதீன் பாகவி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கொரானா குறித்து அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா?
குரானா 2003ல் சைனாவிலும் 2012ல் அரபுநாடுகளிலும் வந்ததுதான். 2020ல்தான் வந்தது போல் பெரும்பாலானவர்களால் பரப்பப்பட்டு விட்டது. முதலில் சைனாவுக்கு மட்டும் வந்த தண்டணை போல். சைனா முஸ்லிம்களுக்கு செய்த அநீதியின் விளைவு தான் கொரனா என மவுலவிகள் குறிப்பாக சவூதி ஆதரவு மவுலவிகளில் சிலர் பயான் செய்தார்கள். அதை பலர் பரப்பி சந்தோஷப்பட்டார்கள்.
இப்பொழுது பரபரப்பாக ஆகியுள்ள விஷயம். 1996 பாகவிகள் குருப்பில் சாஜுதீன் பாகவி என்ற ஹஜரத் பேசியது. அது மலேசியா ஆலிம்கள் குருப்பிலும் வந்துள்ளது.
இது மகா மகா மட்ட ரகமான ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் முட்டபய உளறல் என்று நெல்மேனிப்பட்டி இமாம் மவுலவி ஷாஹ் போன்ற பலர் விமர்சனம் செய்து உள்ளார்கள். மற்றவர்கள் பெயரை வெளியிட்டால் அவர்கள் வருத்தப்படலாம். அதனால் எனது நண்பர் நெல்மேனிப்பட்டி இமாமை மட்டும் அடையாளம் காட்டி உள்ளேன்.
17-03-2020 அன்று மதியம் பிரயாணத்தில் இருந்தபொழுது இதை மதுரை மைதீன் உலவி பிரண்ட்ஸ் குரூப்பில் பார்த்தேன். உடனே போன் பண்ணி லைரரியில் உள்ள பலரது தர்ஜமாக்களிலிருந்து 41;25 ஆயத் போட்டோக்கள் கேட்டேன். உஸ்மானியாவில் ஓதிய அவர் P.J. தர்ஜமாவின் 3 பதிப்புகளிலிருந்தும் அப்துல் ஹமீது பாகவி மற்றும் சிறிலங்கா தர்ஜமாவிலிருந்தும் அனுப்பி இருக்கிறார். பலரது தர்ஜமாக்களிலிருந்து வந்துள்ளது என்று எண்ணி அவற்றுடன் முட்டாள் உளறல் என்று எழுதி பதில் போட்டேன்.
18-03-2020 காலை மலேசியாவிலிருந்து வந்த ஆடியோ மூலம் தான் சாஜுதீன் பாகவி அவர்கள் 41;25 ஆயத் போட்டோ வெளியிடவில்லை. வேறு யாரோ அவரது ஆடியோவுடன் இணைத்து அனுப்பி குழப்பம் செய்து விட்டார்கள் என்று அறிந்தேன். யார் இந்த வேலையை செய்தாரோ அந்த ஆள் முட்டாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது சாஜுதீன் பாகவி அவர்களை நோக்கி சொன்னது போல் பலர் விளங்கி உள்ளதால். சாஜுதீன் பாகவி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அரபியில் உள்ளவையெல்லாம் மார்க்கச் செய்திகள் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. பைபில், பகவத் கீதைகள் கூட அரபியில் உள்ளன. பைபில், பகவத் கீதைகள் போன்றவற்றையும் அரபிகள் கிதாபு என்றே சொல்வார்கள். கிதாப் என்றால் புத்தகம் (BOOK) என்று அர்த்தம்.
அரபுலக ஆடை அணிந்திருப்பான். அரபியில் பேசுவான் எழுதுவான். தன்னை அரபி என்பான். அப்துல்லாஹ் என்று பெயர் வைத்து இருப்பான் கழுத்தில் சிலுவையுடன் இருக்கிறாயே என்று கேட்டால் தன்னை கிறிஸ்டி என்பான். இதை நீண்ட நெடுங்காலமாக விளக்கி வருகிறோம்.
அரபு புத்தகத்தில். நமது பாஷையில் சொல்வது என்றால் கிதாபில். 5 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உஸுஸ் என்ற கிதாபில். 7 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட குரானா பற்றி எழுதப்பட்டுள்ளது. அதில் உள்ள ஹதீஸ் விரிவுரையை வைத்து ஹதீஸ் என்று சொல்லி விட்டார் என்பதையும் அவர் விளக்கி விட்டார்.
Comments