இந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்படலாம் என்பது உண்மையா?
ஹஜ்ஜை நிறுத்தச் சொல்லி இதுவரை சவூதி அரசாங்கம் எந்த தீர்மானமும்
எடுக்கவில்லை.
ஆனால் இந்த வீடியோவுடன் இந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்படலாம் என்பதை சவூதி அரசு
உறுதிப்படுத்தியுள்ளதுடன், எந்த ஹோட்டல், பயிற்சியாளர் அல்லது டிக்கெட்டிலும் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டாம் என்று
அனைத்து ஹஜ் நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது என்று பரப்பப்படுகிறது.
இன்னல் மம்லக ஹத்தல் ஆன் லம் தத்தகிது கராரன் பிஈ ஃகாபில் ஹஜ்
இவ்வாறு அரபியில் சொல்லப்படும் வார்த்தைக்கு இதுவரை சவூதி அரசாங்கம் ஹஜ்ஜை நிறுத்தும்படி எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. என்பதுதான் அர்த்தம்.
இந்த மொழி பெயர்ப்பு சரியா? என்பதை நீங்களும் அரபிக் கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.
யாரும் எந்த ஒரு டிமாண்டிலும் போய் சிக்கிக் கொள்ள வேண்டாம். முன்
பதிவுகளெல்லாம் செய்து மாட்டிக் கொண்டு பிறகு முடியாமல் போக வேண்டாம்
ஹஜ்ஜை நிறுத்தும்படி இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இதுதான் உண்மை
Comments