நீதி மீண்டும் வென்றது ! TMMK

[21/03, 12:33 am] Tmmk பாய்: நீதி மீண்டும் வென்றது !

நெல்லையைச் சேர்ந்த உஸ்மான் கான் என்பவர் கடந்த 26-02-2020 அன்று  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு எண் : WP(MD) NO: 4799/2020. அதில் அவர் தாக்கல் செய்த மனுவின் விபரம் :






நான் (உஸ்மான் கான்) தமுமுக வின் (ஹைதர் அலி தரப்பு) துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறேன். 

(குறிப்பு: சகோ.ஹைதர் அலியே பொதுச் செயலாளர் என்று தன்னை குறிப்பிடக்கூடாது என உயர்நீதிமன்றதம் தடை விதித்துள்ளது. இவர் து.பொ.செயலாளராம் ? மேலும் இவர் ஒரு போதும் தமுமுகவின் தலைமை நிர்வாகியாக இருந்த்தில்லை) 

தமுமுக பொதுச் செயலாளராக இருந்தவருக்கும் (ஹைதர் அலி) , தலைவர்(பேராசிரியர் ஜவாஹிருல்லா) அவர்களுக்கும் தமுமுக தொடர்பாக தாவா இருந்து வருகிறது. அதனால் இருவரும் தனித்தனியாக இயங்கி வருகிறார்கள்.

(குறிப்பு : தமுமுக வின் பொதுச் செயலாளராக தற்போது பேராசிரியர் ஹாஜா கனி உள்ளார்.)  

தமுமுக தலைவர் (ஜவாஹிருல்லா) தமுமுக வில் இருந்து என்னை உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரையும், பொதுச் செயலாளராக இருந்தவரையும் (ஹைதர் அலி) எந்த காரணமும் இல்லாமல் நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.

(குறிப்பு : தன்னை நீக்கியது செல்லாது என சகோ.ஹைதர் அலி தொடர்ந்த வழக்கு மேல்முறையீடு வரை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

அதன் பின்னர் நானும் , எங்களைச் சார்ந்தவர்களும் (ஹைதர் அலி வபையறா) இரத்த தான முகாம், கண் சிகிச்சை முகாம், இலவச ஆம்புலன்ஸ் சேவை, பள்ளிகளுக்கு டேபிள், சேர் வழங்குதல் போன்ற சமூக செயல்பாடுகளில் (தமுமுகவின்  பெயரை பயன்படுத்தி) ஈடுபட்டு வருகிறோம்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  (பேராசிரியர் தலைமையிலான அசல் தமுமுக- வினர்) கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு எங்களுடைய செயல்களை காவல்துறையினர் தடுக்கின்றனர்.

மேலும் நானும்(உஸ்மான் கான்), நீக்கப்பட்ட மற்றவர்களும் (ஹைதர் அலி வகையறா) எப்போதெல்லாம் நிகழ்ச்சிகள் (தமுமுக பெயரைப் பயன்படுத்தி) ஏற்பாடு செய்கிறோமோ அப்போதெல்லாம் (தமுமுக பெயரை பயன்படுத்தி) நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கிறார்கள்.

எனவே நாங்கள் நடத்தும் (தமுமுக பெயரை பயன்படுத்தி) நிகழ்ச்சிகளை போலீசார் தடை செய்யக் கூடாது என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு கடந்த 06-03-2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில்  நீதிபதி G.R.சுவாமிநாதன் அவர்களின் முன்புக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது மேலே சொல்லபட்ட மனுவின் படி மனுதார்(உஸ்மான் கான்) தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். அதைக் கேட்ட நீதிபதி அவர்கள்  எதிர்மனுதார்களிடம் (போலீஸ் தரப்பு அரசு வழக்கறிஞர்) இது பற்றி கேட்ட போது,

நாங்கள் உஸ்மான் கானையோ, ஹைதர் அலி தரப்பு ஆட்களையோ நிகழ்ச்சி நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் இவர்கள் தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அந்த பெயரை பயன்படுத்தி வேண்டுமென்றே பிரச்சினைகளை உருவாக்கும் விதத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறார்கள் என்று கூறினார்கள். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அவர்கள் பின்வருமாறு உத்தரவு பிறப்பித்தார்.

மனுதார் (உஸ்மான் கான்)  தமுமுக பெயரில்  தாங்கள் சமூக செயல்களில் ஈடுபடுவதில்  போலீசார் தலையிடக் கூடாது என பரிகாரம் கேட்டு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் மனுதாரை சுற்றி அரசியல் எதிர்ப்புகள் உள்ளது  தான் போலீசாரின் ஆட்சேபனை என்றும், மனுதார் (உஸ்மான் கான்) இன்னும் தான்  தமுமுக வில் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்த அமைப்பின் தலைவராக ஜவாஹிருல்லா இருக்கிறார் என்றும் உஸ்மான் கானை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டதும் தெரிய வருகிறது.

போலீசாரின் முக்கியமான ஆட்சேபனை என்னவென்றால் தமுமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிற உஸ்மான் கான் தமுமுக பெயரை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்த முயற்சிப்பதால் மட்டுமே நாங்கள் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பேசிய உஸ்மான் கானின் வழக்கறிஞர் மனுதார் (உஸ்மான் கான்) தமுமுக வின் பெயரைப் பயன்படுத்தி எந்தவித சமூக செயல்கள்,நிகழ்ச்சிகளும் நடத்த மாட்டார் என்று தெரிவித்த போது, 

அரசு தரப்பு வழக்கறிஞர் (தமுமுக பெயரை பயன்படுத்த மாட்டார்)  என்றால்  போலீசாருக்கு நிகழ்ச்சி நடத்த எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.

இந்த உத்தரவின் மூலம்  தமுமுக வின் பெயரை பயன்படுத்தாமல் வேண்டுமென்றால் சமூக செயல்களில் ஈடுபடவும், நிகழ்ச்சி நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது .

அல்ஹம்துலில்லாஹ் அப்படியென்றால் தமுமுக வின் பெயரை பயன்படுத்த உஸ்மான் கான் தொடர்ந்த வழக்கின் மூலமே  அவர்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது

--------------------------------------------------------------------------------------------

[21/03, 8:30 am] உஸ்மான் கான் பாய்:: தமுமுக பெயரில் நிகழ்ச்சி நடத்த இடையூறு செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களே நீதிமன்றத்தில் தமுமுக பெயரில் நிகழ்ச்சி நடத்த மாட்டோம் என்று வாக்குமூலம் அளித்த காரணத்தால் நீதிமன்றம் தமுமுக பெயரை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டதாக சிலர் பரப்பி வருகின்றனர்.


   வழக்கில் வாதியாகவோ பிரதிவாதியாகவோ இல்லாதவர்கள் விசாரணை நடந்த அன்றே தீர்ப்பு விபரத்தை அறிவித்த விதத்திலேயே தெரிகிறது என்ன நடந்திருக்கும் என்று.

   இந்த தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்த கோரி அப்பீல் செய்யப்பட்டுள்ளது.நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து வாத பிரதிவாதம் செய்வது சரியாக இருக்காது.

நாம் சொல்ல வருவது இதுதான் இறைவன் எங்களுக்கு நாடியதை நாங்கள் பெற்றே தீருவோம்.


[21/03, 9:59 am] Tmmk பாய்: கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற விதம்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு