Posts

Showing posts from April, 2008

மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்.

Image
மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம். நெல்லை மாவட்டம், ஏர்வாடி மெயின் ரோட்டில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள செலக்ட் சப்பல் தெருவில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இத்தெருவில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் பெண்கள் கடை வீதிக்கு செல்லும்போது இம்மதுபான கடையில் மது அருந்திவிட்டு, குடிகாரர்கள் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகள் கூறுவதோடு அப்பகுதி போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு செய்கின்றனர். இக்கடைய அகற்றக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உரிய நபர்களிடம் பலதரப்பினர் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே, இக்கடையை அகற்றிட வலியுறுத்தி ஏர்வாடி த.மு.மு.க. இக்கடையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏர்வாடி கிளைத் தலைவர் மாஹின் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், வட சென்னை மாவட்ட தலைவர் ஹமீது, நெல்லை மாவட்ட துணை செயலாளர்கள் அன்சர் மற்றும் மீரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சர்வ கட்சி மற்றும் அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர். மதுபானக் கடைக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர

நெல்லை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

Image
செய்தி நெல்லை உஸ்மான். அடிப்படை வசதிகளில் மிகவும் பின் தங்கியுள்ள நெல்லை மாநகராட்சியில் சமீபத்தில் வரலாறு காணாத அளவுக்கு சொத்து வரி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் மிகவும் நலிந்துள்ள நெல்லை மாநகர மக்கள், அதிலும் குறிப்பாக மேலப்பாளையம், பேட்டை வாழ் மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது இவ்வரி உயர்வு. தமிழக முதல்வர் வரி உயர்வு கட்டாயமில்லை என்று அறிவித்துள்ள நிலையிலும் நெல்லை மாநகர நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், பாதாள சாக்கடை திட்டத்தில் வைப்புத் தொகை வசூலிப்பதை உலக வங்கியிலிருந்து கடன் பெற்றுக்கொண்ட பின்பு ரத்து செய்து விடலாம் என இன்றைய மேயரும், பாதாள சாக்கடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது நெல்லை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான மாண்புமிகு A.L.சுப்பிரமணியம் அவர்கள் மாமன்ற கூட்டத்தில் அன்று பேசியுள்ளார். அதனடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத் தொகை வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தியும், பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையீடுகள் செய்யப்பட்டும், நிவாரணம் கிடைக்காததால் 12.04.2008

அரசியலில் த.மு.மு.க.

Image

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மேலப்பாளையம் நகர செயற்குழு கூட்டம் 20.04.2008 ஞாயிறு இரவு 8.30 மணிக்கு நகர த.மு.மு.க.அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாளை s.ரபீக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் I.உஸ்மான் கான் முன்னிலை வகித்தார். நகர தலைவர் K.S.ரசூல் மைதீன், நகர செயலாளர் A.M.மைதீன் பாதுஷா, பொருளாளர் A.காஜா, துணை தலைவர் M.M.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் E.M.அப்துல் காதர் உட்பட அனைத்து வார்டு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. சொத்து வரியை உயர்த்திய நெல்லை மாநகராட்சியை வன்மையாக கண்டிப்பது. 2. தொடர் மின்வெட்டை சரி செய்யாத மின் வாரியத்தை வன்மையாக கண்டிப்பது. 3. விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய அரசை கேட்டுக் கொள்வது. 4. ரேசன் கார்டு பெயர் திருத்தம் செய்யும் நடைமுறையில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் பாளையங்கோட்டை வட்ட வழங்கல் துறையை கண்டிப்பது, மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு சரி செய்ய கோருவது. 5. ஹாமீம்புரம் 12 தெருக்கள், ஞானியரப்பா நகர் 8 தெருக்

பெண்கள் மாநாடு

கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது!. 27.04.2007 ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டம் புவனகிரியில் ராகவேந்தரா திருமண மண்டபம் மற்றும் அதன் சுற்று வளாகத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது. மாநாட்டிற்கு ஐ.டி.ஜே கடலூர் மாவட்ட தலைவர் ஏ.கலிமுல்லாஹ் தலைமை வகித்தார், ஐ.டி.ஜே கடலூர் மாவட்ட பேச்சாளர் மவ்லவி.ராஜ்முஹம்மது மன்பஈ மாநாட்டு அறிமுக உரையாற்றினார். கள்ளகுறிச்சி அல்ஹசனாத் மகளிர் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியை மும்தாஜ் ஆலிமா இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இஸ்லாமிய பெண்கள் கல்வியில் பின்தங்குவது ஏன்? ஏன்ற தலைப்பில் மவ்லவி.எம்.என்.அப்துல்காதிர் நூரி அவர்கள் உரையாற்றினார். ஆலிமா ரம்ஜான் அவர்கள் சினிமா சீரியலால் ஏற்படும் பாதிப்பு என்ற பொருளில் உரையாற்றினார். வேண்டாமே வரதட்சனை என்ற தலைப்பில் ஆலிமா சுமையா உரையாற்றினார். தற்போது உலகலாவிய அளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு தீர்வு என்ன? என்ற பொருளில் மவ்லவி சதகதுல்லாஹ் உம்ரி அவர

த.மு.மு.க.கொடி எரிப்பு

Image
த.மு.மு.க.கொடி எரிப்பு நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகில் அமைந்துள்ளது வாவா நகரம் என்ற சிறிய கிராமம். இங்கு பேருந்து நிலையத்திற்கு எதிரே த.மு.மு.க. உட்பட அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்களும் உள்ளன. 11.04.2008 அன்று அங்கு நடைபெற்ற த.மு.மு.க.பொதுக் கூட்டத்தின்போது கழக கொடி த.மு.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.04.2008 அன்று சில விஷமிகள் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கொடிகளை இறக்கி அரைக் கம்பத்தில் பறக்கவிட்டதோடு த.மு.மு.க.கொடியை இறக்கி தீவைத்து கொளுத்தி இருக்கின்றனர். காலையில் இதைப் பார்த்த நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். செய்தி கேள்விப்பட்டு அருகில் உள்ள அச்சன்புதூர் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து த.மு.மு.கவினர் குவிந்தனர். உடனடியாக அங்கு விரைந்த தென்காசி துணை கண்காணிப்பாளர் திரு.மயில் வாகனன் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என உறுதியளித்தார். வாவா கிளைத் தலைவர் செய்யது மசூது கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. செய்தி நெல்லை உஸ்மான்.

அச்சன்புதூர் ஆர்ப்பாட்டம்.

Image
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது அச்சன்புதூர் கிராமம். இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இடம் ஆகும். இவ்வூரில் ஏறக்குறைய 2500 க்கும் அதிகமான ரேசன் கார்டுகள் இருந்தும் ஒரே ஒரு ரேசன் கடை மட்டுமே இயங்கி வருகிறது. இக்கடையை நடத்துபவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் நியாயமாக மக்களுக்கு சேர வேண்டிய பொருட்கள் கிடைக்காமல் போகிறது. பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. மேலும், இவ்வூரில் ஊராட்சி நிர்வாகம் முற்றிலுமாக நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் தனக்கு கிடைக்க வேண்டிய பங்குத் தொகை கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளதால், எந்த மக்கள் பணியும் நடப்பதே இல்லை. அத்திட்டங்களுக்கான பணம் மட்டும் முறையாக பில்கள் அனுப்பப்பட்டு பணப்பட்டுவாடா அதிகார தரகர்களுக்குள் பங்கு வைக்கப்படுகிறது. இவ்விரு பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி அச்சன்புதூர் த.மு.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு நெல்லை உஸ்மான் கான்.

I.I.T.மாணவனுக்கு த.மு.மு.க. பாராட்டி பரிசளிப்பு.

Image
மேலப்பாளையம் சாயன் தரகன் தெருவைச் சார்ந்த மீரான் மைதீன் அவர்கள் மகன் எம்.யூனுஸ் என்ற மாணவன் I.I.T.GATE EXAM ல் 96 சதவீதம் எடுத்து 330வது ரேங்கில் வந்துள்ளார். இது நமது நெல்லை மாவட்டத்தில் முதல் இடம் ஆகும். சிறப்பான மார்க் எடுத்த மாணவன் I.I.T.யில் சிவில் இன்ஜினியரிங்கில், ஸ்டெக்சுரல் (Structural) பிரிவில் படிக்க இருக்கிறார். மேற்படி மாணவனை மேலப்பாளையம் நகர த.மு.மு.க.சார்பில் பாராட்டி பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவனுக்கு நகர த.மு.மு.க.தலைவர் K.S.ரசூல் மைதீன் பரிசை வழங்கினார். நகர செயலாளர் A.M.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, P.யு.இனாயதுல்லாஹ், காசீம் பிர்தௌசி, ராஹத் காஜா, ஆகியோர் உடனிருந்தனர்.