இன்று வந்த செய்தியும் அன்று வந்த செய்தியும்

[18/03, 8:10 pm] : ஷாகின்பாக் போராட்டங்களை வாபஸ் வாங்க கூட்டமைப்பு வலியுறுத்தியதன் பின்னணி குறித்து ஜுவியில் வெளியான செய்தி.

கூட்டமைப்பின் சார்பில் இதற்கு மறுப்பு அறிவிப்பு வெளியாகலாம்.
இது இன்று வந்த செய்தி
https://mdfazlulilahi.blogspot.com/2020/03/blog-post_18.html
--------------------------------


01-03-2020 தேதி அன்று வந்த செய்தி 

தமிழகத்தில் போராட்டங்களைக் கண்காணிப்பதற்கென ஆறு சிறப்பு அதிகாரிகளையும் டிஜிபி நியமித்துள்ளார்.

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (மார்ச் 11) தொடங்கி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டமன்றம் நடைபெறும் நேரத்தில் சிஏஏ போராட்டம் நடந்தால் அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனக் காவல் துறை கருதுகிறது. இதனால் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவர வழி

காவல் துறை தரப்பிலிருந்து போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. 

சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்ட காவல் துறையின் சிறப்புப் படை அதிகாரிகள் சாதாரண உடையில் பவனி வருகிறார்கள். அதில் இஸ்லாமியர்களும், உருது மற்றும் இந்தி பேசக்கூடிய அதிகாரிகளும் இருக்கிறார்கள். 

இதனால் போராட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சந்தேகம் எழவில்லை. அவர்கள் போராட்டக்காரர்கள் போலவே அமர்ந்து அனைத்தையும் நோட்டமிடுவார்கள்.

போராட்டக் களத்தில் நிதி திரட்டுவதற்காக ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் தங்களால் இயன்ற நிதியை அதில் செலுத்துகிறார்கள். சொற்ப அளவில் சேரும் அந்த பணத்தைக் கொண்டு இவ்வளவு நாட்கள் போராட்டங்களை நடத்த முடியாது. 

ஆகவே, போராட்டம் தொடருவதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வருகிறது, யார் யார் நிதி அளிக்கிறார்கள் போன்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டிவருகிறார்கள்.

போராட்டங்களில் முன்னின்று தீவிரமாக இயங்குபவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போராட்டக் களங்களில் தீவிரமாக இயங்குபவர்களின் பெயர்களைக் குறிப்பெடுத்து மேலிடத்திற்கு அனுப்புகிறார்கள். 

அவர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்து செய்யலாம் என்ற ஆலோசனைகள் நடந்துவருகின்றன. இதுபோன்ற பல வழிகளிலும் போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு