மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

from Muqrin
date Jan 17, 2008 9:20 PM
subject மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?
mailed-by gmail.com

தூய்மையானவன் ஆகிய அல்லாஹ் மறுமை நாள் வரும்போது மனிதனை அவனது வால்போன்ற ஓர் எலும்பிலிருந்து மீண்டும் உயிர்ப்பிர்த்து எழுப்புவான். மக்கள் அனைவரும் வித்துக்களிலிருந்து செடிகள் முளைத்து வருவதைப்போன்று புத்தம் புதிய படைப்பாக எழுந்து வருவார்கள். செருப்பணியாதவர்களாக , ஆடை உடுத்தாதவர்க ளாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக கப்ருகளில் இருந்து வெளிப்பட்டு வருவார்கள். வண்ணத்துப் பூச்சிகள் அல்லது வெட்டுக்கிளிகளின் வேகத்தில் மஹ்ஷர் மைதானத்தை நோக்கி விரைந்தோடுவார்கள். அம்மைதானத்தின் வழியை அவர்கள் தவறவிட மாட்டார்கள். காட்டுப்புறாக்கள் தங்கள் இலக்கை அறிந்திருப்பதை விட அவர்கள் அம்மைதானத்தின் வழியை நன்கறிந்திருப்பர். முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்காகவே பூமி வெடித்துத் திறக்கும். அவர்களே முதன் முதலாக உயிர் கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் நேசராகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுவார்கள். மக்கள் அனைவரையும் பயமும் திகிலும் ஆட்கொண்டிருக்கும். நபிமார்கள் உட்பட அனைவரும் என் ஆத்மாவே! என் ஆத்மாவே! என்று கூறிக்கொண்டிருப்பர். மறுமை பற்றிக் கூறும் அத்தியாயங்களான ' அல்-கமர்', ' அல் மஆரிஜ்', ' அல்-காரிஅ' போன்ற அத்தியாயங்கள் அதன் திடுக்கங்களை உணர்த்துவதாகும்.



நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி மற்றும் முஸ்லிமில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

((إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلاً))



'' நிச்சயமாக நீங்கள் செருப்பு அணியாதவர்களாக, உடை உடுத்தாதவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுகூட்டப்படுவீர்கள்'' தொடர்ந்து அவர்கள்



)) كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُّعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ ((



முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, ( அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம் இதனை செய்வோம். (21:104)

என்ற வசனத்தை ஓதிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள். '' மறுமை நாளில் முதன்முதலில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உடை அணிவிக்கப்படும், மேலும் என் உம்மத்திலிருந்து சிலரை இடப்பக்கமாக இழுத்துச் செல்லப்படும். நான் கூறுவேன், '' அஸ்ஹாபீ அஸ்ஹாபீ'' என் தோழர்கள்!, என் தோழர்கள்! அப்போது ஒருவர் கூறுவார், '' நிச்சயமாக இவர்கள் உமது பிரிவிற்குப் பின்னர் தங்கள் குதிகால்கள் வழியே இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டனர்'' அப்போது நான் நல்லடியாராகிய ஈஸா (நான் அவர்களுடன் ( உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" ( என்றும்); (5:117) நீ அவர்களை வேதனை செய்தால் ( தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்( யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (5:118) என்று கூறியதைப்போன்றே கூறுவேன்.



முக்கியக் குறிப்பு: சிலர் கூறி வருவதைப் போன்று மேற்கண்ட ஹதீஸில் இடப்பக்கமாக இழுத்துச் செல்லப்படுபவர்கள் என்பது சுவனம் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட கண்ணியம் மிக்க நபித்தோழர்களைக் குறிக்காது. மாறாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெயரளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பின்னர் மதம் மாறிவிட்டவர்களைக் குறித்தே அவ்வாறு சொல்லப்படும் என்பதை கவனத்தில் கொள்க.



மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '' திண்ணமாக மறுமை நாளில் மக்களெல்லாம் மறுமையில் மூர்ச்சையாகி விடுவார்கள் மேலும் முதன் முதலில் எனக்கே பூமி திறக்கப்படும்'' ( புகாரி) இன்னும் கூறினார்கள் , ''நானே முதன் முதலில் உணடாவூட்டப்படுவேன் ''



Source: Fatawa Islamiyah
--
அன்புடன்

முக்ரின்

Comments

கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் எப்போது? “இவன் உயிர் வாழ்ந்தால், இவன் முதுமை அடைவதற்கு முன்பே, உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்’ என்று கூறுவார்கள்.” நபி அவர்கள் மறுமை நாளில் உங்களுக்கு சொர்க்கம் (மது + கன்னிப்பெண்) கிடைக்கும் என்று கப்சா விடுகிறார். அதனால் தான் பலர் மறுமை எப்போது வரும், மறுமை நாள் எப்போது வரும், மறுமையில் என்ன கிடைக்கும் என்று கேட்கிறார்கள். அப்போது நபி இந்த சிறுவன் முதுமையடையும் முன்பு, மறுமை நாள் வரும். அந்நேரம் எல்லாருக்கும் மறுமையில், நான் சொல்லியது கிடைத்துவிடும். ஒரு சிறுவன் முதுமையடையும் முன்பு நபிகள் சொன்னப்படி எல்லாருக்கும் வரவேண்டிய மறுமை 1400 வருடம் ஆகியும் வரவில்லை. கடைகளில் நிறைய குல்லா மட்டும் வந்துள்ளது. மறுமை வரும். ஆனா வராது. கற்பனை கனவினில் இஸ்லாம்.
Ng said…
நீங்களும் ஓர் நாள் இறக்கும் நோடி பொழுதில் உண்மை நிலை அடைவீர்கள் அப்போது அகில உலகத்தின் அதிபதி அல்லாஹ் என்று விளங்குவீர்கள்.
Allahvin adimai said…
நபி(ஸல்) அவர்கள் முக்காலமும் அறிந்த நபி அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால் கண்டிப்பாக நடந்திருக்கும் உங்கள் கருத்து தவறானது ஆதாரம் காட்டுங்கள் நபி ஸல் இப்படி கூறினார்கள் என்று என் மார்க்கத்தை தவறாக கூற எந்த மனிதருக்கும் உரிமையில்லை நாவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் தோழரே

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.