Posts

Showing posts from January, 1989
ஸூனன் இப்னுமாஜா. 119, நான் அலியைச் சேர்ந்தவன் அலி என்னைச் சேர்ந்தவர். என் சார்பாக (என் கடன்களை) அலியைத்தவிர வேறெவரும் நிறைவேற்றலாகாது'' என்று நபி (ஸல்) கூறியதாக ஹூப்ஷP இப்னு ஜனாதா (ரலி) அறிவிக்கிறார்கள். குறிப்பு:- திர்மிதீ, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. 120, ''நான் அல்லாஹ்வின் அடிமையாவேன் நான் அல்லாஹ்வின் தூதருக்கு சகோதரனாவேன் நான் மிகப் பெரும் உண்மையாளன் பெரும் பொய்யனைத் தவிர வேறு எவரும் எனக்கும் பின் இவ்வாறு கூறமாட்டார்கள். மற்றவர்கள் தொழுவதற்கு முன்னே ஏழு வயதிலேயே நான் தொழுதிருக்கிறேன்'' என்று அலி (ரலி) கூறினார்கள். குறிப்பு:- ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. 121, முஆவியா (ரலி) அவர்கள் ஒரு ஹஜ்ஜூக்கு வந்தபோது மக்கள் அலி (ரலி) அவர்களைப்பற்றி பேசலானார்கள். முஆவியா (ரலி) அவர்களும் அலி (ரலி) அவர்களை ஏதோ குறை கூறினார்! இதைக் கேட்ட ஸஃது (ரலி) அவர்கள் கோபமுற்று ''அலியே! மூஸாவுக்கு ஹாரூன் அமைந்தது போல் நீ எனக்கு அமைந்திருக்கிறாய்! எனினும் எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது'' எனவும் ''நான் யாருக்கு நேசனாக இருக்கிறேனோ அவர
ஸூனன் நஸயீ பிரயாணத்தின் போது காலுறைகள் மீது மஸஹ் செய்தல். 125, நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிராணயத்தின் போது இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''மக்களே! நீங்கள் செல்லுங்கள்! முகீராவே! நீ நில்!'' என்று கூறினார்கள். நான் தண்ணீர் பாத்திரத்துடன் பின்தங்கினேன். மக்கள் சென்றுவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டு திரும்பிய போது அவர்களுக்கு நான் தண்ணீர் ஊற்றலானேன். கைகள் இருக்கமாக அமைந்த ரூம் (இத்தாலி) நாட்டு சட்டையை அவர்கள் அணிந்திருந்தார்கள். சட்டைக்கையிலிருந்து தன் கையை வெளிப்படுத்த முயன்றார்கள் அது சிரமமாக இருந்தது. சட்டையின் கீழ்புறமாக தன் கையை வெளிப்படுத்தி தமது முகத்தையும், இருகைகளையும் கழுவி, தமது தலைக்கும், காலுறைகளுக்கும் மஸஹ் செய்தார்கள் என முகீரா (ரலி) அறிவிக்கிறார்கள். பிரயாணத்திலிருப்போர் காலுறைகள்மீது மஸஹ் செய்வதற்கு காலவரம்பு! 126, நாங்கள் பயணத்தில் இருக்கும் போது மூன்று இரவு மூன்று பகல்கள் (எங்கள் காலுறைகளை கழற்றாமல்) காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள் என ஸப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி)

ஸல்மான் ருஸ்டிக்கு பதில்.

வேதம் ஓதும் சாத்தான்கள். இலவச இணைப்பு. ராம் ஸ்வர்ப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ''ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல்'' என்று ஹிந்தி மொழியில் இவர் எழுதிய நூல் இந்திய அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கின்றது. இஸ்லாத்தைக் குறைகூறும் வாய்ப்புக்காக காத்துக்கிடந்த இவருக்கு சாலமன் ரஷ்டியின் 'சாத்தானின் வசனங்கள்' என்ற நூல் சர்க்கரையாக அமைந்தது. இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அந்த நூல் எப்படியோ 'ராம் ஸ்வர்ப்' என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. அதை படித்துவிட்டு ''புலமை சான்ற கேள்விகள்'' என்ற தலைப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் 20-11-88, பக்கம் 5-ல் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். தவறான வாதங்கள், பொய்யான செய்திகளை உள்ளடக்கிய இஸ்லாத்தை நோக்கி அவர் எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது நமது கடமை என்பதால் இந்தக் கட்டுரை அவரது கேள்விகளை எடுத்து வைத்து அதற்கு விளக்கம் அளிக்கும் முன்பு 'சாத்தானின் வசனங்களையும், சல்மான் ரஷ்டியையும் பற்றி அவர் தரும் அறிமுகத்தை தந்துவிட்
ஸூனன் திர்மதீ. 60, ''நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர்'' என அனஸ் (ரலி) கூறியபோது ''நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?'' என்று கேட்டேன். ''ஒளூவை முறிக்கின்ற காரியங்கள் எங்களிடம் ஏற்படாதவரை ஒரு ஒளூவின் மூலம் பல தொழுகைகளை நாங்கள் தொழுவோம்'' என்று அனஸ் (ரலி) கூறியதாக அம்ரு இப்னு ஆமிர் அல் அன்ஸாரி அறிவிக்கிறார். இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்ததாகும். ஹூமைத் என்பவர் அனஸ் (ரலி) வாயிலாக அறிவிக்கும் (இதே) ஹதீஸ் ஹஸன் கரீப் என்ற நிலையிலுல்லதாகும் என்று அபூகூறுகிறேன். குறிப்பு:- புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. பாடம் 45, ஒரு ஒளுவில் பல தொழுகைகள் தொழுதல் 61, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர். (மக்கா) வெற்றியின் போது ஒருஒளூவின் மூலம் தங்களின் எல்லாத் தொழுகைகளையும் தொழுதார்கள். அப்போது (கால்களைக்கழுவுவதற்கு பதில்) தங்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ''இதற்குமுன் செய்திராத செயலை செய
தமிழ்நாட்டு மவ்லிதுகள். (நன்றி அல் ஜன்னத் 1989 ஜனவரி) ''மகத்தான இரட்சகரே!'' என்று தன்னுடைய அடிமைகளில் ஒருவரை அல்லாஹ்வே அழைத்துவிட்டான் என்ற நச்சுக் கருத்தைக் கூறுகின்ற பாடல் வரிகளை சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நச்சுக் கருத்துக்கும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமிருக்கவில்லை. இது போன்ற கருத்துக்களைத் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே அந்தப் பெரியார் மறுத்து விட்டுச் சென்றிருக்கிறார். அவர்கள் தன் கையால் எழுதிய ''குன்யதுத் தாலிபீன், அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்புகளாகிய 'புதூஹூல் கைப்' 'அல் பத்ஹூர் ரப்பானி' ஆகிய நூல்களில் இவற்றைப் பரவலாக காணமுடியும். 'இதா ரகன்த இலா கைரிஹி ப கத் அஷ்ரக்த (இறைவன் அல்லாத மற்றவர்கள் மேல் நீ நம்பிக்கை வைத்தால் நீ இணை வைத்துவிட்டாய்) என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது ஃபுதூஹூல் கைப் நூலில் குறிப்பிடுகிறார்கள். ''அலைக பிதக்வல்லாஹீ அஸ்ஸவஜல்ல வலா தகஃப் அஹதன் ஸிவல்லாஹி, வலா தர்ஜீ அஹதன் ஸிவல்லாஹி, வகிலில் ஹவாயிஜ இலல்லாஹி அஸ்ஸவஜல்ல, வலா தக்தமித் இல்லா அலைஹி, வத்லுப்ஹா ஜமீஅன் மின
'முதஷாபிஹாத்' (நன்றி அல் ஜன்னத். 1989 ஜனவரி) முதல் சாராரின் ஏழாவது ஆதாரம். 'முதஷாபிஹ்' வசனங்களுக்குப் பொருள் கூறுவதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்து ஒரே கருத்தைக் கூறமுடியவில்லை. பல் வேறுபட்ட விளக்கங்களை ஒவ்வொருவரும் கூறுகின்றனர். 'முதஷாபிஹ்' வசனங்களில் பொருளை விளங்க முடியும் என்றால் அனைவரும் ஒரே கருத்தைக் கூறியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு ஒரே கருத்தைக் கூறாமல் பலவேறு கருத்துக்களை கூறியிருக்கின்றனர். அறிஞர்கள் இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே 'முதஷாபிஹ்' எவருக்கும் விளங்காது என்பதற்கு மற்றொரு சான்றாகும் என்று முதல் சாரார் வாதிக்கின்றனர். இரண்டாம் சாராரின் மறுப்பு இந்த வாதமும் பொருளற்றதாகும். ஏனெனில் கருத்து வேறுபாடுகள் 'முதஷாபிஹ்' வசனங்களில் மட்டுமல்ல முஹ்கம் என்று முதல் சாராரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வசனங்களிலும் கருத்து வேறுபாடுக்ள உள்ளன. தொழுகை, நோன்பு இன்னபிற சட்டத்திட்டங்களைக் கூறக்கூடிய வசனங்களை முதல் சாராரும் 'முஹ்கம்' வசனங்கள் என்பர். சட்ட திட்டங்கள் பற்றிய அந்த வசனங்களிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மத்ஹபுகள் என்ற பெயரால் ம
மாற்றாரின் பார்வையில் இஸ்லாம். ஆண்களும், பெண்களும் பல்வேறு வகைகளில் வித்தியாசப்படுகிறார்கள் என்பதையும், அந்த வித்தியாசங்களே பலதார மணத்தை ஆண்களுக்கு மட்டும் அனுமதிக்கக் காரணமாகின்றது என்பதையும் கண்டோம். மேலும் சில வித்தியாசங்களை காண்போம். மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம் என்றாலும், மனிதர்களிலேயே சிலர் சில காரணங்களால் அதிகப்படியான உரிமைகளைப் பெறுவதை உலகில் காண்கிறோம். அதை உலகமும் மாற்றார் உட்பட ஏற்றுக்கொள்வதையும் காண்கிறோம். ஒரு தந்தையும், மகனும் என்ற முறையில்-ஆண் என்ற முறையில் சமமானவர்களே. ஆனாலும் தன்னுடைய உழைப்பை-செல்வத்தை மகனது நலத்திற்காக தியாகம் செய்தவன் என்ற முறையில் தந்தை கொஞ்சம் அதிகப்படியான உரிமையை எடுத்துக் கொள்வதை உலகம் ஏற்றுக் கொள்கிறது. இதனால் சமத்துவம் செத்துவிட்டதாக எவரும் கூறுவதில்லை. இதேபோல் குடும்ப வாழ்வில் கணவன், மனைவி இருவரில் கணவன் அதிக அளவில் கடமை பட்டிருக்கிறான். தனது மனைவியின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பையும் அவன் சுமக்கிறான். அவன்தான் சுமக்க வேண்டுமென இஸ்லாமும் அவனை நிர்பந்திக்கின்றது. ''தங்களின் பொருளாதாரத்தைச் செலவு செய்கிறார்க
குறுக்கு விசாரனை ஃ குனூத்தை ருகூவுக்கு முன் ஓதியதாக உபை இப்னு கஃபு (ரலி) அறிவிக்கும் ஹதீஸை எழுதியிருந்தீர்கள்! அந்த ஹதீஸில் 'வித்ரு' தொழுகை என்று கூறப்படவில்லையே! ''நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழும்போது ருகூவுக்குமுன் குனூத் ஓதுபவர்களாக இருந்தனர்' என்று அந்த ஹதீஸ் தெளிவாக வித்ருபற்றிக் குறிப்பிடுகின்றது. நாம் தான் வித்ரு தொழும்போது என்று ஹதீஸின் மூலத்தில் உள்ள வார்த்தையை விட்டிருக்கிறோம். ஃ ''முஸாபஹா'' இரண்டு கைகளில்தான் செய்ய வேண்டுமென்று ஹதீஸ் ஆதாரத்துடன் யூசுப் அன்ஸாரி மவ்லவி அவர்கள் எழுதி இருக்கிறார்களே! ஒருகையில்தான் முஸாபஹா என்று நீங்கள் கூறி வருவதன் காரணம் என்ன? முஸாபஹா பற்றி வருகின்ற எல்லா ஹதீஸ்களிலும் 'ஒரு கை' வார்த்தையே இடம் பெற்றுள்ளது. 'இருகைகள்' என்ற வார்த்தை 'முஸாபஹா' பற்றி ஹதீஸ்களில் அறவே இல்லை. இரு கைகளால் 'முஸாபஹா' செய்வதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸை நீங்கள் கவனியுங்கள்! அதில் ''நபி (ஸல்) எனக்கு அத்தஹிய்யாத் கற்றுத்தரும் போது தன்னுடைய இரு கைகளால் என்னுடைய ஒரு கையைப்பிடித்துக் கொண்டார்கள்&
இன்பத் தமிழில் இஸ்லாமியத் தொண்டு! (ஓரிறைக் கொள்கையை எடுத்துச் செல்வோர் இன்று ஓரம் கட்டப்படுகின்றனர். இத்தனை காலமாக முன்னோர்களுக்குத் தெரியாதது இன்று உங்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது? என வியக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் எல்லாக்காலங்களிலும் உண்மையைச் சொல்பவர்கள் இருந்தே வந்திருக்கின்றனர். இதற்குச் சான்றாக 1944ல் கவிஞர் கா. அப்துல் கபூர் அவர்கள் முஸ்லிம் நண்பன் நினைவு மலர் என்ற நூலில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி.) நமது எழுத்துத் திறனை எடுத்துக் கொள்வோம். திருமுடியிறக்கிய ஹதீது, நஸீஹத்து நாமா, ஸைத்தூன் கிஸ்ஸா, ராஜ மணிமாலை, மிஃராஜ் மாலை, ஐந்து படைப்போர், காசிம் படைப்போர்- இவைகள்தான். தமிழிலே இஸ்லாமியத் தொண்டு புரிய முன்வந்த நமது முன்னோர்களது முயற்சியின் முழுப்பயன்! இன்பத் தமிழின் இலக்கண இலக்கியங்களை இரக்கமின்றி கொலை செய்து, இணையற்ற இஸ்லாத்தின் இனிமைக்கு இடுக்கண் கொடுக்கும் இத்தகைய நூல்களை அச்சியேற்றி வெளியிடுவதற்கு பதிப்பகங்களும் முன்வந்து விடுகின்றன. வெட்கம் வெட்கம்! அப்புத்தகங்களில் புதைந்துள்ள புளுகும் புரட்டும் புனித இஸ்லாத்தை புண்படுத்துவதையும் அறிவை அசட்டை செய்வதையும் இதோ
உங்கள் பொன்னான வாக்குகள்! இதோ வரப்போகிறது அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுபர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது! எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்! யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் இஸ்லாத்திற்கு முரணான போக்குகள். இனி ''போவோம் குணங்குடிக்கெல்லோரும்.'' அதற்கு முன்பாகத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் சில உள்ளன. இஸ்லாமிய இலக்கியப் புலவர்கள் என்று சொன்னதுமே உமறுப் புலவரும் குணங்குடி மஸ்தானும் தாம் பலராலும் நினைக்கப்படுகின்றனர் உமறுப்புலவர் காப்பியம் பாடியவர். குணங்குடி மஸ்தான் மெஞ்ஞானக் கவிஞர் எனப் பலராலும் போற்றப்படுபவர். உமறுப்புலவரும் சரி, குணங்குடி மஸ்தானும் சரி, பிற முஸ்லிம் தமிழ்ப் புலவர்களும் சரி, இவர்களுடைய பாடல்கள் எல்லாமே முரணானவை என ஒரேயடியாகக் கண்ணை மூடிக்கொண்டு தூற்றித் தள்ளிவிடுவது நமது நோக்கமன்று. இவர்களுடைய பாடல் தொகுப்புக்களில் பல நல்ல கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு வேட்டு வைக்கின்ற பல சமூக விதோரச் சங்கதிகளும் அடங்கிக் கிடக்கின்றன. இவர்களுடைய பாடல்களின் சிறப்பம்சங்களைப்பற்றி நாம் பல மேடைகளில் பேசியும் பல 'வால்யூம்'களில் எழுதியும் வந்துள்ளோம். நாளடைவில் இக்கவிஞர்களை நாதாக்கள், வலியுல்லாக்கய் எனப்போற்றிப் புகழ்ந்து இவர்களுக்கு உரூஸ்களும் நம்மில் பலர் கொண்டாடி வரு

ஒரு தவறும் செய்யாதவர்களே இமாமாக இருக்கவேண்டுமா?

இமாமத் செய்பவருக்குரிய தகுதிகள் யாவை? கேள்வி ... பதில் கேள்வி. 1. இறைவனுக்குச் சமமாக பிறரை அழைக்கின்ற இமாமைப் பின்பற்றி தொழலாமா? 2. சமாதிகளுக்கு நேர்ச்சை செய்வோரிடம் மாடு, சேவல், தங்கம், வெள்ளி சாமான்களைக் காணிக்கையாகப் பெறுகின்ற இமாமைப் பின்பற்றித் தொழலாமா? 3.ஷிர்க்ர்க், பித்அத் ஆகியவற்றில் ஈடுபடும் இமாமை பின்பற்றித் தொழலாம? 4. தாடி இல்லாத இமாமைப் பின்பற்றித் தொழலாமா? 5. பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா? 6. 20 ரக்அத் இமாமைப் பின்பற்றி எட்டு ரக்அத்கள் தொழலாமா? 7. பித்அத் இமாமைப் பின்பற்றித் தொழலாமா? 8. சம்பளம் வாங்கிக் கொண்டு தொழவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா? 9. வழிகெட்ட ஆலிம்களைப் பின்பற்றித் தொழ மனம் இடம் கொடுக்காத நிலையில் வீட்டில் தொழலாமா? 10. பெண்கள் இமாமாகத் தொழ வைக்கலாமா? அவர்களுக்கு ஜமாத் தொழுகை உண்டா? 11. கயிறு மந்திரித்தல், தாயத் கட்டுதல், மவ்லீது ஓததல்போன்ற வேலையில் ஈடுபடும் இமாமைப் பின்பற்றித் தொழ அனுமதி உண்டா? 12. தாயத் கட்டியுள்ள இமாமைப் பின்பற்றித் தொழலாமா? 13. கப்ரிலேயே காலத்தை ஓட்டும் இமாமைப் பின்பற்றித் தொழ அனுமதி உண்டா? 14. புகை பிடிக்கும் இமாமைப் பின்பற்ற