பத்து லட்ச ரூபாய் அபராதம் சிறை தண்டனை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு
பாமரனும் கேட்கிறான் உங்கள் வலிமைகளெல்லாம் என்னவாயிற்று?
வானளாவிய மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் மக்களையும் மிகச்சிறிய அணு மூலம் அழித்த வல்லரசுகளால் மக்களை வாழ வைக்கத் தெரியவில்லையே.
இனி மேலாவது படைத்தவனிடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுவீர்களா?
1994ல் பிளேக் நோய் இந்தியாவின் சூரத் நகரை மட்டும் தான் புரட்டிப் போட்டது. அப்பொழுது ஒட்டு மொத்த இந்தியாவையும் உலக நாடுகள் உடனடியாகத் தனிமைப்படுத்தின.
பயணிகள் விமானங்கள் மட்டுமல்ல சரக்கு விமானங்கள் கப்பல்கள் என அனைத்து போக்கு வரத்தையும் நிறுத்தினார்கள். புதிய விஸா வந்தும் போக முடியாதவர்கள். பழைய விஸா இருந்தும் திரும்ப போக முடியாதவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.
அதில் மேலப்பாளையம் மக்களும் உண்டு. நிவாரணங்கள் செய்ய JAQH சார்பாக வை.கோ மூலம் மனு கொடுத்து மத்திய அரசை வலியுறுத்தினோம்.

பாபரி மஸ்ஜிதை இடிக்க துணை நின்ற நாசமாகப் போன நரசிம்மராவ் தலைமையிலான அன்றைய காங்ரஸ் அரசு எந்த நிவாரணமும் செய்யவில்லை.
சூரத்தில் மட்டும் ஏற்பட்ட பிளேக்கை ஒட்டி, ஏக காலத்தில் உடனடியாக ஒட்டு மொத்த இந்தியாவையும் தனிமைப்படுத்திய உலக நாடுகள் கொரானா விஷயத்தில் உறங்கி விட்டன.
சூரத்தில் மட்டும் ஏற்பட்ட பிளேக்கை ஒட்டி, ஏக காலத்தில் உடனடியாக ஒட்டு மொத்த இந்தியாவையும் தனிமைப்படுத்திய உலக நாடுகள் கொரானா விஷயத்தில் உறங்கி விட்டன.
ஒரு காலத்தில் நாம் கேள்விபட்ட செய்திகள். அமெரிக்காவில் பெருவெள்ளம் பேரழிவு. ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ ஏற்பட்டு அந்த மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். பலஸ்தீனத்தில் அரசு பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள். சிரியாவில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் அனைவரும் கொல்பலப்படுகிறார்கள். குவாண்டாவில் மணல் காற்று வீசுகிறது. இப்படி யான துன்பங்ளை செய்திகளாகக் கேள்விப்பட்டோம்.
இந்தியாவைப் பற்றி வெளிநாட்டவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள், இந்திய குடி மக்களை இந்திய அரசு குடியுரிமைக்கு தகுதியற்றவர்களாக ஆக்கப் பார்க்கிறது. குடி மக்கள் மீது இந்திய அரசு CAA, NRIC,NPR பெயரால் மிகப் பெரிய பேராபத்தை ஏற்படுத்தி விட்டது என்று பேசிக் கொண்டார்கள், இப்படியாக ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் அதை ஒட்டிய துன்பங்களும்.
எங்கோ? என்றோ நடந்ததாகப் பேசப்பட்ட பேதி, பீதி , பேராபத்துகள் எல்லாம் கொரோனா என்ற ஒற்றை வார்த்தையில் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இளவரசர் சார்லஸ் உட்பட நாடுகளை ஆண்டவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள், ஆளப்படுபவர்கள் என பாகுபாடின்றி மரண பயத்தில் உள்ளார்கள். கொரோனா முன் சரண் அடைந்து மண்டியிட்டு தாழ்பணிந்து கிடக்கிறார்கள்.
ஆயுதங்கள் என்ன? மலைபோல் பொருளாதார குவியல்கள், விண்ணை முட்டிய தொழில் நுட்பங்கள். மனிதவளம, படைபலம் எண்ணெய் வளம் என உலக நாடுகள் பல்வேறு வகைகளில் தங்களை வலிமைமிக்கவர்களாக காண்பித்து வந்தார்கள். ஒரு நாட்டை மற்றொரு நாடு அச்சுறுத்தி அசத்தி வந்தது. அடக்கி வைத்துக் கொள்ள விரும்பியது.
அதிகாரம் செலுத்தி அடக்குமுறை செய்தது. அநியாயமும் செய்தது. ஆனால் இன்று கண்ணுக்கே தெரியாத கிருமியைக் கண்டு அலறித் துடிக்கிறது. எதிர்த்து நிற்க வழியின்றி அழுது கொண்டிருக்கிறது. பாமரனு கேட்கிறான் உங்கள் வலிமையெல்லாம் என்னாயிற்று?
உலக வல்லரசுகள், சுத்தத்தில் முதல் இடம் பெற்ற நாடுகள் என்று பெயர் பெற்ற நாடுகள் எல்லாம் கொரோனா பேராபத்தைக் கண்டு மரண பீதியில் உள்ளார்கள்.
அணு ஆயுதங்களை எல்லாம் தயாரித்து வல்லரசுகள் என்று மார் தட்டிக் கொண்ட அத்தனை அரசுகளும் விழி பிதுங்கி நிற்கின்றன. தன்னை எதிர்த்த நாடுகளையும் நாட்டு மக்களையும் அழிப்பதற்கு அணு ஆயுதங்களை எல்லாம் தயாரித்த வல்லரசுகளால் மக்களை வாழ வைக்கத் தெரியவில்லை.

உலக சுகாதார மையங்கள் ஆலோசனைகளை ஏற்று உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மீறினால் ஐம்பதாயிரம் திர்ஹங்கள், (இந்திய ரூபாய் பத்து லட்சம்) பத்தாயிரம் டாலர்கள், அபராதம். 6 மாதங்கள் சிறை தண்டனை. பின்னர் நாடு கடத்தப்படுவார்கள் என்று சட்டங்கள் போட்டுள்ளன. மீறுபவர்களை மேலை நாடுகள் துப்பாக்கி முனையில் பிடித்துச் செல்கிறார்கள்.
இவ்வளவு மரண பீதியிலும். உலகளாவிய இந்தப் பிரச்சனையை ஓட்டுப் பொறுக்கிகள் நாங்கள் ஆட்சியில் இருந்தால் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்க மாட்டோம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
இந்த ஏமாற்று வேலைகள் பீலாக்கள் எல்லாம் பரம்பரை மன்னர்களாக அரசர்களாக இருந்து ஆளும் நாடுகளில் இல்லை. ஓட்டுப் பொறுக்கிகள் உள்ள எல்லா நாடுகளிலும். பங்களா தேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம்கள் ஆளும் நாடுகளிலும் உள்ளது.
"உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால்
அல்லது யுகமுடிவு நேரம்1 வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைப்பீர்கள்? நீங்கள்
உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!'' என்று கேட்பீராக! 6:40.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில்
பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை
சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.
இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ்
இழிவுபடுத்தாத நாளில் 1 அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும்.
"எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக!
நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவர். 66:8. அறிவுள்ள மக்களுக்கு இந்த இரண்டு வசனங்கள் போதும்.
நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு
அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் தாம் 35:28.
Comments