Posts

Showing posts from 2016

மத்ரஸா ரய்யானில் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆவும் ஆரம்பமானது

Image
இறை இல்லக் கொடையாளர்களே! வாரி வழங்கிடுவீர். வல்லான் அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றிடுவீர். நீண்ட நெடிய முயற்சிக்கு பிறகு 11-12-2016 ஞாயிறு சு புஹு முதல் ஐவேளை தொழுகை ஆரம்பமானது. 16-12-2016 முதல் ஜும்ஆவும் தொடங்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ் அந்த பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக ஆகிவிட்டது. 

16.12.16 முதல் ஜும்ஆ தொழுகை துவங்கும் மத்ரஸா ரையான் க்கு வாழ்த்துக்கள்.

Image
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு , அல்லாஹ்வை நினைப்பதற்கு (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள். நீங்கள் அறி வுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நல்லது  (அல்குர்ஆன் 62:9) இன்று முதல்  ஜும்ஆ தொழுகை துவங்கும்  மத்ரஸா ரையான் முதல் நாள் ஜும்ஆ உரை மவுலவி J.S. ரிபாஈ பாஸி, ரஷாதி தலைவர்   மதரஸா ரையான் ” ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (

இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் உருவானதுதான் இந்திய சிவில் சட்டம்.

Image
இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) -அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அல்லது அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. மொழி பெயர்ப்பை எப்படி வைத்துக் கொண்டாலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல இந்த ஆயத்து.  நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு. இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம்.  இந்த கருத்துடையவர்கள் அடுத்து வைக்கும் வாதம். யார் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் இறைவனை

ஒஜீர்களும் ராம்குமார்களும் நமது வரலாற்றில் உண்டா?

Image
இப்பொழுது சொல்லுங்கள் முஸ்லிம்கள் நடத்தியது போர்களா ?  போராட்டங்களா ?   திருடினால் கையை வெட்டுங்கள் என்கிறது அல் குர்ஆன் . இஸ்லாமிய சட்டம் இருக்கும் பகுதியில் நாம் இருக்கிறோம் . அங்கு ஒருவன் நமது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருடி விட்டான் . போலீஸும் அவனை பிடித்து விட்டது . என்ன நடக்கும் ? உடனே கையை வெட்டு என தண்டனை கொடுத்து விடுவார்களா ? அப்படி செய்ய மாட்டார்கள் . தண்டனை கொடுக்கும் முன். நம் முன்னே நிறுத்துவார்கள் . அப்பொழுது நாம் கேட்போம் . ஏன் திருடினாய் ? என்று . சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது . வேறு வழியே இல்லை . வயிற்றுப் பசிக்காக திருடினேன் என்றால் முஸ்லிம்களாகிய நாம் என்ன சொல்வோம் ? விட்டு விடுங்கள் என்போம் . காரணம் ? இதுதான் முஸ்லிம்களின் பண்பு . திருடுவதையே தொழிலாக பண்ணிக் கொண்டு இருக்கிறான் . போராட்டம் என்ற பெயரால் பிரியாணி அண்டாக்களை திருடினான் என்றால் என்ன சொல்வோம்? அவன் கையை வெட்டுங்கள் என்போம் . போலீஸுக்கோ , நீதிபதிக்கோ அவன் யார் என்பது தெரியவும் செய்யலாம் . தெரியாமலும் இருக்கலாம் . அவன் ஏன் அந்த செயலை செய்தான் என்பதும் யாருக்கும் தெரியாது . பாதிக

கராச்சி ரெஸ்ட்ராரண்ட்களின் அதிபர் பாரூக் பாய் மரணம்

Image
கராச்சி   ரெஸ்ட்ராரண்ட்க ளின் அதிபர்  முஹம்மது  பாரூக்   மரணம் அடைந்தார்கள் . இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . மேலப்பாளையம் ஆலப்பிள்ளைத் தெரு பூர்வீகம் . பிறகு கோவையில் குடியேறினார் . சித்துாரில் உள்ள தமிழ் பெண்ணை திருமணம் செய்தார் . பிறகு பாகிஸ்தானில் செட்டில் ஆனார் . அவரது உறவினர் ஒருவர் சமீபம் வரை மேலப்பாளையம் அத்தியடி தெரு முனையில் மளிகைக் கடை வைத்து இருந்தார் . துபை யூசுப் பாக்கர் ரோட்டில் ஷஹரே ( சிட்டி ) கராச்சி   என்ற பெயரில்  1973இல்  முதல்   ரெஸ்ட்ராரண்ட்   துவங்கினார் . அவரது உறவினர் பலருக்கு ஷஹரே கராச்சி , சிட்டி கராச்சி என்ற பெயர்களில்   ரெஸ்ட்ராரண்ட்கள்   துவங்கிக் கொடுத்தார் . பிறகு ஒன்றன் பின் ஒன்றாக கராச்சி தர்பார் என்ற பெயரில் துபை , ஷார்ஜா என பல இடங்களில் 30  ரெஸ்ட்ராரண்ட்கள்   வரை துவங்கினார் . அவரது   ரெஸ்ட்ராரண்ட்களில்   வேலை செய்தவர்களில் 100 க்கும் மேற்பட்ட மேலப்பாளைத்தவர்கள் ஊரில் செட்டில் ஆகி இருக்கிறார்கள் . இப்பொழுதும் மேலப்பாளைத்தவர்கள் பலர் வேலை செய்து கொண்டு இருக்கிற