ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது சட்டம் இறங்கியது .
தகவல் அறிந்த தலைவர் கோவை புறப்பட்டார். ஜனாஸா நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பொதுச் செயலாளர் பறந்தார். MLAக்கள் வந்தனர் கோவை மத்திய சிறையில் இறந்த நிலையில் சிறை அதிகாரிகளால் காணப்பட்டுள்ளார். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் உட்பட கோவையில் உள்ள அனைத்து இயக்க சகோதரர்களும் மருத்துவமனையில் குழுமி இருக்கிறார்கள். http://mdfazlulilahi.blogspot.ae/2018/03/blog-post_86.html
தமிழக அரசே 44 பேரில் நான்கு பேரை மரணம் தான் விடுதலை செய்துள்ளது இது குறித்து தமிழக முதலமைச்சர் பதில் சொல்லி ஆக வேண்டும் மரணம் அவர்களை விடுதலை செய்யும் முன்பு மீதி 40 பேரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் அல்லது உங்களுக்கு எதிராக மிக பெரிய போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை !!
1997 இல் ஜிஹாத் கமிட்டியின் தலைவராக இருந்த குணங்குடி
அனீபா அவர்கள் நாகூர் ஜாக் இமாம் முஸ்தபா ரஸாதி உடலை வாங்கி இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முன்வந்தார். அப்போது கோர்ட்டில் ஸ்டே வாங்க காரணமாக இருந்தவன் யார்? ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றிய சட்டங்கள் தெரியாத காபிரா?
மதம் சார்ந்த வழக்கில் உள்ளவர்களை வயது மூப்பின் அடிப்படையிலோ கருணை அடிப்படையிலோவிடுதலை செய்யக் கூடாது என்ற சட்டத்தை இனியாவது திருத்த முயற்சி செய்யுங்கள். அதுதான் தீர்வு. முஸ்லிம்களுக்கு விரோதமான இந்த சட்டத்தை போட மூல காரணமாக இருந்த சண்டாளன் யார்? என்பதை எழுதினால் பிரச்சனை தீராது. அவன் மீதும் அவனைச் சார்ந்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.
இன்னுமா உறக்கம்? எழுதியவன் விஷயத்தில் இன்னுமா உறக்கம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
#கோவை_சிறைவாசி_ரிஸ்வான்_மரணம்*
கோவையில் சிறையில் இருந்த ரிஸ்வான் அவர்கள் நேற்று காலை மரணம் அடைந்தார். மருத்துவ பிரேத பரிசோதனைக்கு பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும், சட்டத்துறை அமைச்சரும் சிறைவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வாக்குறுதி அளித்த பின் தான் உடலை பெற்று அடக்கம் செய்வோம் என்று கோவை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.!!
இந்நிலையில்,
1. சிறை மேனுவலில் உள்ளபடி 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளுக்கு வழங்கபடும் வழிகாவல் இல்லாத பரோல்களை சாதி, மத பேதம் இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை மாவட்ட சிறை நிர்வாகம் செயல் படுத்த வேண்டும்.
2. ஆயுள் தண்டைனை முடிவுற்றவர்களை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
3. சிறைக்குள் நிரந்தர மருத்துவர் நியமிக்க வேண்டும் மற்றும் கைதிகள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
4. சிறையில் இறந்த ரிஸ்வான் பாஷா மனைவிக்கு அரசு வேலை வழங்குவதோடு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
5. சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் அனைத்து இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் .
6. சிறை மரணங்கள் குறித்து முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும்.
உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.!! அல்லாஹ் அக்பர்""
கோவை ரிஸ்வான் பாஷா மரணம் இனி ஒரு சிறை மரணம் நிகழாமல் இருக்க
2004 ம் ஆண்டு தஸ்தகீர் பாய் 65 வயதில் சிறையில் மரணமடைந்தார்.....
2008ம் ஆண்டு
சபூர்ரஹ்மான்.....
40வது வயதில் 11 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து
மரணமடைந்தார்.....
2016 ம் ஆண்டு
அப்துல் ஒஜீர்
48வது வயதில்
19 ஆண்டு சிறைவாச நிலைக்கு பின்பு மரணமடைந்தார்.....
அரசு தரும் விடுதலை....
சிறை கைதிகளை எட்டும் முன் மரணம் அவர்களை அழைத்துக்கொள்கிறது....
தமிழக முஸ்லிம் சிறைவாசிகள்
Comments