சிரியா பிளைட்டை கிரிஸ் ஓட்டியதாக பரப்பியவர்களுக்கு கிரிஸ் பதிலடி.
சிரியாவுக்காக நோன்பு வைக்கலாமா? கூடாதா? குனுாத் நாஸிலா ஓதலாமா? ஓதக் கூடாதா? இப்படியான கருத்து வேறுபாட்டால் ஆலிம் பெருமக்களுக்குள் வாதப் பிரதி வாதங்கள் நடந்து வருகின்றன. K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி போன்றவர்கள் கூடாது என்கிறார்கள். இது சில ஆலிம்களுக்குள் கருத்து மோதல்கள் என்ற நிலையைத் தாண்டிய மோதல்களையும் ஏற்படுத்தியுள்ளது. மோதல்கள் என்பது எல்லைக்கு உட்பட்ட அழகிய வாதங்களாக இருக்க வேண்டும். நோன்பு, குனுாத் என்பவைகள் இருக்கின்றன. இருக்கும் இந்த விஷயத்தில் இதற்காக கூடுமா கூடாதா? என்பது அறிவு சார்ந்தது. ஆய்வுகள் சம்பந்தப்பட்டது. அறிவு உள்ள இடத்தில் ஆய்வுகளால் கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அதை குறை கூற முடியாது. குறை கூறவும் மாட்டோம்.
இல்லாததை இருப்பதாகக் காட்டும் போதுதான் அதை சுட்டிக் காட்டும் கடமை இருக்கின்றது. அதில் ஒன்று ஏவுகணைகளையெல்லாம் ஏமாற்றி விட்டு சிரியாவுக்குள் தரை இறங்கிய தமிழன் கெத்துடா. அகதிகளை மீட்டுச் சென்ற ஈழத்து விமானி கிரிஸ் என்பது. இப்படி பரப்பியவர்களுக்கு கிரிஸ் எப்படி பதிலடி கொடுத்துள்ளார் பாருங்கள்.
அடுத்து கனடா பிரதமர் சிரியா அகதிகளான
முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு போய் அடைக்கலம் கொடுத்துள்ளார் என்ற வீடியோ. இந்த
வீடியோவைப் பார்த்த நண்பர்களில் அபுதாபியில் உள்ள மேலப்பாளையம் பஷீரப்பா தெரு ரசூல் அவர்கள்
அவரது சந்தேகங்களை சொல்லி விட்டு இது பற்றி உண்மைகளை எழுதுங்கள் என்றார்.
உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளவர்களிடம் உண்மைகளை சொல்ல முடியாது. உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளவர்களிடம் உண்மைகள் எடுபடவும் செய்யாது. பொறுங்கள் எழுதுவோம் என்று சொல்லி விட்டு உண்மை நிலை என்ன என்ற சிறிய விபரங்கள் சொன்னேன்.
உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளவர்களிடம் உண்மைகளை சொல்ல முடியாது. உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளவர்களிடம் உண்மைகள் எடுபடவும் செய்யாது. பொறுங்கள் எழுதுவோம் என்று சொல்லி விட்டு உண்மை நிலை என்ன என்ற சிறிய விபரங்கள் சொன்னேன்.
இப்பொழுது வெளியான எதுவுமே இப்பொழுது
நடக்கவில்லை. கிரிஸ் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார் என்பது பொய். இது பற்றி கிறிஸ் அவர்கள் தனது பேஸ்புக்கில் கூறி உள்ளதை இணைப்பு பைலில் காணவும். 2015 ஆண்டு சிரியாவில் யுத்தம் கடுமையாக
நடந்தது. இதில் கனடாவும் பங்கு கொண்டது. கனடா விமானப் படை ராணுவமும் சேர்ந்துதான் சிரியாவை
தாக்கியது.
அந்த யுத்தத்தில் ஒரு பகுதியினர்
லெபனானுக்கு பாதுகாப்பாக கொண்டு போகப்பட்டார்கள். அவர்கள் யார்? யூதர்கள், கிறிஸ்தவர்கள். இவர்களில் யூதர்கள் கனடா செல்ல கனடாவில் உள்ள ஜெவிஸ்
ஆர்க்கனேசேஷன்
என்ற யூதர்களுடைய
அமைப்பு ஸ்பான்சர் செய்தது.
கிறிஸ்தவர்களுக்கு கனடாவில் உள்ள சர்ச்சுகள்
மூலம் ஸ்பான்சர் செய்தார்கள். இது போக சவூதி 1700 பேர், எகிப்து 1500, துருக்கி 2000 பேர் என ஸ்பான்சர்
செய்தது.
அதை ஒட்டி லெபனானிலிருந்து 163 பேர் கொண்ட முதலாவதான ஒரு குழுவை கனடா ராணுவத்தின் விமானப்படை விமானம் மூலம்
அழைத்துச் சென்றார்கள். அந்த ராணுவ விமானத்தின் கேப்டன்களாக லுக்காஸ்
சேவர், மார்க் ராய் இருந்தார்கள்.
அடுத்தடுத்து சென்றவர்கள் லெபனானிலிருந்தும்
துருக்கியிலிருந்தும் பாஸஞ்சர் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டார்கள்.
இந்த விமானம் டமாஸ்கஸ்ஸுக்கு உள்ளேயும்
போகவில்லை. சிரியாவுக்குள்ளும் வரவில்லை. லெபனானில்
உள்ள பெய்ரூட் ஏர்போர்ட்டுக்குத்தான் சென்றது. அங்கிருந்துதான்
ஏற்றிச் சென்றார்கள்.
அகதிகள் என்று சொந்த நாட்டை விட்டு அந்நிய
நாட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கே சொல்லப்படும். சொந்த நாட்டிலிருந்து விமானம் ஏறுபவன் இன்ன நாட்டுக்காரன் என்றுதான் சொல்லப்படுவார்களே தவிர அகதிகள் என்று சொல்லப்பட மாட்டார்கள். சிரியா
அகதிகள் சிரியாவிலிருந்து புறப்பட்டார்கள் என்பதே முரண்பாடாகும்.
ஒரு நாட்டுக்குள் புகுந்து பாஸ்போர்ட்
பேப்பர் ஆதாரங்கள் இல்லாமல். கொண்டு போக முடியுமா? ஒரு கார் கம்பெனி டிரைவர் இன்னொரு கார் கம்பெனி காரையே ஓட்டிச் செல்ல முடியாது. 1008
பார்மாலிடி இருக்கும். விமானம் என்ன சாதாரணமானதா?
2015ல் இருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது. இவர்கள்
அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட யூதர்களும் கிறிஸ்தவர்களும்தான். அதுவும் எந்த முறையில்?
ஒரு ஆளுக்கு (40,800) நாற்பதாயிரத்து எட்டு நுாறு கனடா டாலர் ஸ்பான்சர்ஷிப் என்ற முறையில். இப்படி ஸ்பான்சர் முறையில் அடைக்கலம் கொடுக்கப்பட்டதை எப்படி மனிதாபிமானம் என்று பரப்புகிறார்களோ தெரியவில்லை. அப்பொழுதும் கனடா பிரதமர் வரவேற்றார் என்பதும் தவறான தகவலே.
ஒரு ஆளுக்கு (40,800) நாற்பதாயிரத்து எட்டு நுாறு கனடா டாலர் ஸ்பான்சர்ஷிப் என்ற முறையில். இப்படி ஸ்பான்சர் முறையில் அடைக்கலம் கொடுக்கப்பட்டதை எப்படி மனிதாபிமானம் என்று பரப்புகிறார்களோ தெரியவில்லை. அப்பொழுதும் கனடா பிரதமர் வரவேற்றார் என்பதும் தவறான தகவலே.
கனடாவும் அந்த போரில் பெரும் பங்காற்றியது. சிரியா போராளிகள் அடித்த
அடிதாங்க முடியாமல் ஓடியதுதான் கனடா ராணுவம். கனடா அடிதாங்க முடியாமல்
விலகி இருக்கிறது என்பதுதான் உண்மை.
கனடா பிரதமர் வரவேற்றார் அதுவும் முஸ்லிம்களை என்கிறார்கள் வீடியோவில் அல்லக்கைகளை
காட்டிக் கொண்டு உள்ள பெண்களைப் பார்த்தாலே அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று சாதாரணமாக
தெரிந்து கொள்ளலாம்.
நேற்று (5.3.18) ஷார்ஜா சென்ற இடத்தில் அல்ஸபீர் ரெஸ்ட்ராரண்ட் சென்றேன். ஓனர் சிரியா. கடையில்
உள்ளவர்களில் தமிழக தவ்ஹீது அமைப்பில் ஈடுபாடுடைய ஒருவரிடம், என்னப்பா சிரியா சிரியா என தமிழ்நாட்டில்தானப்பா
கூஹு என்று கிடக்கிறது என்றேன்.
உடனே அவர் சொன்னார் அதுதான் ஒன்றும் புரியவில்லை. இங்கு சிரியாக்காரனெல்லாம் கிடா வெட்டி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறான் என்றார். நானும் இதில் உள்ள அரசியல் பின்னணியை சொல்லி விட்டு. இதை யாரும் கேட்கும் நிலையில் இல்லை. ஆகவே பொறுத்து இருப்போம் என்றேன்.
பிறகு கடை ஓனர் முஸல்லம் என்ற சிரியா அரபியிடம் பஷ்ஷார், அவரது தந்தை அஸத் மற்றும் சிரியா பற்றி எல்லாம் பேசி விட்டு வந்தேன். 1979 முதல் சிரியாவின் ஒரே அரபி இடம் வேலை செய்யும் எனக்கு
500 சிரியாக்காரர்களுடன் பழக்கம் இருக்கிறது. 100 பேர் அடிக்கடி சந்தித்துக்
கொள்வோம். தொழில் ரீதியாக வாரத்தில் 50 சிரியாக்காரர்களை சந்தி்க்கிறேன்.
ஒரு சாரார் கடந்த 7 ஆண்டுகளாகப்
பிரச்சனை என்கிறார்கள். ஒரு சாரார் பஷ்ஷார் வந்த பிறகு என்கிறார்கள். 1983ல் எனது
ஓனரின் தம்பிகளில் அப்துல் அஸீஸ் என்பவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில்
இருந்து விடுதலையானார். உடனடியாக விஸா போட்டு யு.ஏ.இ. வரவழைக்கப்பட்டார். அடுத்து
அப்துல் ஜப்பார். இப்படியாக 1983லேயே 10, 20, 30 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களைக்
கண்டோம்.
ஷியா சுன்னி பிரச்சனைகள் அல்ல எல்லாம்
பெட்ரோல் அரசியல்தான். அல்லாஹ் எல்லா நாட்டு மக்களுக்கும் நல்ல நிலைகளை
ஏற்படுத்துவானாக.
Comments