பீ.ஜே.யை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதை தனியாக வைப்போம்...*


திருச்சி ஷபி தாவூதி நமக்கு எழுதியது.  *சகோதரர் பிஜே. பேசியதை. அனைத்து இஸ்லாமிய ஊர்களில் இருக்கும் குழுக்களிலும் அனுப்புங்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்க்க ஒரே வழி. அருமையான ஆலோசனை... இவரை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதை தனியாக வைப்போம்...* 


பீ.ஜே.யின்  இந்த உரையை நமக்கு அனுப்பித் தந்த நெல் மேனிப்பட்டி
மவுலவி எழுதி அனுப்பியது.

*☯📲👆👆👆👆👆👆📲*

*கண்ணியமிகு எனது அன்பின் சகோதர சகோதரிகளே தோழர் தோழியர்களே இறைவனின் அடியார்களே*
*இறைபுரத்து முஹமனை உரித்தாக்குகிறேன்.*
*அஸ்ஸலாமுஅலைக்கும்.....!*
*சொல்பவரைப் பார்க்காதே அரிடமிருந்து வரும் சொல்லை கேட்டு (சரியா தவறா என ஆய்ந்து அறிந்து சிந்தித்து) சொயல்படுத்துங்கள்.*
*அல்-குர்ஆனில் அல்லாஹ்வின் அருள் வாக்கு.அதர்கினங்க இந்த வீடியோவை கவனமாக முழுமையாக அருள்கூர்ந்து கேட்குமாரு அண்புடனும் கணுவுடனும் வேண்டுககிறேன்*
*☯📲👆👆👆👆👆👆📲*


சகோதரர் பிஜே பேசியதை, அனைத்து இஸ்லாமிய ஊர்களில் இருக்கும் குழுக்களிலும் அனுப்புங்கள்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தை எதிர்க்க ஒரே வழி, இன்ஷா-அல்லாஹ் இது தான் 

அருமையான ஆலோசனை இது, இவர் சார்ந்து உள்ள கொள்கைகளில் முரண்பாடு இருந்தாலும் அதை விட்டு விட்டு, இந்த விஷயத்தில் ஒன்றாய் ஓரணியாய் இருப்போம். 

இன்ஷா-அல்லாஹ்.



மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மவுலவி சொன்னது.

நான் மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த ஜ.உ.சாவின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் பேசியவர்களெல்லாம் அவரவர் சார்ந்திருக்கிற கட்சியைத்தான் முற்படுத்தி பேசினார்கள். அ.ம.மு.க காரர் தினகரனை பற்றி சொன்னார். இப்படி அவரவர்கள் கட்சி தலைவர்கள் பற்றித்தான் சொல்லி புகழ் பாடினார்களே தவிர வேறு பயனுள்ள எந்த கருத்தையும் வழி காட்டுதலையும் தீர்வையும் யாரும் பேசவில்லை. பீ.ஜே. பேசியுள்ள 39 நிமிட வீடியோ கேட்டேன். அதில் உள்ளது ரொம்ப நல்ல கருத்துதான். மக்களிடம் சேர்க்கப்பட வேண்டிய முக்கியமான கருத்து அருமையான தீர்வைக் கூறி உள்ளார். (மேலப்பாளையம் இப்றாஹீம் மஹ்ழரி)


பல ஊர்களில் ஜ.உ.சாவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று நடத்தி பல மவுலவிகள் போலீஸில் வழக்கு வாங்கி ரிக்கார்டு செய்துள்ளார்கள். 

மேலப்பாளையம் ஜின்னா திடலில் ஜ.உ.சாவின் சார்பில் நடந்த கண்ட பொதுக் கூட்டம். ஜ.உ.சாவின் தலைவர் மீதோ மற்ற ஜ.உ.சா, ம.உ.சாவின் மவுலவிகள் மீதோ போலீஸ் வழக்கு போட்டு விடக் கூடாது. 

குடி உரிமை சட்டத்திற்காக கோர்ட் கச்சேரி, போலீஸ் ஸ்டேஷன் என அழையும் நிலை வந்து விடக் கூடாது என்ற மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நிகழ்சி நடத்தப்பட்டுள்ளது.

அவரவர் கட்சியை முற்படுத்துவது என்பதுதான் எல்லார் நிலையாகவும் உள்ளது. அதுதான் ஜின்னா திடலிலும் பிரதிபலித்தது.

குறிப்பிட்ட ஒரு கட்சியின் இயக்க வெறி எந்த அளவுக்கு முற்றி இருந்தது எனில். அந்தக் கட்சிக்காரன் பேசும்போது அந்தக் கட்சியின் பெயர் பொறித்த டீ ஷர்ட்டுடன் ஒருவன் லைவில் நின்றான். முஸ்லிம்கள் பணத்தில் கட்சி விளம்பரம் செய்தான்.

ஆக அல்லாஹ்வுக்காக மக்களுக்காக சமுதாயத்திற்காக என்று யாரெல்லாம் ஜின்னா திடலில் கலந்து கொண்டார்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் பேரருளை ஈருலகிலும் பொழிந்தருள்வாயாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.