2:23 அல் குர்ஆனில் அல்லாஹ்வின் அறைகூவல் என்ன? தாவூத்ஷா முதல் தவ்ஹீத்ஷாக்கள் வரை

Zஸ்ஸல் என்பதற்கு   இறக்கு - இறக்கி  என்று நேரடி பொருள் செய்ததை ஒட்டி கண்ணியக் குறைவான மொழி பெயர்ப்பு என பல சண்டைகள் நடந்துள்ளன.  அருளினான் என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும் என்றார்கள்.

இந்த  2:23 வசனத்தில் உள்ள  Zஸ்ஸல்னா என்பதற்கு  யாரெல்லாம் இறக்கிய இறக்கி வைத்த   இறக்கியதில்   என்றும்   

யாரெல்லாம்  அருளியுள்ள,        அருளியதில் என்றும்  மொழி பெயர்த்துள்ளார்கள் என்று பாருங்கள்.

இந்த வசனத்தில்  இறக்கியதில்   என்று மொழி பெயர்த்துள்ள அதே அறிஞர்கள் வேறு இடங்களில் அருளியதில் என்றும் மொழி பெயர்த்து இருப்பார்கள்.   அதுதான் யதார்த்தம்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/223.html

மேலோட்டமாக  பார்த்து விட்டு, படித்து விட்டு போவதற்காக இந்த சொல்லுக்கு சொல் எழுதவில்லை. யாரோ ஒரு சாராரின் கருத்தை மட்டும் ஆதரித்து இதை வெளியிடவில்லை.  தாவூத்ஷா முதல் தவ்ஹீத்ஷாக்கள் வரை எல்லார் மொழி பெயர்ப்புகளையும் எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதே எமது நிலை.


அதனால்தான் 19-02-1929ல்  பகரா அத்தியாத்திற்கு மட்டும் அ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி வெளியிட்ட தப்ஸீர். 1943ஆம் ஆண்டு வெளியிட்ட தர்ஜுமா. ஷாஹுல் ஹமீது அன்ஸன்ஸ் 1959ல் வெளியிட்ட S.S. முஹம்மது  அப்துல்  காதர்  பாகவி அவர்களின் தப்ஸீர், 

கூத்தாநல்லுார் ,அன்வாருல் குா்ஆன், திரீயெம் பிரிண்டர்ஸ், பஷாரத், I.F.T,ஜான் டிரஸ்ட்ஜவாஹிருல் குர்ஆன் என பலர் வெளியிட்ட தர்ஜுமா மற்றும் தாவூத்ஷா எழுதிய பழமையான தர்ஜுமாக்களையும் புதிய மற்றும் பழமையான இஸ்லாமிய நுால்களையும் மேலப்பாளையம் லைப்ரரியில் வைத்தோம். 

அதில்  பழமையான பெரும்பாலான நுால்களை காணவில்லை. குறிப்பாக S.S. முஹம்மது  அப்துல்  காதர்  பாகவி அவர்கள் எழுதிய தப்ஸீர் ஏழு பாகத்தில் 1,2,3,4,7 ஆகிய ஐந்து பாகங்களை லைப்ரரியில் இருந்து காணவில்லை. வாட்ஸப்பில் பல முறை அறிவிப்பு செய்தும் யாரும் கொண்டு வந்து லைப்ரரியில் சேர்க்கவில்லை. 

கல்வி முஸ்லிம்களின் காணாமல் போன சொத்து அது எங்கிருந்தாலும் பெறப்பட வேண்டும் என்பார்கள். அதனால்தான் யூதர் எழுதிய முன்ஜித் என்ற கிதாப் அரபு மதரஸாக்களில் இடம் பெற்றுள்ளது. 

ஷாஹுல் ஹமீது அன்ஸன்ஸ் 1959ல் வெளியிட்ட நுாலில் தப்ஸீர் என்ற பெயரில் உள்ள கதைகளில் நமக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும்  குர்ஆன் வசன நேரடி மொழி பெயர்ப்பை பழைய தமிழில் காணலாம் மற்றும்  கல்வி அறிதல் என்ற அடிப்படையில் பார்த்து வருகிறோம்.  

இந்த மாதிரியான அனைத்து நுால்களையும் 2000 ஆண்டு மதுரை மாநாட்டின் கண்காட்சிகளிலும் இடம் பெறச் செய்தோம்.


2:23 ஆகிய  இந்த வசனத்தில் அல்லாஹ் விடுத்துள்ள சவால் என்ன என்பதை  இறுதியில் பார்ப்போம்.
இனி வார்த்தைக்கு வார்த்தை  சொல் என்ன சொல்? என்பதை பார்ப்போம்


وَ- 
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி  



إِن كُنتُمْ- இன் குன்தும்

நீங்கள் இருந்திருந்தால் - இருப்பீர்களானால் - இருந்தால்

فِي رَيْبٍ-Fபீ ரய்பி(ன்)ம்


ஐயம் கொண்டு- சந்தேகம்  கொண்டு- சந்தேகத்திலிருந்தால்  - சந்தேகம் உடையோராக-  சந்தேகப்பட்டு

 مِمَّا نَزَّلْنَا -மிம்மா Zஸ்ஸல்னா 

நாம் இறக்கியதில்


عَلَىٰ -  அலா-  

மீது – மேலே


عَبْدِ- ஃஅப்து
அடியார்

عَبْدِنَا- ஃஅப்தினா 
நமது அடியார்

 فَاْتُوْا بِ - Fபஃதுா பி
கொண்டு வாருங்கள்

سُورَةٍ- சூரதி(ன்)ம் 

ஓர் அத்தியாயம் 


مِن மின்  
இருந்து From –லிருந்து

  مِثْلِ  -  மிஸ்துலி 
போன்ற - போல


هِ- ஹி
இது


وَ -     


ادْعُوْا - த்ஊ 

 அழையுங்கள்


شُهَدَاءَ - ஷுஹதாஅ

உதவியாளர்கள்


كُمْ- கும்

உங்களுடைய

مِن دُونِ اللَّـهِ- மின் துானில்லாஹி 

அல்லாஹ்வைத் தவிர -அல்லாஹ் அல்லாத

إِن كُنتُمْ-இன்  குன்தும்
நீங்கள் இருப்பீர்களானால்

صَادِقِينَ- ஸாதிஃகீ(ன)ன்

உண்மையா - நேர்மையான

وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَِ



வ இன் குன்தும்  Fபீ ரய்பி(ன்)ம்  மிம்மா நZஸ்ஸல்னா ஃஅலா ஃஅப்தினா  Fபஃதுா  பி சூரதி(ன்)ம்  மி(ன்)ம் மிஸ்துலிஹி வத்ஊ  ஷுஹதாஅகும் மின் துானில்லாஹி இன்  குன்தும் ஸாதிஃகீ(ன)ன்

1.மேலும்  நம் அடியார் (முஹம்மது – ஸல்- அவர்களின்) மீது  நாம் இறக்கி வைத்த (வேதத்)தில் நீங்கள் சந்தேகத்திலிருந்தால், (அவர் தம் புறத்திலிருந்தே இதனைக் கூறுகிறார் என்பதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் நீங்கள் கொண்டு வாருங்கள்! (இதில்) அல்லாஹ்வைத் தவிர உங்களுடைய உதவியாளர்களையும் (துணைக்கு) நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! (மலிவு பதிப்பு. M.அப்துல் வஹ்ஹாப்M.A., B.th., K.A. நிஜாமுத்தீன் மன்பஈ, R.K. அப்துல் காதர் பாகவி ஆகியோர் மொழி பெயர்த்தது)


2. நாம் (நமது தூதர் முஹம்மது என்னும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர் களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள் (அப்துல் ஹமீது பாகவி)


3. நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதாஇல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால்இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)! (IFT)


4. மேலும், நாம் நமது அடியார் மீது இறக்கிவைத்த (இவ்வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால்இதுபோன்ற ஓர் அத்தியாயத்தையாவது நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு உதவி செய்பவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் இதுபோன்று ஓர் அத்தியாயத்தைக் கொண்டுவாருங்கள். (சவூதி)




5. நம்முடைய அடியார் (முஹம்மது ஸல்..) மீது  நாம் இறக்கிய (வேதத்)தைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டீர்களாயின், (அதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் இ(திலுள்ள)தைப் போன்று ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ் அல்லாத உதவியாளர்கள் (உங்களுக்கு இருப்பின்)  அவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்! (பஷாரத்)2:23.


6.இன்னும், நமது அடியார் (முஹம்மது (ஸல்)) மீது நாம் இறக்கியதில் நீங்கள் சந்தேகத்தில் இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மையாளர்களாகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துஇது போன்ற ஓர் அத்தியாயத்தைக்  கொண்டு வாருங்கள். (இம்தாதி)



7.நம் அடியார்(முஹம்மது)க்கு நாம் அருளியுள்ள இம்மறையில் நீங்கள் ஐயம் கொள்வோராய் இருப்பீர்களாயின்அல்லாஹ்வை விடுத்துஉங்கள் உதவியாளர்களைத் துணைக்கழைத்துக் கொண்டுஇதுபோன்ற ஒரேயோர் அத்தியாயமேனும் (இயற்றிக்) கொண்டு வாருங்களேன்(அதிரை ஜமீல்)


8.இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (ஜான்)


9.நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! 2:23.  (P.J.)


திருக்குர்ஆனின் அறைகூவல்
 இவ்வசனங்கள் (2:23 , 10:38 , 11:13 , 17:88 , 28:49 , 52:34 ,) திருக்குர்ஆனைப் போல் ஒரு நூலை உலகமே திரண்டாலும் உருவாக்கிட இயலாது என்று அறைகூவல் விடுகின்றன.

எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், அரபுமொழி விற்பன்னர்களாகவும், உயர்ந்த இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர்.

எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை இறைவேதம் எனக் கொண்டுவந்தார்களோ அது அன்றைய விற்பன்னர்களது இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது.

(திருக்குர்ஆன் எவ்வாறு இறைவேதமாக அமைந்துள்ளது என்பதை முன்னுரையில் 'இது இறைவேதம்' என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.)

எனவே "இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத முஹம்மது கற்பனை செய்து விட்டார் என்று நீங்கள் கருதினால் பண்டிதர்களான நீங்கள் இதுபோல் தயாரித்துக் காட்டுங்கள்!'' என்று திருக்குர்ஆன் மூலம் அறைகூவல் விடப்பட்டது.

முழு மனித குலத்துக்குமான இந்த அறைகூவல் இன்றளவும் எவராலும் எதிர்கொள்ளப்படவில்லை.

திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன. (நன்றி P.J. தர்ஜுமா)





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.