அகதி - முஹாஜிர் இதில் மிக முக்கிய படிப்பினை என்ன?

குர்ஆன் இன்டக்ஸ் (பொருள் அட்டணை) எல்லா தர்ஜுமாக்களிலும் போட்டுள்ளார்கள்ஆனால் சுருக்கமாகவே உள்ளதுஆகவே நெட்டில் முழுமையாக வெளியிட வேண்டும் என்ற முயற்சியை 2007ல் துவக்கினோம்.


1.அஃராப் ( சிகரம்,  தடுப்புச் சுவர்  மதில், உச்சிஉயரமான இடங்கள்) என்ற தலைப்பில் ஒரு பதிவும். அக்கிரமக்காரர்கள்அநியாயம்அக்கிரமம்அநீதி என்ற பொருளில் வரக் கூடிய அழ்ளம், ழாழிமூன் ழாலிமீன்  போன்றவற்றை 3 தலைப்பாகவும் வெளியிட்டோம். புத்தகமாக போடக் கூடியவர்கள் அந்த முயற்சியில் மீண்டும் ஈடுபடுகிறார்கள் என்றதும் அதை நிறுத்தி விட்டோம். 

2002ல் அப்துல் காதர் உமரி அவர்கள் 1090 பக்கத்தில் போட்ட இண்டக்ஸ் மறு பதிப்பு வரவே இல்லை என்பதால் மீண்டும் இந்த முயற்சியில் இறங்கி அந்நார் – அக்கினி என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டுள்ளோம்.



இப்பொழுது அகதி என்ற தலைப்பில் இதை வெளியிடுகிறோம். இதில் மிக முக்கிய படிப்பினை ஈமான் கொண்டு, ஹிஜ்ரத் செய்து அகதிகளாக ஆகி பிறகுதான் ஜிஹாது. 

 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا

ஆமனுா ஹாஜரூ வஜாஹது என்ற வரிசையில் உள்ள வசனங்கள் மூலம் அறிவுள்ளவர்கள் அறியலாம். 


1. நம்பிக்கை கொண்டுஹாஜரூ
 هَاجَرُوْا 
ஹிஜ்ரத்460 செய்து (பிறந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து,  -நாடு துறந்தவர்களும்-நாட்டை விட்டு) துறந்தவர்களும்,- தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ-தம் வீடு வாசல்களைத் துறந்தார்களோ,- தம் நாட்டைத் துறந்து ) அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன். 2:218. 


2."உங்களில் ஆணோபெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) ஹாஜரூ
هَاجَرُوْا 
ஹிஜ்ரத்460 செய்து (யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ - எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், - நாட்டைத் துறந்தவர்கள்,- தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியும்-)  தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுபோரிட்டுக் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன்.53 அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (இது) அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது. 3:195


3.. "அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுஹாஜிரூ
 يُهَاجِرُوْا

ஹிஜ்ரத்460 செய்யும் வரை (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில்) அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக89 ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!53 அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும்உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! 4:89


4. தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்165 போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று இவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையாFபதுஹாஜிரூ
فَتُهَاجِرُوْا

அதில் நீங்கள் ஹிஜ்ரத்460 செய்திருக்கக் கூடாதா?'' (நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?- நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?"- அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?”- நீங்கள் (இருந்த) இவ்விடத்தைவிட்டு ஹிஜ்ரத்துச் செய்து புறப்பட்டிருக்க வேண்டாமா?”)  என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம். 4:97. 


5. வ ம(ன்)ய் யுஹாஜிர்
وَمَنْ يُّهَاجِرْ

அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்பவர் (நாடு கடந்து செல்கின்றாரோ,- இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகின்றாரோ,) பூமியில் அதிகமான புகலிடங்களையும்வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும்அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத்460 செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும்நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். 4:100.  


6. ஆமனுா வ ஹாஜரூ

 اٰمَنُوْا وَهَاجَرُوْا

நம்பிக்கை கொண்டுஹிஜ்ரத்460 செய்து (தம் ஊரைவிட்டு வெளியேறி, ஊரை விட்டுப் புறப்பட்டு,- நாட்டைத் துறந்து சென்று)  தமது செல்வங்களாலும்உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும்அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.385 நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத்460 செய்யாதோர்ஹிஜ்ரத்460 செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488 8:72. 


7.ஆமனுா வ ஹாஜரூ
اٰمَنُوْا وَهَاجَرُوْا

நம்பிக்கை கொண்டுஹிஜ்ரத்460 செய்து (தம்) ஊரைத்துறந்துஊரைவிட்டுப் புறப்பட்டு-ஊரை விட்டும் வெளியேறி) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும்அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும்கண்ணியமான உணவும் உண்டு. 8:74. 


8. இதன் பின்னர் நம்பிக்கை கொண்டுமி(ன்)ம் பஃது வ ஹாஜரூ


 مِنْۢ بَعْدُ وَهَاجَرُوْا 

ஹிஜ்ரத்460 செய்து, (தம் ஊரைத்துறந்து,- ஊரை விட்டுப் புறப்பட்டு-ஊரை விட்டுப் புறப்பட்டு) உங்களுடன் இணைந்து போரிட்டோரே உங்களைச் சேர்ந்தவர்கள். இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானவர்கள்.385 அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். 8:75. 



 9. ஆமனுா வ ஹாஜரூ

اٰمَنُوْا وَ هَاجَرُوْا

நம்பிக்கை கொண்டுஹிஜ்ரத்460 செய்து, (தம் நாட்டை விட்டும் வெளியேறி - ஊர்களிலிருந்து வெளியேறி,- யாவற்றையும் துறந்து,) தமது செல்வங்களாலும்உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர்அல்லாஹ்விடம் மகத்தான பதவிக்குரியவர்கள். அவர்களே வெற்றி பெற்றோர்.9:20. 


  10 . மினல் முஹாஜிரீன

مِنَ الْمُهٰجِرِيْنَ

ஹிஜ்ரத்460 செய்தோரிலும்அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும்நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும்501 அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. 9:100. 

11.இந்த நபியையும்வல் முஹாஜரீன

وَالْمُهٰجِرِيْنَ

ஹிஜ்ரத்460 செய்தவர்களையும்அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும்சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்இரக்கமுடையோன். 9:117. 


12.  அநீதி இழைக்கப்பட்ட பின் அல்லாஹ்வை நோக்கி ஹாஜரூ

هَاجَرُوْا

ஹிஜ்ரத்460 செய்தோரை (நாடு துறந்து சென்றார்களோ, - தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ,-) இவ்வுலகில் அழகிய முறையில் குடியமர்த்துவோம். மறுமையின் கூலி இதை விடப் பெரிது. இதை அவர்கள் அறிய வேண்டாமா?16:41.

13. சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின் ஹாஜரூ

 هَاجَرُوْا 

ஹிஜ்ரத் செய்து(தம் வீடுகளைத் துறந்து- தங்கள் இல்லத்திலிருந்து வெளிப்பட்டு, - வீடு வாசல்களைத் துறந்து, -தங்கள் இல்லங்களைத் துறந்து) அறப்போரும் செய்துபொறுமையைக் கடைப்பிடிப்போருக்கு உமது இறைவன் இருக்கிறான். இதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.16:110.


14. அல்லாஹ்வின் பாதையில் ஹாஜரூ

هَاجَرُوْا

(தம் இருப்பிடங்களை விட்டு - (தங்கள் இல்லங்களை விட்டு) ஹிஜ்ரத்460 செய்து ஹிஜ்ரத்460 செய்து பின்னர் கொல்லப்படுவோர்அல்லது மரணிப்போருக்கு அல்லாஹ் அழகிய உணவை வழங்குவான். அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்.463 22:58


15. "உறவினர்களுக்கும்ஏழைகளுக்கும்அல்லாஹ்வின் பாதையில் வல் முஹாஜிரீன

وَالْمُهٰجِرِيْنَ


ஹிஜ்ரத்460  செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும்வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களாஅல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.36424:22



16.  அவரை லூத் நம்பினார். "நான் இறைவனை நோக்கி முஹாஜிருன் 
مُهَاجِرٌ
(இவ்வூரை விட்டு - இந்த ஊரை விட்டுச்) ஹிஜ்ரத்460 செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்ஞானமிக்கவன்'' என்று (இப்ராஹீம்) கூறினார்.29:26.16.



17. நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.322 நம்பிக்கை கொண்டோரையும்வல் முஹாஜிரீன

وَالْمُهٰجِرِيْنَ 

ஹிஜ்ரத்460 செய்தோரையும் (நாடு துறந்தோரையும்) விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர்.385 நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில்157 எழுதப்பட்டதாக இருக்கிறது.33:6.



18. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக்108 கொடுத்து விட்டீரோ அவர்களையும்அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும்,107 உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள்உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள்உமது தாயின் சகோதரருடைய புதல்விகள்உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹாஜரூன 

هَاجَرْنَ


(மக்காவை விட்டு உங்களுடன்ஹிஜ்ரத்460 செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும்.378 (மற்றவர்களுக்கு) அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும்நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். 33:50.




19. தமது வீடுகளையும்சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட அல் முஹாஜிரீன 
الْمُهٰجِرِيْنَ

ஹிஜ்ரத்460 செய்த ஏழைகளுக்கும் (உரியது). அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அருளையும் திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்வுக்கும்அவனுடைய தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள்.59:8.


20. அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும்இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). மன் ஹாஜர

 مَنْ هَاجَرَ

ஹிஜ்ரத்460 செய்து (நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை) தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். 59:9.



21. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் முஹாஜிராதின்

 مُهٰجِرٰتٍ


ஹிஜ்ரத்460 செய்து (நாடு துறந்தவர்களாக – வெளியேறி) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏகஇறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன். 60:10.





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.