கபன் எங்கள் ஆடை கபுர் எங்கள் வீடு என்ற கோஷத்துடன் ஜிஹாது செய்ய வாருங்கள் என்றழைத்த மேலப்பாளையம் ஹயாத் எங்கே?


மேலப்பாளையம் அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஹயாத் போன் நம்பர் தாருங்கள் என்று போனிலும் வாட்ஸப்களிலும் கேட்பவர்களே சிந்தியுங்கள். ம.உ.ச.  மற்றும் ஜ.உ. சாவைத் சார்ந்த மவுலவி  ஜலீல் உஸ்மானி கதீபாகவும் இமாமாகவும் இருக்கும்   மேலப்பாளையம் நெய்னா முஹம்மது மூப்பன் ஜும்ஆ பள்ளியின் அறிவிக்கப்படாத நிரந்தர நிர்வாகி அ.தி.மு.க. ஹயாத்.
எந்த நிர்வாகம் வந்தாலும் யார் தலைமையில் அமைந்தாலும் அவர்களின் பின்புலமாகவும் பிரச்சினைகளின் போது இயக்குனராகவும் இருந்து இயக்கும் அரசியல்வாதி ஹயாத்

பி.ஜே.பி.யை எதிர்ப்பதற்கு சரியான ஆள் என்று  T.T.V  யை ஆதரித்தவர் மே வருமானம் பாதிக்கப்படும் என்றதும் ஏப்ரலிலே EBSயிடம் போய் விட்டவர்.  அவரால் இயன்ற உதவிகளை நன்மைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து இருக்கிறார். அதை மறுக்க முடியாது.

இந்த மேலப்பாளையம் ஹயாத் முப்பது ஆண்டுகளுக்கு முன் எப்படிப்பட்ட ஜிகாத்தியாக இருந்தார் என்பதை கடந்த மாதம் தான் எழுதினேன். 



2019 நவம்பர் 16 அன்று இந்திய முஸ்லிம்களே இன்னுமா உறக்கம்? என்ற தலைப்பில், அன்று ஜிகாத் கமிட்டிகளில் இருந்தவர்களில் பலர் இன்று காபிரான தலைவர்களை ஈமான் கொண்டு டாஸ்மாக் வருமானம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நான் எழுதியது அ.தி.மு.க. ஹயாத்  பற்றித்தான். 

நமக்கு ஆளை எதிர்ப்பதல்ல நோக்கம். செயலை அடையாளம் காட்டி அவர்களது தவறான செயலை எதிர்ப்பதுதான் நமது லட்சியம். கடந்த மாதம் முன்னாள் ஜிகாதி அ.தி.மு.க. ஹயாத் பற்றி நான் எழுதியபொழுது ஹயாத் என்று பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை.

எழுதி இருந்தால். மூன்று நாட்களாக   மேலப்பாளையம் அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஹயாத் போன் நம்பர் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள் உட்பட அனைவருமே என்னை கொதறி இருப்பீர்கள்.

இந்த மாதிரி மாறிப் போன ஜிகாத்திகள் பற்றித்தான் எனது பிளாக்ரில் பெயர் குறிப்பிடாமல் நிறைய அடையாளம் காட்டி உள்ளேன்

சாராயக்கடை  ஏஜென்ட் ஹாபிழுல் குர்ஆன் அப்துல் சமது என்று சாராயக்கடை  போர்டில் எழுதி வருவாய் பார்த்தவர்கள். டாஸ்மாக் வருமானம் பார்த்தவர்கள் செய்த தொழில் ஹராம். அதைவிட பெரிய ஹராமும் அயோக்கியத்தனமும் எது? 

தங்களை இஸ்லாமிய எதிரிகளுக்கு எதிரான ஜிஹாதிகள் என சொல்லிக் கொண்டு. இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய பெண்களையும் கடத்தி ஒரு கோடி தா என கேட்டு மிரட்டியது. ஹராமானவற்றை விற்று தின்றது. ஹராமான வியாபாரத்துக்கு ஏஜெண்டுகளாக இருந்து விட்டு அல்லாஹ்வுக்காக என்றது போன்ற சம்பவங்கள் தான். அயோக்கியத்தனமானது, கேவலமானது கேடு கெட்டது. காரித் துப்ப தகுந்தது.

கபன் எங்கள் ஆடை கபுர் எங்கள் வீடு என்ற கோஷத்துடன்.  ஹைய அலல் ஜிஹாத்.

ஜிஹாது செய்ய வாருங்கள்.  மீண்டும் கர்பாலா என்று எழுதப்பட்ட காரில் பவனி வந்தவர்களில் மிக முக்கியமானவர் அ.தி.மு.க. ஹயாத்.  

அந்த காரின் கதவு திறந்தவுடன் முதலில் நீண்ட வாள் தான் வெளியே வரும். விருந்துக்கு அழைக்கப்பட்டாலும் நெடு நீள வாளுடன் தான் வருவார்கள்.

இன்று எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி மரணிப்போம் நமது மறுமை எப்படி இருக்கும்? என்பதே முக்கியம். 

இன்று ஜிகாத் என்று சொல்லி திரியும் சின்ன பையன்களில் ஒருவன் யாரையோ மகிழ்விக்க என்னை விமர்சனம் செய்வதையே தொழிலாக கொண்டு செயல் பட்டு வருகிறான்.  அவனது செயல்பாடு எந்த அளவுக்கு ஆகி விட்டது என்றால் வார்த்தை விளையாட்டால் அல்லாஹ்வின் சாபம் கேட்கும் நிலைக்கு ஆளாகி விட்டான்.

வார்த்தை விளையாட்டால் போலிகளிடமிருந்து சபாஷ் பெறலாம். அல்லாஹ்விடமிருந்து தப்பவே முடியாது.

நேற்றைய ஜிஹாதி அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஹயாத்  ஒரு பாடம்.  வமா அலைனா இல்லல் பலாஃ



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.