இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி, தலைப்பாகை

தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்: என்ற இந்த தலைப்பில்  மெயில் வந்துள்ளது. அதற்கு பதில் தரும் வகையில் இதனைத் தருகிறோம்.

தொப்பி தலைப்பாகை அணிபவர்களை, அணியாதவர்கள் குறைகூறக் கூடாது. அணியாதவர்களை அணிந்தவர்கள் குறை கூறக் கூடாது என்று தெரிகின்றது. மேலும் அணிவோர் அதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கருதவும் கூடாது என்று 1986லேயே  பதினோரு (11) ஆதாரங்களுடன் விளக்கப்பட்டதையும் 2009இல் பதில் அளிக்கபட்டதையும் இங்கு பதிகிறோம்.  மற்றவற்றின் லிங்குகளையும் தந்துள்ளோம்.  


from: Abu Mymoona  via yahoogroups.com 
reply-to: K-Tic-group-owner@yahoogroups.com
to: "k-tic-group-owner@yahoogroups.com" ,
 "k-tic-group@yahoogroups.com" ,
 "abkaleel@gmail.com"
date: Sat, Mar 30, 2013 at 7:32 PM
subject: [K-Tic] தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்:
  • தொப்பியும் தலைப்பாகையும்
ஆண்கள் தங்கள் தலையில் தொப்பி, தலைப்பாகை அணிந்து கொள்வது பற்றி தமிழக முஸ்லிம்களிடம் பலவிதமான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன.
சிலர் “எல்லா நேரங்களிலும் தொப்பியுடன் தான் காட்சி தர வேண்டும்; அது சுன்னத்” என்கிறார்கள்.

இன்னும் சிலர் “எல்லா நேரங்களிலும் தொப்பி அணிய வேண்டியதில்லை; தொழும் போது மட்டும் தொப்பி அணிவது அவசியம்” என்கிறார்கள்.
“மவ்லவி என்றால் அவர் அவசியம் தலைப்பாகையுடனேயே காட்சி தர வேண்டும்; குறைந்த பட்சம் தொழுகையில் இமாமாக நிற்கும் போதாவது அவசியம் தலைப்பாகை அணிந்தாக வேண்டும்; ஒரு இரண்டு முழத்துணியையாவது தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும்” இது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.

இன்னும் சிலர் “தொப்பி தலைப்பாகை எல்லாம் ஏமாற்றும் வேஷம்” என்று கருதுகின்றனர்.

இந்த நம்பிக்கைகள் சரிதானா? இஸ்லாத்தில் தொப்பி, தலைப்பாகையின் நிலை என்ன? என்பதைக் குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் நாம் காண்போம்.
தலைப்பாகை.

“நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்” அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லா (ரழி)
நூல் : முஸ்லிம் (‘ஹஜ்’ பாடம்)

(அதே மக்கா வெற்றியின் போது) “நபி(ஸல்) அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்”
அறிவிப்பவர் : ஜஃபர் இப்னு அம்ரு (ரழி)
நூல் : முஸ்லிம் (‘ஹஜ்’ பாடம்)

“நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்”
அறிவிப்பவர் : அனஸ் (ரழி)
நூல் : அபூதாவூத், இப்னு மாஜா (மஸஹ் பாடம்)

மேற்கூறிய ஹதீஸ்கள் “நபி(ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந்தனர்” என்பதற்கு தெளிவான ஆதாரங்களாகும்.

தொப்பியும், தலைப்பாகையும்.

(கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும், தொப்பியின் மீதும் ஸஜ்தா  செய்வார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் (ரழி)
நூல் : புகாரி, (தொழுகை)

இந்த ஹதீஸில் “நபித் தோழர்கள் கடுமையான வெயில் காலத்தில் தங்கள் நெற்றியைத் தொப்பியால், தலைப்பாகையால் மறைத்து கொண்டு ஸஜ்தா செய்துள்ளார்கள்” என்பது தெளிவு படுத்தப்படுகின்றது. இதன் மூலம் நபித் தோழர்களில் சிலர் தலைப்பாகையும் வேறு சிலர் தொப்பியும் அணிந்துள்ளனர் என்பதை நாம் உணரலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஷஹீத்களின் (உயிர்த்தியாகிகள்) அந்தஸ்தை வர்ணிக்கும் போது , மறுமை நாளில் அவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதை மக்களெல்லாம் ‘இப்படி’ அன்னாந்து’ பார்ப்பார்கள் என்று கூறி, தங்கள் தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பிக் கீழே விழுந்தது. (இதை உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இந்த இடத்தில் உமர்(ரழி) அவர்களின் தொப்பி கீழே விழுந்ததா? அல்லது நபி(ஸல்) அவர்களின் தொப்பி கீழே விழுந்ததா? என்பதில் இறுதி அறிவிப்பாளர் ஐயம் கொள்கிறார். நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி. நூல் : திர்மிதி

இந்த ஹதீஸிலிருந்து “நபி(ஸல்) அவர்கள் தொப்பி அணிந்துள்ளார்கள். அல்லது உமர் (ரழி) அவர்கள் தொப்பி அணிந்துள்ளார்கள்” என்பதை நாம் அறியலாம்.

மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் தலைப்பாகையும் தொப்பியும் அணிந்துள்ளார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.

ஆனால் இந்த ஹதீஸ்களிலிருந்து எல்லா நேரங்களிலும் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டுமேன்று விளங்க முடியாது. இவை நபி(ஸல்) அவர்களின் ஸஹாபாக்களின் வாழ்வில் ஒரு சிறு பகுதி தான், பல சந்தர்ப்பங்களில் தொழுகையின் போதும், தொழுகையில்லாத வேறு சந்தர்ப்பங்களிலும் தொப்பி, தலைப்பகை எதுவுமில்லாமல் நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் இருந்துள்ளனர் அவற்றை நாம் விரிவாகப் பார்ப்போம்.

தொப்பி தலைப்பாகை இல்லாமை.

“இப்னு உமர் (ரழி) மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப்பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்”.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : முஸ்லிம் (‘பிர்ரு’ பாடம்)

இப்னு உமர்(ரழி) அவர்கள் மக்காவுக்குச் செல்லும் போது கட்டிக்கொள்வதற்காக தலைப்பாகை வைத்துக் கொள்வார்கள் என்பதிலிருந்து, வழக்கமாக அவர்கள் தலைப்பாகை அணிவதில்லை என்பதை உணரலாம். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலைப்பாகை கட்டி இருந்ததால், தாமும் அவ்வாறே செய்ய விரும்பி தலைப்பாகையுடன் மக்கா செல்வார்கள்.

இதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் எப்போதும் தலைப்பாகையுடன் இருந்ததில்லை என்று தெரிகின்றது. (இப்னு உமர் (ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் யதார்த்தமாக நடந்தவைகளையும் செயல் படுத்தக் கூடியவர்கள் என்பதை ‘தாடி’ பற்றிய கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருக்கிறோம்)

அதுபோல் கோடை காலங்களில் வெப்பம் தாக்கமலிருப்பதற்காகத் தொப்பியும், தலைப்பாகையும் அணிவார்கள் என்பதைத்தாக் ஹஸன்(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. ‘மஸஹ் செய்யும் போது நபி(ஸல்) அவர்கள் தலைப்பாகையில் மஸஹ் செய்தார்கள்’ என்று அனஸ்(ரழி) அவர்கள் அறிவிப்பை அபூதாவுது, இப்னு மாஜா நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் தலையின்மீதே மஸஹ் செய்துள்ளார்கள் என்பதற்குப் பல ஹதீஸ்கள் உள்ளன. (நபி வழியில் நம் தொழுகையில் நாம் அவற்றில் சிலதை கூறியுள்ளோம்)

முதல் ஆதாரம்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இருக்கும் போது தாடியும் தலையும் பரட்டையாக ஒருவர் பள்ளியில் நுழைந்தார். அதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரது தலையையும், தாடியையும் சீர் படுத்தும்படி சுட்டிக்காட்டினார்கள், உடனே அந்த மனிதர் சீர் செய்து விட்டுத் திரும்பி வந்த போது, தலைவிரிகோலமாக ஷைத்தானைப் போல வருவதை விட இது சிறப்பாக இல்லையா? என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதா இப்னு யஸார் (ரழி) நூல் : முஅத்தா.

இந்த ஹதீஸில் வந்த மனிதர் பரட்டை தலையாக இருந்திருக்கிறார். தொப்பி, தலைப்பாகையால் மறைக்காமல் இருந்தால் தான் ‘பரட்டை’ என்பதை உணர முடியும்! அந்த மனிதரை ேநாக்கி தலையைச் சரி செய்யும்படித்தான் உத்தவிட்டுள்ளார்கள். தொப்பி அணியும் படியோ, தலைப்பாகை கட்டும் படியோ சொல்லவில்லை. அதுவும் இந்த நிகழ்ச்சி பள்ளிவாசலில் நடந்துள்ளது. முடியை சீர் செய்து கொண்டு வந்த பின்பும் ஏவவில்லை.

இந்த ஹதீஸிலிருந்து பள்ளிவாசலுக்கு தொப்பி, தலைப்பாகை இல்லாமல் வரலாம் என்பதையும் , நபி(ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே அந்த மனிதர் தொப்பி தலைப்பாகை இல்லாது வந்துள்ளதால். ஹஜ்ரத்மார்கள் முன்னிலையில் மாணவர்கள் மரியாதைக்காக தொப்பி அணிய வேண்டுமென்பதும் தவறானவை என்பதையும் நாம் அறிகின்றோம்.

இரண்டாவது ஆதாரம்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது பள்ளியை ஒட்டி அமைந்திருந்த என் வீட்டிற்குள் தங்கள் தலையை நீட்டுவார்கள்; நான் அவர்களுக்குத் தலை வாரி விடுவேன்” என்று அன்னை ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி, ‘இஃதிகாப்’ பாடம்

இந்த ஹதீஸிலிருந்தும் நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் தொப்பி தலைப்பாகை எதுவுமில்லாமல் இருந்திருக்கிறார்கள் ! தலை கலைந்து விடும் போது அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் தலைவாரி விட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.

மூன்றாவது ஆதாரம்.
“அபூபக்ரு (ரழி) அவர்களின் தந்தை அபூகுஹாபா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களின் தலை வெள்ளை வேளேர் என்றிருந்தது; அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் “கறுப்பு தவிர வேறு நிறத்தால் இந்த வெண்மையை மாற்றுங்கள்!” என்றார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லா (ரழி) நூல் : முஸ்லிம் (லிபாஸ் பாடம்)
இந்த ஹதீஸிலிருந்து அபூபக்ரு (ரழி) அவர்களின் தந்தை தலையில் எதுவும் அணியாமலேயே நபியின் முன்னே அழைத்து வரப்படுகிறார்கள். அந்த நேரத்தில் வெண்மையை மாற்றும்படி உத்தரவிட்ட நபி(ஸல்) அவர்கள், தொப்பி, தலைப்பாகை அணிந்து வெண்மையை மறைக்கும் படி கூறவில்லை.

நான்காவது ஆதாரம்.
“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம்! அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து பின்னர் திரும்பிச் செல்ல எத்தனித்தார், அப்போது நபி(ஸல்) அவர்கள் “அன்சாரிச் சகோதரரே! ‘ஸஃது இப்னு உபாதா” நலமாக இருக்கிறாரா? என்று விசாரித்தார்கள். அதற்கு அவர் “ஆம் நலமாக இருக்கிறார்” என்று கூறினார், அப்போது நபி(ஸல்) அவர்கள் குழுமியிருந்தவர்களை நோக்கி “உங்களில் யார் அவரை நோய் விசாரிக்க வருகிறீர்கள்? என்று கூறிவிட்டு எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். நாங்கள் பத்துக்கும் அதிகமானோர் இருந்தோம். எங்களிடம் செருப்புகளோ, காலுறைகளோ, மேலாடைகளோ இருக்கவில்லை”.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல் : முஸ்லிம் (ஜனாயிஸ்)

இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு தோழரை நோய் விசாரிக்கச் செல்கின்றனர். அப்போது அவர்களில் எவரும் தொப்பி அணிந்திருக்கவில்லை. நபி(ஸல்) அவர்களுடனேயே தொப்பியில்லாமல் அவர்கள் அமர்ந்துள்ளனர். அந்த நேரத்தில் தொப்பி அணியும்படி நபி(ஸல்) அவர்கள் ஏவவில்லை. ஆசிரியருக்கு முன்னால் தலையை மறைப்பது மரியாதை என்று கருதுவோர் இந்த ஹதீஸ்களை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஐந்தாவது ஆதாரம்.
நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை இஷா தொழ வைக்க வரவில்லை. காத்திருந்த ஸஹாபாக்கள் உறங்கி, உறங்கி விழிக்கிறார்கள். இறுதியில் உமர் (ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (வீட்டிலிருந்து) தலையில் ஈரம் சொட்ட வருகிறார்கள். (தலையின் ஈரத்தைப் பிழிந்து விடுவதற்காக) தங்கள் விரல்களைத் தலை உச்சியில் வைத்து (அழுத்தி) முன்பக்கமாக விரல்களைக் கொண்டு வந்தார்கள். அதன்பிறகு “என் உம்மத்துக்குக் கஷ்டமாகிவிடும் என்றில்லா விட்டால் இது போன்ற நேரத்தில் தொழும்படி ஏவி இருப்பேன்” என்றார்கள் (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : புகாரி, (மவாகீதுஸ்ஸலவாத்)

இந்த ஹதீஸிலிருந்து நபி(ஸல்) அவர்கள் குளித்த நிலையில் தலையில் உள்ள ஈரத்தை வழித்து விட்டவர்களாக இஷாத் தொழுகை நடத்த வந்துள்ளார்கள். தொப்பிபோ, தலைப்பாகையோ எதுவும் அணியாமலே தொழுகை நடத்த வந்துள்ளார்கள் என்பதை உணரலாம்.

ஆறாவது ஆதாரம்.
“நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையைப் போர்த்திக் கொண்ணடவர்களாக – அந்த ஆடையின் இரு ஓரங்களையும் இரண்டு தோள் புயங்களின் மீது போட்டவர்களாகத் தொழக் கண்டேன்”
அறிவிப்பவர் : அம்ரு இப்னு அபீஸலமா (ரழி) நூல் : புகாரி, முஸ்லிம், (தொழுகை பாடம்)

போர்வை போன்ற ஒரே ஒரு ஆடையைப் போர்த்திய நிலையில் நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள்.

ஏழாவது ஆதாரம்.

“ஒரே ஒரு ஆடையில் ஒருவன் தொழுதால் அந்த ஆடையின் இரு ஓரங்களில் வலது ஓரத்தை இடது தோள் புயத்திலும், இடது ஓரத்தை வலது தோள் புயத்திலும் ஆக்கிக் கொள்ளட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : புகாரி.

(இதைப் பற்றிய விரிவான பல ஹதீஸ்கள் ஆடை பற்றிய தலைப்பில் இன்ஷா அல்லாஹ் வெளிவரும்).

மேற்கூறிய இரண்டு ஹதீஸ்களிலிருந்து ஒரே ஒரு ஆடையை மட்டும் அணிந்து தொழலாம் என்பது மிகத் தெளிவு. தனியாக மேலாடையோ, தலைப்பாகையோ , தொப்பியோ இல்லாமல் தொழலாம் என்பதையும் நாம் விளங்குகிறோம்.

எட்டாவது ஆதாரம்.
“நான் வேட்டையாடும் மனிதன்; ஒரே ஒரு கமீஸ் அணிந்து நான் தொழலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஆம்! (தொழலாம்). (குனியும் போது விரிந்து விடாமல்) ஒரு முள்ளைக் கொண்டாவது (இரண்டு பகுதிகளையும்) இணைத்துக் கொள்!” என்றனர்.
அறிவிப்பவர் : ஸலமா இப்னுல் அக்வஃ(ரழி) நூல் : அபூதாவூது, நஸயீ.

ஒன்பதாவது ஆதாரம்.
ஜாபிர்(ரழி) அவர்கள் ஒது கைலியை அணிந்து தொழுதனர். அதைப் பிடரியின் பக்கம் கட்டி இருந்தார்கள், அவர்களின் (உபரி) ஆடைகள் துணிகள் மாட்டும் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்தன.

“ஒரே ஒரு கைலியில் தொழுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உன் போன்ற விபரமற்றவர் இதைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இப்படிச் செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது இப்னு முன்கதிர் (ரழி) நூல் : புகாரி.

இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பல சஹாபாக்களிடம் ஒரு ஆடை தான் இருந்திருக்கின்றது என்பதையும், அதை அணிந்தே நபித் தோழர்கள் தொழுதிருக்கின்றனர் என்பதையும் நாம் தெரிகின்றோம்.

பத்தாவது ஆதாரம்
“ஒரே ஒரு ஆடை மட்டும் அணிந்து தொழுவதும் சுன்னத்துத் தான், நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அப்படிச்செய்து வந்தோம். நாங்கள் குறை கூறப்படவில்லை” என்று உபை இப்னு கஃபு(ரழி) அவர்கள் கூறினார்கள். இதைப்பற்றி இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது, ஆடையில் பற்றாக்குறை இருந்த போது இப்படிச் செய்து வந்தோம். அல்லாஹ் தாராளமாக ஆடையைத் தரும் போது இரண்டு ஆடைகளில் தொழுவதே சிறப்பு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபை இப்னு கஃபு(ரழி) நூல் : அஹ்மத்

இந்த ஹதீஸிலிருந்தும், இரண்டு ஆடைகளுக்குக் கூட வசதியற்றவர்களாகத்தான் பல சஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள். மேலாடைக்கே வசதியற்ற சஹாபாக்கள் தொப்பி, தலைப்பாகை போன்ற மேல் மிச்சமான ஆடைகளை எப்படி அணிந்திருக்க முடியும்?

பதினொராவது ஆதாரம்
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் ” ஒரு ஆடையில் தொழலாமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா என்ன? என்று திருப்பிக் கேட்டார்கள்.
பிறகு இன்னொரு மனிதர் உமர்(ரழி) அவர்களிடம் கேட்ட போது, “அல்லாஹ் தாராளமாக வசதி தந்திருக்கும் போது நீங்களும் விசாலமாக நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அதன்பிறகு கீழே ஒரு கைலி, மேலே ஒரு போர்வை அணிந்தவர்களாகவும். கீழே கைலி, மேலே சட்டை அணிந்தவர்களாகவும் (இன்னும் பலவித ஆடைகள் பற்றி இந்த இடத்தில் குறிப்பிடப்படுகின்றது) தொழுதார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : புகாரீ

நபித் தோழர்கள் பலவித ஆடைகள் அணிந்து தொழுததில் தலைப்பாகையோ, தொப்பிவோ அணிந்ததாக குறிப்பிடப்படவில்லை.

இது போன்ற ஹதீஸ்களை நாம் ஏராளமாக காணலாம். நாம் நினைப்பது போல் நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் பலவித ஆடைகள் பெற்றவர்களாக இருக்கவில்லை. கீழே அணிவதற்குரிய ஒரே ஒரு ஆடை மட்டும் வைத்திருக்கிறார்கள். சிலர் இரண்டு ஆடைகள் வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் நல்ல வசதியுடன் இருந்திருக்கிறார்கள். 

ஆனால் நபி(ஸல்) அவர்கள் யாரையும் தொப்பி, தலைப்பாகை அணியும்படி ஏவவில்லை. தொழுகையின் போதும் ஏவவில்லை. மற்ற நேரங்களிலும் ஏவவில்லை. தொப்பி, தலைப்பாகை அணிவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. அணியாமலிருப்பதற்கும் அனுமதி உண்டு. இதைத்தவிர தலைப்பாகை, தொப்பி அணிவதற்கு விசேஷ அந்தஸ்த்தோ தொழுகையில் அணிந்து கொள்வதால் அதிக நன்மையோ இருக்குமென்றால் நபி(ஸல்) அவர்கள் தெளிவாகவே நமக்குச் சொல்லி இருப்பார்கள்.

தலைப்பாகையின் சிறப்பு பற்றியும், தலைப்பாகை அணிந்து தொழுவதால் பல மடங்கு நன்மை உண்டு என்றும் வந்திருக்கின்றன. ஹதீஸ்கள் எவையும் ஆதாரமற்றவை; இட்டுக்கட்டப்பட்டவை.

முஷ்ரீகீன்களுக்கும் நமக்குமுள்ள வேறுபாடு “தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதீயில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் ஆதாரமற்றது என்று திர்மிதீ இமாமே குறிப்பிடுகிறார்கள்.

“தலைப்பாகையுடன் தொழுவது, தலைப்பாகை இல்லாமல் தொழுவதை விட 700 மடங்கு சிறந்தது” என்பது போன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும் உண்டு. ஜமாஅத் தொழுகைக்கே 29 மடங்கு தான் நன்மை என்பது ஆதாரப் பூர்வமான நபிமொழி. அதை விடவும் பல மடங்கு நன்மை என்று கூறப்படுவதே இது பொய் என்பதற்கு போதுமானதாகும். 

மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து தொப்பி, தலைப்பாகை அணிந்து தான் தொழ வேண்டுமென்பதில்லை என்பதைத் தெளிவாக நாம் அறிகிறோம். இதை மேலும் உறுதிப்படுத்தக் கூடிய சில நிகழ்ச்சிகளையும் காண்போம்.

எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது தலை முடி கலைந்த பரட்டைத் தலையான ஒரு மனிதரைக் கண்டார்கள். “தன் தலைமுடியைப் படியச் செய்வதற்குரிய (சீப்பு போன்ற) பொருள் இவருக்குக் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) நூல் : அபுதாவுது (லிபாஸ் பாடம்)

இந்த ஹதீஸும் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் சஹாபாக்கள் தொப்பி தலைப்பாகை இன்றி இருந்திருக்கிறார்கள் என்பதையும், தலையில் எதையும் அணியும்படி நபி(ஸல்) அவர்கள் ஏவவில்லை என்பதையும் தெளிவு படுத்துகின்றது.

“ஷுரைக்” அவர்கள் எங்களுக்கு தொழ வைத்தார்கள். அப்போது தங்கள் தொப்பியை தங்கள் முன்னிலையில் (யாரும் குறுக்கே சென்று விடாமல் தடுப்பாக) வைத்தார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர் : சுப்யான் இப்னு உயைனா(ரழி) நூல் : அபுதாவூது

தொழும் போது யாரும் குறுக்கே சென்று விடாமல் ஏதேனும் ஒரு பொருளை முன்னால் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நபிவழி. அதற்கொப்ப தன் தலையில் அணிந்திரந்த தொப்பியைக் கழற்றி தனக்கு முன்னால் ஷுரைக்(ரழி) அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள். தொப்பி அணிந்து தொழுவதில் சிறப்பு இருக்குமானால், நபி(ஸல்) இது பற்றி சொல்லி இருப்பார்களானால், இருக்கின்ற தொப்பியையும் கழற்றி வைத்திருக்க மாட்டார்கள் என்று உணரலாம்.

“நபி(ஸல்) அவர்களின் தலைமுடியிலும், தாடியிலும் இருபது நரைமுடிகளே இருந்தன.”
அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புகாரி (மனாகிப்)

தலையில் உள்ள நரை முடியை நபித்தோழர்கள் எண்ணிச் சொல்கிறார்கள் என்றால் சர்வசாதாரணமாக தலையில் எதுவும் அணியாமல் இருந்திருக்கிறார்கள் என்பதை உணரலாம். மேலும், அவர்களின் தலை முடி சுருண்டிருந்ததையும், இன்னும் அவர்களின் தலைமுடிபற்றி பல வர்ணனைகளையும் நாம் “தலை முடி வளர்த்தல்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். பல நேரங்களில் தலையை மறைக்காமல் நபி(ஸல்) அவர்கள் இருந்திருந்தால் தான் அவர்களின் தலைமுடியை இப்படி எல்லாம் நபித்தோழர்களால் வர்ணித்திருக்க முடியும்.

மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து தொப்பி தலைப்பாகை அணிபவர்களை, அணியாதவர்கள் குறைகூறக் கூடாது. அணியாதவர்களை அணிந்தவர்கள் குறை கூறக் கூடாது என்று தெரிகின்றது. மேலும் அணிவோர் அதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கருதவும் கூடாது.

ஒரு சில பகுதிகளில் யாரேனும் இறந்து விட்டால் அவருக்கு தலைப்பாகை அணிவிக்கிறார்கள். அதை சுன்னத் என்றும் நம்புகிறார்கள். அது அறவே ஆதாரமற்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

“நபி (ஸல்) அவர்களின் கபன் ஆடையில் தலைப்பாகையும், சட்டையும் இருக்கவில்லை”
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : புகாரி (ஜனாயிஸ் பாடம்)
நன்றி http://annajaath.com/?p=214

தொப்பி தலைப்பாகை

தொப்பி தலைப்பாகை


இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே இல்லை என்று கூறுகின்றீர்களே! மேற்கண்ட ஹதீசுக்கு என்ன விளக்கம்? 




حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا سَأَلَهُ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ لَا يَلْبَسُ الْقَمِيصَ وَلَا الْعِمَامَةَ وَلَا السَّرَاوِيلَ وَلَا الْبُرْنُسَ وَلَا ثَوْبًا مَسَّهُ الْوَرْسُ أَوْ الزَّعْفَرَانُ فَإِنْ لَمْ يَجِدْ النَّعْلَيْنِ فَلْيَلْبَسْ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الْكَعْبَيْنِ

'இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ, தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளை அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 134, 366, 1542, 1842

இந்த ஹதீஸில் இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணியக் கூடாது என்று கூறியிருப்பதால் இஹ்ராமைக் களைந்தவுடன் அவற்றை அணிய வேண்டும் என்பது தான் பொருள் என்று கூறுகின்றீர்கள்.

வாசக அமைப்புகளைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறையில் அதைப் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள்.

குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு காரியத்தச் செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டால் மற்ற சந்தர்ப்பங்களில் அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற சந்தர்ப்பங்களில் அதைச் செய்தாக வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

நோன்பாளிகள் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றால் இரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்றுதான் பொருள் வரும். இரவில் கண்டிப்பாக தாம்பத்தியத்தில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.

ஜும்மாவுக்கு பாங்கு சொன்ன உடன் கடையை திறந்திருக்கக் கூடாது என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது? ஜும்மா முடிந்தவுடன் விரும்பினால் கடையைத் திறக்கலாம். திறக்காமலும் இருக்கலாம் என்று தான் புரிந்து கொள்வோம். 

அது போல தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணிவதற்கு அனுமதி உள்ளது என்று தான் விளங்க வேண்டும். இன்னும் சொல்லப்

போனால் தொப்பி அணிவது கட்டாயமான ஒன்றல்ல என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

தொப்பி அணிவது அனுமதிக்கப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது கட்டாயம் இல்லை என்பது தான் நமது நிலைப்பாடு. அந்த நிலைபாட்டுக்கு ஆதாரமாகத் தான் இந்த் ஹதீஸ் அமைந்துள்ளது.

ஒரு வாதத்துக்காக நீங்கள் புரிந்து கொள்வது போல் புரிந்து கொள்வது என்றால் மொத்த ஹதீஸையும் அவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது இஹ்ராம் அணீந்தவர் தொப்பி அணியக்கூடாது என்பதை மட்டும் இந்த ஹதீஸ் கூறவில்லை. அத்துடன் சட்டை பேன்ட் காலுறை ஆகியவற்றையும் இஹ்ராமின் போது அணியக் கூடாது எனக் கூறப்படுகிறது. இஹ்ராம் அல்லாத நேரத்தில் இம்மூன்றையும் அணிவது கட்டாயக் கடமை என்று நீங்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை? இதைச் சிந்தித்தால் புரிந்து கொள்வதில் உங்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தை நீங்கள் உணரலாம்.

தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.

தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.
நன்றி http://aleemqna.blogspot.ae/2010/07/blog-post_3182.html 
http://onlinepj.com/aayvukal/thoppiyum_tyhalappakaiyum/
http://niduri.com/?p=613 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.