இணையத்தில் இறைமறை ஆசிரியர் அதிரை ஜமீல் காக்கா அவர்கள் தந்துள்ள அரபு மொழி இலக்கண விளக்கம்
அரபு இலக்கணம் அவசியம்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மதரஸா மாணவர்கள் நிர்ப்பந்தத்தில் இலக்கண
பாடத்தில் அமர்ந்து இருப்பார்கள்.
இடைச்
சொல் - இணைப்புச் சொல் எதுவெல்லாம் இடைச் சொற்கள்? அவை எப்படியெல்லாம் பொருள்
தரும் என்பதை எழுதிக் கொண்டிருந்தால் படிக்க போரடிக்கும். ஆகவே இடை இடையே
பார்ப்போம்.
அரபி மொழியில் ஒன்றை உறுதிபடுத்தும் விதமாக இன்ன -அன்ன என்பது
போல பல சொற்கள் உள்ளன. இது
போன்ற சொற்களுக்கு தஃகீத்- உறுதிபடுத்தும் சொற்கள் என்பார்கள். போன்றவற்றை
2 : 5, 2:10.
2:15 வசனங்களில் விளக்கி உள்ளோம்.
ஒரேயடியாக
இலக்கணத்தை விளக்கினால் போரடித்து விடும். படிக்க மாட்டார்கள். ஆகவே அவ்வப்போதைக்கு
தேவைப்படும் போது இடத்துக்கு தக்கவாறு அரபி இலக்கணத்தைப் பார்ப்போம் என்று ஏற்கவே எழுதி இருக்கிறோம்.
2:22 வசனத்தை ஒட்டிய அரபு மொழி இலக்கணம் பற்றிய விளக்கத்தை இணையத்தில் இறைமறை ஆசிரியர் அதிரை ஜமீல்
காக்கா அவர்கள் நமக்கு அனுப்பி தந்துள்ளார்கள். அதனை
உங்கள் பார்வைக்கு தருகிறோம். அல்லாஹ்வின் பேரருள் அதிரை ஜமீல் காக்கா அவர்கள் மீது என்றென்றும் உண்டாகட்டுமாக ஆமீன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_22.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_22.html
| from: | ஜமீல் , ஸாலிஹ் jameelms@gmail.com | ||
| to: | MohamedFazlul Ilahi | ||
| date: | Dec 22, 2019, 12:43 PM | ||
| subject: | சொல் என்ன சொல்? |
அஸ்ஸலாமு அலைக்கும்.
குர்ஆனின் வசனங்களுக்குச் சொல்லுக்குச் சொல் பொருள் கற்பிப்பதில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு. எனினும், நீங்கள் அண்மைக் காலமாகச் சொற்தொகுப்பைப் பிரித்துப் பொருள் சொல்லும் முயற்சியில் இறங்கியிருப்பது மகிழ்வே!
அரபுச் சொல்லில் இடம் பெறும் உயிர்க் குறிகளும் பொருள் விரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவற்றுள் இரண்டை மட்டும் எனக்குத் தெரிந்த வகையில் விளக்க முயல்கின்றேன்:
அரபு மொழியின் ஒரு பெயர்ச் சொல்லின் ஈற்றெழுத்தில் (கடைசி எழுத்தில்) ஒரு ஃபத்ஹ இருந்தால் பெரும்பாலும் அது தமிழின் இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ என்பதைச் சேர்க்கும்.
الْأَرْضٌ “ அல் அர்ழு(ன்)” என்றால் (இந்த) பூமி. (இஸ்மு மஅரிஃபா-குறிப்பாகு பெயர்)
الْأَرْضَ - (அல்) அர்ழ என்றால் (இந்த) பூமி+ஐ= பூமியை
அரபு மொழியின் ஒரு பெயர்ச் சொல்லின் ஈற்றெழுத்தில் தன்வீனையுடைய இரு ஃபத்ஹக்கள் இருந்தால் பெரும்பாலும் அச்சொல்லின் இறுதியில் தமிழின் “ஆக” எனும் ஆகு பெயராக மாற்றும்:
فِرَاشٌ ஃபிராஷு(ன்) = வசிக்கத் தகுந்த பரந்த விரிப்பு
فِرَاشًا – ஃபிராஷன் = வசிக்கத் தகுந்த பரந்த விரிப்பு+ஆக
السَّمَآءَ- (அ ஸ்) ஸமாஅ = வானம் வானம்+ஐ=வானத்தை
بِنَاءً - பினாஅ(ன்) = கூரை+ஆக= கூரையாக
Comments