2:22 பினாஅ(ன்)வ் என்றால் விதானம் -முகடு -மேற்கூரை, மேற்கட்டி

இந்த வசனத்தில் வானத்தை அல்லாஹ் பினாஅ(ன்)வ் என்று சொல்கிறான். இதற்கு முன் காலத்து அறிஞர்கள் அந்தக் கால தமிழில் விதானம் என்று மொழி பெயர்த்து உள்ளார்கள். அது தமிழ் இல்லை வட மொழி சொல், கன்னடம் என்ற கருத்துடையவர்களும் உண்டு.  தலைப்பில் உள்ள பினாஅ(ன்)வ் என்பது பற்றி அறிவியல் ரீதியான விபரங்களை வார்த்தைக்கு வார்த்தையை பார்த்த பிறகு தெரிந்து கொள்வோம். 

முன்னதாக இந்த வசனத்தில் உள்ள  Fபிராஷ(ன்)வ் என்பதன் நேரடி பொருளான விரிப்பு என்பதையே எல்லா மொழி பெயர்ப்பாளர்களும் பயன்படுத்தி உள்ளார்கள். நாமறிந்வரை அப்துல் ஹமீது பாகவி  அவர்கள் மட்டும்வசிக்கும் இடமாகவும் என்று பயன்பாட்டை மொழி பெயர்ப்பாக ஆக்கி உள்ளார்கள். 1959ல் வெளியான தமிழ் தப்ஸீரில் பூமியை நிலையாகவும் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். அதை இணைப்பு பைலில் காணலாம்.

அது போல மாஅன் என்பதற்கு அதன் நேரடி பொருளான தண்ணீர்  என்பதையும்  அன்Zஸல என்பதன் நேரடி பொருளான இறக்கினான் என்பதையும் இணைத்து   தண்ணீரையும்  இறக்கினான் என்று   இரு அறிஞர்கள் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 

மற்றவர்களெல்லாம். 1. மழையை  பெய்யச் செய்து, 2.மழையை பொழியச் செய்து   3. மழையை பொழிவித்து  என்று மொழி பெயர்த்து உள்ளார்கள். இவற்றை கவனித்துப் படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். 

இங்கே நேரடியான மொழி பெயர்ப்பு தவறான கருத்தை தருவது இல்லை.  என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நேரடியான மொழி பெயர்ப்பு செய்தால் தவறான கருத்து தரும் வசனங்களை பார்க்கும் போது இது பயன்படும் என்பதால் கவனித்துப் படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் என்கிறோம்.  இனி சொல்லுக்கு சொல் பார்ப்போம்


الَّذِي - அல்லதீ(ரீ)
ஒருவன்

جَعَلَ - ஜஃஅல 
ஆக்கினான்- அமைத்தான்


لَكُمُ - லகுமு
உங்களுக்கு


الْأَرْضَ -  (அல்) அர்ழ

பூமி


فِرَاشًا - Fபிராஷ(ன்)வ்

விரிப்பு. 
(அரபு நாட்டில் Fபர்ராஷ் (அதிகமாக விரிப்பவன்) என்று ஒரு வேலை இருக்கிறது. அது இந்த வார்த்தையில் உள்ளது தான்)

 وَ -     
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி    


السَّمَآءَ- (அ ஸ்) ஸமாஅ 

வானம்


بِنَاءً - பினாஅ(ன்)வ்

விதானம் -முகடு -மேற்கூரை, மேற்கட்டி


وَ - 
மேலும்



أَنزَلَ -  அன்Zஸல 

இறக்கினான்-

مِنَ -   மின
இருந்து  (FROM) லிருந்து


السَّمَاءِ -  (அஸ்)ஸமாயி
வானம்

مَاءً - மாஅன்
தண்ணீர்

فَأَخْرَجَ - Fபஅஃக்ரஜ
வெளியாக்கினான்

بِهِ - பிஹி
அதைக்கொண்டு


مِنَ - மின
இருந்து


الثَّمَرَاتِ -  (அ)ஸ்தமராதி  
கனிகள் 


رِزْقًا - ரிZஸ்கன் 
உணவு


لَّكُمْ - லகும்
உங்களுக்கு

فَ - F
எனவே - ஆகவே

لَاலா


வேண்டாம் -

 تَجْعَلُوا- தஜ்அலுா

ஆக்குகிறீர்கள் - செய்கிறீர்கள்

لَا تَجْعَلُوا - லா தஜ்அலுா
ஆக்காதீர்கள் - செய்ய வேண்டாம் - செய்யாதீர்கள்


لِلَّـهِ - லில்லாஹி 
அல்லாஹ்வுக்கு


أَندَادًا - அன்தாதன்
இணைகள் - போட்டியாளர்கள்- நிகரானவர்கள்

وَ - வ
மேலும்

أَنتُمْ - அன்தும்
நீங்கள்

تَعْلَمُ -தஃலமு
அறிக - கற்க

تَعْلَمُونَ - தஃலமூ(ன)ன்
நீங்கள் அறிகிறீர்கள்

الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ
بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّـهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ

அல்லதீ(ரீ) ஜஃஅல லகுமுல் அர்ழ Fபிராஷன் வ ஸ்ஸமாஅ பினாஅன் வ அன்Zஸல மினஸ் ஸமாயி மாஅன் Fபஅஃக்ரஜ பிஹி மினஸ் தமராதி  ரிZஸ்க(ன்)ல் லகும் Fபலா தஜ்அலுா லில்லாஹி அன்தாதன் வ அன்தும் தஃலமூ(ன)ன்.  -
இந்த வசனத்தில் வானத்தை அல்லாஹ் பினாஅ(ன்)வ் என்று சொல்கிறான். இதற்கு முன் காலத்து அறிஞர்கள் அந்தக் கால தமிழில் விதானம் என்று மொழி பெயர்த்து உள்ளார்கள்.

விதானம் -முகடு மேற்கூரை,  மேற்கட்டி  என்று ஒன்றை கூறுவதாக இருந்தால் அது அதற்கு மேலிருந்து வரக் கூடியவற்றை தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வானத்தை அல்லாஹ் கூரை என்று கூறுவதால் அது மேலிருந்து வரும் ஆபத்துகளையும்கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

"நமக்கு மேல் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக முடியும்?" என்று சிலர் எண்ணலாம்.

நவீன ஆய்வுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் திருக்குர்ஆன் கூறுவது போல் வானம்பூமிக்குக் கூரையாக அமைந்துள்ள அதிசயத்தை அறிந்து கொள்ளலாம்.

வானம் என்பது இரு அர்த்தங்களில் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றிய விரிவான விபரத்தை  2:19 வசன வார்த்தைக்கு வார்த்தையில் வெளியிட்டு விட்டோம்.

சந்திரனில் பகல் நேர வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. சந்திரனுக்கு அருகிலுள்ள பூமியிலும் ஏறத்தாழ இதே அளவு வெப்பம் தான் இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 40 டிகிரி அளவுக்குத்தான் பூமியில் வெப்பம் உள்ளது. இதற்குக் காரணம்நமக்கு மேலே உள்ள காற்றுக்கூரை தான்.

தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை காற்றின் முதல் அடுக்கு உள்ளது. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்துசூரியனின் வெப்பம் முழுமையாக பூமியைத் தாக்காமல் காக்கின்றது.

இந்த அடுக்கில் நைட்ரஜன்ஆக்ஸிஜன்கார்பன் டை ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் இது கூரை போல் செயல்படுகிறது.

பூமியிலிருந்து 16. கி.மீ. முதல் 50 கி.மீ. வரை அடர்த்தி குறைவானவிமானம் பறப்பதற்கு ஏற்ற காற்று உள்ளது.

இந்த இரண்டாம் அடுக்கில் பூமியிலிருந்து 20 முதல் 35 கி.மீ. வரை ஓசோன் படலம் உள்ளது. சூரியனிலிருந்து ஏழு வண்ணங்களில் கதிர்கள் வெளிப்படுகின்றன. அதில் புறஊதாக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்த உயிர்க் கொல்லியாகும். உயிரினங்களிலுள்ள அணுக்களை இக்கதிர் அழித்து விடும்.

தண்ணீரிலுள்ள கிருமிகளை அழிப்பதற்கு இந்தப் புறஊதாக் கதிர்களைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் உள்ளது. இந்தக் கதிர்கள்தண்ணீரிலுள்ள அனைத்துக் கிருமிகளையும் முற்றிலுமாக அழிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது.

இத்தகைய சக்தி வாய்ந்த புறஊதாக் கதிர்கள்உயிரினங்கள் மீது பட்டு உயிரினங்கள் அழிந்து விடாத வகையில் ஓசோன் படலத்தால் தடுக்கப்படுகின்றது.

இந்த வகையிலும் வானம் கூரையாக அமைந்துள்ளது.

பூமியிலிருந்து 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை நடுஅடுக்கு உள்ளது. விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்களும்வால்நட்சத்திரங்களும் மணிக்கு 43,000 முதல் 57,000 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன.

இதில் சில கற்கள் 96,000 ச.மீ. பரப்பளவு கொண்டதாகும். இவ்வளவு பெரிய விண்கற்கள் சுமார் 50,000 கி.மீ. வேகத்தில் வந்து பூமியைத் தாக்கினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் சேதம் பூமியில் ஏற்படும். ஆனால் அப்படி நடக்காமல் சீறி வரும் விண்கற்களை இந்த நடுஅடுக்கு எரித்துசாம்பலாக்கி விடுகின்றது.

தப்பித் தவறி சிதறுண்டு விழும் விண்கற்களின் வேகமும் மட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த வகையிலும் வானம் கூரையாகச் செயல்படுகின்றது.

பூமியிலிருந்து 80 கி.மீ. முதல் 1600 கி.மீ. வரை வெப்ப அடுக்கு உள்ளது. ஹீலியம்ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் இங்கே அதிகம் உள்ளதால் இந்த அடுக்கு வெப்பப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒலிஒளி அலைகள் இங்கே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.

இந்த வகையில் பூமியை விட்டு ஒலிஒளி அலைகள் வெளியேறாமல் தடுக்கும் கூரையாகவும் இது அமைந்துள்ளது.

வானத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான தடுப்புகளை ஏற்படுத்தி விட்டுத்தான் வானத்தைக் கூரை என்று இறைவன் கூறுகிறான்.

திருக்குர்ஆன் இறைவனின் கூற்று என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாக உள்ளன.

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5) கூறுகின்றன. (நன்றி PJ தர்ஜுமா)


மொழிப்பெயர்ப்புகள் :

2:22. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை507 முகடாகவும் அமைத்தான்.288 வானிலிருந்து507 தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!  (P.J)

அவனே உங்களுக்காகப் பூமியை வசிக்கத் தகுந்த பரந்த விரிப்பாகவும் வானத்தைக் கூரையாகவும் அமைத்து, வானிலிருந்து மழையைப் பொழியச் செய்து, அதன் மூலம் உங்கள் உணவிற்காகக் கனிகளை வெளிக் கொணர்கிறான். (இவற்றையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே அந்த ஒரே அல்லாஹ்வுக்குப் பல இணைகளைக் கற்பிக்காதீர். (அதிரை ஜமீல்)


அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும்வானத்தை விதானமாகவும் அமைத்துவானத்தினின்றும் மழை பொழியச் செய்துஅதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.  ஜான்

அ(ந்த இறை)வனே உங்களுக்கு பூமியை விரிப்பாகவும்,  வானத்தை   முகடாகவும் ஆக்கி,  வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி,  அதிலிருந்து உங்கள் உணவிற்காகக் கனிவர்க்கங்களை வெளியாக்கினான்;   (இதையெல்லாம்) நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு  இணைகளை ஆக்காதீர்கள்.( இம்தாதி)

அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும்வானத்தை ஒரு முகடாகவும் அமைத்துமேகத்திலிருந்து மழையைப் பொழிவித்துஅதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள். (அப்துல் ஹமீது பாகவி)

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (IFT)

அவனேஉங்களுக்கு பூமியை விரிப்பாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்துவானத்திலிருந்து (அவனே) மழையைப் பொழிவித்துஅதனைக்கொண்டு கனி வகைகளிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் (தெளிவாக) அறிந்துகொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள்.  (சவூதி)


(உங்கள் ரப்பு எத்தகையவனென்றால்) அவன் பூமியை  உங்களுக்கு விரிப்பாகவும்,  வானத்தை   முகடாகவும்  (நீங்கள் வாழ்வதற்குத் தக்கவாறு) அமைத்தவன்,   மேலும் வானிலிருந்து  மழையை  பெய்யச் செய்து  அதன் மூலம் பல வகையான  கனிகளிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். ஆகவே நீங்கள் ;   (வற்றையெல்லாம் நன்கு) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எவ்வித   இணைகளையும் ஏற்படுத்தி விடாதீர்கள்(பஷாரத்)


(உங்கள் இறைவனாகிய) அவன் உங்களுக்கு பூமியை  விரிப்பாகவும்,  வானத்தை   விதானமாகவும்  அமைத்து, வானிலிருந்து மழையை பொழியச் செய்து அதன் மூலம்  கனி வகைகளிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். எனவே (இவற்றை) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு (எவ்வித)   இணைகளையும் நீங்கள் ஆக்காதீர்கள்(மலிவு பதிப்பு)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.