Posts

Showing posts from April, 2020

சுவாமி அக்னிவேஷ் கேள்வி!

நான் தாக்கப்பட்டபோது பா.ஜ.கவோ, தொலைகாட்சி  தொகுப்பாளர்களோ ஏன் கொந்தளித்து கண்டிக்கவில்லை?- சுவாமி அக்னிவேஷ் கேள்வி! மஹாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் சமீபத்தில் கலவரக்கும்பலால் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பா.ஜ.க மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களால் கடுமையாக கண்டித்து கூப்பாடு போடப்பட்டது.     கொல்லப்பட்ட மூவரில் இருவர் வாரணாசியில் உள்ள ஒரு அகாராவைச் சேர்ந்த சாதுக்கள் என்பதை மையமாக வைத்து  பா.ஜ.க மற்றும் சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களான வலதுசாரி மதவெறியர்கள் இந்த கொலைக்கு மதசாயம் பூசி மதகுரோதத்தை    வளர்க்க முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அத்தனை பேரும் சங்பரிவாரால் இந்து என கூறப்படும் பழங்குடி சமூகத்தினர்தான்; ஒருவர் கூட முஸ்லிமோ, கிறிஸ்தவரோ கிடையாது.          2018 ஜூலையில் இதே மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் துலே என்ற இடத்தில் கோசாவி பழங்குடியினர் சம்பந்தப்பட்ட இதே போன்ற ஒரு கும்பல் கொலை நடந்தது. ஆனால்  அப்போது மஹாராஷ்ட்ராவில் பா.ஜ.க ஆண்டு கொண்டு இருந்ததால் இந்த இந்துத்துவ வெறியர்கள் அப்போது அதை பெரிது படுத்தாமல்  வ

உண்மையான ஜிஹாதிகளுக்காக துஆச் செய்யவில்லை அதனால்?

கதை அல்ல, கற்பனை அல்ல நடந்த சம்பவம். இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக  செயல்பட்டு உம்முல் முஃமினீன்களை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான ஜிஹாதில் பலர்  ஈடுபட்டனர். போலீஸ், ராணுவம், உளவுத்துறை இப்படியான நாட்டின் அத்தனை பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் வாகனங்களும் ஒரு இரவில் குறிப்பிட்டவர் பணி புரியும் அலுவலகத்தைச் சூழ்ந்தன. https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_29.html எல்லாரும் மப்டியில். அந்த பில்டிங்கிலிருந்த பாபர் ஷாப், கேரேஜ், சிற்றுண்டிச் சாலை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடைக்கு வந்தது போல் அந்தந்த கடைகளுக்கு முன் நின்று  கஸ்டமர் போல் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் குறிப்பிட்டவர் பணி புரியும் பாஸிடம் சென்ற அதிகாரிகள் தங்கள் அடையாள அட்டையைக் காட்டி இன்ன ஆளை சப்தமில்லாமல் எங்களுடன் அனுப்பித் தா. யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது என்கிறார்கள். பாஸும் ஒத்துழைக்கிறார்.  பாஸுக்கு கீழ் உள்ளவரை அனுப்பி குறிப்பிட்ட அந்த நபரிடம் அன்பாக சிரித்துப் பேசி  இவர்களுடன் கொஞ்சம் போய் வா என்று சொல்ல வைக்கிறார். சம்பந்தப்பட்டவரும் வேலை செய்யும் இடத்திலிருந்து வெளியேறுகிற

கீழை ஜமீல் காகாவுக்கு உதவிய அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் யார்?

Image
ஆரம்ப கால கொள்கைப் பிரச்சாரகர். நீண்ட நெடிய கால நண்பர். ஒன்றாகப் பயணித்தோம். ஒரே அமைப்பில் இருந்தோம். ஒரே பாயில் படுத்தோம். இது எல்லாருக்கும் எல்லா அமைப்பினரும் எழுதும் கடைசிப் புகழ்பா. அது தான். கீழை  முலஜாவுக்கும் கிடைத்தது. ஆரம்ப கால தவ்ஹீது பிரச்சாரகராக இருந்தவர். காபிரானவர்களை தலைவர்களாக ஏற்று செயல்பட்டவர்களை கடுமையாகச் சாடி கண்டன கனைகளை கர்ஜித்தவர் கடைசியில் காங்கிரஸ் கட்சி பிரமுகராக ஆனார்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_28.html கீழக்கரையில்  டிரைவராக இருந்த ஒருவர்  2013ல்   தற்கொலை செய்து கொண்டார். அதில்  கீழை ஜமீல் காகாவின் மனைவி, அவரது  அண்ணன்  சுலைமான்   உட்பட பல  குடும்பத்து பெண்கள் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்கள். அந்த சமயத்தில்  அவர் இருந்த  அமைப்பு அவருக்கு சரியான முறையில்  உதவவில்லை. எல்லாருக்கும் செய்யக் கூடிய விளம்பர விளையாட்டுக்களே போட்டார்கள் என்று   அவரே சொன்னார். ராம்நாட்டில் உள்ள அல்லாஹ்வின் அருளுக்குரியவர் ஈடுபட்டு ஹை கோர்ட் வக்கீல் ஜின்னா மூலம்  முன் ஜாமீன் எடுத்துக் கொடுத்தார்.  அந்த வழக்கு 2020  ஏப்ரல் 7ல் விசாரணக்

ஸபா நாட்டு ராணியின் அர்ஷும் அல்லாஹ்வின் அர்ஷும் ஒரே மாதிரி என்பார்களா?

அவரிடம் கூறிய நாதாக்களும் பெரியார்களும் நம்மிடம் கூற மாட்டார்களா? ஸஜதா   என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு.  முந்தைய நிகழ்வுகளை   முஹம்மது   நபி(ஸல்)   உம்மத்தினராகிய நாம் செய்யும்   ஸஜதா   போல்    ஸஜதா  செய்தார்கள். என்று  எடுத்துக் கொள்ளக் கூடாது. என்பதற்குரிய  ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே கண்டு வருகிறோம்.   https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_27.html இதற்கு இடையில்  குறுக்கு கேள்வி ஒன்றைக் கேட்டார். அதுவும்  குர்ஆன் வசன ஆதாரத்துடன் என்று குறிப்பிட்டு  கேட்டார்.   என்ன வசனம்?  அல் குர்ஆன்  12:100 . ல் எகிப்தின் அதிபதியாக இருந்த நபி யூசுப்(அலை) அவர்களுக்கு ஸஜதா செய்தனர் என்று உள்ளது.  அது அந்த சமுதாய ஷரீஅத் சட்டத்தில் ஆகுமாக்கி வைக்கப்பட்டிருந்தது. அது மரியாதை நிமித்தமான ஸஜதான் தான். ஆகவே பெரியார்களுக்கும் நாதாக்களுக்கும்  மரியாதை நிமித்தமாக காலில் விழலாம் என்று ஒரு மவுலவி கூறினார் என்றார். குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேளுங்கள் என்றோம்.  பெரியார்களும் நாதாக்களும் சொல்ல நான் கேட்டேன் என்று அந்த மவுலவி பதில் கூறினார் என்றார்.  நமது காலத்தில் வாழும் அந்த