முதுகு இல்லாதவைகளும் குனிந்து வளைந்தனவா?

அர்ஷ் - சிம்மாசனம், ஸலாத் - தொழுகை, ஸவ்ம் - நோன்பு  போன்றவை  வார்த்தை ஒன்றாக இருந்தாலும் பொருள் ஒன்றல்ல என்பதை குர்ஆனினிலிருந்தே அறிந்தோம். 

அது போல்தான்  ஆதமுக்கு(அலை) செய்த ஸஜ்தா   முதல் சொல்லப்பட்டு வந்துள்ள அனைத்து  ஸஜ்தா  என்ற வார்த்தைகளும் வார்த்தையால்  ஒன்றாக இருந்தாலும் பொருளால்   ஒன்றல்ல.   

https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_4.html


முந்தைய ஸஜ்தாக்கள் நமது வழக்கில் உள்ள ஸஜ்தா  போன்றவை  அல்ல.  என்பதையும் குர்ஆனிலிருந்தே அறிந்து வருகிறோம்.  அதன் 5 வது தொடர்  இது.

நமது வழக்கில் உள்ள ஸஜ்தா செய்ய  சிரம்-தலை (நெற்றி, முகம், மூக்கு) கைகள், மூட்டுக் கால்கள் தேவை. குனிய முதுகும் தேவை. இவை இல்லாதவைகளும் ஸுஜூது செய்கின்றன என்ற வசனங்களும் குர்ஆனில் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.



வன்னஜ்மு வஷ்ஷஜரு யஸ்ஜுதா(னி)ன்

 وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدٰنِ

மரங்களும், செடி கொடிகளும் அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. 55:6.




........... சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும் ஸுஜூது செய்கின்றன (22:18) 
  

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே ஸுஜூது செய்கின்றன அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் (ஸுஜூது செய்கின்றன 13:15  

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். 16:49.  

22:18, 13:1516:49.   ஆகிய மூன்று வசனங்களிலும்    يَسْجُدُ - யஸ்ஜுது  என்ற  வார்த்தைகளே உள்ளன.

மலைகள்  இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. மரங்களோ அசையும் நகராது.  நின்ற நிலையில் இருந்து மாறி உள்ளங்கால் தரையில் படாமல் மூட்டோடு சாய்வது தான் நமது வழக்கில் உள்ள நாம் செய்யும் ஸஜ்தா.

நகராத, நகர முடியாத மலைகளும்    மரங்களும்  குனிந்து ஸஜ்தாச் செய்கின்ற என்றால் என்ன பொருள்? சிந்திக்க வேண்டும். 

...அவற்றின் நிழல் வலப்புறங்களிலும் இடப்புறங்களிலும் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்தவையாகச் சாய்ந்து  விழுகின்றன. 16:48.  இந்த வசனத்திலும்  سُجَّدً -ஸுஜ்ஜதன்  என்ற  வார்த்தையே உள்ளது.  


பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும்  எனக்கு ஸஜதா  செய்ய   கண்டேன்' 12:4.  இந்த  வசனத்திலும்  سٰجِدِيْنَ‏ ஸாஜிதீன என்ற  வார்த்தைதான் உள்ளது.


சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மரங்கள், ஊர்வன மற்றும் மலைகள் உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்கின்றன என்ற அல் குர்ஆனில் உள்ள வசனங்களைக் கண்டோம்.  

தலை - சிரம் ( நெற்றி முகம், மூக்கு) கைகள், மூட்டுக் கால்கள் குனிய முதுகு  இல்லாத மேற்கண்டவைகளும் குனிந்து வளைந்து ஸஜதா செய்தன என்றால். அவை நமது வழக்கில் உள்ள ஸஜ்தா  போன்றது  அல்ல என்பது மிகத் தெளிவாகி விட்டது. 2:58, 4:154, 7:161 ஆகிய வசனங்கள் மூலமும் முந்தைய வெளியீட்டில்  தெளிவு பெற்றோம். 

இனி நாம் தெளிவு பெற வேண்டியது வானவர்கள் ஸஜ்தா பற்றியது மட்டுமே.


வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் கிடையாது. 

சில நேரங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் 'ஜிப்ரீல்' என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். 

அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த (நிறைத்த) வடிவத்திலும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்சி தந்துள்ளார்

வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (புகாரி 4)

வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். 35:1.  

இந்த வசனம் வானவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன என்பதற்கு ஆதாரமாக உள்ளது. ஆகவே, வானவர்களையும்  நம்மைப் போன்றவர்களாகக் கருதவே முடியாது

எனவே வானவாகள் செய்ததும் நமது வழக்கில் உள்ள ஸஜ்தா  போன்றது  அல்ல என்பதும் தெளிவாகி விட்டது. அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டுவானோ அவர்கள் மட்டுமே  குர்ஆன், ஹதீஸுக்கு  கட்டுப்படுவார்கள்.  

குர்ஆன், ஹதீஸில் தெளிவாக  உள்ளதற்கு மாற்றமாக நாதாக்களும் பெரியார்ளும் சொல்ல நான் கேட்டேன் என்று  மக்களை ஏமாற்றுகிறவர்கள். இப்படி மக்களை ஏமாற்றும் வேதம் சுமப்பவர்களை  கண் மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள் ஆகியவர்களே புலம்பி கதறுபவர்கள்எப்படி? கதறி புலம்புவார்கள்?  கீழ் உள்ள தலைப்பை  கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்

புலம்பி கதறுபவர்கள் யார்? எப்படி? கதறி புலம்புவார்கள்?


ஸஜதா பற்றி முன்பு வெளியிட்ட விளக்கத் தலைப்புகள் கீழே உள்ளன. மீண்டும் பார்த்துக் கொள்ளுங்கள். நினைவூட்டல் முஃமின்களுக்கு பலன் தரும்.

2:34. 2:34 வசனத்தில் உள்ள ஸஜதாவுக்கு விளக்கமாக உள்ள முந்தைய தலைப்புகள்

ஸபா நாட்டு ராணியின் அர்ஷும் அல்லாஹ்வின் அர்ஷும் ஒரே மாதிரி என்பார்களா?



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு