பிறை. ஜ.உ.சாவின் தலைமை உலமாக்கள் கவனத்திற்கு

பிறை அறிவிப்பு சம்பந்தமாக ஒவ்வொரு கால கட்டங்களிலும் தலைமை காஜியின் அறிவிப்பு  ஒவ்வொரு விதமாக வந்து கொண்டிருக்கிறன. அதை ஒட்டிய சர்ச்சைகளும் முடிந்தபாடில்லை. மாவட்ட வாரியாக காஜிகள் இருக்கிறார்கள். மாவட்ட காஜிகள் எல்லாரும் உலமாக்கள் சபையைச் சார்ந்தவர்கள்தான்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_15.html


ஜ.உ.சாவின் பிரதிநிதிகளான மாவட்ட காஜிகளாக உள்ள உலமாக்கள் பார்த்த பிறையை, அவர்கள் கூறும் தகவல்களை, சாட்சியங்களை, உலமாக்கள் கூடி கருத்துப் பறிமாற்றம் செய்து முடிவு எடுத்து கூறும் எந்தக் கருத்தையும்,  மாநில காஜி ஸலாவுத்தீன் ஏற்றுக் கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் மக்களில் ஒரு சாராரிடம் உள்ளன.

மாநில காஜி ஜ.உ.சாவின் உலமாக்களோடு கலந்து ஆலோசனை செய்கிறாரா? ஜ.உ.சாவின் பிரதிநிதிகளான மாவட்ட காஜிகளாக உள்ள உலமாக்கள் மாநில காஜிக்கு ஆலோசனை சொல்கிறார்களா? என்ற கேள்விகளும் மக்களில இன்னொரு சாராரிடம் உள்ளன.

CAA, NRC, NPR., மற்றும் கொரோனா பிரச்சனைகளுக்குப் பிறகு இன்றைய நிலை. ஜ.உ.சாவின் தலைமை உலமாக்கள் அ.தி.முக.  அரசோடு நெருக்கமாக உள்ளார்கள். ஜ.உ.சாவின் உலமாக்கள் சொல்லுக்கு அ.தி.முக. அரசு செவி சாய்க்கிறது என்றாகி விட்டது, . இதை ஜ.உ.சாவின் தலைமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜ.உ.ச. என்பது மாநிலம் தழுவிய அமைப்பு. ஒவ்வொரு பள்ளியிலும் பேஷ் இமாம்களாக, தலைமை இமாம்களாக, துணை இமாம்களாக சேவைப் பணி செய்பவர்கள் எல்லாம் உலமாக்கள் தான். ஒரு நாளுக்கு ஐந்து முறை மக்களோடு தொடர்புடைய வேலையில் இருக்கும் ஜ.உ.சாவின் உலமாக்களுக்கு தகவல்கள் எளிதில் வந்து விடும்.

ஆண்டுக்கு இரு முறை T.V.க்களுக்கு தலை காட்டுபவர்தான் தலைமை காஜி. மக்களோடு எந்த தொடர்பும் கிடையாது. 

ஆகவே பிறை விஷயத்தில் மக்களோடு எல்லா நாளும் எல்லா தொடர்பும் உடைய ஜ.உ.சாவினர் தரும் தகவல்கள் அடிப்படையில், ஜ.உ.சாவின் மாநில தலைமை முடிவு எடுத்து தமிழக அரசின் மாநில தலைமை காஜி ஸலாஹுத்தீன் அவர்களுக்கு தெரிவிக்கும். அதை தலைமை காஜி அரசு சார்பாக அறிவிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது  நல்லது. வரக் கூடிய காலங்களில் குழப்பம் ஏற்படாது.

கடந்த மாதம் ஷஃபான் பிறை பார்த்த செய்தியை ஒரு வாரம் கழித்துதான் தலைமை காஜி ஸலாஹுத்தீன் அறிவித்தார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.. கடந்த மாதம் சிலருக்கு 29லும் சிலருக்கு 30லும் முடிந்தது. மாநில அளவில் பிறை தென்பட்டதால் குழப்பம் இல்லாமல் முடிந்தது. என்று சொல்லிக் கொண்டாலும் பல புகைச்சல்கள் உள்ளன.

குமரி மாவட்டம் 1956ல் தமிழகத்தோடு இணைந்து விட்டது. ஆனால் இஸ்லாமியர்களுடன் தான் இன்னும் இணைய முடியவில்லை.  பிற மாநிலமான மலேகான்  பிறையை ஏற்ற காஜி  தன் மாநில மக்களான குமரி மாவட்ட மக்கள் கண்ட பிறையை நிராகரித்தார்.

என்ன காரணம்? 
எல்லை பிரச்னையா? 
தூரப் பிரச்னையா? 
மாநில பிரச்னையா?
இல்லை அரசின் வசதிக்காகவா?
தலைமை ஹாஜி அரசின் ஊழியரா?
அல்லது இஸ்லாமியர்களின் பிரதிநிதியா?
அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப செயல்படுகிறாரா?
அல்லது இஸ்லாமிய அடிப்படையில் செயல்படுகிறா? தலைமை ஹாஜி என்பதை தெளிவு படுத்தவும். இப்படி ஏராளமான விமர்சனங்கள் வரலாற்றில் உண்டு.

காணும் பிறை, கணக்குப் பிறை, சவூதிப் பிறை, சர்வதேசப் பிறை, மாநிலப் பிறை, மத்திய(ரசு)ப் பிறை, தகவல் பிறை. மாவட்டப் பிறை, அவரவர்கள் பகுதிப் பிறை என பிறையின் பெயரால் பல பிர்காக்கள் இருக்கின்றன. இருந்தாலும் விரும்பியோ விரும்பாமலோ தமிழக அரசின் தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்று செயல்படுவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அன்றுதான் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையும் கிடைக்கும்.

ஆகவே பிறை விஷயத்தில் உலமாக்கள் சபையை கலந்து  தலைமை காஜி அறிவிப்பு செய்ய வேண்டும் அதற்கு அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று ஜ.உ.சாவின் கோரிக்கையாக வையுங்கள். இதை பலரது வேண்டுகோளின் படி ஜ.உ.சாவின் தலைமை உலமாக்கள் கவனத்திற்கு பகிரங்கமாக எழுதி உள்ளோம்




Comments

Unknown said…
தலைமை காஜி என்ன சொன்னால் உங்களுக்கு என்ன?
உலமாக்கள் சபை என்ன‌ சொன்னால் உங்களுக்கு என்ன?
எதையும் ஏற்கும் கொள்கையில் நீங்கள் இல்லை
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் ஊலையிட வேண்டும்

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.