ஸபா நாட்டு ராணியின் அர்ஷும் அல்லாஹ்வின் அர்ஷும் ஒரே மாதிரி என்பார்களா?

அவரிடம் கூறிய நாதாக்களும் பெரியார்களும் நம்மிடம் கூற மாட்டார்களா?

ஸஜதா என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு. முந்தைய நிகழ்வுகளை முஹம்மது  நபி(ஸல்)  உம்மத்தினராகிய நாம் செய்யும்  ஸஜதா போல்  ஸஜதா செய்தார்கள். என்று  எடுத்துக் கொள்ளக் கூடாது. என்பதற்குரிய  ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே கண்டு வருகிறோம்.  
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_27.html இதற்கு இடையில்  குறுக்கு கேள்வி ஒன்றைக் கேட்டார். அதுவும் குர்ஆன் வசன ஆதாரத்துடன் என்று குறிப்பிட்டு கேட்டார்.  என்ன வசனம்? அல் குர்ஆன் 12:100.ல் எகிப்தின் அதிபதியாக இருந்த நபி யூசுப்(அலை) அவர்களுக்கு ஸஜதா செய்தனர் என்று உள்ளது. 

அது அந்த சமுதாய ஷரீஅத் சட்டத்தில் ஆகுமாக்கி வைக்கப்பட்டிருந்தது. அது மரியாதை நிமித்தமான ஸஜதான் தான். ஆகவே பெரியார்களுக்கும் நாதாக்களுக்கும் மரியாதை நிமித்தமாக காலில் விழலாம் என்று ஒரு மவுலவி கூறினார் என்றார்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேளுங்கள் என்றோம். பெரியார்களும் நாதாக்களும் சொல்ல நான் கேட்டேன் என்று அந்த மவுலவி பதில் கூறினார் என்றார். 

நமது காலத்தில் வாழும் அந்த  மவுலவியிடம் கூறிய அந்த பெரியார்களும் நாதாக்களும் யார் என்று கேளுங்கள். அவரிடம் கூறிய நாதாக்களும் பெரியார்களும் நம்மிடம் கூற மாட்டார்களா? அவர்களிடம் நாமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்றேன். 

உங்கள் சொத்தை பள்ளிக்கு எழுதி வைத்து விடும்படி உங்கள் வாப்பா சொல்லி உள்ளார். அதை பெரியார்களும் நாதாக்களும் சொல்ல நான் கேட்டேன் என்று சொன்னால் நம்பி சொத்தை பள்ளிக்கு எழுதி வைத்து விடுவீர்களா? 

குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் இல்லாமல் மார்க்கம் என்ற பெயராலும் வரலாறு என்றும் சொல்லி விட்டு. பெரியார்களும் நாதாக்களும் சொல்ல நான் கேட்டேன் என்று யார் .சொன்னாலும் எப்படி நம்புகிறீர்கள்?. அந்த பெரியார்களும் நாதாக்களும் யார் என்று ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?

12:100 ல் கூறி உள்ளது முந்தைய சமுதாய ஷரீஅத் சட்டத்தில் ஆகுமாக்கி வைக்கப்பட்டிருந்தது என்று சொல்லி விட்டு. இன்றைய  பெரியார்களுக்கும் நாதாக்களுக்கும் மரியாதை நிமித்தமாக காலில் விழலாம் என்று கூறி உள்ளதே முரண்பாடு தானே. முந்தைய சமுதாய ஷரீஅத் சட்டத்தை நாம் எப்படி பின் பற்ற முடியும்?  

12:100 ல் கூறி உள்ள அந்த ஸஜதா நாம் செய்யும் ஸஜதா மாதிரி எடுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு அந்த வசனத்திலேயே ஆதாரம் உள்ளது. என்ன ஆதாரம்?

وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ

அவர் தம் தாய் தந்தையரை அர்ஷின்  மீது  அமர வைத்தார் என்ற வார்த்தை உள்ளது. இது என்ன மாதிரியான    அர்ஷ்?   அல்லாஹ்வின்  அர்ஷும் இதுவும் ஒரே மாதிரிதான் என்று பொருள் கொள்வாரா? அந்த மவுலவி? 

அர்ஷ் என்ற வார்த்தை ஒன்றாக இருந்தாலும் பொருள் ஒன்றல்ல என்பதற்கு இது ஆதராம் அல்லவா. இதுபோல் தான் அந்த உம்மத்தின் ஸஜதாவும்   முஹம்மது  நபி(ஸல்)  உம்மத்தினராகிய நமது ஸஜதாவும் வார்த்தை ஒன்றாக இருந்தாலும் பொருள் ஒன்றல்ல என்பதற்கு ஆதாரமாகும். 

ஸபா நாட்டு ராணியின் சிம்மாசனம் - அரியணை   பற்றி ஹுத் ஹுத்' பறவை கூறிய போது

 وَّلَهَا عَرْشٌ عَظِيْمٌ 27:23.

வலஹா அர்ஷுன் அழீம் அவளுக்கு மகத்தான அர்ஷும் உள்ளது  என்று தான் கூறி உள்ளது. அதுவும் குர்ஆனில் தான் உள்ளது. 

அல்லாஹ்வின்  அர்ஷ் பற்றி கூறப்பட்டுள்ள 20 வசனங்களில்   9:129,    23:86,   27:26.   ஆகிய  3 குர்ஆன் வசனங்கள்  

هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ 

ஹுவ ரப்புல்  அர்ஷில் அழீம் என்று தான் உள்ளது. அதே அர்ஷ் அதே அழீம் என்ற வார்த்தைகள் தான் கூறப்பட்டுள்ளன..

அர்ஷுன் அழீம் என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ஸபா நாட்டு ராணியின் அர்ஷும் அல்லாஹ்வின்  அர்ஷும் ஒரே மாதிரிதான் என்று பொருள் கொள்ள முடியுமா? 


27:38  اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا

உங்களில் யார்? அவளது  அர்ஷை என்னிடம் கொண்டு வருபவர் என்று சுலைமான் நபி கேட்ட அர்ஷ்


,27:41   نَكِّرُوْا لَهَا عَرْشَهَا
"அவளது அர்ஷை அடையாளம் தெரியாமல் மாற்றுங்கள்! என்று சுலைமான் நபி சொன்ன அர்ஷ்  

 اَهٰكَذَا عَرْشُكِ27:42
"உனது அர்ஷ் இப்படித்தான் இருக்குமா?'' என்று ஸபா நாட்டு ராணியிடம்  சுலைமான்  நபி  கேட்ட அர்ஷ்  என்ன மாதிரியான அர்ஷ்? 


7:54, 9:12910:311:7, 13:2,17:42, 20:5, 21:22, 23:86, 23:116, 25:59, 27:26, 32:4, 39:75, 40:7, 40:15, 57:4, 69:17, 81:20, 85:15 ஆகிய  20 இடங்களில் அல்லாஹ்வின் சிம்மாசனம் - அரியணை   பற்றி  கூறி உள்ள இடங்களில் அர்ஷ் என்று தானே குர்ஆனில் உள்ளன. அப்படியானால் எல்லாம் ஒன்றா? 

அல்லாஹ்வின் அர்ஷ் எப்படி இருக்கும்? அவனது இருக்கை, வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். 2:255.

நன்றாக கவனிக்க வேண்டும் வான், பூமியை விட என்று ஒருமையில் சொல்லவில்லை. (ஏழு) வானங்களையும், பூமியையும் விட மிகப் பெரியது என்று கூறப்பட்டுள்ளது.

அர்ஷ் என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா  அர்ஷும் ஒரே மாதிரிதான் என்று பொருள் கொள்ள முடியுமா? 

அது போல் தான் ஸஜதா என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா ஸஜதாவும் ஒரே மாதிரிதான் என்று பொருள் கொள்ளக் கூடாது. பொருள் கொள்ள முடியாது. 

இன்னும் தெளிவாக விளங்க இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம்.  மூஸா நபி(அலை) அவர்களின்   சமுதாயத்தை  ஒரு  கிராமத்துக்குள்   செல்லுமாறு கூறும்  இறைவன்   

 وَّادْخُلُوا الْبَابَ

வத்ஃகுலுால்  பாப  

வாசல் வழியாக நுழையுங்கள்


  سُجَّدًا
  ஸுஜ்ஜதன்
“ஸஜ்தா செய்தவர்களாக என்று 

அல்லாஹ்வின் இந்தக் கட்டளைகள் 2:58, 4:154, 7:161 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ளன. முஹம்மது நபி(ஸல்)  உம்மத்தினராகிய நமது வழக்கில் உள்ள ஸஜ்தா'வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியுமா? 

நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும்படி “ஸஜ்தா செய்தவர்களாக வாசல் வழியாக நுழைய  என்று பொருள் கொண்டால் அதை செயல்படுத்த முடியுமா? சிந்தித்துச் சொன்னால்.. உறுதியாகச் சொல்வீர்கள் முடியாது என்று.

உள்ளங்கை நெல்லிக் கனியாக உள்ள இந்த ஒரு வசனமே போதும். ஆதம்(அலை) முதல் சொல்லப்பட்டுள்ள அத்தனை ஸஜ்தா என்ற வார்த்தைகளும்   முஹம்மது   நபி(ஸல்)  உம்மத்தினராகிய நமது வழக்கில் உள்ள ஸஜ்தா  போன்றது அல்ல என்பதற்கு.

அல்லாஹ்வின் அடி பணிதல் - அல்லாஹ்வின் பாதம் தொழல் என்ற பொருளுடைய நமது ஸஜ்தா  போன்றது  அல்ல  என்பதற்குரிய இன்னுமுள்ள ஆதாரங்களையும்  அடுத்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்

















Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.