முஸ்லிம்கள் தான் பூர்வீகத் தமிழர்கள் என்பதற்கு நோன்பு ஆதாரகமாக உள்ளதா?

சமைத்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது தான் நோன்பா?

பழங்கள்அவல் போன்றவற்றை  சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பது நோன்பா?

அவித்த இட்லி சாப்பிடக் கூடாது சுட்ட தோசை சாப்பிடலாம் என்பது நோன்பா?

அல்குர்ஆன் 2;34 7:11, 17:61, 18:50, 20:116, 15:30, 38;73 ஆகிய   வசனங்களில் உள்ள  ஸஜதா என்ற வார்த்தைக்கு  சரியான விளக்கம் என்ன என்பதை பற்றி குர்ஆனிலிருந்து ஆதாரத்துடன் கண்டு வருகிறோம். அதன் 3 வது தொடர் இது. இப்பொழுது நாம் ரமழானில் இருக்கிறோம். முஸ்லிம்கள் அனைவரும் பர்ளான நோன்பு நோற்று இருக்கிறோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_24.html


ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடும் தாவூத் நபியின்  நோன்புகள்  (புகாரி 1976)


வெள்ளை நாட்கள் எனும் பிறை 13,14,15 ஆகிய மாத நோன்புகள்.  (திர்மிதீ 692)


வார  வாரம்  திங்கள் வியாழன் நோன்புகள் (திர்மிதீ 676, நஸயீ 2321)


ஷவ்வால் மாதம்  ஆறு நோன்புகள்.   (முஸ்லிம் 1984, அபூதாவூத் 2078)


முஹர்ரம் மாதம்  ஒன்பது, பத்து நோன்புகள். (புகாரி 1960, 1592)

அரபா நாள் நோன்பு  (முஸ்லிம் 1977, அபூதாவூத் 2071,இப்னுமாஜா 1722) 

இப்படி பல விதமான நோன்புகளாக  இருந்தாலும் வைகறை எனும் கிழக்கு வெளுத்ததிலிருந்து.  சூரியன் மறையும் வரை முஸ்லிம்கள் உண்ணாமல் பருகாமல்  இருப்பதற்குப்  பெயர் நோன்பு. 

நோன்பு விஷயத்தில் எல்லாருக்கும்  இந்த ஒரே சட்டம் தான்.

எல்லா நோன்புக்கும் இந்த ஒரே சட்டம் தான். 


முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர்களிடமும் சில வழக்கங்கள் இருக்கின்றன. காலைமதியம்இரவு என மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பார்கள். அதற்குப் பெயர் உண்ணா விரதம் என்பார்கள். 


நோன்பு என்பது தான் தமிழ்ச் சொல்
. விரதம் என்பது வட மொழிச் சொல்.  நோன்பு என்ற வார்த்தை கூட  முஸ்லிம்கள் தான் பூர்வீகத் தமிழர்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.


முஸ்லிம் அல்லாதவர்களிடமும் நோன்பு வைக்கும் வழக்கம் உள்ளது. என்றவுடன் முஸ்லிம்களுக்கு என்ன எண்ணம் வரும்? நம்மைப் போல் நோன்பு இருப்பார்கள் என்ற எண்ணம் தான் வரும்.  ஆனால் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன


பிற மதத்தவர்கள் வைக்கும் நோன்புகளுக்கு முஸ்லிம்களிடம் உள்ள  மாதிரி ஒரே சட்டமா?  நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு நோன்புக்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள். 

ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான சட்டங்கள். அந்த விபரங்களை எழுதினால் விவரமில்லாதவர்கள் விமர்சிப்பதாக எண்ணி விடுவார்கள். 

காலை, மதியம், இரவு என மூன்று வேளை என்ற நேரம் மட்டுமல்ல வித்தியாசம். தண்ணீர், பழச்சாறு அருந்தி விட்டு சமைத்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்பது தான் பிற மத நோன்புகள்.  அதனால் தான் அதற்குப் பெயர் உண்ணா நோன்பு.

அதாவது திடப் பொருடை்களை உண்ணக் கூடாது. தண்ணீர், ஜுஸ் போன்ற திரவங்களை குடிக்கலாம் என்பதே அவர்கள் நோன்பு

அது மட்டுமல்ல முடியாதவர்கள் பழங்கள், அவல் போன்றவற்றை உண்ணலாம். அவித்த இட்லி சாப்பிடக் கூடாது சுட்ட தோசை சாப்பிடலாம் இப்படியானது தான் அவர்களது நோன்பு. மீண்டும் சொல்கிறேன்.  அவர்களை விமர்சிப்பதாக எண்ணி விடாதீர்கள். 


இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் பயன்படுத்திய வார்த்தைகளிலிருந்து தான். தொழுகை, பள்ளிவாசல், நோன்பு போன்ற வார்த்தைகளை நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தி வருகிறோம். 

இஸ்லாத்தை தழுவிய நமது முன்னோர்கள் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து இஸ்லாம் கூறும் வணக்கங்களுக்குப் பெயர் சூட்டிக் கொள்ளவில்லை. 

என்ன செய்தார்கள்?  நடைமுறையில் இருந்த தமிழ் வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களின் பெயர்களாக பயன்படுத்தினார்கள். இதை விளங்கி உள்ளோம். 


ஸலாத் - தொழுகை, மஸ்ஜித் - பள்ளிவாசல், ஸவ்ம் - நோன்பு போன்ற வார்த்தைகள்  நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்த வார்த்தைகளாகும். இருந்தாலும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.


அதைப் பற்றி   விளக்குவதற்காகவே   இந்த  விபரங்களை விளக்கி வருகிறோம். பிற மதத்தவர்கள்  உண்ணா  விரதம்    இருப்பது  போலவே  மவுனமாக இருந்தும்   விரதம் - நோன்பு  இருப்பார்கள்.  

நாம் வைக்கும் நோன்புக்கு ஸவ்ம் என்று சொல்லப்பட்டது போலவே  முந்தைய சமுதாயத்தவர்கள்  வைத்த  மவுன நோன்புக்கும்  ஸவ்ம் என்றே  அரபுகளால்   சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதற்குரிய ஆதாரமும் குர்ஆனில்  இருக்கிறது பாருங்கள்.

فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ‌ۚ‏

"நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவீராக! 19:26.  


ஸவ்ம் - நோன்பு என்ற வார்த்தையை மட்டும் வைத்துக்  கொண்டு. முஹம்மது  நபி(ஸல்)  அவர்கள்  உம்மத்தினர் போல் முந்தைய சமுதாயத்தினர்  நோன்பு நோற்றார்கள் என்று எப்படி  எடுத்துக்  கொள்ள  முடியாதோ.

அது போல் தான்  ஸஜதா என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு. முஹம்மது  நபி(ஸல்)  உம்மத்தினர்  போல்  ஸஜதா செய்தார்கள் என்று முந்தைய நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அதற்கு இன்னுமுள்ள ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே காண்போம் இன்ஷா அல்லாஹ்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.