2:36 சேகரமாக என்பது யாரையெல்லாம் குறிக்கிறது? இப்லீஸ் கூட்டத்தையும் சேர்த்தா?

இப்லீஸ் கூட்டத்திற்கு நேர் வழி காட்டல் வருமா?

பூமியில் தான் மனிதர்கள் மரணிப்பார்கள் என்றால், விண்வெளிக்கு செல்பவர்கள் மரணித்தால்?

திரு குர்ஆன் 2:36 வசனத்தின் தமிழ் தர்ஜமா (மொழிபெயர்ப்பு) க்கள் சிலவற்றில் அனைவரும் - யாவரும் - எல்லாரும் என்ற  வார்த்தைகள் உள்ளன.  இந்த வார்த்தைகளுக்குரிய  சொற்கள் இந்த  வசனத்தின் மூலத்தில் இல்லையே. 



(ஆதம், அவருடைய மனவைி, இன்னும் இப்லீஸிடமும்) என்று மூவரையும் நோக்கி கூறியது போல் ஒரு சாராரின் மொழி பெயர்ப்புக்கள்  உள்ளனவே.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/236.html


இது போன்ற கேள்விகளுக்கு பதில்களை விளங்க இலக்கணப் பாடம் கற்றே ஆக வேண்டி உள்ளது. 
இலக்கண பாடம் படித்தால் போரடிக்கும். இருந்தாலும்  சில நேரங்களில் படித்தே ஆக வேண்டும்.


மற்ற மொழிகளின் இலக்கணத்தில். எண்ணிக்கையை குறிப்பிடும்போது ஒன்று மட்டும் இருந்தால் ஒருமை- Singular,  ஒன்றிற்கு மேற்பட்டவை  பன்மை.- Plural

அரபு இலக்கணத்தில் ஒன்றிற்கு   ஒருமை - Singular,

ஒன்றிற்கு  மேற்பட்டதற்கு  (இரண்டிற்கு)    இருமை- Dual,

இரண்டிற்கு மேற்பட்டதற்குத்தான் பன்மை - Plural என்று கூறப்படும்.

இது அரபு மதரஸாக்களில் பயிலும்  ஒன்றாம் வகுப்பு மாணவர்களும் அறிந்த ஒன்றுதான்.

هـُــــوَ - ஹுவ அவன் (ஒருமை)
هُـــــــــمَا- ஹுமா வ்விருவர் (இருமை)
هُــــــمْ  - ஹும் அவர்கள் (பன்மை) 
இந்த இருமை ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் هُـــما ஹுமா தான் 2:36 ல் உள்ள ஹுமா  இருமை தான். அது ஆதம், அவருடைய மனவைி ஆகிய இருவரை மட்டுமே குறிக்கும். இப்லீஸிடமும் என்று மூவரையும் நோக்கி பன்மையாகக் கூறியது போல்  தர்ஜமா (மொழிபெயர்ப்பு) செய்தவர்கள்.  தாங்கள் படித்த இலக்கண பாடத்தை  மறந்து விட்டார்கள்  என்று  நல்  எண்ணம்  வைப்போம்.

அனைவரும் - யாவரும் - எல்லாரும் என்று தமிழாக்கம் செய்தவர்கள்  20:123  வசனத்தில் உள்ள   جَمِيْعًا‌ۢ - ஜமீஃஅ(ன்)ம் என்ற வார்த்தையை எண்ணத்தில் கொண்டு 2:36ஐ  மொழியாக்கம் செய்திருக்கலாம்.


20:123  வசனத்தில் கூட ஜமீஃஅ(ன்)ம் என்பதற்கு  சேகரமாக என்று  தமிழாக்கம்  தந்தவர்களில் சிலர்    நீங்கள் இருவரும் (மனிதனும், ஷைத்தானும்) இங்கிருந்து சேகரமாக வெளியேறி விடுங்கள் என்று இப்லீஸ்  கூட்டத்தையும் நோக்கி கட்டளை இட்டது போல். மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.   இதில் உள்ள  اهْبِطَا - இஹ்பிதா என்ற  இருமை   மனித   இனத்தையும்   ஷைத்தான் இனத்தையும்  குறிக்கும் இருமை  என்ற கருத்தில் உள்ளார்கள். 

(சேகரமாக என்று ஜான் டிரஸ்ட், சவூதி போன்ற மொழி பெயர்ப்பில் உள்ள பழைய தமிழ் வார்த்தைக்கு நடைமுறை தமிழில் மொத்தமாக - ஒட்டு மொத்தமாக  என்று பொருள்) 

20:123  வசனத்தை பாமரன் கூட சிறிது  சிந்தித்தால் எளிதில் விளங்கி விடும் விஷயம் அது. இருந்தாலும் அந்த வசனத்தில் உள்ள அடுத்த கட்டளையே அவர்கள் மொழி பெயர்ப்பு தவறு என்பதற்கு  ஆதாரமாக உள்ளது. என்ன கட்டளை? Fபயிம்மா யஃதியன்னகும் மின்னீ ஹுதன்
فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى
என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். 

முதலில் உள்ள கட்டளை இப்லீஸுக்கும் என்றால் வழிகாட்டுதல் வரும் என்ற கட்டளையும் இப்லீஸுக்கும் வரும் என்றாகி விடுகிறதே. அல்லாஹ்வின் கட்டளையை  நிராகரித்து (காபிராகி)த் தானே இப்லீஸ்  எடுத்தெறியப்பட்ட ஷைத்தானாக நரகத்துக்குரியவனாக ஆனான். பிறகு எப்படி இப்லீஸ் கூட்டத்துக்கும் வழிகாட்டல் வரும்? 

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலருக்கு சிலர் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார் என்று கூறினான். 20:123.

ஜமீஃஅ(ன்)ம் - ஒட்டு மொத்தமாக என்ற வார்த்தை ஆதம்(அலை) அவரது மனைவி மற்றும் அவர்களிடமிருந்த வழித்தோன்றல்களான மனிதர்களை குறிக்கும் வார்த்தையாகும். அந்த வசனத்தையும் அது தொடர்பான மற்ற வசனங்களையும் முழுமையாக கவனத்துடன் படித்தால் தெளிவு பெறலாம். 

இதற்கு முந்தைய வசனமான 2:35 வசனத்தை ஒட்டி வந்துள்ள கேள்வி. 2:35 வசனத்தில் நீங்கள் இருவரும் என்ற வார்த்தை சிலர் 2 முறையும் சிலர் 3 முறையும் சிலர் 4 இடங்களிலும் இடம் பெறச் செய்துள்ளார்கள். சிலர் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உள்ளார்கள். எது சரி?



வகுலா- மின்ஹா- ஷிஃதுமா- தஃக்ரபா - Fபதகூனா இந்த மாதிரி உள்ளவை அரபு நடையில் அழகானது, அலங்காரமானது, கவர்ச்சியானது சிறந்த நடை. தமிழ் நடையில் கூறியதே கூறல் என்று வரும்போது பிஸுறு அடிக்கும். கொச்சையாகத் தெரியும். தமிழ் மொழியில் இவ்வாறு குறிப்பிட்டால் அது சிறந்த நடையாக இருக்காது. அந்த அடிப்படையில் தான் சிலர் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உள்ளார்கள். 4 முறை பயன்படுத்தி உள்ள ஒரு மொழி பெயர்ப்பை தருகிறோம் பாருங்கள்.


மேலும், நாம் “ஆதமே நீரும், உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் குடியிருங்கள்; இன்னும், நீங்கள் இருவரும் நாடியவாறு தாராளமாக இதிலிருந்து நீங்களிருவரும் புசியுங்கள்; (ஆனால்) இம்மரத்தை நீங்களிருவரும் நெருங்கவேண்டாம்; (அவ்வாறாயின்) நீங்களிருவரும் அநியாயக்கார்களில் ஆகிவிடுவீர்கள்” என்று கூறினோம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தப்பட்ட மொழி பெயர்ப்புகள்  2:35 வெளியீட்டில் உள்ளன பார்த்துக்  கொள்ளுங்கள். இந்த பதிவிலும் (2:36லும்) நாம் வெளியிட்டுள்ள 15 மொழி பெயர்ப்புகளில் மூன்றைத் தவிர 12  மொழி பெயர்ப்புகளில் இது மாதிரி காணலாம். அவற்றை பிளாக்கரில் ஹை லைட் செய்துள்ளோம். வாட்ஸப்பில் 15 மொழி பெயர்ப்புக முழுமையாக வரப் பெறாதவர்கள் பிளாக்கரை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்

மனிதர்கள் பூமியில் தான் வாழ முடியும் என்று 2:36 ல் கூறப்பட்டுள்ளது போலவே  7:10, 7:24, 7:25, 30:25  ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விரிவான விஞ்ஞானப்பூர்வமான ஆக்கம் பீ.ஜே. தர்ஜமாவின் 175வது  விளக்கத்தில் உள்ளது.  


பூமியில் தான் மனிதர்கள் மரணிப்பார்கள் என்றால், விண்வெளிக்கு செல்பவர்கள் மரணித்தால்? என்ற கேள்விக்கான பதில் யூடியூப் லிங்கில் உள்ளது.

  
فَاَزَلَّ-பஅzஸல்ல

பிறழச் செய்தான் - அப்புறப்படுத்தினான் - வழி தவறச் செய்தான் - வறிழைக்கும்படிச் செய்தான்   --தவறிழைக்கத் தூண்டினான் --  

சறுகச் செய்தான்;



هُمَا - ஹுமா
அவ்விருவரை 

فَأَزَلَّهُمَا  -  பஅzஸல்லஹுமா




அவ்விருவரையும் பிறழச் செய்தான் (அப்புறப்படுத்தினான் - வழி தவறச் செய்தான்; - தவறிழைக்கும்படிச் செய்தான் -தவறிழைக்கத் தூண்டினான் -- சறுகச் செய்தான்)

الشَّيْطَانُ  - அஷ்ஷய்த்தான்
ஷைத்தான்


عَنْهَا  - அன்ஹா



 அதிலிருந்து - அங்கிருந்து 




 فَاَخْرَجَ- Fபஅஃக்றஜ


வெளியேற்றினான் - வெளியேறுமாறு செய்தான் - வெளியேறும்படி செய்து விட்டான். - வெளியேற்றி விட்டான்.- வெளியேற வகை செய்தான்.
هُمَا ஹுமா

فَأَخْرَجَهُمَا  -  Fபஅஃக்றஜ ஹுமா



அவ்விருவரை வெளியேற்றினான் (வெளியேறுமாறு செய்தான் - வெளியேறும்படி செய்து விட்டான். - வெளியேற்றி விட்டான்.- வெளியேற வகை செய்தான்)



مِمَّا  - மிம்மா



 எதிலிருந்து


كَانَا  கானா
அவர்கள் இருந்த

فِيهِ  -  பீஹி   
அதில்

وَقُلْنَا -    வகுல்னா 
கூறினோம்


اهْبِطُوا  -  ஹ்பிதுா 



 இறங்குங்கள் - இறங்கிவிடுங்கள்


بَعْضُكُمْ  -  பஃழுகும்  
உங்களில் சிலர்- 

لِبَعْضٍ -  லிபஃலின்



சிலருக்கு



عَدُوٌّ  -   அதுவ்வுன் 
 எதிரி -பகைவர்


وَلَكُمْ  -   வலகும் 
உங்களுக்கு



فِي- Fபீ

இல்



 الْاَرْضِ- ல் அர்ழி 

பூமி

فِي  الْأَرْضِ -  Fபீல் அர்ழி 
பூமியில்


مُسْتَقَرٌّ  -  முஸ்தகர்ருன் 
 வசிக்குமிடம் -வாழ்விடம் – தங்குமிடம்

وَمَتَاعٌ  -  வமதாஉன்  
இன்பமும் - சுகமும் -வசதியும் -சாமான்களும்  பொருள்களும் - வாழ்வாதரமும்


إِلَىٰ  -   இலா 
 வரை

حِينٍ -   ஹீ(னி)ன் )
குறிப்பிட்ட காலம் ஒரு காலம் - சிறிது நேரம் - சிறிது  காலம்) வரையறுக்கப் பட்ட காலம் -தவணை




فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي  الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ ﴿٣٦




தமிழ் நடையில்  மொழிப் பெயர்ப்புகள்  :  :

1. அம்மரத்தைக் குறித்து ஆசைகாட்டி, ஷைத்தான் அவ்விருவரையும் தவறிழைக்கத் தூண்டி, அவ்விருவரும் வாழ்ந்த சுவனத்திலிருந்து வெளியேற வகை செய்தான். "நீங்கள் அனைவரும் (இச்சுவனத்திலிருந்து பூமிக்கு) இறங்கி விடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவராகத் திகழ்வீர்கள். உங்களுக்கென உலகில் வரையறுக்கப் பட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கப் பொருள்களும் அங்கு உள்ளன" என்று நாம் கூறினோம் (அதிரை ஜமீல்)

2. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான்  அப்புறப்படுத்தினான்.  அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன''175 என்றும் நாம் கூறினோம். (PJதொண்டி)

3. ஆனால் ஷைத்தான்  அ(ம்மரத்)தை வைத்து அவ்விருவரையும் வழி தவறச் செய்தான். அதனால் அவர்கள்  இருந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றி விட்டான். (ஆகவே) நாம் நீங்கள்  (இங்கிருந்து) கீழிறங்கிச் சென்று விடுங்கள். உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்காளாக  இருப்பீர்கள். ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை உங்களுக்கு பூமியில் வசிப்பிடமும் (அனுபவிக்க) வாழ்வாதரமும் உண்டு. என்று கூறினோம். (றஹ்மத் அறக்கட்டளை)

4.  இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.டாக்டர். முஹம்மது ஜான்



5. (எனினும்) ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து  பிறழச்  செய்து. அவர்களிருவரும் இருந்த (உயர்வான) நிலையை விட்டு அவர்களிருவரையும் வெளியேற்றி விட்டான். இன்னும்  நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள். .உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள். பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம் (மலிவு பதிப்பு )




6. (எனினும்) ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து  தவறச்  செய்து. அவர்களிருவரும் இருந்த (உயர்வான) நிலையை விட்டு அவ்விருவரையும் வெளியேற்றி விட்டான். இன்னும் உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருக்கும் நிலையில் நீங்கள் (இங்கிருந்து) இறங்குங்கள். உங்களுக்குப் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் சுகம் அனுபவித்தலும்  உண்டு" என்று (அவர்களை நோக்கி) நாம் கூறினோம். (திரீயெம் பிரிண்டர்ஸ்)



7. எனவே, ஷைத்தான்   அவ்விருவரையும்   அதிலிருந்து  தவறச்  செய்து,  பின்னர்  அவர்கள் இருவரும் இருந்த (உயர்வான) நிலையை விட்டும் வெளியேறச் செய்து விட்டான். மேலும் நீங்கள் (இங்கிருந்து) வெளியேறுங்கள். உங்களில் சிலர் சிலருக்கு பகைவர்காளாவீர்கள். இன்னும் உங்களுக்கு பூமியில் தங்குமிடமும் ஒரு குறிப்பிட்ட காலம் சுகம் அனுபவித்தலும்  உண்டு" என்று  (அவர்களுக்கு) நாம் கூறினோம். -(பஷாரத்,  திண்டுக்கல்   A.முஹம்மது    சிராஜுத்தீன்  நூரி)





8. ஆகவே ஷைத்தான் (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவரையும் அ(ச்சுவனத்)திலிருந்து சருகச் செய்து, அப்பால் அவ்விருவரும் எ(ந்த அந்தஸ்)தில் இருந்தனரோ  அதனை விட்டு  அவ்விருவரையும்  வெளியேற்றி விட்டான். இன்னம்  நீங்கள் கீழிறங்கி விடுங்கள் உங்களிற் சிலர் சிலருக்கு பகைவராவீர் மேலும் உங்களுக்கு பூமியில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை  தங்குதலும் சுகமநுபவித்தலும் உண்டு. என்று (அவர்களை நோக்கி) நாம் கூறினோம். - (அன்வாருல் குர்ஆன் தென்காசி  இ.எம். அப்துர் ரஹ்மான், நுாரி ஃபாஸில் பாகவி)




9. (எனினும்) ஷைத்தான் அவ்விருவரையும் அதை விட்டுத்  தவறச்  செய்து. விட்டான்.  அவர்கள் இன்னும் இருந்த (சுகபோக)  நிலையை விட்டு அவ்விருவரையும் வெளியேற்றி விட்டான்.  நீங்கள்   இங்கிருந்து  இறங்கி விடுங்கள். என்று (ஆதம், அவருடைய மனவைி, இன்னும் இப்லீஸிடமும்) நாம் கூறினோம். உங்களுக்குள் சிலர் சிலருக்குப் பகைவர்காளாவீர்கள். உங்களுக்கு ஒரு தவணை வரை பூமியில் தங்குமிடமும் ஓரளவு சுகம் பெறுதலும்  உண்டு (என்று அவர்களை நோக்கி நாம் கூறினோம்) - (ஸலாமத்- A. முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி) 



10. இதன்பின், ஷைத்தான் அவ்விருவரையும் அதிலிருந்து தடம் புறழச் செய்து. அவ்விருவருமிருந்த (இடத்)தை விட்டும் அவர்களை வெளியேற்றினான். இன்னும்  நீங்கள் இங்கிருந்து இறங்குங்கள்.உங்களில் சிலர் சிலருக்கு பகைவர்காளாவீர்கள். உங்களுக்குப் பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வாழ்க்கை வசதியும் உள்ளன என்றும் நாம் கூறினோம். (தாருஸ்ஸலாம், ரியாத்)

11.12. ஷைத்தான் அவ்விருவரை அதிலிருந்து பிறழச் செய்தான்; அவ்விருவர் இருந்ததிலிருந்து அவ்விருவரை வெளியேற்றினான். “ நீங்கள் இறங்குங்கள் உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர்உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு “ எனக் கூறினோம் (11.K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார், 12. உமர் ஷரீப் காஸிமி)


13. எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும் (தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்) தவறிழைக்கும்படிச் செய்து அச்சோலையை விட்டும், அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்து விட்டான். ஆகவே (அவர்களை நோக்கி) "உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்" என நாம் கூறினோம். (காரைக்கால் ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ) 



14. ஷைத்தான் அவ்விருவருக்கும் அம்மரத்தின் மீது ஆசை காட்டி, அவர்களை நம் கட்டளையிலிருந்து பிறழச் செய்து விட்டான். மேலும் அவ்விருவரும் எந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ அந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றி விட்டான். மேலும் நாம் கட்டளையிட்டோம்: “நீங்கள் எல்லாரும் (இங்கிருந்து) இறங்கி விடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். இன்னும், உங்களுக்காகக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை பூமியில் தங்குமிடமும் இருக்கிறது; வாழ்க்கை வசதிகளும் இருக்கின்றன.”- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


15. ஆகவே, ஷைத்தான், அவ்விருவரையும் அதைவிட்டும் சறுகச் செய்தான்; பின்னர், அவ்விருவரும் எதிலிருந்தார்களோ அதை விட்டும் அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டான்; மேலும் உங்களில் சிலர் சிலருக்கு பகைவர்களாக இருக்க “நீங்கள் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்; இன்னும் பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும், ஒரு குறிப்பிட்ட காலம் (மரணம் வரும்) வரை சுகம் அனுபவிப்பதும் உண்டு” என்று நாம் கூறினோம்(அல்-மதீனா அல்-முனவ்வரா)






Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.