8. அகம், உள்ளம், மன(ம்)து,


அல் அஃராப், அநியாயம், அக்கிரமம், அநீதி, அக்னி, அகதி, அகங்காரம்  ஆகிய தலைப்புகளில் குர்ஆன் இன்டக்ஸ் முன்பு தந்துள்ளோம்.  இது 8வது பாகம். மூளைக்கு அகம், உள்ளம்,  மனம், மனது, அறிவு, சிந்தனை என தமிழில் பல வார்த்தைகள்  உள்ளன. அது போல அரபு மொழியிலும்  ஃகல்ப், Fப்ஸ், ஹவா, Fபுஃஆத், ஸத்ர், வஅவ்ஜஸ, வழாஃக என பல வார்த்தைகள் உள்ளன. அவை குர்ஆனில் 204 வசனங்களில் இடம் பெற்றுள்ளன. சில வசனங்களில் 2,3,4  தடவையும் இடம் பெற்றுள்ளன. அவை எங்கு  எங்கு உள்ளன  என்பதை இந்த பதிவில் காணலாம். 
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/8.html





முன்னதாக சிந்திப்பது இதயமா? மூளையா? என்ற தலைப்பில் முன்பு நாம் வெளியிட்டுள்ளதை படித்துக் கொள்ள வேண்டும்.   
33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே ஃகல்ப் எனும் சொல்லுக்கு இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான்   பயன்படுத் தப்பட்டுள்ளன. என்பதை விளங்கி.  ஃகல்ப் என்பதற்கு   நிரூபிக்கப்பட்ட  விஞ்ஞானத்தின் படி மூளை, அகம், உள்ளம்,  மனம், மனது, அறிவு, சிந்தனை என்று மொழி பெயர்ப்பு காண வேண்டும்.  

ஃகல்ப்,  ஃகல்பீ, ஃகல்பிக,  ஃகல்புஹு,  ஃஅலா ஃகல்பிக, ஃகுலுாபிஹிம்,  அலா ஃகுலுாபிஹிம்Fபீஃகுலுாபிஹிம்,  ஃகுலுாபுகும், ஃகுலுாபுனாகுலுாபுஹும் இந்த மாதிரி  Fப்ஸ், ஹவா, Fபுஃஆத், ஸத்ர் யாவும் வரும். அவற்றை கவனித்துப் படித்தால்  இவை சம்பந்தமான அரபு மொழிப் புலமை கிடைத்து விடும்.


204 ஆயத்துகளிலிருந்து உள்ளதால் முழுமையாக வாட்ஸப் பேஸ்புக்கில்  வராது.  ஆகவே பிளாக்கரை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இணைப்பில் 1950ல் வெளியான தப்ஸீரிலிருந்து 4 பக்கங்கள் உள்ளன.. பழந் தமிழையும் அறியலாம்.


1.  அலா ஃகுலுாபிஹிம் 

  عَلَىٰ قُلُوْبِهِمْ

அவர்களது உள்ளங்களிலும், (இதயங்களிலும் - உள்ளங்களின் மீதும்,இதயங்கள் மீதும்)  செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.4392:7. 



2.  Fபீ ஃகுலுாபிஹிம்

 فِىْ قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்களில் (இதயங்களில்- நெஞ்சங்களில்)  நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. 2:10.


3. இதன் பின்னர் ஃகுலுாபுகும்

 قُلُوْبُكُمْ

உங்கள் உள்ளங்கள் (இதயங்கள் -உங்களுடைய உள்ளங்கள்-உங்களுடைய இதயங்கள்  பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. 2:74. 



4.  மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ்444 மூலம் அவரைப் பலப்படுத்தினோம். ஃஅன்Fபுஸுகுமு

  اَنْفُسُكُمُ
நீங்கள் (மனம்) விரும்பாததைத்   தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள். 2:87.



5.  ஃகுலுாபுனா 
 قُلُوْبُنَا

"எங்கள் உள்ளங்கள் (எங்களுடைய இதயங்கள்)   மூடப்பட்டுள்ளன'' என்று கூறுகின்றனர். அவ்வாறில்லை! (தன்னை) மறுத்ததால் அல்லாஹ் அவர்களைச் சபித்தான்.அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.2:88


6. உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!'' (எனக் கூறினோம்). "செவியுற்றோம்மாறுசெய்தோம்'' என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் Fபீ ஃகுலுாபிஹிம் 

 فِىْ قُلُوْبِهِمُ

அவர்களின் உள்ளங்களில் (அவர்கள் இதயங்களில் அவர்களுடைய உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது.19 "நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக! 2:93.


7. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) ஃஅலா ஃகல்பிக

 عَلٰى قَلْبِكَ 

உமது உள்ளத்தில்152 ( (உம் இதயத்தில்- உங்களது உள்ளத்தில் - உம்முடைய உள்ளத்தில் - உம் இதயத்தின் மீது)   இறக்கினார்.1 "இதுதனக்கு முன் சென்றவற்றைஉண்மைப்படுத்துவதாகவும்நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும்நற்செய்தியாகவும் உள்ளது'' என்று கூறுவீராக! 2:97



8. "அல்லாஹ் எங்களிடம் பேசக் கூடாதாஅல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?'' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். தஷாபஹத் ஃகுலுாபுஹும்

تَشَابَهَتْ قُلُوْبُهُمْ‌ؕ 


அவர்களின் உள்ளங்கள் ஒத்தவையாக இருக்கின்றன. (இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே - இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கின்றன.- இந்த மக்கள் அனைவரின் மனப்பாங்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியாய் இருக்கின்றது. - இவர்களுடைய இதயங்கள் (அவர்களின் இதயங்களுக்கு) ஒப்பாகி விட்டன.) உறுதியான நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். 2:118.


9. யூதர்களும்கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்'' எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் ஃஅஹ்வாஃஅஹும்

 اَهْوَآءَهُمْ

அவர்களின் மனோ (மன) இச்சைகளை (விருப்பங்களை) நீர் பின்பற்றினால்அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோஉதவுபவனோ உமக்கு இல்லை. 2:120.


10.  வேதம் கொடுக்கப்பட்டோரிடம்27 அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின்  ஃஅஹ்வாஃஅஹும்

 اَهْوَآءَهُمْ

அவர்களின் மனோ (மன) இச்சைகளை (விருப்பங்களை) நீர் பின்பற்றினால் அநீதி இழைத்தவராவீர்! 2:145. 



11. உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றிப் பேசுகின்றகடுமையான வாதத்திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். ஃஅலா மா Fபீ ஃகல்பிஹி

عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ 

தன் உள்ளத்தில் இருப்பதற்கு (தன் இருதயத்தில் உள்ளது பற்றி - தன் மனதில் உள்ளவற்றிற்கு - தன் மனத்தில் உள்ளவை - தன் இதயத்திலுள்ளவற்றின் மீது)  அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான். 2:204. 



12. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். ஃகுலுாபுகும்

 قُلُوْبُكُمْ‌ؕ 

உங்கள் உள்ளங்கள் (உங்களுடைய இதயங்கள் - உங்களுடைய உள்ளங்கள்- நீங்கள் உளப்பூர்வமாகச் செய்த சத்தியங்களுக்காக) உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான்.64 அல்லாஹ் மன்னிப்பவன்சகிப்புத்தன்மை மிக்கவன். 2:225. 



13. "அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாகஉங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும்.77 அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) Fபீஹி ஸகீனதுன்

 فِيْهِ سَکِيْنَةٌ 

மனநிறைவு இருக்கும்.  மூஸாவின் குடும்பத்தாரும்ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். 2:248. 


14. "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டியபோது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக ஃகல்பீ

قَلْبِىْ‌ؕ 

எனது உள்ளம் எனது உள்ளம் (என் இதயம் - என்னுடைய உள்ளம் - என்னுடைய மனம் - என்னுடைய இதயம்)  அமைதியுறவே.'' என்றார். "நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான். 2:260



15. நீங்கள் பயணத்தில் இருக்கும்போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைக்கும்  ஃகல்புஹு

 قَلْبُهٗ‌ؕ 

அவரின் உள்ளம் (அவனுடைய இருதயம் - அவருடைய உள்ளம் - அவருடைய இதயம்)   குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.2:283.



16. வானங்களில்507 உள்ளவையும்பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. மா Fபீ அன்Fபுஸுகும்

 مَا فِىْۤ اَنْفُسِكُمْ

உங்களுக்குள் (உள்ளங்களில் - மனங்களில்)  இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோமறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அதுபற்றி உங்களை விசாரிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.2:284.


17. (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற86 மற்றும் சில வசனங்களும் உள்ளன. Fபீ ஃகுலுாபிஹிம்

 فِىْ قُلُوْبِهِمْ

உள்ளங்களில் (இதயங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும்அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும்கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை. 3:7. 



18.  எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் ஃகுலுாபனா

قُلُوْبَنَا
எங்கள் உள்ளங்களை (இதயங்களை - எங்களுடைய உள்ளங்கள் - எங்கள் இதயங்களை)த் தடம் புரளச் செய்து விடாதே!81 எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். 3:8. 


19.  பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய  ஹுப்புஷ் ஷஹவாதி

 حُبُّ الشَّهَوٰتِ
மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.88 3:14.



20.   மாFபீ  ஸுதுாரிகும் 
 مَا فِىْ صُدُوْرِكُمْ

"உங்கள் உள்ளங்களில் (நெஞ்சங்களில் - மனதில்) உள்ளதை நீங்கள் மறைத்தாலோவெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான். வானங்களில்507 உள்ளதையும்பூமியில் உள்ளதையும் அவன் அறிகிறான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! 3:29.


21. அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98 பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் பைன ஃகுலுாபிகும்

 بَيْنَ قُلُوْبِكُمْ

உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். (உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; - உங்கள் உள்ளங்களுக்குள் -உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான்.உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான்.- உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான்,)   எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். 3:103.



22. உங்களுக்கு நற்செய்தி கூறவும்ஃகுலுாபிகும் பிஹி
 قُلُوْبُكُمْ بِهٖ‌ؕ 

உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் (இருதயங்கள் அமைதி பெறவுமே இதை அல்லாஹ் ஏற்படுத்தினான். மிகைத்தவனும்ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. 3:126.



23. அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளாமலிருந்தும் அவனுக்கு இணை கற்பித்ததால் (நம்மை) மறுத்தோரின் Fபீஃகுலுாபில்லதீ(ரீ)ன

 فِىْ قُلُوْبِ الَّذِيْنَ


உள்ளங்களில் (இதயங்களில்) பீதியை ஏற்படுத்துவோம். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோர் சென்றடையும் இடம் மிகவும் கெட்டது. 3:151. 



24.  பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு அமனதன்

  اَمَنَةً

மனஅமைதியை (ஆறுதலை - நிம்மதியை)  ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான். உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரை அஹம்மத்ஹும் அன்Fபுஸுஹும்

 اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ

கவலை பிடித்துக் கொண்டது. (அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன.- மனங்கள் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி விட்டன,)   அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக்கால எண்ணம் கொண்டனர். "நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் கிடைக்குமா?'' என்று அவர்கள் கேட்டனர். "அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை யஃகூFபூன Fபீ அன்Fபுஸிஹிம்

 يُخْفُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ

தமது உள்ளங்களில் மறைத்துள்ளனர்.  (தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு - தங்கள் மனங்களில் மறைத்திருக்கின்றனர்,"நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்'' என்றனர். "உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோர் தமது களத்திற்குச் சென்றிருப்பார்கள். மாFபீ ஸுதுாரிகும்

مَا فِىْ صُدُوْرِكُمْ
உங்கள் உள்ளங்களில் (நெஞ்சங்களில் – மனதில்) உள்ளதைச் சோதிப்பதற்காகவும்,484  மாFபீ ஃகுலுாபிகும்

 مَا فِىْ قُلُوْبِكُمْ‌ؕ 
உங்கள் உள்ளங்களில் (நெஞ்சங்களில்  இதயங்களில்)  இருப்பதைத் தூய்மைப்படுத்தவும் அல்லாஹ் இவ்வாறு செய்தான். பிதா(ரா)திஸ்ஸுதுாரி

 بِذَاتِ الصُّدُوْرِ‏

உள்ளங்களில் (நெஞ்சங்களில்)  உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக! 3:154.  



25. நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்டஅல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து "அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று கூறிய (ஏகஇறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்!  Fபீஃகுலுாபிஹிம்

 فِىْ قُلُوْبِهِمْ‌ؕ

அவர்களின் உள்ளங்களில் (மனதில்- இதயங்களில்) கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488 3:156. 



26. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின ஃகல்பி
 الْقَلْبِ

உள்ளம் ( (சித்தம் – நெஞ்சம் – இதயம்)  உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். 3:159. 



 27. நம்பிக்கை கொண்டோரை அடையாளம் காட்டவும்நயவஞ்சகர்களை அடையாளம் காட்டவுமே (இது நிகழ்ந்தது.) "வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! அல்லது (எதிரிகளைத்) தடுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. "போர் செய்வது எங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களைப் பின்தொடர்ந்திருப்போம்'' என்றனர். அன்று அவர்கள் நம்பிக்கையை விட (இறை) மறுப்பிற்கு அதிக நெருக்கத்தில் இருந்தனர். மா லய்ஸ Fபீஃகுலுாபிஹிம் 

مَّا لَيْسَ فِىْ قُلُوْبِهِمْ‌ؕ 


தமது உள்ளங்களில் (மனதில் –இதயங்களில்) இல்லாததைத் தமது வாய்களால் கூறினர். அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.26 3:167.



28. பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை108 கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! மின்ஹு நFப்ஸன்

مِنْهُ نَفْسًا

அவர்களாக மனமுவந்து (மனமொப்பி -மனமாற) அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும்மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! 4:4.


29. அல்லாஹ் உங்களை மன்னிக்க விரும்புகிறான்.   யத்தபிஃஊனஷ்ஷஹவாதி

 يَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ

மனோ (மன) இச்சைகளைப்  பின்பற்றுபவர்களோ முழுமையாக நீங்கள் பாதை மாற வேண்டும் என்று விரும்புகின்றனர். 4:27.  


30.  யஃலமுல்லாஹு  மாFபீ ஃகுலுாபிகும் 

 يَعْلَمُ اللّٰهُ مَا فِىْ قُلُوْبِهِمْ
அவர்களின் உள்ளங்களில் (இதயங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான். எனவே அவர்களை அலட்சியம் செய்வீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! அவர்களுக்காக கருத்தாழமிக்க சொல்லை Fபீ அன்Fபுஸிஹிம்

 فِىْۤ اَنْفُسِهِمْ

அவர்களின் உள்ளங்களில் (மனங்களில் (பதியுமாறு) கூறுவீராக! 4:63. 




31. (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்றுபின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் லா யஜிதுா Fபீ  ஃஅன்Fபுஸிஹிம் 

 لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ

தமக்குள் (உள்ளங்களில் – மனதில் - மனங்களில்) அதிருப்தி கொள்ளாமல்,  முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.234 4:65

32. உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோதமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஃஹஜிரத்  ஸுதுாருஹும் 

حَصِرَتْ صُدُوْرُهُمْ

(மனம்) ஒப்பாமல் மனமில்லாமல்- மனங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில்) உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாதுஉங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை. 4:90. 

33. தன் கணவனிடம் பிணக்கையோபுறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. வஉஹ்ழிரதில் அன்Fபுஸுஷ் ஷுஃஹ்ஹ

وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ‌

மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. (ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. -ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றது.மனித உள்ளங்கள் குறுகிய எண்ணத்திற்கும் உலோபித்தனத்திற்கும் (விரைவாக) உட்பட்டுவிடுகின்றன. மனங்கள் உலோபித்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றன,)  நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். 4:128. 



34. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோபெற்றோருக்கோஉறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும்அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோபிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும்ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் Fஃபலா தத்தபிஃஉல் ஹவா

فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى

மனோ  இச்சையைப் (மன ஆசை (அபிலாஷை)களை) பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோபுறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். 4:135.


35. அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும்அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும்நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும்ஃகுலுாபுனா

 قُلُوْبُنَا

எங்கள் உள்ளங்கள் (இதயங்கள்) மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும் அவர்களின் 
உள்ளங்கள் (இருதயங்களின்மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர். 4:155.


36. அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளையும்உங்களிடம் அவன் செய்த உடன்படிக்கையையும், "செவியுற்றோம்கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! ஸுதுா(ரி)ர்

الصُّدُوْرِ

உள்ளங்களில் (இருதயங்களில் – நெஞ்சங்களில்)  இருப்பதை அல்லாஹ் அறிந்தவன். 5:7.


37. அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம்.6  ஃகுலுாபஹும்

 قُلُوْبَهُمْ

அவர்களின் உள்ளங்களை (இருதயங்களை நெஞ்சங்களை) இறுக்கமாக்கினோம்.  (கல் நெஞ்சங்களாகவும் ஆக்கிவிட்டோம்)  வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். 5:13. 

.

38. (இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு Fப்ஸுஹு

 نَفْسُهٗ
அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நட்டமடைந்தவனாக ஆகி விட்டான். 5:30.


39. நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறிமின் ஃகுலுாபுஹும் 

مِنْ قُلُوْبُهُمْ‌ ‌ۛۚ 

உள்ளங்களால் (இருதயங்கள் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும்யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க484 நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். ஃகுலுாபஹும்

قُلُوْبَهُمْ‌

அவர்களின் உள்ளங்களை (இருதயங்களை)  அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. 5:41. 



40. உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன்சென்ற வேதத்தை4 உண்மைப்படுத்துவதாகவும்அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து ஃஅஹ்வாஃஅஹும் 

 اَهْوَآءَهُمْ

அவர்களின் மனோ இச்சைகளைப் (விருப்பங்களை - ஆசாபாசங்களை)  பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும்வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக484 (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். 5:48.



41. அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக!  ஃஅஹ்வாஃஅஹும்

 اَهْوَآءَهُمْ

அவர்களின் மனோ (மன) இச்சைகளைப் (விருப்பங்களை - ஆசாபாசங்களை)   பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்5:49. 


42.  Fபீ ஃகுலுாபிஹிம்

 فِىْ قُلُوْبِهِمْ

உள்ளங்களில் (இதயங்களில்)  நோய் இருப்போர்அவர்களை நோக்கி விரைவதைக் காண்கிறீர். "எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்அல்லது ஏதேனும் ஒரு காரியத்தை அவன் நிகழ்த்தலாம். அவர்கள் தமக்குள் இரகசியமாக வைத்திருந்ததற்காக அப்போது கவலைப்பட்டோராக ஆவார்கள். 5:52. 



43. இஸ்ராயீலின் மக்களிடம் உறுதிமொழி எடுத்தோம்.22 அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் லா தஹ்வா
 لَا تَهْوٰٓى

மனம் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர். 5:70.


44.  "வேதமுடையோரே!27 உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாமும் வழிகெட்டுஅதிகமானோரையும் வழிகெடுத்துநேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் ஃஅஹ்வாஃஅ

 اَهْوَآءَ

மனோ இச்சைகளைப் (விருப்பங்களை) பின்பற்றாதீர்கள்!'' என்று கூறுவீராக! 5:77.


45.  "அதை உண்டு, ஃகுலுாபுனா

قُلُوْبُنَا
எங்கள் உள்ளங்கள் (இதயங்கள் அமைதி பெறவும்நீர் எங்களிடம் உண்மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்துஅதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்'' என்று அவர்கள் கூறினர். 5:113.



46. அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமாமாறாக குலுாபுஹும்

قُلُوْبُهُمْ

அவர்களின் உள்ளங்கள் (இருதயங்கள்) இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.6:43.


47. "உங்கள் செவிப்புலனையும்பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டுகுலுாபிகும்

 قُلُوْبِكُمْ

உங்கள் உள்ளங்கள் (இதயங்கள்) மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டாஎன்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும்பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக! 6:46.


48. "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்'' என்று கூறுவீராக! ஃஅஹ்வாஃஅகும்

 اَهْوَآءَكُمْ‌ۙ

"உங்கள் மனோ இச்சைகளைப் (மன விருப்பங்களை - ஆசாபாசங்களை)  பின்பற்ற மாட்டேன். (பின்பற்றினால்) வழிதவறி விடுவேன். நேர்வழி பெற்றவனாக ஆகமாட்டேன்'' என்றும் கூறுவீராக! 6:56. 


49. அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அFப்யிதஹும்

 اَفْـــِٕدَتَهُمْ

அவர்களின் உள்ளங்களையும்(இதயங்களையும்) பார்வைகளையும் புரட்டுவோம். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுவோம் .6:110. 



 50.  மறுமையை நம்பாதோரின் அFப்யிதது

اَفْـِٕدَةُ

உள்ளங்கள் (மனம்-இதயங்கள்) அச்சொல்லைச் செவிமடுப்பதற்காகவும்அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும்அவர்கள் செய்து வந்ததை(த் தொடர்ந்து) செய்வதற்காகவும் (இவ்வாறு ஆக்கினோம்) 6:113.


51.  அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?171 நீங்கள் நிர்பந்திக்கப்படும்431 போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான்.42 அதிகமானோர் அறிவில்லாமல் பிஃஅஹ்வாஃயிஹிம் 

 بِاَهْوَآٮِٕهِمْ

தமது மனோ இச்சைகள் மூலம் (இஷ்டப்படி) வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன் 6:119. 



52. "அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சியமளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிமறுமையை நம்பாதோரின் ஃஅஹ்வாஃஅ

 اَهْوَآءَ

மனோ இச்சைகளைப் (மன விருப்பங்களை – ஆசாபாசங்களை -இஷ்டங்களை) பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர். 6:150.



53.   ஸுதுாரிஹிம் 

صُدُوْرِهِمْ

அவர்களின் உள்ளங்களில் (இதயங்களில்- நெஞ்சங்களில்)  இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். "நமக்கு இத்தகைய வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருக்காவிட்டால் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர்'' என அவர்கள் கூறுவார்கள். "உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவே'' என்று அவர்களுக்குக் கூறப்படும். 7:43. 



54. நாம் நாடியிருந்தால் பூமிக்கு உரியவர்களிடமிருந்து (அவர்கள் அழிக்கப்பட்ட பின்) அதைக் கைப்பற்றிக் கொண்டவர்களை அவர்களது பாவங்களின் காரணமாகத் தண்டித்திருப்போம் என்பதும்அவர்கள் செவியுறாதவாறு அலா ஃகுலுாபிஹிம்

عَلٰى قُلُوْبِهِمْ 
அவர்களின் உள்ளங்கள் (இதயங்களின் மீது  முத்திரையிட்டிருப்போம் என்பதும் விளங்கவில்லையா7:100.



55. (முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை)  அலா ஃகுலுாபில் காFபிரீ(ன)ன்

 عَلٰى قُلُوْبِ الْكٰفِرِيْنَ

மறுப்போரின் உள்ளங்கள் (இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான். 7:101. 



56. நாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது ஹவாஹு

 هَوٰٮهُ‌

மனோ (மன) இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாயாகும். அதை நீர் தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக! 7:176.


57. ஜின்களிலும்மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.   லஹும் ஃகுலுாபுன்

 لَهُمْ قُلُوْبٌ

அவர்களுக்கு உள்ளங்கள் (இருதயங்கள்உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். 7:179.



58. உமது இறைவனைக் காலையிலும்மாலையிலும் Fபீ Fப்ஸிக
 فِىْ نَفْسِكَ

உங்கள் மனதிற்குள் பணிவாகவும்அச்சத்துடனும்சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!192 7:205.



59. நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் வஜிலத் ஃகுலுாபுஹும் 

 وَجِلَتْ قُلُوْبُهُمْ


அவர்களின் உள்ளங்கள் (இருதயங்கள்)  நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். 8:2. 



60. நற்செய்தியாகவும்வலிதத்மயின்ன பிஹி ஃகுலுாபுகும்

 وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ‌ۚ

உங்கள் உள்ளங்கள் (இருதயங்கள்) இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்ஞானமிக்கவன். 8:10.


61. உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும்உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும்வலியர்பித அலா  ஃகுலுாபிகும் 

 وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ

உங்கள் உள்ளங்களை(இருதயங்களை)ப் பலப்படுத்தவும்உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.8:11



62. "நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! ஸஃஉல்ஃகீ Fபீ ஃகுலுாபில்லதீ(ரீ)ன கFபரூ

سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا

(என்னை) மறுப்போரின் உள்ளங்களில் (இருதயங்களில்)  பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!'' என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக! 8:12.


63.  நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குப் பதிலளியுங்கள்! உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும்போது அவருக்கும் (பதிலளியுங்கள்.) அன்னல்லாஹ யஃஹுலு பைனல் மர்ஃயி வ ஃகல்பிஹி

 اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ

ஒரு மனிதனுக்கும்அவனது உள்ளத்திற்கும் (இருதயங்களுக்கும்) இடையே அல்லாஹ் இருக்கிறான் என்பதையும்அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! 8:24.


64.  "அவர்களை அவர்களின் மார்க்கம் ஏமாற்றி விட்டது'' என்று நயவஞ்சகர்களும்வல்லதீ(ரீ)ன Fபீ ஃகுலுாபிஹிம் மரழுன்

وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ

உள்ளங்களில் (இருதயங்களில்)  நோய் உள்ளவர்களும் (உங்களைப் பற்றி) கூறியதை எண்ணிப் பாருங்கள்! யார் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறாரோ (அவர் வெற்றி பெறுவார். ஏனெனில்) அல்லாஹ் மிகைத்தவன்ஞானமிக்கவன். 8:49.



65.  வஅல்லFப  பைன ஃகுலுாபிஹிம்


وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْ‌ؕ

அவர்களின் உள்ளங்களிடையே (இருதயங்களுக்கும் இடையே)  அவன் பிணைப்பை ஏற்படுத்தினான். பூமியில் உள்ள அனைத்தையும் நீர் செலவிட்டாலும்  மாாவஅல்லFப  பைன ஃகுலுாபிஹிம் 

مَّاۤ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்களிடையே (இருதயங்களுக்கும் இடையே)  உம்மால் பிணைப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. மாறாக அல்லாஹ்வே அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தினான். அவன் மிகைத்தவன்ஞானமிக்கவன். 8:63.


66.  இன்ய் யஃலமில்லாஹு Fபீ ஃகுலுாபிகும் கைரன்


اِنْ يَّعْلَمِ اللّٰهُ فِىْ قُلُوْبِكُمْ خَيْرًا

"உங்கள் உள்ளங்களில் (இருதயங்களில்) நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால்194 உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதை விடச் சிறந்ததை உங்களுக்கு அவன் வழங்குவான். உங்களை மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்'' என்று நபியே உம்மிடம் உள்ள கைதிகளிடம் கூறுவீராக! 8:70. 


67. எப்படி? (உடன்படிக்கை இருக்க முடியும்?) அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களிடம் உள்ள உறவையும்உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள். தமது வாய்களால் அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்துகின்றனர். வதஃபா ஃகுலுாபுஹும் 

 وَتَاْبٰى قُلُوْبُهُمْ‌ۚ

அவர்களின் உள்ளங்கள் (இருதயங்கள்) மறுக்கின்றன. அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிந்தவர்கள். 9:8. 



68. அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். அவர்களை இழிவுபடுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான். வயஷ்Fபி ஸுதுார ஃகவ்மின்ம் முஃமினீ(ன)ன்

وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَۙ‏

நம்பிக்கை கொண்ட சமுதாயத்தின் உள்ளங்களுக்கு (இருதயங்களுக்கு நெஞ்சங்களுக்கு அவன் ஆறுதல் அளிப்பான்.53 9:14.



69. வயுது(ர்)ஹிப் ஃகய்ழ    ஃகுலுாபிஹிம் 

وَيُذْهِبْ غَيْظَ قُلُوْبِهِمْ‌

அவர்களின் உள்ளங்களில் (இருதயங்களில்) உள்ள கோபத்தையும் (அவன்) நீக்குவான். அல்லாஹ் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன் 9:15.  


70. அல்லாஹ்வையும்இறுதி நாளையும்1   நம்பாது     வர்தாபத்   ஃகுலுாபுஹும் 

 وَارْتَابَتْ قُلُوْبُهُمْ

தமது உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்)  சந்தேகம் கொள்வோரே உம்மிடம் அனுமதி கேட்பார்கள். அவர்கள் தமது சந்தேகத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். 9:45.


71. யாசிப்போருக்கும்ஏழைகளுக்கும்அதை வசூலிப்போருக்கும்,   ஃஅலைஹா வல் முஃஅல்லFபதி ஃகுலுாபுஹும்  

عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ

உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்)   ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும்,  204 அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்கடன்பட்டோருக்கும்அல்லாஹ்வின் பாதையிலும்,205 நாடோடிகளுக்கும்206 தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன்.130 9:60.


72.  பிமா Fபீ ஃகுலுாபிஹிம்

 بِمَا فِىْ قُلُوْبِهِمْ‌

தமது உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) உள்ளதை  வெளிப்படுத்தும் அத்தியாயம்நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்படுவதை நயவஞ்சகர்கள் அஞ்சுகின்றனர். "கேலி செய்யுங்கள்! நீங்கள் அஞ்சுவதை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்'' என்று கூறுவீராக! 9:64. 


73. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும்பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும் நாள்1 வரை  ஃகுலுாபிஹிம்
  قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்)   நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான். 9:77.


74. வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்திக் கொண்டனர். வதுப்ஃஅ  ஃஅலா  ஃகுலுாபிஹிம் 

 وَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) மீது முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். 9:87.



75. வசதி படைத்திருந்தும்உம்மிடம் அனுமதி கேட்டவர்கள் மீதே (தண்டிக்க) வழி உண்டு. அவர்கள் வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதைப் பொருந்திக் கொண்டார்கள். வதபஃஅல்லாஹு  ஃஅலா  ஃகுலுாபிஹிம் 

 وَطَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்கள்  (இ(ரு)தயங்கள்)  மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். எனவே அவர்கள் அறிய மாட்டார்கள். 9:93.



76.  ரீய்பதன் Fபீ  ஃகுலுாபிஹிம் 
رِيْبَةً فِىْ قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்கள் வெடித்துச் சிதறினால் தவிர அவர்கள் கட்டிய கட்டடம் அன் தகத்தஃஅ  ஃகுலுாபுஹும் 

 اَنْ تَقَطَّعَ قُلُوْبُهُمْ‌ؕ 


அவர்களின் உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) உள்ள சந்தேகத்தின் அடையாளமாக இருந்து கொண்டே இருக்கும். அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன். 9:110.


76.  வஅம்மல்லதீ(ரீ)ன  Fபீ  ஃகுலுாபிஹிம் மரழுன்

وَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ 

ஆனால் உள்ளங்களில் (நெஞ்சங்களில் - இ(ரு)தயங்களில்)  நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் அசுத்தத்துடன் அசுத்தத்தை இது அதிகமாக்கியது. அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தனர். 9:125



77. மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும்வஷிFபாஃஉ(ன்)ல் லிமா Fபிஸ்ஸுதுாரி 

 وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ

உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) உள்ளதற்கு நோய் நிவாரணமும்நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும்அருளும் வந்து விட்டன. 10:57.


78. அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. கதா(ரா)லிக   நத்பஃஉ அலா   ஃகுலுாபில் முஃததீ(ன)ன்

كَذٰلِكَ نَطْبَعُ عَلٰى قُلُوْبِ الْمُعْتَدِيْنَ

வரம்பு மீறியோரின் உள்ளங்கள் (நெஞ்சங்கள்இ(ரு)தயங்கள் மீது இவ்வாறே முத்திரையிடுவோம் ,10:74.



79. "எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும்அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும்செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையை விட்டும் அவர்களை வழிகெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்துவஷ்துத் ஃஅலா  ஃகுலுாபிஹிம் 

 وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்களையும் (நெஞ்சங்களையும் -  இ(ரு)தயங்களையும்)  கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார். 10:88.


80. கவனத்தில் கொள்க! அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக ஸுதுாரஹும்

 صُدُوْرَهُمْ

தமது நெஞ்சுகளை (இ(ரு)தயங்களை) அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும்வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன். 11:5

81.  "இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமாஅல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். வழாாஃயிஃகுன்ம் பிஹி ஸத்ருக

 وَضَآٮِٕقٌ ۢ بِهٖ صَدْرُكَ


உமது உள்ளம் (இ(ரு)தயம் -நெஞ்சம்) சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன். 11:12.



82. "என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன். Fபீ ஃஅன்Fபுஸிஹிம்

 فِىْۤ اَنْفُسِهِمْ‌

அவர்களின் உள்ளங்களில் (இ(ரு)தயங்களில் - நெஞ்சங்களில் - மனங்களில்)   உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்'' (எனவும் கூறினார்.) 11:31.


83. அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்டபோதுஅறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி அவ்ஜஸ (20:67)
  وَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً‌  

மனதுக்குள் (மனதில்) பயந்தார்.  "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர். 11:70.



84. நமது தூதர்கள்161 லூத்திடம் வந்தபோதுஅவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார்.  வழாஃக பிஹிம்

 وَضَاقَ بِهِمْ

அவர்களுக்காகமனம் வருந்தினார். "இது மிகவும் கடினமான நாள்'' எனவும் கூறினார். 11:77.



85. தூதர்களின் வரலாற்றில் மா நுத(ஸ)ப்பிது பிஹி Fபுவாதக

 مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌

உமது உள்ளத்தை (இ(ரு)தயத்தை)ப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும்அறிவுரையும்நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது. 11:120


அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால்அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோஉதவுபவனோ உமக்கு இல்லை.



86. அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். ஃஅன்Fபுஸுகும்

 اَنْفُسُكُمْ
"உங்கள் உள்ளங்கள் (மனங்கள்) உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்'' என்று அவர் கூறினார். 12:18.


87  Fப்ஸிய்

 نَفْسِ

"எனது உள்ளம் (ஆன்மா- மனது) தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர இன்னன் Fப்ஸ 
اِنَّ النَّفْسَ
உள்ளம் (மனம்) தீமையைத்தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்'' (என்றும் கூறினார்). 12:53. 



88. அவர்களது தந்தை அவர்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்கள் நுழைந்தபோது Fபீ Fப்ஸி

 فِىْ نَفْسِ
மனதில் நினைத்த ஒரு தேவையை யாகூப் நிறைவேற்றிக் கொண்டார் என்பதைத் தவிர (பலவாசல்கள் வழியாக நுழைந்தது) அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதளவும் காப்பாற்றவில்லை. நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்திருப்பதால் அவர் அறிவுடையவராக இருந்தார். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிவதில்லை. 12:68.



89. "இவர் திருடியிருந்தால் இதற்கு முன் இவரது சகோதரரும்228 திருடியிருக்கிறார்'' என்று அவர்கள் கூறினர். (அந்தச் சகோதரன் தானே என்ற விஷயத்தை) யூஸுஃப்அவர்களிடம் வெளிப்படுத்தாமல் Fபீ Fப்ஸிஹி
فِىْ نَفْسِهٖ

தமது மனதுக்குள்  வைத்துக் கொண்டார். "நீங்கள் மிகக் கெட்டவர்கள்நீங்கள் கூறுவதை அல்லாஹ்வே நன்கு அறிவான்'' என்றார்.12:77.

90. "(அவர்கள் தந்தையிடம் இதைக் கூறியபோது) அப்படியல்ல! ஃஅன்Fபுஸகும்

 اَنْفُسُكُمْ
உங்கள் உள்ளங்கள் (மனங்கள்) ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்ஞானமிக்கவன்'' என்று அவர் (தந்தை) கூறினார். 12:83.


91 நம்பிக்கை கொண்டோரின் வதத்மஃயின்னு ஃகுலுாபுஹும் பிதி(ரி)க்ரில்லாஹி

 وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ‌

நம்பிக்கை கொண்ட  அவர்களின் உள்ளங்கள்  (இ(ரு)தயங்கள்)  அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. 13:28.


92. இவ்வாறே இதனைச் சட்டமாக அரபு489 மொழியில் அருளியுள்ளோம்.227 உம்மிடம் இந்த அறிவு வந்த பின் ஹ்வாஃஅஹும்
 اَهْوَآءَهُمْ 

அவர்களின் மனோஇச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து பொறுப்பாளனோ, காப்பாற்றுபவனோ உமக்கு இல்லை. 13:37. 



93. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில்விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில்அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! அFப்ஃயிதத(ன்)ம் மினன் நாஸ்

 اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ

மனிதர்களில் சிலரது உள்ளங்களை (இ(ரு)தயங்களை) இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!246 14:37. 



94. (அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு ஓடுவார்கள். (நிலைகுத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. வஅFப்ஃயிததுஹும் ஹவாாஃ(உன்)
 وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ؕ‏

அவர்களின் உள்ளங்களும் (இ(ரு)தயங்களும்) செயலற்று விடும். 14:43.


95.  Fபீ ஃகுலுாபில் முஜ்ரிமீ(ன)ன்
 فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ‏

குற்றவாளிகளின் உள்ளங்களில் இவ்வாறே இதைப் புகுத்துகிறோம்.15:12.  



96.  மாFபீஸ் ஸுதுாரிஹிம் 

 مَا فِىْ صُدُوْرِهِمْ


அவர்களின் உள்ளங்களில் (நெஞ்சங்களில் - மனதில்)  இருந்த குரோதங்களை நீக்குவோம். கட்டில்களில் நேருக்குநேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள். 15:47.



97. நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும்பார்வைகளையும்வல்அFப்ஃயிதத

 وَالْاَفْـِٕدَةَ‌ ۙ 

உள்ளங்களையும் (அறிவையும் (பாகவி) – சிந்திக்கும் இ(ரு)தயங்களையும் IFT)  உங்களுக்கு ஏற்படுத்தினான். 16:78.


98. அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும்மறுப்பிற்கு கல்புஹு 

قَلْبُهٗ

உள்ளத்தில் (நெஞ்சம்)  தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும்கடும் வேதனையும் உண்டு. ஸத்ரன்
 صَدْرًا
உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.261 16:106.


 99.  ஃகுலுாபிஹிம்

 قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) மீதும்செவியின் மீதும்பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களே விளங்காதவர்கள். 16:108.



100. உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவிபார்வைவல்Fபுஃஆத

وَالْفُؤَادَ
உள்ளம் (இ(ரு)தயம்) ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவையாகும். 17:36. 



101. அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அலா ஃகுலுாபிஹிம்

 عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்களில் (இருதயங்களின் மேல்) மூடிகளையும்காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும்போது அவர்கள் வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.17:46 



102. "கல்லாகவோஇரும்பாகவோஅல்லது மிம்மா யக்புரூன பீF ஸுதுாரிகும் 

 مِّمَّا يَكْبُرُ فِىْ صُدُوْرِكُمْ‌ۚ

உங்கள் உள்ளங்களில் (நெஞ்சங்களில் - மனதில்) பெரிதாகத் தோன்றும் ஒரு படைப்பாகவோ ஆகுங்கள்!'' (எப்படி ஆனாலும் உயிர்ப்பிப்பான்) என்று கூறுவீராக! "எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். 17:51


103. அவர்கள் எழுந்து "நமது இறைவன் வானங்களுக்கும்பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்று அவர்கள் கூறியபோது வரபத்னா அலா ஃகுலுாபிஹிம் 

 وَّرَبَطْنَا عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களது உள்ளங்களை இ(ரு)தயங்களை) உறுதிப்படுத்தினோம். 18:14 



 104.  தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும்மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும்  மன் அஃக்Fபல்னா ஃகல்பஹு 

مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ
எவனது சிந்தனையை (இ(ரு)தயத்தை - உள்ளத்தை - மனத்தை)  நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோஅவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் ஹவாஹு

 هَوٰٮهُ 

தனது மனோ  இச்சையைப் -  பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. 18:28.


105. அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டுஅதைப் புறக்கணித்துதான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார் ஃகுலுாபிஹிம்

 قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்கள்  (இருதயங்கள்)  புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் மீது மூடிகளையும்காதுகளில் செவிட்டுத் தன்மையையும் நாம் ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற மாட்டார்கள். 18:57 


106. அவர்களுக்குப் பின்னர் வழித்தோன்றல்கள்46 வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். அஷ்ஷஹவாதி

الشَّهَوٰتِ‌

மனோ (மன - சரீர) இச்சைகளைப் பின்பற்றினர்.  அவர்கள் பின்னர் நட்டத்தைச் சந்திப்பார்கள். 19:59.


 107. அதை நம்பாதுஹவாஹு

 هَوٰٮهُ

தனது மனோ (மன - சரீர) இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்! 20:16.



108. "என் இறைவா! ஸத்ரீ

 صَدْرِىْ ۙ‏ 
எனது உள்ளத்தை  (நெஞ்சத்தை) எனக்கு விரிவுபடுத்து!'' என்றார். 20:25.  




109. மூஸா Fபஅவ்ஜஸ Fபீ நFப்ஸிஹி

فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ

தமக்குள் (மனதில்-மனதிற்குள்) அச்சத்தை உணர்ந்தார்.20:67 


109. "அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். ஸவ்வலத் லீ நFப்ஸீ

 سَوَّلَتْ لِىْ نَفْسِ

என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான்.19 20:96. 



110.   லாஹியதன் ஃகுலுாபுஹும் 

لَاهِيَةً قُلُوْبُهُمْ‌
அவர்களின் உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்)  அலட்சியம் செய்கின்றன. "இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர யார்பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம்285 செல்கிறீர்களா?'' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.357 21:3. 



111. உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று  இலா ஃஅன்Fபுஸிஹிம்

 اِلٰٓى اَنْـفُسِهِمْ

தமக்குள் பேசிக்கொண்டனர்.21:64


112 அவர்கள் அதன் இரைச்சலைச் செவியுற மாட்டார்கள். ஃஅன்Fபுஸுஹும்

 اَنْفُسُهُمْ

தமது உள்ளங்கள் (மனங்கள்) ஆசைப்படுவதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். 21:102.


113. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ அது மின் தஃக்வல் ஃகுலுாபி 

 مِنْ تَقْوَى الْقُلُوْبِ
உள்ளங்களில்  (இருதயங்களில்)  உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும். 22:32 


 114. அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் வஜிலத் ஃகுலுாபுஹும் 

 وَجِلَتْ قُلُوْبُهُمْ

அவர்களது உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலைநாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுவர். 22:35


115. அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்)  ஃகுலுாபுன்ய் யஃ ஃகிலுான

 قُلُوْبٌ يَّعْقِلُوْنَ

விளங்குகிற உள்ளங்களும், (இ(ரு)தயங்களும்) கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன. 22:46.



116. எவரது Fபீ  ஃகுலுாபிஹிம் மரழுன்

 فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ

உள்ளங்களில் (இருதயங்களில்) நோய் இருக்கிறதோ அவர்களுக்கும் வல் ஃகாசியதி   ஃகுலுாபுஹும்

وَّالْقَاسِيَةِ قُلُوْبُهُمْ‌ ۚ 

(உள்ளங்களில்- இருதயங்களில்) கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்குவதற்காக அதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.26 22:53 


117. (முஹம்மதே!) கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும்வதுஃக்பித லஹு ஃகுலுாபுஹும் 

 فَـتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ‌

அவர்களது உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) அவனுக்குப் பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் நேரான பாதையைக் காட்டுகிறான். 22:54.



118.  பல்  ஃகுலுாபுஹும் பல்

بَلْ قُلُوْبُهُمْ

எனினும் அவர்களின் உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) இதைப் பற்றி கவனமற்று இருக்கின்றன. இது அல்லாத ஏனைய செயல்கள் அவர்களுக்கு உள்ளன. அவற்றை அவர்கள் செய்கின்றனர். 23:63. 



119. உண்மைஅஹ்வாஃஅஹும்

 اَهْوَآءَهُمْ

அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றிச் சென்றிருந்தால் வானங்களும்,507 பூமியும் அவற்றில் உள்ளோரும் சீரழிந்திருப்பார்கள். மாறாக அவர்களுக்கு அவர்களின் அறிவுரையையே வழங்கியுள்ளோம். அவர்கள் தமது அறிவுரையைப் புறக்கணிக்கின்றனர்.23:71 



120. அவனே உங்களுக்குச் செவியையும்பார்வைகளையும்வல் அFப்ஃயிதத 
وَالْاَفْـِٕدَةَ‌

உள்ளங்களையும் (இ(ரு)தயங்களையும்) ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். 23:78. 


121. வணிகமோவர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும்தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும்ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும்Fபீஹில் ஃகுலுாபு

 فِيْهِ الْقُلُوْبُ

உள்ளங்களும் இ(ரு)தயங்களும்   தடுமாறும் நாளைஅவர்கள் அஞ்சுவார்கள்.26 24:37 




122.  Fபீ  ஃகுலுாபிஹிம் மரழுன்
اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ
அவர்களின் உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) நோய் உள்ளதாஅல்லது சந்தேகம் கொள்கிறார்களாஅல்லது அல்லாஹ்வும்அவனது தூதரும் அவர்களுக்கு அநீதி இழைப்பார்கள் என்று அஞ்சுகிறார்களாஇல்லை! அவர்களே அநீதி இழைத்தவர்கள். 24:50. 




123. இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதாஎன (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித்தான் இதன் மூலம் Fபுஃஆதக

 فُـؤَادَكَ‌
உமது உள்ளத்தைப் (இ(ரு)தயத்தை) பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.447 25:32.


124.  தனது ஹவாஹு
هَوٰٮهُ

மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீராஅவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா25:43.



 125. அல்லாஹ்விடம்  பிஃகல்பின் ஸலீ(மின்)ம்

 بِقَلْبٍ سَلِيْمٍؕ‏

தூய உள்ளத்துடன் (இ(ரு)தயத்துடன்) வருவதைத் தவிரசெல்வமோமக்களோ அந்நாளில் பயன் தராது.2626:89.



126 எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக,  அலா கல்பிக 

عَلٰى قَلْبِكَ
உமது உள்ளத்தில் (இ(ரு)தயத்தில்)152 தெளிவான அரபு489 மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26& 492 26:193, 194, 195.





127. இவ்வாறே Fபீ ஃகுலுாபில் முஜ்ரிமீ(ன)ன்

 فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَؕ‏
குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்தி விட்டோம்.26:200



  128.  ஸுதுாருஹும்

 صُدُوْرُهُمْ

அவர்களின் உள்ளங்கள் (நெஞ்சங்கள் - இ(ரு)தயங்கள் )  மறைப்பதையும்அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிவான். 27:74.


129. மூஸாவின் தாயாரின் Fபுஃஆது 

 فُؤَادُ  
உள்ளம் (இ(ரு)தயம்) வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்காவிட்டால் அவர் (உண்மையை) வெளிப்படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக ஆவதற்கு இவ்வாறு செய்தோம். 28:10



130. அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் அஹ்வாாஃஅஹும்
 اَهْوَآءَهُمْ
தமது மனோஇச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி ஹவாஹு

هَوٰٮهُ
தனது மனோஇச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 28:50



131.  ஸுதுாருஹும்

صُدُوْرُهُمْ

அவர்களின் உள்ளங்கள் (நெஞ்சங்கள்  இ(ரு)தயங்கள்) மறைப்பதையும்அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிகிறான். 28:69.



132. "அல்லாஹ்வை நம்பினோம்'' என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ்வின் விஷயத்தில் அவர்களுக்குத் தொல்லையளிக்கப்பட்டால் மனிதர்களின் தொந்தரவை அல்லாஹ்வின் வேதனையைப் போல் அவர்கள் கருதுகின்றனர். உமது இறைவனிடமிருந்து உதவி வந்தால் "நாங்கள் உங்களுடன் இருந்தோம்'' எனக் கூறுகின்றனர். Fபீ ஸுதுாரில் ஃஆலமீ(ன)ன்

 فِىْ صُدُوْرِ الْعٰلَمِيْنَ‏

அகிலத்தாரின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன் இல்லையா29:10.



133. மாறாக, அநீதி இழைத்தோர் அறிவின்றி ஃஅஹ்வாாஅஹும்
اَهْوَآءَهُمْ
தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவன் யார்? அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை. 30:29. 


134. இவ்வாறே அறியாதவர்களின் ஃஅலா  ஃகுலுாபி 
عَلٰى قُلُوْبِ

உள்ளங்கள்  (இ(ரு)தயங்கள்)  மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.30:59 



135. (நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். பிதா(ரா)திஸ் ஸுதுா(ரி)ர் 
 بِذَاتِ الصُّدُوْرِ‏
உள்ளங்களில் (நெஞ்சங்களில் -இ(ரு)தயங்களில்  உள்ளதை அல்லாஹ் அறிந்தவன். 31:23 



136. பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும்பார்வைகளையும்வல்அFப்ஃயிதத

 وَالْاَفْـــِٕدَةَ ‌ ؕ
உள்ளங்களையும் (இ(ரு)தயங்களையும்) ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். 32:9


137. லிரஜுலி(ன்)ம் மின்  ஃகல்பைனி Fபீ ஜவ்Fபிஹி

 لِرَجُلٍ مِّنْ قَلْبَيْنِ فِىْ جَوْفِهٖ ۚ
எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை (இ(ரு)தயங்களை)  502 அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை.316 உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை.317 இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான். 33:4 


138. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும்உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக மா தஃஅம்மதத் ஃகுலுாபுகும் 

مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ‌

உங்கள் உள்ளங்களால் (மனமார - மனப்பூர்வமாக)  தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும்நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். 33:5.



139. அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும்உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்தபோதுபார்வைகள் நிலை குத்தி,  வபலஃகதில் ஃகுலுாபுல் ஃஹனாஜிர

 وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَـنَـاجِرَ

இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டபோதுஅங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப்பட்டனர்.484 அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள்.26 33:10, 


ஃகுலுாபு என்பதற்கு  இந்த 33:10, வசனத்திலும்  40:18  வசனத்திலும்  எல்லாருமே  இதயங்கள் என்றே மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். அதுதான் சரியானது. ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மட்டும் இந்த இரண்டு வசனங்களிலும்  உள்ளங்கள் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள்.



140. "அல்லாஹ்வும்அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும்Fபீ  ஃகுலுாபிஹிம் மரழுன்

 فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ

உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) நோய் உள்ளோரும் கூறியபோதும் (சோதிக்கப்பட்டனர்). 33:12.


141 வேதமுடையோரில்27 அவர்களுக்கு உதவி செய்தோரை அவர்களின் கோட்டைகளிலிருந்து இறக்கினான். Fபீ  ஃகுலுாபிஹிம்
 فِىْ قُلُوْبِهِمُ

அவர்களின் உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) அச்சத்தைப் போட்டான். ஒரு கூட்டத்தைக் கொன்றீர்கள்! மறு கூட்டத்தைச் சிறைப் பிடித்தீர்கள். 33:26.


142.  நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர்.500 நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! Fபீ  ஃகல்பிஹி மரழுன்

 فِىْ قَلْبِهٖ مَرَضٌ
எவனது உள்ளத்தில் (இ(ரு)தயத்தில்) நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். 33:32.


143. (முஹம்மதே!) அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி விடலாம். விரும்பியவரை உம்முடன் வைத்துக் கொள்ளலாம். நீர் ஒதுக்கியோரில் யாரை விரும்புகிறீரோ (அவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்) உம் மீது குற்றம் இல்லை. அவர்களின் கண்கள் குளிரவும்அவர்கள் கவலைப்படாமல் இருக்கவும்நீர் அவர்களுக்கு எதைக் கொடுக்கிறீரோ அதில் அவர்கள் அனைவரும் திருப்தியடையவும் இது ஏற்றது.  மா Fபீ  ஃகுலுாபிகும் 

 مَا فِىْ قُلُوْبِكُمْ
உங்கள் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் அறிந்தவனாகவும்சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கிறான். 33:51.



144 நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்!500 இதுவே லி  ஃகுலுாபிகும் 

لِقُلُوْبِكُمْ
உங்கள் உள்ளங்களுக்கும், (இ(ரு)தயங்களுக்கும்)
   ஃகுலுாபிஹின்ன`

 وَقُلُوْبِهِنَّ ؕ
அவர்களின் உள்ளங்களுக்கும் (இ(ரு)தயங்களுக்கும்) தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.322 33:53.




145.  நயவஞ்சகர்களும்Fபீ  ஃகுலுாபிஹிம் மரழுன்


 فِى قُلُوْبِهِمْ مَّرَضٌ

உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) நோய் உள்ளோரும்மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.185 33:60.



146 யாருக்காக அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை17 பயன் தராது. முடிவில் ஃஅன்  ஃகுலுாபிஹிம் 
عَنْ قُلُوْبِهِمْ 

அவர்களின் உள்ளங்களிலிருந்து (இ(ரு)தயங்களிலிருந்து)  நடுக்கம் நீங்கியதும் "உங்கள் இறைவன் என்ன கூறினான்?'' எனக் கேட்டுக் கொள்வார்கள். "உண்மையையே (கூறினான்.) அவன் உயர்ந்தவன்பெரியவன்'' என்று கூறுவார்கள். 34:23.



147. வானங்களிலும்507 பூமியிலும் உள்ள மறைவானவற்றை அல்லாஹ் அறிபவன். பிதா(ரா)திஸ் ஸுதுா(ரி)ர்
 بِذَاتِ الصُّدُوْرِ

உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன். 35:38 


 148. அவர் தமது இறைவனிடம் பிஃகல்பின் ஸலீ(மின்)ம்

بِقَلْبٍ سَلِيْمٍ‏
தூய உள்ளத்துடன் (நெஞ்சத்துடன் - இருதயத்துடன்) வந்ததை நினைவூட்டுவீராக! 37:84. 



149. தாவூதே! உம்மைப் பூமியில் வழித் தோன்றலாக46 நாம் ஆக்கினோம். எனவே மக்கள் மத்தியில் நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! 

وَلَا تَتَّبِعِ الْهَوٰى

மனோ இச்சையைப் பின்பற்றாதீர்! அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்போர் விசாரணை நாளை1 மறந்ததால் அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு.38:26.


150 அFப மன் ஷரஃஹல்லாஹு   ஸத்ரஹு லில் இஸ்லாமி

اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ

யாருடைய உள்ளத்தை (நெஞ்சத்தை - இருதயத்தை) இஸ்லாத்திற்காக அல்லாஹ் விரிவடையச் செய்து விட்டானோ அவரா (வழிகெட்டவர்)அவர் தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) ஒளியில் இருக்கிறார். இறைவனை நினைப்பதை விட்டு லில்ஃகாஸியதி ஃகுலுாபுஹும் 

 لِّلْقٰسِيَةِ قُلُوْبُهُمْ
உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) இறுகிப் போனவர்களுக்குக் கேடு தான். அவர்களே தெளிவான வழிகேட்டில் இருப்பவர்கள்.39:22. 


151 அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும்ஒன்றையொன்று ஒத்த வேதமாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும்ஃகுலுாபுஹும்

قُلُوْبُهُمْ
உள்ளங்களும் (இ(ரு)தயங்களும்) அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம்தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை. 39:23.


152. அல்லாஹ் மட்டும் குறிப்பிடப்படும்போதுமறுமையை நம்பாதோரின் ஃகுலுாபு
 قُلُوْبُ
உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் குறிப்பிடப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.39:45.


153 சீக்கிரம் வரவிருக்கும் நாளைப்1 பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக! அப்போது இதி(ரி)ல்  ஃகுலுாபு லதல் ஃஹனாஜிரி

 اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَـنَاجِرِ

இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள் இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு எந்த நண்பனும்அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை.17 40:18.


ஃகுலுாபு என்பதற்கு  இந்த 40:18வசனத்திலும்    33:10  வசனத்திலும்  எல்லாருமே  இதயங்கள் என்றே மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். அதுதான் சரியானது. ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மட்டும் இந்த இரண்டு வசனங்களிலும்  உள்ளங்கள் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள்.



154. அவர்கள் தங்களுக்கு எந்தச் சான்றும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும்நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்துவதாகும். இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஃஅலா  குல்லி  கல்பி
عَلٰى كُلِّ قَلْبِ

ஒவ்வொரு உள்ளத்தின் (இ(ரு)தயத்தின்) மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.



155. தங்களுக்குச் சான்று கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோரின் ஸுதுாரிஹிம்

 صُدُوْرِهِمْ 

உள்ளங்களில் (நெஞ்சங்களில் - இ(ரு)தயங்களில்) பெருமை தவிர வேறில்லை. அதற்கு அவர்கள் தகுதி படைத்தோர் இல்லை. அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்;488 பார்ப்பவன்48840:35


156 "நீர் எதை நோக்கி எங்களை அழைக்கிறீரோ அதை விட்டும் (தடுப்பதற்காக) ஃகுலுாபுனா

 قُلُوْبُنَا 

எங்கள் உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) மூடிகளும்காதுகளில் செவிட்டுத் தன்மையும் எங்களுக்கும்உமக்கும் இடையே ஒரு திரையும் இருக்கிறது. எனவே நீரும் செயல்படுவீராக! நாங்களும் செயல்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.41:5.


157. இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள்  ஃஅன்Fபுஸுகும் 

 اَنْفُسُكُمْ

ஆசைப்படுபவை (மனம் விரும்பியவை) அங்கே உங்களுக்குக் கிடைக்கும். 41:31



158. (முஹம்மதே!) இதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அஹ்வாாஃஅஹும்
 اَهْوَآءَهُمْ

அவர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்! "அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்கக் கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது'' என்று கூறுவீராக!42:15.


159. "அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டி விட்டார்'' எனக் கூறுகிறார்களா? (முஹம்மதே!) அல்லாஹ் நாடினால் ஃஅலா ஃகல்பிக
 عَلٰى قَلْبِكَ‌
உமது உள்ளத்தில் ((இ(ரு)தயத்தின் மீது) முத்திரையிடுவான். அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால்155 உண்மையை நிலைக்கச் செய்கிறான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன். 42:24.


160. தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில்  ஃஅன்Fபுஸு 

اَنْفُسُ
உள்ளங்கள் (மனங்கள்) விரும்புபவையும், கண்கள் இன்புறுபவையும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.43:71. 




161. (முஹம்மதே!) பின்னர் இம்மார்க்கத்தில் உம்மை ஒரு வழிமுறையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதோரின் அஹ்வாா

 اَهْوَآ

மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! 45:18. 

162.  தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீராதெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். செவியிலும்ஃகல்பிஹி
قَلْبِهٖ

அவனது உள்ளத்திலும் (இ(ரு)தயத்திலும்)  முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா45:23.




163. உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்கு நாம் செய்து கொடுத்திருந்தோம். அவர்களுக்குச் செவியையும்பார்வைகளையும்,

 وَّاَفْـِٕدَةً  ۖ
உள்ளங்களையும் (இ(ரு)தயங்களையும்) ஏற்படுத்தியிருந்தோம். அவர்களின் செவியும்பார்வைகளும்வலா Fப்ஃயிததுஹும் 

 وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ

உள்ளங்களும் (இ(ரு)தயங்களும்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோது சிறிதளவும் அவர்களுக்குப் பயன் தரவில்லை. அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது. 46:26.


164. தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) தெளிவான மார்க்கத்தில் இருப்பவர், அஹ்வாஃஅஹும்

اَهْوَآءَهُمْ
தனது மனோ இச்சைகளைப் பின்பற்றி தனது தீய செயல் அழகானதாகக் காட்டப்பட்டவனைப் போன்றவரா? 47:14.

165. (முஹம்மதே!) உம்மிடமிருந்து செவியேற்பவரும் அவர்களில் உள்ளனர். உம்மை விட்டு அவர்கள் வெளியேறியவுடன் "இவர் சற்றுமுன் என்ன தான் கூறினார்?'' என்று கல்வி வழங்கப்பட்டோரிடம் (கேலியாக) கேட்கின்றனர்.  ஃஅலா  குலுாபிஹிம்  
عَلٰى قُلُوْبِهِمْ

அவர்களின் உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்கள் ஃஅஹ்வாஃஅஹும்
اَهْوَآءَهُمْ‏
தமது மனோஇச்சைகளைப் பின்பற்றினார்கள். 47:16.


166. அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமாஅல்லது அவர்களின் ஃஅலா  குலுாபின்
عَلٰى قُلُوْبٍ
உள்ளங்கள் (இ(ரு)தயங்கள்)  மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா47:24.


167 தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் Fபீ  ஃகுலுாபி 
 فِىْ قُلُوْبِ
உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) நிம்மதியை அருளினான். வானங்கள்507 மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும்ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். 48:4.


168. "எங்கள் செல்வங்களும்எங்கள் குடும்பங்களும் எங்களைத் திசை திருப்பி விட்டன! எனவே எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக!'' என்று கிராமவாசிகளில் போருக்கு வராமல் தங்கி விட்டோர் (முஹம்மதே!) உம்மிடம் கூறுவார்கள். Fபீ  ஃகுலுாபிஹிம்
 فِىْ قُلُوْبِهِمْ

தமது உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்) இல்லாத ஒன்றைத் தமது நாவுகளால் கூறுகின்றனர். "அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். 48:11.


169. இல்லை! இத்தூதரும்நம்பிக்கை கொண்டோரும் தமது குடும்பத்தாரிடம் ஒருபோதும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நினைத்தீர்கள். Fபீ  ஃகுலுாபிகும் 
 فِىْ قُلُوْبِكُمْ
உங்கள் உள்ளங்களில் (இ(ரு)தயங்களில், மனதில்)  இது அழகாக்கப்பட்டது. தீய கருத்தை எண்ணினீர்கள். அழியும் கூட்டமாகவும் ஆகி விட்டீர்கள்.48:12.


170 அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி334 எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். Fபீ  ஃகுலுாபிஹிம் 

 قُلُوْبِهِمْ
அவர்களின் உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்)  இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான். 48:18.


171. (ஏகஇறைவனை) மறுத்தோர் Fபீ  ஃகுலுாபிஹிமு

 فِىْ قُلُوْبِهِمُ
தமது உள்ளங்களில் (இ(ரு)தயங்களில்)  வைராக்கியத்தைமூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்தியபோதுஅல்லாஹ் தனது நிம்மதியைத் தனது தூதர் மீதும்நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். (இறை) அச்சத்திற்கான வார்த்தையை அவர்கள் பற்றிப் பிடிக்குமாறு செய்தான். அவர்கள் அதற்கு உரிமை படைத்துதகுதியுடையோராகவும் இருந்தனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். 48:26


172. அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள்வோரின் 
 قُلُوْبَهُمْ

உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப்படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும்மகத்தான கூலியும் இருக்கிறது. 49:3.





173 உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அதிகமான காரியங்களில் அவர் உங்களுக்குக் கட்டுப்பட்டிருந்தால் சிரமப்பட்டிருப்பீர்கள். மாறாக அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு விருப்பமானதாக ஆக்கினான். அதை 

 فِىْ قُلُوْبِكُمْ

உங்கள் உள்ளங்களில் அழகாக்கினான். (இறை) மறுப்பையும்குற்றத்தையும்மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கினான். அவர்களே நேர்வழி பெற்றோர். 49:7.



174 "நம்பிக்கை கொண்டோம்'' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை 

 فِىْ قُلُوْبِكُمْ

உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக "கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும்அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்திட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன். 49:14.


175. மனிதனைப் படைத்தோம்.368  Fப்ஸுஹு

 نَفْسُهٗ

அவனது மனம் (உள்ளத்தில்) எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.49 50:16.



176 திருந்திபேணி நடந்துமறைவில் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சி பிஃகல்பி(ன்)ம் முனீ(பி)ப்

 بِقَلْبٍ مُّنِيْبِۙ‏

தூய உள்ளத்துடன் வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.26 50:33.


177. யாருக்கு கல்புன்

 قَلْبٌ
உள்ளம் உள்ளதோஅல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. 50:37.



178.  ஃஅனில்ஹவா 

 عَنِ الْهَوٰىؕ
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.53:3.



179. அவர் பார்த்ததில் அவரது Fபுஃஆது

 الْفُؤَادُ

உள்ளம் பொய்யுரைக்கவில்லை.53:11. 




180. பொய்யெனக் கருதி ஃஅஹ்வாாஃஅஹும்

 اَهْوَآءَهُمْ
தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது. 54:3



181. இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். ஸுதுாரி

 الصُّدُوْرِ
உள்ளங்களில் உள்ளவற்றையும் அவன் அறிந்தவன். 57:6.


182. நம்பிக்கை கொண்டோரின் அன் தஃக் ஷஃஅ  ஃகுலுாபுஹும்  

 اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ

உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? (அதற்கு) முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையாகாலம் நீண்டு விட்டதால் அவர்களின் Fபஃகஸத் ஃகுலுாபுஹும்
 فَقَسَتْ قُلُوْبُهُمْ
உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிமானோர் குற்றவாளிகள். 57:16.




183. பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில் நமது தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் (அவர்களைத்) தொடர்ந்து அனுப்பினோம். அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம்.491 அவரைப் பின்பற்றியோரின் Fபீ  ஃகுலுாபி 

 فِىْ قُلُوْبِ

உள்ளங்களில் இரக்கத்தையும்அன்பையும் ஏற்படுத்தினோம். அவர்கள்தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்57:27



184 அல்லாஹ்வையும் இறுதி நாளையும்நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும்அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும்பிள்ளைகளாக இருந்தாலும்சகோதரர்களாக இருந்தாலும்தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் Fபீ  ஃகுலுாபிஹிமு

فِىْ قُلُوْبِهِمُ

உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு444 மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். 58:22.


185. அவனே வேதமுடையோரில்27 உள்ள (ஏகஇறைவனை) மறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான்.61 அவர்களது Fபீ  ஃகுலுாபிஹிமு

 فِىْ قُلُوْبِهِمُ
உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும்நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள்! 59:2


186. அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும்நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் Fபீ  ஃகுலுாபினா
 فِىْ قُلُوْبِنَا
உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர். 59:10.



187.  Fபீ ஸுதுாரிஹிம்
 فِىْ صُدُوْرِهِمْ
அவர்களது உள்ளங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றியே அதிக பயம் இருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.59:13


188. அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலிருந்தோசுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிட மாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின்  ஃகுலுாபுஹும்
قُلُوْبُهُمْ

உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். 59:14.


189. "என் சமுதாயமே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் என்பதை அறிந்து கொண்டே ஏன் எனக்குத் தொல்லை தருகிறீர்கள்?'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக. அவர்கள் தடம் புரண்டபோது அவர்களின்   ஃகுலுாபஹும்

 قُلُوْبَهُمْ
உள்ளங்களை அல்லாஹ் தடம் புரளச் செய்து விட்டான். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 61:5.


190. அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏகஇறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது ஃகுலுாபிஹிம்
 قُلُوْبِهِمْ

உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.63:3.


191 வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும்வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். ஸுதுாரி

 الصُّدُوْرِ
உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.64:4.


192 எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் ஃகல்பஹு

 قَلْبَهٗ‌ؕ

உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். 64:11.


193. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் (அதுவே நல்லது.) ஃகுலுாபுகுமா 
 قُلُوْبُكُمَا

உங்கள் இருவரின் உள்ளங்கள் தடம் மாறி இருந்தன. அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால் அல்லாஹ்வே அவரது உதவியாளன். ஜிப்ரீலும்நம்பிக்கை கொண்டோரில் நல்லோரும்வானவர்களும் அதன் பின் (இவருக்கு) உதவுபவர்கள். 66:4.



194.  உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! ஸுதுாரி
الصُّدُوْرِ‏
உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன். 67:13.



195. அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்குச் செவியையும்பார்வைகளையும்ஃஅFப்ஃயிதத
اَفْـــِٕدَةَ ‌ ؕ

உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக! 67:23.


196. நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போருக்குச் சோதனையாகவே484 தவிர நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டோர்27 உறுதி கொள்வதற்காகவும்நம்பிக்கை கொண்டோர் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்ளவும்நம்பிக்கை கொண்டோரும் வேதம் வழங்கப்பட்டோரும்27 சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும்யாருடைய  Fபீ  ஃகுலுாபிஹிம்
  فِىْ قُلُوْبِهِمْ
உள்ளங்களில் நோய் உள்ளதோ அவர்களும் (நம்மை) மறுப்போரும் இதன் மூலம் அல்லாஹ் என்ன முன் மாதிரியை நாடுகிறான்?'' என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு அமைத்தோம்) இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை அவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை. 74:31



197. குறை கூறிக்கொண்டிருக்கும் பின்Fப்ஸி
بِالنَّفْسِ

உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.75:2.


198. யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, ஃஅனில் ஃஅஹ்வா,  

 عَنِ الْهَوٰىۙ
மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.26 79:40, 41.




199. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது ஃஅலா  குலுாபிஹிம்  

 عَلٰى قُلُوْبِهِمْ

உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது. 83:14.


200.  tFப்ஸின் 
وَنَفْسٍ

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!379 91:7.



201. ஸத்ரக

 صَدْرَكَۙ‏
உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா94:1.


202. ஃஅFஃயித(தி)

 الْاَفْـــِٕدَةِ ؕ

அது உள்ளங்களைச் சென்றடையும் 104:7



203  மாFபிஸ்ஸுதுாரி 

مَا فِى الصُّدُوْرِۙ

உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும்போது,100:10

.
204 Fபீ   ஸுதுாரின்னா(ஸி)ஸ்


 فِىْ صُدُوْرِ النَّاسِۙ

அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்114:5.
.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.