2:38 இல்லை -மாட்டார்கள் 2ல் பொருத்தமான வார்த்தை எது?
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள Fபலா, என்றாலும் வலா என்றாலும் இரண்டுக்குமே லா என்பதற்குரிய இல்லை என்ற அர்த்தம் தான் வரும். Fப , வ போன்ற எழுத்துக்கள் எல்லாம் துணை எழுத்துக்கள் தான். அவற்றுக்கு தனியாக பொருள் கிடையாது.
தனித் தனியாக வார்த்தைக்கு வார்த்தையாக மொழி பெயர்க்கும் போது இல்லை என்ற அர்த்தம் தந்தாலும் அடுத்து வரும் வார்த்தைகளைக் கொண்டு மாறவும் செய்யும். அந்த அடிப்படையில் தான் இந்த வசனத்தின் இறுதியில் உள்ள வலா ஹும் யஹ்ஸனுா(ன)ன் என்பதற்கு அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று பொருத்தமான வார்த்தையை பயன்படுத்தி தமிழாக்கம் செய்துள்ளார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/238-2.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/238-2.html
வார்த்தைக்கு வார்த்தை என்ற முறையில் அவர்கள் கவலைப்படவும் இல்லை என்று தமிழாக்கம் செய்தால் அதன் அர்த்தம் அனர்த்தனம் ஆகி விடும். வருங்காலச் சொல் இறந்த காலச் சொல்லாக ஆகி விடும். இந்த அடிப்படையில் தான் மற்ற வசனங்களிலும் பீ.ஜே.யின் மொழி பெயர்ப்பு உள்ளது.
யஹ்ஸனுா(ன)ன் என்றால் கவலைப் படுவார்கள்.
லா யஹ்ஸனுா(ன)ன் என்றால் கவலைப்பட மாட்டார்கள் என்பதாகும்.
லா யஹ்ஸனுா(ன)ன் என்றாலே கவலைப்பட மாட்டார்கள் எனும் போது. வலா ஹும் என்பது ஏன் வந்துள்ளது?
வலா ஹும் என்பது அரபு நடையில் அழுத்தம் கொடுக்கும் சொல்லாகும். உறுதியாக, நிச்சயமாக என்பார்களே அது உள்ளடங்கி இருக்கிறது. வலா ஹும் யஹ்ஸனுா(ன)ன் என்றால் அவர்கள் கவலைப்ட வும் மாட்டார்கள் என்று பொருள் தரும்.
லா யஹ்ஸனுா(ன)ன் என்றாலே கவலைப்பட மாட்டார்கள் எனும் போது. வலா ஹும் என்பது ஏன் வந்துள்ளது?
வலா ஹும் என்பது அரபு நடையில் அழுத்தம் கொடுக்கும் சொல்லாகும். உறுதியாக, நிச்சயமாக என்பார்களே அது உள்ளடங்கி இருக்கிறது. வலா ஹும் யஹ்ஸனுா(ன)ன் என்றால் அவர்கள் கவலைப்ட வும் மாட்டார்கள் என்று பொருள் தரும்.
و வாவு க்கு இன்னும் மேலும், பின்னர், பின்பு, அன்றி என்று மொழி பெயர்க்க வேண்டும். பீ.ஜே.யின் தர்ஜமாவில் மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார் என்று வானுக்கும் பூமிக்குமாக குதித்தவர்கள் ஏராளம். இந்த 2:38 ல் வலா ஹும் யஹ்ஸனுா(ன)ன் என்பதில் உள்ள வாவு க்கு இன்னும் மேலும், பின்னர், பின்பு, அன்றி யாரும் மொழி பெயர்க்கவில்லை.
தாருல் ஹுதாவின் சொல்லுக்கு சொல்லில் இன்னும் என்பதை இடம் பெறச் செய்த உமர் சரீப் காஸிமி கூட வசனம் என வரும்போது இன்னும் என்பதை இடம் பெறச் செய்யவில்லை.
தாருல் ஹுதாவின் சொல்லுக்கு சொல்லில் இன்னும் என்பதை இடம் பெறச் செய்த உமர் சரீப் காஸிமி கூட வசனம் என வரும்போது இன்னும் என்பதை இடம் பெறச் செய்யவில்லை.
குர்ஆன் சொல்லுக்கு சொல்லில் 2:38 வசனத்தை பார்க்கும். முன்னதாக வாவு பற்றி மீண்டும் நினைவுபடுத்தி தெரிந்து கொள்வோம்.
و வாவு இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்றாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை, பெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில் ம் என்ற பொருள் தரும். இதற்கு உம்மைப் பொருள் என்பார்கள். அவனும் அவளும் அதுவும் இதுவும் என்கிற மாதிரி வருவது உம்மைப் பொருள் ஆகும்.
அஹ்மது வந்தான். முஹம்மது வந்தான் என்பதை அஹ்மதும் முஹம்மதும் வந்தான் என்று இணைத்து சொல்லும் போது ம் என பொருள் தரும்.
இப்றாஹீமும் இஸ்மாயீலும் என வரும் போது கடைசி எழுத்தில் பகுதியை சேர்த்து – இழுத்து - இணைத்து மும் லும் யும் என பொருள் தரும்.
இப்றாஹீமும் இஸ்மாயீலும் என வரும் போது கடைசி எழுத்தில் பகுதியை சேர்த்து – இழுத்து - இணைத்து மும் லும் யும் என பொருள் தரும்.
ஒரு வசனத்தின் இடையில் வரும்போது இன்னும் மேலும் போன்ற பொருள் தரும்.
ஒரு வசனத்தின் துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போது பொருள் தராது. ஒரு வசனத்தின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும்.
சில இடங்களில் துவக்கமாக வரும்போது சத்தியமாக என்ற பொருளும் தரும்.
கமர் என்றால் சந்திரன்.
வல்கமர் என்றால் சந்திரன் மீது சத்தியமாக 91:2
வல்கமர் என்றால் சந்திரன் மீது சத்தியமாக 91:2
நஹார் என்றால் பகல் -
வன்நஹார் என்றால் பகலின் மீது சத்தியமாக 91:3
அல்லாஹ் என்பதற்கு முன் வ (வாவு) வந்து வல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்ற பொருள் தரும்.
இது அரபி இலக்கணமாகும். ஒரேயடியாக இலக்கணத்தை விளக்கினால் போரடித்து விடும். ஆகவே இப்போதைக்கு இது போதும். அவ்வப்போதைக்கு தேவைப்படும் போது இடத்துக்கு தக்கவாறு அரபி இலக்கணத்தைப் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.
8 தர்ஜமாக்கள் JPG பைலாகவும் 7 தர்ஜமாக்கள் எழுத்துக்களாகவும் தந்துள்ளோம்.
8 தர்ஜமாக்கள் JPG பைலாகவும் 7 தர்ஜமாக்கள் எழுத்துக்களாகவும் தந்துள்ளோம்.
இனி வார்த்தைக்கு வார்த்தை
قُلْنَا - குல்னா
கூறினோம் - சொன்னோம் -
கூறினோம் - சொன்னோம் -
اهْبِطُوا - இஹ்பிதுா
இறங்கி விடுங்கள் - இறங்குங்கள்
இறங்கி விடுங்கள் - இறங்குங்கள்
مِنْهَا - மின்ஹா
இங்கிருந்து - இதிலிருந்து
இங்கிருந்து - இதிலிருந்து
جَمِيعًا - ஜமீஃஅன்
அனைவரும் - ஒட்டு மொத்தமாக
فَاِمَّا يَاْتِيَنَّ- Fபஃயிம்மா யஃதியன்ன
அனைவரும் - ஒட்டு மொத்தமாக
فَاِمَّا يَاْتِيَنَّ- Fபஃயிம்மா யஃதியன்ன
உறுதியாக வரும்
كُم - கும்
உங்களுக்கு
مِنِّي - - மின்னீ
உங்களுக்கு
مِنِّي - - மின்னீ
என்னிடமிருந்து
هُدًى - ஹுதன்
நேர் வழி
நேர் வழி
فَمَن - Fபமன்
யார் - எவர்கள் - எவர்
யார் - எவர்கள் - எவர்
تَبِعَ - தபிஃஅ
பின்பற்றினான் - பின்பற்றினார் - பின்பற்றினார்கள்
பின்பற்றினான் -
هُدَا - ஹுதா
நேர் வழி
هُدَاىَ- ஹுதாய
நேர் வழி
هُدَاىَ- ஹுதாய
எனது (என் - என்னுடைய) நேர் வழியை
فَلَا - Fபலா
இல்லை
இல்லை
خَوْفٌ - ஃகவ்Fபுன்
பயம் - அச்சம் -
عَلَيْهِمْ - அலைஹிம்
அவர்கள் மீது
وَلَا- வலா
இல்லை
هُمْ - ஹும்
அவர்கள் மீது
وَلَا- வலா
இல்லை
هُمْ - ஹும்
அவர்கள்
يَحْزَنُونَ - யஹ்ஸனுா(ன)ன்
கவலைப்படுவார்கள் - துக்கப்படுவார்கள்.
கவலைப்படுவார்கள் - துக்கப்படுவார்கள்.
وَلَا هُمْ يَحْزَنُوْنَ - வலாஹும் யஹ்ஸனுா(ன)ன்
அவர்கள் கவலைப்படவும் (துக்கப்படவும் - துயருரவும்) மாட்டார்கள் -
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٣٨
குல்னாஹ்பிதுா மின்ஹா ஜமீஃஅன் Fபஃயிம்மா யஃதியன்ன கும் மின்னீ ஹுதன் Fபமன் தபிஃஅ ஹுதாய Fபலா ஃகவ்Fபுன் அலைஹிம் வலாஹும் யஹ்ஸனுா(ன)ன்
மொழிப்பெயர்ப்புகள்.
7. நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய (அந்)நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு (மறுமையின் காரியங்களில்) யாதொரு பயமுமில்லை;(மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.”
1. நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, என்னுடைய அவ்வழியைப் பின்பற்றுவோருக்கு அச்சமென்பதில்லை; அவர்கள் துயருற மாட்டார்கள் (அதிரை ஜமீல்) 2:38.
2. "இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்!15 என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம். (PJதொண்டி)
3. (பின்பு, நாம் சொன்னோம்; "நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
Comments