முஸ்லிம்களை படுகொலை செய்த பிரபாகரன் வழியில் சீமான்


என் தம்பி அமீன் அமெரிக்காவிலிருந்து சீமானை தொடர்பு கொண்டு?சதாமின் மத மாற்ற திருமணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் சீமான்
-------------------------------------------------------
ஆக்கம்:  என் போன்றவர்களால்  அதிரை மூனா கீனா என்றும்  MK என்றும்  அழைக்கப்படும்மு.கி. அபூபக்கர் அவர்கள்.
சீமான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக  பேசி வந்தாலும், அவர்மீது முஸ்லிம் சமுதாயத்திற்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. காரணம்:

 தமிழ்  ஈழத்தில் முஸ்லிம்களை  படுகொலை செய்த பிரபாகரனை தனது தலைவராக முன்னிருத்து வதே. தான்  ஆட்சிக்கு வந்தால் பிரபாகரன் வழியிலேயே ஆட்சி செய்வேன் என்றும் முழங்கி வருகிறார். 




அத்துடன் முஸ்லிம்களை அழிக்க துடிக்கும் பஜகவை தமிழகத்தில் காலூன்றாமல் தடுக்கும் வலிமையான கட்சி திமுகவை ஒழிப்பதே தனது இலட்சியம் என்று சீமானும் அவரின் தம்பிகளும் முழங்கி வருவதும் அவர் மீதுள்ள சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது.


இஸ்லாத்தின் ஓரிறை கொள்கை மூலமே சாதி மத இனவேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய முடியும் என்பது இஸ்லாத்தின் கொள்கையாக இருக்கும்போது, 

தமிழால்தான் சாதி மத வேறுபாடின்றி இணைய முடியும் என்ற சீமானின் கருத்து தமிழரல்லாத மக்களுடன் மோதல் ஏற்படும் நிலை வருகிறது. ஓரிறை கொள்கை மூலம் நம் சகோதரர்களான உருது பேசும் முஸ்லிம்கள் மீது வேற்றுமை ஏற்பட வழி வகுக்கிறார் சீமான். 

தூய்மையான நிர்வாகம், தற்சாபு பொருளாதாரம் போன்ற ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்களை முன் வைக்கும் சகோதரர் சீமான் இறை கொள்கையில் குழம்பி போய் ஒவ்வொரு கால கட்டத்திலும் தெளிவில்லாமல் கருத்துக்களை முழங்கி, இறுதியில் "தமிழம்" என்ற புதிய மதத்தையும் தொடங்கி அதன் வேத நூலையும் அறிவித்து முப்பாட்டானாக சொல்லப்பட்டவரையும் அவரின்  அப்பனையும் (இந்துக்களின் கடவுளாக இருந்தும்)புதிய மதத்திற்கு கடவுளர்களாக அறிவித்து மத ஸ்தாபகராகி மற்ற தம்பிகளை மத போதகராக ஆக்கி விட்டார்.


 இச் சூழ்நிலையில், சீமானின் தீவிர சொல்லாற்றலுக்கு கட்டுண்டு, நாதகவில் பயணிக்கும் இஸ்லாமிய தம்பிகளின் நிலைமை என்ன என்று  கவலையுற்று இருக்கும்போது, சதாம் ஹுசைன் என்ற தம்பி சீமானின் புதிய மதத்திற்கு மாறி, சிவனையும்  முருகனையும் வணங்கி திருமணம்  செய்து பரபரப்பாக்கி விட்டார். இதைதானே சங்கிகள் எதிர்பார்த்து இருந்தார்கள்.

வலை தளங்களில் சர்ச்சையாகி சகோதரர்கள் கருத்து மோதல்கள் நடைபெற்ற போது, சீமானின் கருத்தை அறியும் ஆவலுடன் இருக்கும்போது, என் தம்பி அமீன் அமெரிக்காவிலிருந்து சீமானை தொடர்பு கொண்டு, அவரின் கருத்துக்களை வாட்ஸ்அப் ஒலியில் பெற்று ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.சதாமின் மத மாற்ற திருமணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். இருக்கலாம் 

ஆனால் அவரின் பேச்சையும் ஆக் ஷைனையும் அப்படியே பின்பற்றும் அவரின் தம்பிகள்,2014ம் வருடத்தில் அவர் சத்திய மிட்டு சொன்ன தமிழம் என்ற புதிய மதத்தில் அனைத்து தமிழனும் சேருவார்கள் என்ற கருத்துதான் சதாம் போன்றவர்களுக்கு தூண்டு கோளாகி விட்டது.


 சதாம் போன்ற இளைஞர்கள் விவரம் இல்லாமல் செய்து விட்டார் என்றால், நாதகவில் முண்ணனி பிரமுகராக இருக்கும் கல்வியாளர் என்று சொல்லப்படும் ஹூமாயுன், உரிமைக்காக போராடுவது முஃமினீன் கடமை என்று குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதால் அதற்காகத்தான் நாதகவில் பயணிப்பதாக சொன்னவர், 

மஞ்சள் கலர் மாலை அணிந்து சீமானுடன் சேர்ந்து தஞ்சை பெரிய கோயில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சங்கிகளை சந்தோஷப்படுத்தி விட்டார். சங்கிகளுடன் எந்த புள்ளியில் இணைகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளிலும்  முஸ்லிம்கள் பயணிக்கிறார்கள். ஈமானை இழந்து விடக்கூடாது என்பதுதான் எமது கவலை.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.