2:37.பெற்றுக் கொண்டாரா? கற்றுக் கொண்டாரா?

அல்லாஹ்வின் சொல்லை ஏற்றுக் கொண்டவர்கள் யார்? இன்றும் ஜீரணிக்க முடியாமல் இருப்பவர்கள் யார்?

இந்த வசனத்தின் முதல் எழுத்தான Fபதலஃக்கா என்பதற்கு பெற்றுக் கொண்டார் - பெற்றார் என்பது நேரடி மொழி பெயர்ப்பாகும். கற்றுக் கொண்டார் என்றும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். பெற்றுக் கொண்டார் என்பது சரியா?   கற்றுக்  கொண்டார்  என்பது சரியா? என்ற  தேவை இல்லாத வாதங்கள் உள்ளன.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/237.html

இன்னவரிடமிருந்து நான் இன்ன கல்வியைப் பெற்றேன் என்று சொன்னால். அதில் கற்றுக் கொண்டேன் என்பதும் அடங்கி இருக்கிறது. அது போல்தான் கல்வியை   கற்றுக்    கொண்டார்   என்பதில்  கல்வியை பெற்றுக் கொண்டார் - பெற்றார் என்பதும் அடங்கி இருக்கிறது. ஆகவே பெற்றுக் கொண்டாரா?  கற்றுக்   கொண்டாரா? என்ற வாதம் அடிபட்டுப் போகிறது. இந்த வசனத்தை ஒட்டிய ஒரு நினைவலை.
1986ல் அந்நஜாத் வருவதற்கு முன். தீன் (பிரஸ்) காஜா மைதீன்(ரஹ்) அவர்களை ஆசிரியராகக் கொண்டு மேலப்பாளையத்தில் இருந்து வெளி வந்த பத்திரிக்கை ”ரப்பானி” அதன் காப்பாளராக நாம் இருந்தோம். 

பழுலுல்லாஹ் லெப்பை, முஹம்மது லெப்பை, செம்ம லெப்பை, கம்ம லெப்பை போன்ற வயதான கதீப்கள் எல்லாம் மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளி  உட்பட எல்லா பள்ளிகளின் மெம்பரில் நின்று (அரபு) தமிழில் பயான் செய்த காலம்.. 

அந்தக் காலத்திலும். தமிழ் பயானை மெம்பரில் நின்று பேசாமல் நவாப் பள்ளி தரையில் நின்று பேசியவர் மவுலவி லியாகத் அலி தேவ் பந்தி. இவர்தான் ”ரப்பானி”  துணை ஆசிரியராக இருந்தார். 

”ரப்பானி” மாத இதழை துபை IAC சார்பில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வெளியிட வேண்டும் என்று கடைப்பள்ளி வளாகத்தில் நின்று தீன் காஜா  மைதீன் (ரஹ்) அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது மு.லீக் மாணவரணி தலைவராக இருந்த L.K.S. மீரான் மைதீனும் உடன் இருந்தார்.

2:37 வசனத்தில் பாவமன்னிப்புக்கு உரிய  துஆவை அல்லாஹ்விடமிருந்து ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது. அது என்ன துஆ?


"எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" இவ்வாறு துஆ கேட்டார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் (7:23)  தெளிவாகக் சொல்லிக் காட்டி விட்டான்.  

நமது உலமாக்கள் என்னக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?  ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்கள் அதன் நுழைவாயிலில் "லாயிலாஹ இல்லல்லாஹூ'' என்பதுடன் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'' என்றும் எழுதப்பட்டிருந்தது. 

யா அல்லாஹ் உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?'' என்று ஆதம் (அலை) கேட்டார். அதற்கு அல்லாஹ் "அவர் உமது பின் தோன்றலாக வர இருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினான். 

இதன் பின்னர் ஆதம் (அலை) அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததது.  உடனே யா அல்லாஹ் அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்தார். 

உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தான். இப்படி இட்டுக் கட்டப்பட்டவைகளை சொல்கிறார்கள். ஆகவே குர்ஆனோடு மோதும் இந்த மாதிரி இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகளை அடையாளம் காட்டி எழுத வேண்டும் என்றேன். 

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. கேட்க நன்றாகத்தான் உள்ளது. மக்கள் ஜீரணிக்க மாட்டார்கள் என்று இருவரும் சேர்ந்து சொன்னார்கள். நடந்தது என்ன? 

அல்லாஹ் சொல்லி உள்ளான் என்பதை குர்ஆனிலிருந்து காட்டியதும்  மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். உலமாக்கள் தான் இன்றும்  ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார்கள். 

இன்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான தப்ஸீர்கள் என்று விளம்பரம் செய்தால் தான் நன்கு விற்பனை ஆகிறது. அப்படி விளம்பரம் செய்யப்பட்ட நுால்களிலும் கப்ஸாக்கள் நின்ற பாடில்லை. காரணம் முதல் பாகத்தை மட்டும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான கொள்கை உடைய மவுலவிகளை வைத்து வெளியிடுவது. பிறகு பெரியார்கள் சொன்னதும் மார்க்கம் என்றுள்ளவர்களைக் கொண்டு வெளியிடுவது.

அதனால் 7:23 ல் அல்லாஹ் இப்படி சொல்லி உள்ளான். என்று எழுதி விட்டு. இருந்தாலும்  அபுல் ஆலியா(றஹ்), முஜாஹித் (ரஹ்) போன்ற பெரியார்கள், நாதாக்கள் இப்படி சொல்லி உள்ளார்கள் என்று கதைகளை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். 


இந்த கதைகளைத்தான் தவ்ஹீது தப்ஸீர் என்ற பெயரால் தவ்ஹீது பள்ளிகளில்  வைத்துள்ளார்கள். காரணம் தவ்ஹீது என்றால் என்ன? என்று தெரியாத சினிமா பைத்தியங்கள் தவ்ஹீது பள்ளிகளில் நிர்வாகிகளாக இருப்பதே காரணம்.

தர்ஜமா என்றால் அந்தந்த மொழியில் தருவதற்குப் பெயர் தான் தர்ஜமா. 2:37ல் உள்ள Fபதாப என்பதற்கு மன்னித்தான் என்று தமிழாக்கம் செய்து விட்டு. அதே வார்த்தையைச் சார்ந்த   அத்தவ்வாபு  என்பதற்கு  மன்னிப்பவன், மன்னிப்பை ஏற்பவன், பிழை பொறுப்பவன்  போன்று தமிழாக்கம் செய்யாமல்   தவ்பாவை அங்கீகரிப்பவன் என்று தமிழாக்கம் வெளியிடும் நிலையில் உள்ளவர்கள் தான் தர்ஜமா பணியில் உள்ளார்கள். என்ன செய்ய?

இனி 2:37 வார்த்தைக்கு வார்த்தை 


فَتَلَقَّىٰ -  Fபதலஃக்கா

பெற்றுக் கொண்டார் - பெற்றார்

آدَمُ -  ஆதமு 
ஆதம் 

مِن - மின் 
இருந்து

رَّبِّهِ- ரப்பிஹி
தம் இறைவன்

 مِنْ رَّبِّهٖ மி(ன்)ர் ரப்பிஹி 

தம் இறைவனிடமிருந்து


كَلِمَاتٍ - கலிமாதின் 
வார்த்தைகள் - வாக்கியங்கள் - வாக்குகள் - சொற்கள் 


فَتَابَ Fபதாப 
மன்னித்தான்

عَلَيْهِ ஃஅலைஹி 
அவர்மீது

اِنَّهٗ هُوَ- இன்னஹு ஹுவ 
அவன்தான்   


التَّوَّابُ - அத்தவ்வாபு 
மிக மன்னிப்பவன் - மன்னிப்பை ஏற்பவன் - மீட்சி அளிப்பவன் - மிக்கப் பிழை   பொறுப்பவன்

الرَّحِيمُ -அர் ரஹீ(மு)ம்

நிகரற்ற அன்புடையோன்- கருணையாளன் -கிருபையுடையவன் -பேரன்பாளன்.



فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ 


Fபதலஃக்கா ஆதமு  மி(ன்)ர் ரப்பிஹி  கலிமாதின் Fபதாப  ஃஅலைஹி  இன்னஹு ஹுத் தவ்வாபு ர்ரஹீ(மு)ம்

 இனி 15. வித மொழிப்பெயர்ப்புகள் :


1.தம் இறைவனிடமிருந்து ஆதம் சில சொற்களைக் கற்றுக் கொண்டார்(பின்னர்அவற்றின் மூலமாக இறைவனிடம் பாவ மீட்சி கோரினார்இறைவன்  அவருக்கு மீட்சி அளித்தான். திண்ணமாக அவன் மிக்க மன்னிப்பவன்நிகரற்ற அன்பாளன். (அதிரை ஜமீல்)


2. (பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை14 தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (PJதொண்டி)

3. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைப் பெற்றுக் கொண்டார், (அவற்றின் மூலமாக மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்நிச்சயமாக அவனே மிக மன்னிப்போனும்கருணையாளனும் ஆவான்.(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)

4. ஆதம் (சில) வாக்கியங்களை தம் இறைவனிடமிருந்து பெற்றார். ஆகவே அவரை (அவன்) மன்னித்தான் நிச்சயமாக அவன்தான்  தவ்பாவை அங்கீகரிப்பவன். பேரன்பாளன்.  (உமர் ஷரீப் காஸிமி)


5. பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.  

(ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி, காரைக்கால் ) 


6. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (ஜான்)

7. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றுக் கொண்டார்; (அவற்றை வைத்து அவர் மன்னிப்புக் கோரினார்) ஆதலால் அல்லாஹ் அவரை மன்னித்தான். அவனே மிகவும் மன்னிப்போனும் பெரும் கருணையாளனும் ஆவான். (றஹ்மத் அறக்கட்டளை

8. ஆகவே  ஆதம் தம் இரட்சகனிடமிருந்து சில வாக்கியங்களை பெற்றுக் கொண்டார்; (அவற்றின் வாயிலாக அவனிடம் மன்னிப்புக் கோரினார்.) எனவே, அ(வ்விறை)வன் அவருக்கு மன்னிப்பளித்தான். நிச்சயமாக  அவன்தான் மிக்க  மன்னிப்பவன்  நிகரற்ற அன்புடையோன்.
( தென்காசி  இ.எம். அப்துர் ரஹ்மான், நுாரி ஃபாஸில் பாகவி


9. ஆதம் தம் இறைவனிடமிருந்து (பாவ மீட்சிக்குரிய) சில  வார்த்தைகளைக்    கற்றுக் கொண்டார்,  (அந்த வார்த்தைகள்  மூலமாக அவர் பாவ மன்னிப்புத் தேடினார்) எனவே அவன் அவருடைய மன்னிப்புக் கோரலை ஏற்றுக் கொண்டான். திண்ணமாக அவன்தான்  மிக  மன்னிப்பவனாகவும்   மிகக் கருணையாளனாகவும் இருக்கிறான். 
(ஸலாமத் பதிப்பகம் - A. முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி) )

10. எனவே ஆதம் தம்   ரப்பிடமிருந்து    சில   சொற்களைக்  கற்றுக் கொண்டார்.   (அச்சொற்களின்  மூலம் அல்லாஹ்விடம் பாவ மீட்சி தேடினார்) எனவே அவரை (அல்லாஹ்வாகிய) அவன் மன்னித்தான். நிச்சயமாக அவன்தான்  மிக்கப் பிழை பொறுப்பவன். மிகக் கிருபையுடையவன். 
(பஷாரத் பப்ளிஷர்ஸ்.    A.முஹம்மது    சிராஜுத்தீன்  நூரி,திண்டுக்கல் )

11. பின்னர் ஆதம் தம் ரப்பிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார் (அவற்றின் மூலம் அவர் அவனிடம்  மன்னிப்புக்கோரினார்) அப்பொழுது  அவருடைய மன்னிப்புக் கோரலை அவன் ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவனே (தன் அடியார்களின்) மன்னிப்புக் கோரலை ஏற்றுக் கொள்பவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (பிறை ஆசிரியர் M. அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th,  K.A. நிஜாமுத்தீன் மன்பஈ திரீயெம் பிரிண்டர்ஸ்1992)

12. (மலிவு பதிப்பில் இதுவே இடம் பெற்றுள்ளது. தம் ரப்பிடமிருந்து என்று திரீயெம்மில் இடம் பெற்றுள்ளது. மலிவு பதிப்பில்   தம்  இறைவனிடமிருந்து என்று இருக்கும் இந்த ஒரு எழுத்து  தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்) 

13. பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து    சில  வார்த்தைகளைப்  பெற்று (அதன் மூலம் மன்னிப்பும் கேட்டு)க் கொண்டார். அதனால் அவரை அவன் மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும்  நிகரற்ற அன்புடையோனுமாவான். 
(தாருஸ்ஸலாம், ரியாத்)


14. (பின்னர்) ஆதம், சில வாக்கியங்களைத் தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக் கொண்டார்; (அவற்றைக்கொண்டு அவனிடம் மன்னிப்புக்கோரினார்.) அதனால் (அல்லாஹ்) அவரின் பாவமீட்சியை அங்கீகரித்தான்; நிச்சயமாக அவன் தவ்பாக்களை அதிகம் ஏற்பவன்; மிகக்கிருபையுடையவன். 

(அல்-மதீனா அல்-முனவ்வரா)



15. அப்போது, ஆதம் தம் இறைவனிடமிருந்து கற்ற சில சொற்களைக் கொண்டு அவனிடம் பாவமன்னிப்புக் கோரினார். அதனை அவருடைய இறைவன் ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.

(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)









Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு