2:35 'ஜன்னத்' என்பது சோலையா? சொர்க்கமா?
ஆதம் (அலை) இருந்தது பூமியிலா? வானத்திலா?
2:35, 7:19, ஆகிய இரு வசனங்களில் யா ஆதமுஸ்குன் அன்த வZஸவ்ஜுகல் ஜன்னத என்று உள்ளது.
"ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! என்று பெரும்பாலானவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். ஆனால் ஒரு சாரார் சோலையில் என்ற கருத்தில் உள்ளார்கள். அந்த அடிப்படையில்தான் ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் தமிழாக்கங்கள் உள்ளன.
2:35, 7:19, ஆகிய இரு இடங்களில் சோலையில் என்று தமிழ்ப்படுத்திய ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள், மற்றவர்கள் சொர்க்கத்தின் இலைகளால் என்று மொழி பெயர்த்துள்ள 7:22, 20:121. ஆகிய இரு
வசனங்களுக்கு அச்சோலையின் இலையைக் கொண்டு என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள்.
7:27. வசனத்தில் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய என்று மற்றவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். சோலையிலிருந்து வெளியேற்றிய என்று ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
இந்த இரண்டு வித கருத்துக்கள் வரக் காரணம் 'சொர்க்கம்' என்று மொழி பெயர்த்த இடங்களில் 'ஜன்னத்' என்ற அரபு சொல் இடம் பெற்றுள்ளன.
அல்லாஹ்வின் கலாமில் உள்ள கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடந்த நல்லடியார்களுக்கு மறுமையில் அல்லாஹ் வழங்க உள்ள சொர்க்கச் சோலையும் 'ஜன்னத்' எனக் கூறப்படுகிறது.
இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களுக்கும் 'ஜன்னத்' என்றே குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களில் சில.
جَنَّةٍۢ بِرَبْوَةٍ
جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ
ஜன்னாது(ன்)ம் மின் நஃகீலின்வ் வ அஃனாபின் - பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் 2:266
وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ
வமின் நஃக்லி மின் தல்ஃஇஹா ஃகின்வானுன் தானியதுன்வ் வ ஜன்னாதின்ம் மின் அஃனாபின்வ் வZஸஸய்துான வர்ரும்மான - பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் ... 6:99.
جَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ
اَوْ تَكُوْنَ لَـكَ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّعِنَبٍ
அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். 17:91.
இவ்வாறாக 18:32. 18:33. 18:35 18:39. 18:40. 23:19. 25:8. 34:16. 36:34. 44:25. 50:9. 68:17. 71:12 ஆகிய வசனங்களிலும் தோட்டம் என்று வரும் இடங்களில் 'ஜன்னத்' என்ற அரபு சொல்லில் இருந்து தான் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றின் மூலம் சொர்க்கம் - சோலை ஆகிய இரண்டு கருத்துக்களிலும் 'ஜன்னத்' என்ற இந்தச் சொல் அல்லாஹ்வின் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து விட்டோம்.
சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றனர்.
ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டதாகத் திரு குர்ஆன்(2:30) (இன்னீ ஜாஃஇலுன் Fபில் அர்ழி என்று) கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழிகெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் (தோட்டத்தில்) தான் தங்க வைக்கப்பட்டார்; அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந்த நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய படிப்பினைக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை, எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதை ஆய்வில் சிறந்த அறிஞர்கள் தெளிவுபடுத்தி விட்டனர். அந்த அறிஞர்களின் மீது அல்லாஹ்வின் பேரருள் ஈருலகிலும் உண்டாகட்டுமாக ஆமீன்.
இனி 2:35 வசனத்தின் சொல்லுக்கு சொல் பார்ப்போம்
وَ - வ
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி
( வாவு பற்றிய விபரங்களை 2 : 5ல் விளக்கி உள்ளோம்)
قُلْنَا - ஃகுல்னா யா ஆதமு
நாம் கூறினோம், சொன்னோம், கட்டளையிட்டோம்
يَا آدَمُ - யா ஆதமு
ஆதமே - ஓ ஆதம்
اسْكُنْ - உஸ்குன்
குடியிரு, வசித்திரு
أَنتَ - அன்த
நீ
وَ - வ
زَوْجُ - Zஸவ்ஜு
மனைவி - துணைவி
كَ - க
உனது - உம்
الْ- அல்
ல்
جَـنَّةَ- ஜன்னத
சுவனபதி, சொர்க்கம், சோலை, தோட்டம்
الْجَنَّةَ - அல் ஜன்னத
சுவனபதியில், சொர்க்கத்தில், சுவர்க்கத்தில். சோலையில், தோட்டத்தில்
وَكُلَا - வகுலா
புசியுங்கள், உண்ணுங்கள் - சாப்பிடுங்கள்
مِنْهَا - மின்ஹா
அதிலிருந்து, இதிலிருந்து
رَغَدًا - ரஃகதன்
தாராளமாக
حَيْثُ- ஃஹ(ஸு)து
விதத்தில்
شِئْتُمَا - ஷிஃதுமா
விரும்பிய - நாடிய
حَيْثُ شِئْتُمَا - ஃஹ(ஸு)து ஷிஃதுமா
நீங்கள் இருவரும் விரும்பியவாறு, நாடிய விதத்தில். நாடியவாறு
وَلَا تَقْرَبَا - வலா தஃக்ரபா
நீங்கள் இருவரும் நெருங்க வேண்டாம் - நெருங்காதீர்கள்! - அணுகாதீர்கள்
هَٰذِهِ - ஹாதி(ரி)ஹி
இதை - இந்த
الشَّجَرَةَ - அஷ்ஷஜரத
மரத்தை - விருட்சத்தை
فَتَكُونَا - Fபதகூனா
நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்
مِنَ - மின்
நின்றும்
الظَّالِمِينَ- (அல்) ழாலிமீ(ன)ன்
அக்கிரமக்காரர்கள், அநீதி இழைத்தவர்கள், அக்கிரமஸ்தன்கள் , அனியாயஸ்தன்கள், அநியாயம் செய்தவர்கள் - அக்கிரமக்காரர்கள் - அக்கிரமம் புரிந்தவர்கள் –அநியாயக்காரர்கள் - அநீதி இழைத்தவர்கள் – அநீதியாளர்கள் -வரம்பு மீறியவர்கள் – கொடுமையாளர்கள் – கொடியோர் - கொடுமை புரிபவர்கள் ,
وَقُلْنَا يٰٓـاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ
வஃகுல்னா யா ஆதமுஸ்குன் அன்த வZஸவ்ஜுகல் ஜன்னத வகுலா மின்ஹா ரஃகதன் ஃஹ(ஸு)து ஷிஃதுமா வலா தஃக்ரபா ஹாதி(ரி)ஹிஷ்ஷஜரத Fபதகூனா மினல் ழாலிமீ(ன)ன்
1. ஆதமே ! நீரும் உம் மனைவியும் சுவனபதியில் குடியிருங்கள். மேலும், நீங்கள் இருவரும் அங்குக் கிடைப்பதை எல்லாம் விரும்பிய மட்டும் தாராளமாக உண்ணுங்கள். ஆனால், நீங்கள் இருவரும் இந்த ஒரு மரத்தின் அண்மையில் மட்டும் செல்ல வேண்டாம்; (சென்றால்,) இருவரும் பாவிகளாகி விடுவீர்கள் என்று சொன்னோம் (அதிரை ஜமீல்)
2. "ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம். (PJதொண்டி)
3. ஆதமே! நீரும் உம் மனைவியும் சுவர்க்கத்தில் வசிப்பீராக! இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். இந்த மரத்தை இருவரும் நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள் எனக் கூறினோம். (உமர் ஷரீப் காஸிமி)
4. மேலும் நாம், ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
5,6 மேலும் , ஆதமே! நீரும் உம் மனைவியும் இச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் அதிலிருந்து (விரும்பும் உணவை) தாராளமாக விரும்பிய இடங்களில் நீங்கள் இருவரும் உண்ணுங்கள்; (ஆனால்) நீங்கள் இருவரும் இம்மரத்தை நெருங்க வேண்டாம்; (நெருங்கினால்) அப்பொழுது நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் உள்ளவர்களாக ஆகிவிடுவீர்கள்” என்று நாம் சொன்னோம். (5. திரீயெம், 6.மலிவு பதிப்பு)
7. மேலும் நீங்கள் இருவரும் இதில் விரும்பிய இடத்தில் தாராளமாக உண்ணுங்கள் (ஆனால்) இந்த மரத்தை நீங்கள் இருவரும் நெருங்க வேண்டாம்; ( அவ்வாறு நெருங்கினால்) நீங்கள் இருவரும் அநியாயக்காரர்களில் உள்ளவர்களாக ஆகிவிடுவீர்கள்” என்று நாம் கூறினோம். (ஸலாமத்- A. முஹம்மது வலியுல்லாஹ் யூசுஃபி)
8. மேலும் , ஆதமே! நீரும் உம் மனைவியும் இச்சுவர்க்கத்தில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு தாராளமாக அதிலிருந்து புசியுங்கள் ஆனால், நீங்கள் இருவரும் இம்மரத்தை நெருங்க வேண்டாம்; அவ்வாறெனில் நீங்கள் இருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” என்று நாம் கூறினோம். (தாருஸ்ஸலாம், ரியாத்)
9. மேலும் நாம் (ஆதமுக்குச்) சொன்னோம். ஆதமே நீரும் உமது மனைவியும் சுவனத்தில் குடியிருங்கள். இன்னும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு (வேண்டியவற்றையெல்லாம்) தாராளமாக உண்ணுங்கள்; ஆனால் இம்மரத்தின் பால் நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள்! (நீங்கள் அதன்பால் நெருங்குவீர்களாயின்) நீங்கள் இருவரும் அநீதி இழைத்தவர்களில் ஆகிவிடுவிர்கள்' (பஷாரத்- A. முஹம்மது சிராஜுத்தீன் நுாரி, திண்டுக்கல்)
10. மேலும் நாம் கூறினோம் ஆதமே நீரும் உம் மனைவியும் சுவனத்தில் குடியிருங்கள். அதிலிருந்து நீங்களிருவரும் விரும்பிய இடத்தில் (வேண்டியதை யெல்லாம்) தாராளமாகவும் புசியுங்கள். ஆனால் நீங்களிருவரும் இந்த விருட்சத்திற்கு (அருகிலும்) நெருங்கி விடாதீர்கள்! அப்பொழுது நீங்களிருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவிர்கள்' ( அன்வாருல் குர்ஆன் - E.M அப்துர் ரஹ்மான் நூரிய்யி. தென்காசி)
11. நாம் ஆதமே நீரும் உம்முடைய துணைவியும் இந்த சொர்க்கத்தில் வசித்துக் கொள்ளுங்கள் இங்கு நீங்கள் விரும்பிய விதத்தில் தாராளமாக உண்ணுங்கள்; ஆனால் இந்த மரத்தை மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். ( அவ்வாறு நெருங்கினால்) அநீதி இழைத்தோரில் நீங்களும் அடங்குவீர்கள் என்று கூறினோம். (ரஹ்மத் அறக்கட்டளை)
12. மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம். ( டாக்டர். முஹம்மது ஜான்)
13. பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர் களாவீர்கள்" என்று கூறினோம். ( அப்துல் ஹமீது பாகவி, காரைக்கால்)
14. பிறகு “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தின் அருகே நீங்கள் நெருங்காதீர்கள்; நெருங்கினால் அக்கிரமம் செய்தவர்களாவீர்கள்!” என்று கட்டளையிட்டோம். ( இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
15. மேலும், நாம் “ஆதமே நீரும், உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் குடியிருங்கள்; இன்னும், நீங்கள் இருவரும் நாடியவாறு தாராளமாக இதிலிருந்து நீங்களிருவரும் புசியுங்கள்; (ஆனால்) இம்மரத்தை நீங்களிருவரும் நெருங்கவேண்டாம்; (அவ்வாறாயின்) நீங்களிருவரும் அநியாயக்கார்களில் ஆகிவிடுவீர்கள்” என்று கூறினோம். (அல்-மதீனா அல்-முனவ்வரா)
Comments