சீமான் முதலில் தெளிந்த மன நிலைக்கு வர வேண்டும்.

நாம் தமிழர் கட்சி அமைப்பாளர் சீமானின் புதிய ஒலிப் பதிவு ஒன்றை தம்பி Amjad Ali அனுப்பித் தந்தார். 

கேட்டேன். நமக்கும் அரசியல் தெரியும் அவ்வளவு தான் கூற முடியும். 

சீமான் முதலில் தெளிந்த மன நிலைக்கு வர வேண்டும். அதற்காக பிரார்த்திக்கிறேன். அவரின் ஒவ்வொரு அரசியல் பயணமும் கடும் போக்கில் ஆரம்பித்து பின்னர் வளைந்திருக்கிறது.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_66.html






அறிஞர் அண்ணா அவர்கள், “திராவிட நாடு என்கிற கொள்கையை தற்பொழுதைக்கு கை விடுகிறோம். ஆனால், அந்த நிலைப்பாடு மட்டும் அப்படியே இருக்கிறது” என்றார். தெளிந்த கொள்கைப் பிடிப்புள்ள எந்த அரசியல் தலைவனும்  தன் கொள்கையை காலம் கருதி தாழ்த்தி வைப்பானே தவிர, அழித்து விட மாட்டான். 

எனவே அன்பிற்கினிய சீமானின் ஆரம்ப கால நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க ஏடு என் கையில் உள்ளது. அவ்வேடு கடந்த 2012 ஆம் ஆண்டு மே 18 அன்று வெளியான ஒன்று. அதில் நீங்கள் 37 மற்றும் 39 ஆம் பக்கங்களில் என்ன குறிப்பிட்டுள்ளீர்கள்?! 

கீழே படித்து தெளிந்து கொள்ளலாம். 

உங்களின் தமிழியத்திற்கு முகமதியம் என மற்ற மதத்தவர்களால் அறியப்படுகிற இசுலாமியத்திற்கு முரண்பாடு உண்டு என 37 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நீங்கள், 39 ஆம் பக்கத்தில் நாங்கள் பகை முரன், நட்பு முரன் என்றும் இசுலாமியச் சமூகத்தை குறிப்பிட்டுள்ள நீங்கள், இசுலாமியச் சமூகத்தை எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும், அன்போடும் கையாளப்பட வேண்டியர்கள் என பதிவிட்டுள்ளீர்கள். 

இந்த கொள்கை ஏட்டின் அடிப்படையில் இசுலாமியச் சமூகத்தின் மீதான உங்கள் அன்பு பகை முரன், நட்பு முரன், எச்சரிக்கை, விழிப்புணர்வு கொண்ட அரசியல் களத்திற்கான அன்பே தவிர, தெளிந்த மற்றும் உண்மையான அன்பு அல்ல என்பதே எம் சரியான புரிதல். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவுதல் அருத்தல் வேண்டும்! இது தான் ஒரு தனித் தமிழனின் அடையாளம். அந்த வகையிலும்...., இசுலாமியம் எதையும் நேருக்கு நேர் தெளிவாகவே பேசப் பயிற்றுவிக்கிறது. வளைதல் குழைதலுக்கு இங்கு இடம் கிடையாது. இந்த வகையிலும்... நாம் தமிழர் கட்சி இசுலாமியத் தமிழர்களுக்கான கட்சி அல்ல என்பதே திண்ணம். 

#தோன்றிற்று_எழுதினேன்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு