புலம்பி கதறுபவர்கள் யார்? எப்படி? கதறி புலம்புவார்கள்?

அவர்களின் முகங்கள் நெருப்பில் போட்டு  புரட்டிப் புரட்டி  பொசுக்கி எடுக்கப்படுகின்றன. அதனால் கதறி புலம்புகிறார்கள். .“ஆ, கை சேதமே! -"எங்களுடைய கேடே!   என   கதறி  புலம்புகிறார்கள்”  யார் அவர்கள்?  எங்கே இந்த சம்பவம்? இயக்கத்தவர்களெல்லாம் ஒன்று கூடி அவர்களை காப்பாற்றப் போகிறோம் என்று கேட்கிறீர்களா? 

முடியாது எந்த இயக்கத்தவர்களாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது  அவர்கள் நரகத்தில்  கிடப்பவர்கள்  என்று பிரச்சார பீரங்கிகள் பலர் முழக்கமிட கேட்டிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post.html நரகத்தில் பல தரப்பட்டவர்கள் கிடப்பார்கள்.   அவர்களில் இது யாருடைய அழு குரல்?  புலம்பல்?  என்று சரியாக விளங்கினார்களா?  குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் இருக்கும் முஸ்லிம்கள். 

நரக நெருப்பில் கிடந்து கதறி புலம்புபவர்கள் மார்க்கமே இல்லாத காபிர்கள் என்று எண்ணுகிறார்கள். இணை (ஷிர்க்) வைத்து  காபிரான அந்தக் காரணத்துக்காகவே   நரகம்  சென்று  விடுவார்களே.  அவர்கள்  எப்படி  கைசேதம்  (நஷ்டம்)    என்று சொல்ல முடியும்?

நாத்திகர்கள் என்றும் சிலர் எண்ணுகிறார்கள். நாத்திகர்கள் தான் கடவுளே இல்லை என்று சொல்லி விட்டார்களே. கடவுள் மறுப்பு கொள்கை உடைய அந்தக் காரணத்துக்காகவே நாத்திகர்களும் நரகம் சென்று விடுவார்களே. அவர்களுக்கு எப்படி  நஷ்டமாகும்?  ஆகவே  நாத்திகர்களும்  காபிர்களும்    அந்த  மாதிரி  கதறி  புலம்ப  மாட்டார்கள்.

பிறகு யார் அவர்கள்?  யாருடைய புலம்பல்  இது.   புலம்பி கதறுபவர்கள் வார்த்தையிலேயே பதிலும் விளக்கமும் இருக்கிறது. எப்படி கதறி புலம்புவார்கள்?

"நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இந்தத் தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' என கதறி புலம்புவார்கள் என்று அல் குர்ஆன் 33:66  வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வே (கடவுளே) இல்லை என்று சொல்லி விட்டு போன நாத்திகர்கள் இப்படி புலம்ப மாட்டார்கள். அல்லாஹ் அல்லாத ஆயிரமாயிரம் கடவுள்களைக் கண்டவர்களும். மார்க்கமே இல்லாத காபிர்களும் இப்படி கதற மாட்டார்கள்.  அவர்கள்தான் அல்லாஹ்வையும்  ரசூலையும் ஏற்றுக் கொள்ளவே  இல்லையே.  ஏற்றுக் கொண்டால்தானே கட்டுப்படுதல் என்பதே வரும்.

இது யாருடைய புலம்பல்? கதறல்? தெரிகிறதா? அல்லாஹ்  என்ற ஏக இறைவன் ஒருவன் இருக்கிறான்  என்று  ஏற்றுக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் துாதர்காளான  - ரசூல்மார்களை ஏற்றுக் கொண்டவர்கள் தான்.

ஆம் நபிமார்களுடைய சமுதாயமாக இருந்து விட்டு அவர்களை பின் பற்றாமல் விட்டவர்களின் கதறல் தான் அது.

அல்லாஹ், அல்லாஹ் என வாயளவில் சொல்லி விட்டு. அவனுடைய துாதராக  கண்மனி நாயகம்(ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று ஊரறிய ஏற்றுக் கொண்டு விட்டு. அவர்கள்  சொன்னபடி கட்டுப்பட்டு  நடக்காத முஸ்லிம்கள் தான் அவர்கள். இதை நாம் சொல்லவில்லை. அந்தக் கதறல்களில் உள்ள வார்த்தைகளே சான்று பகர்கின்றன.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுப்படாத தூதருக்குக் கட்டுப்பட்டுப்படாத  அவர்கள் என்ன செய்தார்கள்? யாருக்கு கட்டுப்பட்டுப்படார்கள்? அதை அவர்களே சொல்லி புலம்பி அழுது வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். பாருங்கள்.

سَادَتَنَا
ஸாததனா - எங்கள் நாதாக்களான தலைவர்களுக்கு கட்டுப்பட்டோம். 


وَكُبَرَآءَنَا 


வகுபுராாஃஅனா- எங்கள் பெரியார்களுக்கும்  கட்டுப்பட்டோம். என்று  கதறி புலம்பி  அழுது  வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். 

பிறகு யாருக்கு கட்டுப்பட்டார்களோ  அந்த  நாதாக்களும் பெரியார்களுக்கும்  என்ன செய்தார்கள் ? என்பதையும் அவர்களே அழுது கூறுகிறார்கள்.


 فَاَضَلُّوْنَا السَّبِيْلَا




Fபஅழல்லுானாஸ்ஸபீலா - அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள். 

இந்த உலகில் யாரைப்   பெரியார்கள் என்றும் நாதாக்கள் என்றும்  தலையில் வைத்து ஆடினார்களோ அவர்களைப் பற்றி குற்றச்சாட்டு சொல்கிறார்கள். என்னக் குற்றச்சாட்டு? சாதாரண குற்றச்சாட்டா? அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர். அது மட்டுமா? இன்னும் துஆச் செய்கிறார்கள்.

رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَيْنِ


ரப்பனா ஆதிஹிம் ழிஃFபைனி - "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு கொடு என்கிறார்கள். எதிலிருந்து இரு பங்கு  கொடு என்கிறார்கள்? 
 مِنَ الْعَذَابِ 

மினல் ஃஅரா(பி) ப் - வேதனையிலிருந்து (இரு பங்கு  கொடு என்கிறார்கள்)

இது மட்டுமா? இன்னும் எப்படி துஆச் செய்கிறார்கள்? பாருங்கள்.

 وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا‏ 

வல் ஃஅன்ஹும் லஃனன் கபீ (ரன்)ரா - அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக! (அவர்கள் மீது சாபத்தை இறக்குவாயாக)

இப்படியாக புலம்பி கதறுபவர்கள் யார்? பெயரளவில் அல்லாஹ்வையும் துாதரையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் தான். என்ன சொல்லி புலம்புவார்கள்? 

அல்லாஹ் சொன்னான் என்று குர்ஆனிலிருந்து எவ்வளவோ சொன்னார்கள்.  அதை நாங்கள் கேட்கவில்லையே

ரசூலுல்லாஹ் சொன்னார்கள் என்று எத்தனையோ ஹதீஸ்களிலிருந்து  சொன்னார்கள்.  அதை நாங்கள் செவிமடுக்கவில்லையே 

நாங்கள் வேதம் சுமந்துள்ளவர்கள் என்று நம்பியவர்கள்.  குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தில் கூட குர்ஆனிலிருந்து வழி காட்டல்களைக் கூறவில்லையே.

அவர்கள் அந்த இமாம் சொன்னார் இந்த இமாம் சொன்னார் என்று யானை, பூனை கதைகளை அல்லவா அளந்து விட்டார்கள். 

நாதாக்கள்,  (தலைவர்கள்) பெரியார்கள் சொன்னார்கள் என்று தப்பான வழி காட்டி விட்டார்களே.. அதை  நம்பி கேட்ட நாங்கள் கெட்டோம். அதனால் நரகத்துக்கு வந்து விட்டோம்.

குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சொன்னதைக் கேளாமல் இவர்கள் சொல்லைக் கேட்டு நரகத்துக்கு வந்து விட்டதால் இவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! இவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' என்று தங்கள் கோபத்தை காட்டுவார்கள். என்ன புரயோஜனம்? 

குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து மார்க்கத்தை கூறாமல் பெரியார்கள், இமாம்கள் பெயரால் யானை, பூனை கதைகளை விடும் வேதம் சுமந்துள்ளவைகள்  (62:5)  மீது உங்கள் கோபத்தைக் காட்டத் தவறினால். என்ன கதி அடைவீர்கள்? 33:66. 33:67.33:68  ஆகிய வசனங்கள் உங்களுக்கு பதில் அளித்து விட்டன. 

வமா அலைனா இல்லல் பலாஃக்



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.