பீ.ஜே. தர்ஜமாவும் தவறுகளும்

தவறுகளை சுட்டிக் காட்டினால் வரட்டுக் கவுரவம் பாராமால் திருத்திக் கொள்பவர்களாக  யார் இருக்கிறார்கள்?

உனக்கு என்ன தெரியும்?  நீ என்ன ஏழு ஆண்டுகள் ஓதியவனா?  என்று பதில் தந்தவர்கள் யார்? 

நான் தான் அரபு மொழி தெரியாதவன் ஏழாண்டுகள் படித்த மவுலவிகளுக்குத் தெரியாதா? 

இது உங்கள் ஊர் பாஷையில் சோலியை முடிப்பது போல் என்று பதில் தந்தது யார்?

பயன்படச் செய்தான்? செய்தோம்  எது சரி?


https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_21.html


திரு குர்ஆன் அருளப்பட்டு 1355 ஆண்டுகள் ஆன பிறகு  13ஆம் நுாற்றாண்டில்தான்  தமிழில் குர்ஆன் மொழி பெயர்ப்பு (தர்ஜமா) வர ஆரம்பித்தது. 

1986 வரை தமிழில் குர்ஆன் மொழி பெயர்ப்பு(தர்ஜமா)க்கள், விளக்க விரிவுரை(தப்ஸீர்)கள் என வாங்கியவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாகத் தான் இருப்பார்கள். அதுவும் பரகத்துக்காக. ஹஜரத்துகள் வலியுறுத்தலுக்காக வாங்கி இருப்பார்கள். 

இப்படி வாங்கியவர்கள் தர்ஜமா மட்டும் வாங்கி இருந்தால் பட்டுத் துணியில் உறை போட்டு. அந்தக்கால முறைப்படி கட்டப்பட்ட வீடுகளின் மாட குழியில் வைத்து விடுவார்கள். 

ஷாஹுல் ஹமீது அண்டு ஸன்ஸ் வெளியீடுகளான தப்ஸீர் என்றால், அது அக்காலத்தில் முழுமையாக வாங்கும்போது டிரங் பெட்டியுடன் வரும். அந்த டிரங் பெட்டியுடன் அப்படியே வைத்து விடுவார்கள். 

பக்தி வரும்பொழுதெல்லாம் தொட்டு முத்திக் கொள்வார்கள். அது தான் முஸ்லிம்கள் நிலையாக இருந்தது. யாருமே விரும்பி வாங்கியது இல்லை. 

விரும்பி வாங்கினால்தானே விரும்பி படிப்பார்கள். ஏஜெண்டுகள் வெளியீட்டாளர்கள் வலியுறுத்தலால் வாங்கினார்கள். இதனால் ஒரு பதிப்புக்கும் அடுத்த பதிப்புக்கும் நீண்ட இடைவெளி இருக்கும்.

1988ல் துபை வந்த, மு.லீக் தலைவர்(மு) ஆ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கள். தர்ஜமாக்களை மக்கள் விரும்பி வாங்கியதும் அதிக  விற்பனை என்பதும் 1986க்குப் பிறகுதான். குர்ஆனை தாய் மொழியில் படிக்க வேண்டும் என்ற எண்ண  எழுச்சியை மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டீர்கள் என்றார்.

ஜான் டிரஸ்ட் தனது முதல் பதிப்பை 1982ல்  வெளியிட்டது. அதன் விற்பனையும் அப்படித்தான் துாங்கிக் கொண்டிருந்தது.

1988ல் பீ.ஜே. யால்  மொழி பெயர்க்கப்பட்டது. திருத்தம் செய்யபப்ட்டது என்று ஒரு எடிஷன் மட்டும் வந்தது. அதன் பிறகு பிரவாகம், அனுகூலப்பட்டு போன்ற பழைய முறைப்படி வர ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் பீ.ஜே. யால்  மொழி பெயர்க்கப்பட்டது என்ற பெயரில் வேகமாக விற்பனை ஆனது.

2002ல் பீ.ஜே. தர்ஜமா வெளியானது. பாக்கர் போன்ற பல தலைவர்கள் அதன் சிறப்புக்கள் பற்றி சிலாகித்துப் பேசி விளம்பர வீடியோக்கள் வெளியிட்டார்கள்.

நாம் மட்டும்  நமக்கு தவறு என்று பட்டதை கடுமையாக விமர்சித்தோம். மக்களால் ஆலிம்கள் என நம்பப்படும் பெரும்பாலான உலமாக்கள் எமது விமர்சனத்தை வரவேற்றுப் பாராட்டினார்கள்.

பீ.ஜே. தர்ஜமாவில்  தவறு என்று என் மனதில் பட்டதை எழுதி எதிர்த்த நிலையிலும் என்னிடம் தர்ஜமா என்று கேட்டவர்களுக்கு  2002க்குப் பிறகு  நான் கொடுத்து வந்தது பீ.ஜே. தர்ஜமா தான்.

நீங்க தானே இதில் தவறு இருக்கிறது என்கிறீர்கள் அதையே தருகிறீர்களே! என்பார்கள். ”இன்ன” ”அன்ன” சம்பந்தமாக நான் எழுதிய சிற்றிதழும் இணைத்தே தந்துள்ளேன். அது தவிர எல்லாம் சரிதான் என்பேன்.

எத்தனையோ தர்ஜமாக்கள் வந்த போதிலும் சிறந்து விளங்கி முன்னிலையில் நிற்பது எது?  பீ.ஜே.  தர்ஜமாதான் என்று சொல்லி  கொடுப்பேன்.

பீ.ஜே.யுடன் இருந்து  தர்ஜமாவை வெளியிட்ட   இனாயதுல்லாஹ், (காமில் சொல்லி காட்டி உள்ள) J.S.  ரிபாஈ,  பாக்கர்  போன்றவர்கள் ஒன்றாக இருந்தபொழுது பீ.ஜே. தர்ஜமாவை   வானளாவ புகழ்ந்தார்கள்.

விலகியதும்  அது சரி இல்லை என்றார்கள்.  என்ன சரி இல்லை என்று J.S.  ரிபாயி, தக்வா இனாயதுல்லாஹ், போன்றவர்களிடம் கேட்டதற்கு அவர்களால் பதில் சொல்ல முடிந்ததில்லை.

2011ல் பாக்கர் நிகழ்ச்சி உள்ளது. பிற மதத்தவர்களுக்கு கொடுக்க 10 அல்லது15 தர்ஜமாக்கள்  தாருங்கள். குறைந்த விலையில் உள்ள கோவை மலிவு பதிப்பு, ஜான் டிரஸ்ட் போன்றவை தாருங்கள் என்று தக்வா இனாயதுல்லாஹ் கேட்டார். விலையைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.  பீ.ஜே. தர்ஜமா தருவேன் என்று சொன்னேன்.  இது பற்றி விவரமாக முன்பே எழுதி விட்டேன்.

கீழை முலஜா  மருமகன் அல்காயித் ரபி அஹ்மது காகா அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் மதாம் வந்தார். பள்ளிவாசல் கட்டிக் கொடுப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்.  என் டேபிளில் இருந்த பீ.ஜே. தர்ஜமாவை பார்த்து விட்டு என்ன இது? என்றார். இது மட்டுல்ல பின்னால் பாருங்கள் 10 வித தர்ஜமா இங்கே இருக்கு இருப்பதிலேயே சிறந்தது இதுதான் என்றேன்.

யார் போன் போட்டு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தர்ஜமா கொடுக்கணும் எது கொடுக்கலாம்?  என்று கேட்டாலும் பீ.ஜே. தர்ஜமா கொடுங்கள் என்பேன். என்ன நீங்க அவரை கடுமையாக எதிர்க்கிறீர்கள். பீ.ஜே. தர்ஜமாவை கொடுக்கச்  சொல்கிறீர்கள்  என்பார்கள்.

குறிப்பிட்ட ஒரு பக்கத்தை  எல்லா தர்ஜமாக்களில் இருந்தும்  போட்டோ எடுத்து அனுப்பிக் கொடுத்து நீங்கள் படித்து விட்டு. எது நடைமுறைத் தமிழில்  உள்ளது, எது முஸ்லிம் அல்லாதவர்கள் படித்தால் புரியும்படி உள்ளது என்பதை நீங்களே  முடிவு செய்யுங்கள் என்பேன்.

பிறகு போன் போட்டு பீ.ஜே. தர்ஜமா எங்கே கிடைக்கும்? என்று கேட்பார்கள். துபை, ஷார்ஜா மொலினாவில் கிடைக்கும் என்பேன்.

தவறுகளை சுட்டிக் காட்டினால் வரட்டுக் கவுரவம் பாராமால் திருத்திக் கொள்பவர்களாக  யார் இருக்கிறார்கள்? எந்த வெளியீட்டாளர்கள் இருக்கிறார்கள்? உனக்கு என்ன தெரியும்?  நீ என்ன ஏழு ஆண்டுகள் ஓதியவனா?  என்ற பதில் தான் வந்தது.

2:25.ல் உள்ள தஃஹ்திஹா  என்ற வார்த்தையை ஆறு மொழி பெயர்ப்பாளர்கள் தமிழாக்கம் செய்யாமல் விட்டுள்ளார்கள். ஏன் மொழி பெயர்க்காமல்  விட்டார்கள்  என்பதற்கு  யாருமே எந்த விளக்கமும் சொல்லவில்லை. 

2. தஃஹ்திஹா  என்பதற்கு  சூழ்ந்து  என்றும்  கீழ்ப்பகுதியில்  என்றும்  மொழி பெயர்த்துள்ளார்கள்.  எது சரி?


3. நஹாரு என்பதற்கு ஆறுகள் என்றும்  நீரருவிகள்  என்றும் மொழி பெயர்த்துள்ளார்கள்.  எது சரி?

4. சொர்க்கத்தில் உணவு வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு  இந்த சொர்க்கத்தில் வழங்கப்பட்டது'' என்றும்  

"இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது"   பூமியிலுள்ள கனிகளைப் போல் என்றும்   மொழி பெயர்த்துள்ளார்கள்.எது சரி?

5. அZஸ்வாஜுன்  என்பதற்கு   ஜோடிகள், துணைகள் என்ற இரு பாலருக்கும் பொதுவான வார்த்தையை சிலரும் துணைவியர், மனைவியர் என்ற ஒரு பாலருக்கு மட்டுமான வார்த்தையை சிலரும் மொழி பெயர்ப்பாக வழங்கி உள்ளார்கள். எது சரி? யாரும் பதில் தரவில்லை. 

இக் அன்ஸஸ என்பதற்கு புரியும் தமிழில் என்ன வார்த்தை? என்று கேட்டு சொல்லுங்கள் என்றோம். தங்கள் உலமாக்களிடம் பதில் பெற்றுத் தருகிறேன் என்றவர்களாலும் பதில் பெற்றுத் தர முடியவில்லை. 

”இன்ன” ”அன்ன” சம்பந்தமாக நான் செய்த விமர்சனத்திற்கு  தக்க விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டார் பீ.ஜே.. அவர் கூறிய மாதிரி மற்ற தர்ஜமாக்களை பார்த்த போது அவர்களும் ”இன்ன” ”அன்ன” போன்ற தஃகீத் சொற்களை ஆயிரக்கணக்கில் மொழி பெயர்க்காமல் விட்டுள்ளதை நான் அறிந்தேன்.

உலமாக்கள் இன்னும் அறியவில்லை.   அதன் பிறகு பீ.ஜே. தர்ஜமாவுடன்.   ”இன்ன” ”அன்ன” சம்பந்தமாக நான் எழுதிய சிற்றிதழை இணைத்துக்  கொடுப்பதை நிறுத்தினேன்.


இப்பொழுதும் பீ.ஜே. தர்ஜமாவில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டினால்  உனக்கு என்ன தெரியும்?  நீ என்ன ஏழு ஆண்டுகள் ஓதியவனா?   என்றா பதில் தந்தார்? எனக்கும் பீ.ஜேக்கும் சமீபத்தில் நடந்த கருத்து பரிமாற்றத்தை அப்படியே தருகிறேன்  பாருங்கள்.

[09/05, 7:58 pm] Fazlulilahi: பயன்படச் செய்தான்? செய்தோம்.  எது சரி

[09/05, 10:51 pm] PJ வாட்ஸப்: سخرنها

என்பதை

سخرها

என்று தவறாக கவனித்து விட்டேன். இன்ஷா அல்லாஹ் நாளை நேரலையில் தெரிவிக்கிறேன். இன்ஷா அல்லாஹ். செய்தோம் என்பதே சரி
[09/05, 10:57 pm] PJ வாட்ஸப்: திருத்தம் செய்து விட்டேன்




[10/05, 3:59 am] Fazlulilahi: 20 அறிஞர்  குழு கவனிக்கவில்லையா?


அவன் கதை முடிந்து விட்டது என்பது சரியா?




[13/05, 12:18 am] PJ வாட்ஸப்: நீங்கள் சுட்டிக்காட்டும் இருவசனங்கள் குறித்து நீங்கள் சுடிக்காட்டிய திருத்தம் விவாதத்துக்கு உரியதல்ல. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய திருத்தமே. யசுத்துன்ன என்பது பன்மை தான். அதை நான் யசுத்தன்ன என்று நினைத்து விட்டேன்.

அதற்கேற்ப ஆன்லைனில் திருத்தி விட்டேன், அடுத்த பதிப்புக்கான திருத்தப் பட்டியலிலும் சேர்த்து விட்டேன்.



அவன் கதை முடிந்தது என்பது கருத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது. இது உங்கள் ஊர் பாஷையில் சோலியை முடிப்பது போல் பலவாறாக பொருள் கொள்ள வழி வகுக்கும். எனவே நேரடியான அர்த்தம் போட்டு பிராக்கெட்டில் கொன்று விட்டார் எனவும் மாற்றி விட்டேன்.

இது போல் பல பிழைகள் நேயர்களால் சுட்டிக்காட்டப்பட்டு அதன் படி அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்தம் செய்தே வருகிறேன். இது போல் மேலும் கவனம் செலுத்தி கூர்மையாக வாசித்து கண்டு பிடிக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்தம் செய்கிறேன். இணைய தளத்தில் உடனே மாற்றுகிறேன்.

சுடிக்காட்டிய உங்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதான் தவறுகளை சுட்டிக் காட்டிபோது பீ.ஜே.யின் பதில்களாக இருந்து வந்துள்ளன.

அல்லாஹ்வின் அருளால் நான் 20 விதமான  குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் பார்த்துள்ளேன். இந்த மாதிரி அருமையான மொழி பெயர்ப்பைக் காணவில்லை.  ஆகவே தான்,  நான் ஒப்பிட்டு படித்துப் பார்த்து இதில் உள்ள இனிமையை உணர்ந்தேன்.

அந்த மாதிரி மற்றவர்களும் ஒப்பிட்டுப் பார்த்து பீ,ஜே. தர்ஜமாவின் அருமையை உணர வேண்டும் என்று முடிவு செய்தேன். வார்த்தைக்கு வார்த்தையுடன் கையில் உள்ள 15 மொழி பெயர்ப்புகளை  வெளியிட்டு வருகிறேன்.

அரபி தெரியாத நானே இப்படி ரசித்து படித்து பீ.ஜே. தர்ஜமா அருமையை  இனிமையை  அறியும் போது அரபி படித்தவர்கள் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று பல மவுலவிகளுக்கு 2012ல் இருந்து பீ.ஜே. தர்ஜமாவை கொடுத்து வந்தேன்.

பீ.ஜே. மீது உள்ள வெறுப்பில் படிக்க மறுத்து வந்தார்கள். அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் அமெரிக்க ஸாப்ட்வேர்களை வாங்குவது அதன் தரம் நன்றாக உள்ளது என்பதால்தானே என்று பதில் சொல்லி வந்தேன். நமது ஒப்பீடுகள் வெளியான பின் படிக்க ஆரம்பித்த ஒரு மவுலவி சொன்னது.

ஒரு வேதத்தின் தர்ஜமா என்பது வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு செய்வது அல்ல.  அரபி மதரஸா போகாத நீங்களே குர்ஆனுக்கு  வார்த்தை வெளியிடுகிறீர்களே. அது மாதிரி தான் மற்றவை உள்ளன.

பீ.ஜே. அவர்கள் குர்ஆன் மூலத்தை கவனமாகப்  படித்து.  அதன் கருத்தை நன்கு உள்வாங்கி. தமிழில் எப்படி தர வேண்டுமோ அப்படி தந்துள்ளார். அதனால் பீ.ஜே. தர்ஜமா  தரத்தில் உயர்ந்து நிற்கிறது.

ஆங்கிலத்தில்,  உருதுவில்  எப்படி மொழி பெயர்த்து  உள்ளார்கள்? என்று பார்த்து தமிழிலில்  இப்படி போடு என்பது தான் மற்ற மொழி பெயர்ப்பாளர்களின் நிலை இருந்துள்ளது.

மொழி பெயர்ப்பாளர்கள் என்பவர்கள்  இரு மொழிகளிலும்  பாண்டித்தியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.  பீ.ஜே. அரபு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும்  பாண்டித்தியம் உள்ளவர் என்பதை அவரது தர்ஜமா நிரூபித்து  நிற்கிறது.  அல்லாஹ் அவருக்கு அருள் செய்வானாக ஆமீன்.


மவுலவிகளெல்லாம்  பீ.ஜே.  தர்ஜமாவை படிக்காததற்கு நீங்கள் போட்ட ”இன்ன” ”அன்ன” நோட்டீஸும் ஒரு காரணம். ஆகவே அதற்கு பரிகாரம் தேடுங்கள் என்றார்.

நான் தான் அரபு மொழி தெரியாதவன் ஏழாண்டுகள் படித்த  மவுலவிகளுக்குத் தெரியாதா? என்றேன்.

மவுலவிகள் யாருக்கும் தெரியாததால்தானே  ”இன்ன” ”அன்ன”  பற்றி நீங்கள் போட்ட நோட்டீஸை பாராட்டினார்கள். நான் உட்பட.  எல்லா தர்ஜமாக்களும் அப்படித்தான் உள்ளன என்பதும் நீங்கள் பட்டியல்  போட்ட பதிவுக்குப் பின்தானே தெரிய வந்தது என்றார்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு